இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி...அரவிந்தன் நீலகண்டன்

Go down

மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி...அரவிந்தன் நீலகண்டன் Empty மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி...அரவிந்தன் நீலகண்டன்

Post by ஆனந்தபைரவர் Sun Dec 19, 2010 11:10 pm

மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி...அரவிந்தன் நீலகண்டன் F1
சரஸ்வதி நதி ஒரு தொன்ம நினைவாக இந்திய மனதில் தொல் வரலாற்றுக் காலம் தொட்டே ஓடிக்கொண்டிருக்கும் ஒன்று. ஆனால் வரலாற்றின் ஆவணங்கள் மீட்டெடுக்கப்படும் போது அதன் இடம்தான் என்ன? பழமையான கற்பனையா அல்லது ஒரு யதார்த்தமா? அல்லது அதன் ஆன்மீக பண்பாட்டு குறியீட்டு முக்கியத்துவமா? என்று கேள்விகள் எழுகின்றன.

வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான மிச்சேல் தனினோ (Michel Dannio) எழுதியுள்ள நூல் ‘The Lost River, On the trail of the Saraswathi’ மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி எனும் நூல் இந்த கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை காண முயல்கிறது. இந்த நூல் ஒரு அறிவியல் தேடல்.

தேடப்படும் பொருளோ நம் நரம்புகளில் இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழும் பண்பாட்டின் மூல ஊற்றுக்கள். இந்தப் பண்பாட்டின் ஊற்றுக்கள் வெறும் உருவகங்கள் மட்டுமில்லை. அவை தார் பாலை வனத்திலும் இமயம் முதல் குஜராத் வரை நீண்டு கிடக்கும் வறண்ட நதிப் படுகையிலும் அடி ஆழத்தில் துயில் கொண்டிருக்கின்றன என்பது இந்த தேடலை மிகவும் சுவாரசியமானதாக ஆக்குகிறது.

இந்த நூலின் முதல் பகுதி இந்திய நாட்டின் காலனிய ஆட்சியின் போது சரஸ்வதி நதிப்படுக்கையை பிரித்தானியா நிலவியலாளர்கள் கண்டடைந்த விதத்தை விவரிக்கிறது. தனினோ மிகவும் சிரமப்பட்டு அந்த காலத்தின் அரிய வரைபடங்களை சேகரித்து ஒரு அழகிய தேடல் படலத்தை உருவாக்குகிறார்.

உதாரணமாக 1862 இன் பிரித்தானியா இந்திய வரைபடம் காகர் நதியின் இணை நதியை ‘சூர்ஸ்வதி (Soorsutty) என கூறுவதை அளிக்கிறார். அண்மைக் காலங்களில் செயற்கைகோள் புகைப்படத்தின் விளைவாகவே சரஸ்வதி கண்டுபிடிக்கப் பட்டதாக தவறாக சில வட்டங்களில் புழங்கும் கதை தவறானது என்பதை இது காட்டுகிறது.

அந்த நதிப்படுகையைச் சுற்றிலும் இருக்கும் நாட்டார் வழக்குகளில் சரஸ்வதி ஒரு சாஸ்வதமான இருப்பாகவே இருந்து வந்ததை தனினோ பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலம் காட்டுகிறார். ‘மறைந்த நதி’ என இந்த வறண்ட நதிப் படுக்கையை மகாபாரதமும் வேதங்களும் கூறுவதைச் சரஸ்வதியுடன் இணைத்துப் பேசும் நிலவரையியலாளர் சி. எஃப். ஓல்தம் வேதங்களும் சரி மகாபாரதமும் சரி சரஸ்வதி குறித்து கூறும் விவரங்கள் ‘அந்தந்த காலகட்டங்களைச் சார்ந்த உண்மையாகவே இருந்திருக்க வேண்டும்’ என கூறுகிறார்.

வேத இலக்கியத்திலிருந்து புராண இலக்கியம் வரையிலுமாக சரஸ்வதி குறித்து கூறப்படும் தொன்ம சேதிகளை ஐதீக விவரணங்களை தனினோ தொகுத்தளிக்கிறார். இந்த தொன்ம பரிபாஷைக்குள் ஒளிந்து இருக்கும் சரஸ்வதி குறித்த நிலவியல் தரவுகள் என்னவாக இருக்கும் என தேடுகிறார். சரஸ்வதி பயணித்த வரலாற்றுப் பாதை எது?

விஷ்ணு புராணத்தில் சரஸ்வதி நதி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. மார்கண்டேய புராணத்தில் அந்த நதி வேதத்தில் சரஸ்வதி எந்த வரிசையில் கூறப்படுகிறதோ அதே வரிசையில்தான் கூறப்படுகிறது. பத்மபுராணம் அனைத்தையும் விழுங்கும் அக்னியின் பரவலை சரஸ்வதி நதியின் மறைவுடன் இணைத்து பேசுகிறது. இது அந்த நிலப்பரப்பு முழுக்க பரந்து விழுங்கிய ஒரு வறட்சியை குறித்த நினைவாக இருக்கலாமா?

பின்னர் கல்வெட்டுச் செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றுக்கு நகர்கிறார் தனினோ. இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் சரஸ்வதி குறித்த செய்திகளை அளிக்கின்றன. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தாரிக் ஈ முபாரக் ஷாஹி எனும் நூலில் சரஸ்வதி எங்கே ஓடியிருக்க வேண்டும் என்பது குறித்து கூறப்படுகிறது.

தனினோ இனி நவீன காலகட்டத்தில் சரஸ்வதி நதி குறித்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு வருகிறார். இங்கு ஆராய்ச்சி படு சுவாரசியமான வேகம் கொள்கிறது.

நிலத் தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூர-புகைப்படத் துறையும் எப்படி இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு தேச பண்பாடு தன் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருந்த அந்த தொன்ம நதி அறிவியலின் விளிம்பில் இருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் வரலாற்று உண்மையாக உயிர் கொண்டு எழுந்த தருணங்கள் படிப்போருக்கு மின்னதிர்வுகளாக ஆர்வக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்தேடலின் தொடக்கப் புள்ளியான ஆராய்ச்சிதான் விஞ்ஞானி யஷ்பால் ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

இஸ்ரோ ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த முடிவு யாதெனில் பல தொல் நதிப் படுகைகள் இருக்கின்றன என்பதும் அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுக்கைகளாகவே இருக்க வேண்டுமென்பதும், அது நாம் பெரும்பாலான எளிய வரைப்படங்களில் காண்பது போல் ஒற்றை வரி ஓட்டம் அல்ல. அதன் சிக்கலான அமைப்பு அந்தப் பிரதேசத்தின் வரலாற்றின் சிக்கலான நீரோட்டத்தை நினைவுப்படுத்துவது.

சரஸ்வதி நதி குறித்த அறிவியல் ஆராய்ச்சி பல்துறை நிபுணத்துவத்தைக் கோருகிறது. உண்மையில் பல்துறைகளும் அவையவற்றின் பணிகளின் போது கிடைத்த தரவுகள் ஒருங்கிணைந்து சரஸ்வதியின் தேடலை மேலும் மேலும் விரிவாக்குகின்றன. உதாரணமாக ராஜஸ்தானின் ஜெய்ஸால்மிர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் நிலத்தடி நீர், இயக்கமற்ற (மழை நீர்) சேகரிப்பின் ஒரு தேக்கமாக இல்லாமல் ஒரு நீர் பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அது அண்மைக் கால மழை நீர் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டதல்ல மாறாக ஹிமாலய நதி நீர்களின் தன்மை கொண்டதாக இருப்பதை சமபார ஆய்வுகள் மூலமாக அறிகிறார்கள்.

தொன்ம நதி ஒன்று சமபார ஆராய்ச்சியின் மூலம் உருப்பெறும் ஆராய்ச்சி சுவாரசியங்கள் பக்கங்கள் தோறும் விரிகின்றன. நிலத்தடி நீர் பம்புகள் மூலம் வெளிக்கொணரப்படும் போது சில இடங்களில் நாற்பதாண்டுகளாக நீர் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கிறது. 1999 இல் மற்றொரு ஆராய்ச்சி நிலத்தடி நீர் மட்டம் இந்த பாலைவனப் பகுதியில் குறையாமல் நீரோட்டமாக ஒரே அளவில் இருந்து வருவதைக் காட்டுகிறது. மகாபாரதத்தின் கவித்துவ வரிகளை இந்த இடத்தில் தனினோ வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார். ‘பூமியின் உள் உறுப்புகளூடாக ஓடும் கண்ணுக்குத் தெரியாத பிரவாகம்’

இதன் பிறகு தனினோ சரஸ்வதி – சிந்து பண்பாட்டு வெளியில் நம்மை ஒரு பெரிய அகழ்வாராய்ச்சி சுற்றுப் பயணத்தில் அழைத்துச் செல்கிறார். மிக அண்மைக்கால அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளின் புகைப்படங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

உதாரணமாக பன் வாலியில் உள்ள நெருப்பு சடங்கு கோவில் கலிபங்கன் வீட்டின் சித்திர தரை லோத்தாலின் கப்பல் துறை அது எப்படி இருந்திருக்குமென்று ஓவியரின் கற்பனை உருவாக்கும் தோலவிராவின் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட நீர் சேகரிப்பு அமைப்பு.... இவை எல்லாம் நம் கண் முன் ஒரு புதிய உலகை திறக்கின்றன. நம் ஆர்வத்தை தூண்டுகின்றன. இப்புகைப்படங்கள் அனைத்தும் இந்திய அகழ்வாராய்ச்சி மைய காப்புரிமை கொண்டவை.

இங்கு மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான கே. எம். பணிக்கர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கோரிக்கை குறிப்பினை அனுப்புகிறார். ‘ஒரு காலத்தில் சரஸ்வதி நதி பாய்ந்தோடி கட்ச் வளைகுடா பகுதிக்குள் பாய்ந்த பாதையில் இருக்கும் பைகானூர் ஜெய்சால்மீர் ஆகிய பாலைவனப் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிகளை இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ ஜவஹர்லால் நேரு இந்த சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி திட்டத்தை அமுல்படுத்துகிறார். ஆக சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி என்றதுமே ஹிந்துத்துவ கற்பனை என கூறுவோர் அந்த கற்பனையையும் ஹிந்துத்துவத்தையும் நேருவிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

சரஸ்வதி குறித்து தனினோவின் சொந்த கருத்துக்கள் என்ன? பின்னாட்களில் ஹரப்பன் பண்பாடு என அழைக்கப்படும் அதன் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவேதான் பல அகழ்வாராய்ச்சியாளர்கள் அதை சரஸ்வதி சிந்து பண்பாடு என அழைக்க தயங்குவதில்லை. இந்த நதிப்படுக்கை நாகரிகத்துடன் நம் இன்றைய பாரத சமுதாயம் தொடர்ச்சியான பண்பாட்டு உறவு கொண்டுள்ளது. இன்றைக்கும் ராஜஸ்தான் ஆழ்கிணறுகளுக்கு சரஸ்வதி நதியின் நிலத்தடி பிரவாகம் நன்னீர் அளித்து வருவது போல பாரத பண்பாட்டுக்கு ஊற்றுக்கண்களாக சரஸ்வதி பண்பாடு இருந்து வருகிறது. அதன் நினைவு நம் கூட்டு நனவிலியில்.

ஆனால் இந்த மகாநதியின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த அந்த இயற்கை நிகழ்வுதான் என்ன? அது திடீரென நிகழ்ந்த பெரு நிகழ்வா அல்லது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த ஒரு மெதுவான மாற்றமா? தனினோ நம் முன்னால் தரவுகளின் அட்டவணை ஒன்றை விரிக்கிறார். ஏழு ஆராய்ச்சிகள் பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்து ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சியின் போது அங்கு வறண்ட சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன. இன்னும் ஏழு ஆராய்ச்சிகள் பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்து ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சியின் போது அங்கு அதீத மழைச் சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன.

இரண்டுமே நிகழ்ந்திருக்கலாம். அதீத மழை அதீத வறட்சி நிலத் தடுக்குகளின் உராய்வு என அனைத்துமே சரஸ்வதியின் ‘விநாசத்தை’ ஏற்படுத்தியிருக்கலாம் என கூறுகிறார் தனினோ. அதன் கிளைகள் வேறு நதிகளுடன் இணைந்தன. ஒரு நதி மறைந்தது. அது வளர்த்த ஒரு பண்பாடு தடுமாறியது. வீழ்ச்சியடைந்து மாற்றம் கொண்டு மீண்டது. தன் நினைவுகளில் அந்த நதியை அன்னைகளில் சிறந்தவளாக தெய்வங்களில் சிறந்தவளாக என்றென்றைக்குமாக குடியேற்றி வணங்கியது. அவளே அறிவைத் தந்தாள். அவளே நம் பண்பாட்டை உருவாக்கினாள். அவள் பாரதத்தின் கூட்டுமனதில் நனவிலும் கூட்டு நனவிலியிலும் வாக்தேவதையாக கலையரசியாக உருவெடுத்தாள்.

ஆக தனினோ முடிக்கும் போது சரஸ்வதி ஒரு புத்தெழுச்சியின் பிறப்புக்கும் ஆழ்ந்த உருவகமாகிவிடுகிறாள்.

பாரதத்தின் பண்டைய வரலாற்றினை அறிவது எப்படி என ஆர்வமுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகும் எவருக்கும் ஒரு வரலாற்று புதிரை எப்படி பல கோணங்களில் அணுகுவது என்பதை கூறும் சுவாரசியமான அறிவியல் கதை சொல்லி அகழ்வாராய்ச்சிக் குழிகளிலிருந்து கடும் சூரிய வெயிலில் அகழ்வாராய்ச்சியாளர்கள் உருவாக்கும். அறிதலை பொதுமக்களுக்கு சுவாரசியத்துடன் அரசியல் சார்பில்லாமல், அதே நேரத்தில் உண்மையை எவ்விதத்திலும் சமரசம் செய்யாமல் கொண்டு வந்து கொடுப்பது எளிதல்ல. அந்த மகத்தான சாதனையை தனினோ செய்திருக்கிறார்.

நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum