Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Go down

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க ! Empty கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by ஆனந்தபைரவர் on Sat Jan 22, 2011 10:21 pm

இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற வரியாகும் .
இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப்
பட்டருக்கிறது .கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும் நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது .

சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட ஒரு
சொல் உண்டு .

இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர்
எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி
அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள் ..
சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட
தாமரையான சகஸ்ராரம் என உட்ப்பொருள் கூறப் படுகிறது .
அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் .
குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும்
முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column எனும் முதுகு எலும்பே ஆகும் .

தேகத்தின் அரசன் ஆன்மா . எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன்
கோ --அரசன் , கழி ---கோல் குருமணி ---ஒளிபடைத்தவன்
எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் ,
இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது .
இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும்
இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது .

தகுந்த ஞான குரு தந்து தான் பெறவேண்டும் .குரு தரும் அனுபவ முறை இந்த ஞானம் குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த ஆற்றலை மேலே கொண்டு வரவேண்டும் இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் .
இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !
இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள் இருக்கின்றன .
மனிதன் அஞனியாக இருக்கும் போது,அறியாமையில் இருக்கும் போது இடகலை பிங்கலை எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடை பெறுகிறது .
அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி ,
சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது .
அப்போது தான் அந்த நாடி திறக்கிறது , பாதையும் திறக்கப் படுகிறது
அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும் ஈசரை மாணிக்க வாசகர் ஆருரன் என்கிறார் .
திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் .

மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து திருப்பெருந்துறைக்கு அதாவது ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி .
இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன் ..
இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு
இதன் பெருமையை திரு மூலர் "கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி
வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".
என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33
எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து நிற்க செய்கிறது .
இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள் யாழ் எனும் இசைக் கருவியை அமைத்தனர் . அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு பரிச்சயம் ஆகி இருந்தது . ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக தனது முதுகு எலும்பை
தந்ததாக புராண கதை இருந்தது .
அது 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான கதையாக இருந்திருக்கிறது .
எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக்
குறிப்பிட்கிறார் .
மேலும் இந்த 33 என்ற எண்களும் பண்டைய நாளில் குறிப்பிடத்தக்க வழியில்
புகழ் பெற்றிருந்தது . மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில் இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள் அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும் அக்க மாலை 33 எண்.
தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி. எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை
பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் .
ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன .
கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது உட்கார்ந்து தான்
போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே
அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உர்க்கர்ந்து போவதையே குறிப்பதாக எண்ணுகிறேன் .
எனவே கோகழியாண்ட குருமணிதன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை
என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக கொள்ளலாம் .
கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
--
A.Sugumaran , Pondy
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 33
Location : இந்திய திருநாடு

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum