இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்)

Go down

பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்) Empty பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்)

Post by ஹரி ஓம் Sat Jan 08, 2011 2:15 pm

பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்) Kamadhenu

பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.

புராணங்களில் (வரலாறுகள்) மற்றும் இறை இலக்கியங்களில், பசுவை போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மை நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தொகுப்பதோ, முக்கியமானவற்றை நினைவு கூறுவது மட்டுமோ நோக்கம் அல்ல. நம் நன்மை நாடி நாம் பசுவை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, பசுக்களைப் பராமரிப்பது நம் கடமை என்பதை வலியுறுத்துவதே நோக்கமாகும்.

கோ பூஜையினால், கோ தானத்தினால் அடையும் நன்மைகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், பசுப்பராமரிப்பு நம் அனைவரின் அதி அவசரமான அவசியமான பணியாகும் என்று எல்லோரும் உணர வேண்டும்.

பசு வழிபாடு மூட நம்பிக்கை அல்ல; நம் மூதாதையர்களின் அறிவுடைமையால் உருவான மிக முக்கியமான செயல்பாடே. நவீன வாழ்முறை மோகத்தினால், பண்டையோர் விஞ்ஞான அடிப்படையில், மெய்ஞானமும் கூட்டுவதாக அளித்துள்ள பாரம்பரியப் பண்பாட்டை மறவாதிருக்க, பின்பற்றிட இறையருள் வைக்கட்டும்.

பசு (கோமாதா) வழிபாடு.

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே "சனாதன தர்மம்" என்ற இந்துமதம், "எல்லாம் இறை மாயம்" என்றும் "தத்வமசி" அதாவது "நீயும் பரம்பொருளே" என்றும் "அத்வைதம்" - எல்லாம் ஒன்றே - அதாவது "பரம்பொருள் இன்றி வேறொன்றும் இல்லை" என்றும் "காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே" என்றும் கூறி வந்திருக்கின்றது.. இந்நிலையில்,

மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு, போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக தொன்று தொட்டு வழிபட்டு வருவதும், அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கோருவதும்,

பாரபட்சமற்ற செயல் தானா?
ஞாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள், பசுவையையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர் தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.

எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும், ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வைப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நேர்கதிர்களைத் தொங்கவிடுவதும், இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதோடு, சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

- விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- அவன் ஏறும் வாகனம் கருடன்
- எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி நூற்றுக் கணக்காக பட்டியலிடலாம்.



நன்றி- நிகழ்வுகள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum