இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்

Go down

மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும் Empty மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்

Post by ஆனந்தபைரவர் Sat Feb 19, 2011 10:07 pm

ஃப்ரான்ஷ்வா காதியே

'இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது ' (விகாஸ் பதிப்பகம்) என்ற அவரது புத்தகத்திலிருந்து சில அத்தியாங்களை கட்டுரை வடிவில் தருகிறார்.

பெல்ஜிய ஆய்வாளரான கோயன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst) கூறுவதான 'இந்தியாவில் மறுப்புவாதம் ' (negationism in India) என்பது என்னதான் என்று ஒரு கணம் நின்று யோசித்துப் பார்ப்பது முக்கியம். அந்தத் தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்துக்கு அவரே எழுதிய முன்னுரையில் மறுப்புவாதம் என்றால் என்னவென்று அவரே விளக்குகிறார். 'வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களை மறுப்பது ' என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. நவீன வரலாற்றில், 15 லட்சம் ஆர்மீனியர்களை துருக்கியர்கள் இனப்படுகொலை செய்ததும், நாஜிகள் 60 லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்ததும், ஏராளமான லட்சக்கணக்கான ரஷ்யர்களை ஸ்டாலின் கொன்றதும், 10 லட்சம் திபேத்தியர்களை சீன கம்யூனிஸ்ட்கள் கொன்றதும் அந்த படுகொலைகளை செய்தவர்களால் 'இந்தப்படுகொலைகள் செய்யப்படவேயில்லை ' என்றே மறுக்கப்படுகின்றன. மறுப்பது என்பது சரியான வார்த்தை அல்ல. அவைகள் NEGATED என்றே சொல்லவேண்டும். புத்திசாலித்தனமாக, அருவருக்கத்தக்கமுறையில், மென்மையாக, கொச்சையாக இவை மறுக்கப்படுகின்றன, இறுதியில் இந்த விஷயங்களைப் படிக்கும் மக்களின் மனங்கள் குழம்பிப்போய், எது உண்மை எது பொய் என்றே புரியாது போய்விடுகிறது.

சிலநேரங்களில் எண்கள் மறுக்கப்படுகின்றன, அல்லது மெளனம் காக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் ஸ்பானிய ஆக்கிரமிப்பு உலக வரலாற்றில் மிகவும் ரத்தக்களரியானதும் இரக்கமற்றதுமான அத்தியாங்களில் ஒன்று. தென் அமெரிக்க பழங்குடியினர் 9 கோடிப்பேர்களிலிருந்து, 3 கோடியாக அழிந்தது என்று எல்ஸ்ட் மதிப்பிடுகிறார். மோசமான எண்ணிக்கைதான், ஆனால் யார் இதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் ?

'முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கதி என்ன ? ' என்று கேட்கிறார் எல்ஸ்ட்.

ஆசியா அல்லது ஐரோப்பாவில் ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்கள், இறப்பதைவிட இஸ்லாமுக்கு மதம் மாறுவது மேலென்று உடனே மாறிவிட்டன. 4000 வருடத்துப் பழைய இந்து மதம் எதிர்த்துப் போராடியதால், முஸ்லீம் ஆக்கிரமிப்புகள் இந்துக்களுக்கு இறப்புக்கும் வாழ்வுக்குமான போராட்டமாகிவிட்டன. முழு நகரங்களும் கொளுத்தப்பட்டன. நகரத்தின் அனைத்து மக்களும் கொல்லப்பட்டார்கள். அலையலையாய் வந்த இந்த போர்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றது. ஏராளமானவர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டார்கள். ஒவ்வொரு புதிய ஆக்கிரமிப்பாளனும், தனக்கென ஒரு மனித எலும்புமலையை உருவாக்கிக்கொண்டான். கி,பி 1000த்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த ஆக்கிரமிப்பு அங்கிருந்த அனைத்து இந்துக்களையும் கொன்றது. அங்கிருக்கும் மலைபிரதேசத்துக்கு இன்றும் 'இந்துக்குஷ் ' (இந்துப்படுகொலை) என்றே பெயர் வழங்குகிறது. மத்திய இந்தியாவில் இருந்த பாமானி சுல்தான்கள் ஒவ்வொரு வருடமும் 100000 இந்துக்களை கொல்லவேண்டும் என்று ஒரு சட்டமே வைத்திருந்தார்கள். 1399இல் தைமூர் ஒரே நாளில் 100000 இந்துக்களை கொன்றான். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு எண்ணிக்கை. கே.எஸ் லால் அவர்களின் ' இந்தியாவில் முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சி ' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டும் எல்ஸ்ட், கணக்குப்படி 1000க்கும் 1525க்கும் இடையில் இந்து மக்கள் தொகை சுமார் 8 கோடி குறைந்தது என்கிறார்.

காஃபிர்கள் (முஸ்லீமல்லாதவர்கள்) எல்லாரையும் கொன்று தீர்க்கும் அளவுக்கு குறைவாக இல்லை. இந்துமதமோ, மக்களின் உள்ளத்தில் உறைந்து விட்டுக்கொடுக்க இயலாததாக இருந்தது. ஆனால் பிராம்மணர்களின் சொல்லிலும், பக்தர்களின் உள்ளத்திலும் அது பின்வாங்கிக்கொண்டது. இந்து மக்களைக் கொன்றும் தீர்க்க முடியவில்லை, அவர்களை மதம் மாற்றவும் முடியவில்லை என்று கண்ட முஸ்லீம் ஆட்சியாளர்கள், 20 அவமானப்படுத்தும் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை ஜிம்மிகளாக (பாதுகாக்கப்பட்ட வேறுமதத்தினர்) ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் ஜிசியா என்ற வரியை கடுமையாக விதித்து இந்துக்களிடம் வசூல் செய்தனர்.

ஹானஃபைட் சட்டத்தின் காரணமாக, பல முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்துக்களை படுகொலை செய்வதிலிருந்து தங்களுக்கு விலக்கு இருக்கிறது என்று கருதினார்கள். 18ஆம் நூற்றாண்டில் ஆண்ட புகழ்பெற்ற திப்புசுல்தான் தான் இந்துக்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்திய கடைசி ஆட்சியாளன். 1857இல் நடத்திய போரில் பிரிட்டிஷாரிடம் தோற்றபின்னர், இந்திய முஸ்லீம்கள் முல்லாக்களின் அறிவுரை கேட்டு பிரிட்டிஷ் கல்விமுறையை மறுத்தும் (பணக்கார இந்துக்கள் இந்த பிரிட்டிஷ் கல்வியை மேற்கொண்டார்கள்) தங்களது பழங்காலப்பெருமைபேசி சுயபச்சாத்தாபத்திலும், வளர்ந்துவரும் பிற்போக்குத்தனத்திலும் மாட்டிக்கொண்டார்கள். பிரிட்டிஷ்காரர்கள், பிரித்தாளும் சூழ்ச்சிக்காக, பின்னால் அவர்களை அரசியலுள் கொண்டுவந்து அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தார்கள்.

மறுப்புவாதம் என்பது, இந்த வரலாற்றையே மறுப்பது மட்டுமல்ல அதை வரலாற்றிலிருந்தே அழிப்பது. வரலாற்றுப்புத்தகங்களிலிருந்து மட்டுமல்ல, இந்திய மக்களின் ஞாபகத்திலிருந்தே அழிப்பது. நாஜிப்படுகொலைக்குப்பின்னர், யூதர்கள் தங்களது மக்கள் 60 லட்சம் பேர் பலியானதை மறந்துவிடாமல் இருப்பதற்கும், தங்களுக்கு தாங்களே தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், இந்திய தலைமையோ, அரசியல் மற்றும் அறிவுஜீவித்தலைமை, சுயநினைவோடும், தேர்வோடும் முஸ்லீம்கள் நடத்திய இந்த இனப்படுகொலையை மறுப்பதற்கே தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்கள். யாரும் பலிக்குப்பலி வாங்க அலையவில்லை. இன்றைய ஜெர்மனி மீது யூதர்கள் பலிவாங்க அலைகிறார்களா என்ன ? இல்லை. வரலாறு அதன் பழைய தவறுகளை திரும்பவும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், வரலாறு உண்மையாய் எழுத்டப் பட வேண்டும் . இன்றும் அந்தத் தவறுகள் தொடர்கின்றன. காஷ்மீர இந்துக்கள் தங்களது 5000 வருட இருப்பிடத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். 50000 இந்துக்கள் ஆப்கானிஸ்தானத்திலிருந்து இன்று துரத்தப்பட்டிருக்கிறார்கள். பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள். ஞாபகம் என்பது, கடந்தகாலத்தின் ஞானத்தோடு நிகழ்காலத்தைப் பார்ப்பதுதானே. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்காக, பொது ஞாபகத்தை அழிக்கக் கூடாது.

இந்தியாவில் இந்துக்களின் கையாலேயே இந்த விஷயம் நடந்திருக்கிறது. முஸ்லீம்கள் நடத்திய படுகொலைகளை இந்துக்களே மறுக்கிறார்கள். 'radical humanist 'ஆன M.N.ராய், 'சமத்துவத்தையும், பாரபட்சத்தை அழிக்கவும் இஸ்லாம் செய்த வரலாற்றுபெருமை வாய்ந்த காரியத்துக்காக இந்தியாவின் கீழ்ஜாதி மக்கள் இஸ்லாமை வரவேற்றார்கள் ' என்று எழுதுகிறார். மேலும் ' ஒருவேளை வன்முறை நடந்திருந்தால், அதுவும் இந்து மேல்ஜாதி மக்களான பிற்போக்கு நிலவுடமைச் சக்திகளை எதிர்த்து முற்போக்குச்சக்திகள் செய்த நியாயமான வர்க்கப்போரின் வன்முறையே ' என்கிறார்.

வேறொரு மேற்கோளைப் பார்க்கிறீர்களா ? இது மகமது கஜ்னவி பற்றியது. ஆயிரக்கணக்கான இந்துக்கோவில்களை இடித்தவன் இவன். இந்துக்களுக்குப் புனிதமான மதுரா கோவில் வளாகத்தையும் கோவிலையும் பார்த்து கஜ்னவி ஆச்சரியப்பட்டு பேசினான் என்று இவனது வரலாற்றாளரான உத்பி (Utbi) எழுதுகிறார். ஆனால் அடுத்த வினாடியே அந்த கோவிலை இடித்து தரைமட்டமாக ஆணையிட்டான் என்றும் எழுதுகிறார். 'கட்டிடம் மகமூதை ஆச்சரியப்படுத்தியது, மதுரா நகரத்தையும் அவன் பார்த்து வியந்தான். மதுராவில் இன்று ஆஸ்திகர்களின் நம்பிக்கையைப்போல உறுதியாக ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. மகமூது ஆன்மீகவாதி அல்ல. அவன் முஸ்லீம். அது அவன் கூட இருந்த ஒன்று. அவ்வளவுதான். அவன் முதலில் சிப்பாய், முதல்தரமான சிப்பாய் ' ஆயிரக்கணக்கான கோவில்களை இடித்து, ஏராளமான காஃபிர்களை அவமானப்படுத்திய ஒருவனுக்கு ஆச்சரியமான பாராட்டுரைதான். எழுதியது யார் ? ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் முதல் பிரதமர். சுதந்திரத்தின் கட்டமைப்பாளர்களில் முக்கியமானவர்.

எம்,என் ராய்-உம், சிறு அளவில் ஜவகர்லால் நேருவும் இத்தகைய மறுப்புவாதத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். மார்க்ஸீயவாதமே இந்த மறுப்புவாதத்தின் ஆரம்பஸ்தானம். முதலாம் உலகப்போருக்கு பின்னர், ருஷ்ய கம்யூனிஸ்ட்கள் அராபியர்களை அடுத்த மூளைச்சலவைக்கு விளைநிலமாக பார்த்து அவர்கள்மீது கவனம் செலுத்தினார்கள். முதலாளித்துவத்தாலும், வர்க்கச் சுரண்டலாலும் கெட்டுப்போன உலகத்தில் புதிய தத்துவமாக தோன்றிய கம்யூனிஸம் இளைஞர்களை வெகுவாகப் பாதித்தது என்பதையும் மறக்ககூடாது. தவறேதுமில்லை. ஆனால், கம்யூனிஸ பிரச்சாரத்தின் மூலம், அராபியர்கள்மீது நல்லவர்கள் என அனுதாபம் செலுத்தவும், யூதர்களை கெட்டவர்கள் என வெறுக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். இந்தியாவிலும், 20களின் ஆரம்பத்திலிருந்தே, இளைஞர்கள் முஸ்லீம் படுகொலைகளை மறுக்கவும் சொல்லித்தரப்பட்டார்கள். 'இந்தியவரலாறு எழுதுவதும், மதவாதமும் ' என்ற நூலில் ரோமிலா தாப்பர், ஹர்பன்ஸ் முகியா, பிபின் சந்திரா போன்றோர் (தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள்) முஸ்லீம் இனப்படுகொலைகளை மறுத்தும் அதற்கு பதிலாக வர்க்க மோதல்களை மேலேற்றியும் எழுதியிருக்கிறார்கள். ரோமிலா தாப்பர்,பெர்சிவல் ஸ்பியர் அவருடன் இணைந்து எழுதிய 'பெங்குவின் இந்திய வரலாறு ' என்ற நூலில் 'அவுரங்கசீப்பின் மதவெறித்தனமும், சகிப்புத்தன்மையற்ற குணமும், வெறுப்பினால் புனையப்பட்ட கதைகள், காசி கோவிலை இடித்து மசூதி கட்டியது போன்ற அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சில செயல்கள் மீது கட்டப்பட்ட கதைகள் ' என்று எழுதுகிறார். எவ்வாறு இப்படி நேர்மையற்று இருக்கமுடியும் ? குருடராக இருக்கமுடியும் ? இது எவ்வாறு மறுப்புவாதம் பரப்பப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

உண்மையென்ன ? அவுரங்கசீப் (1658-1707) தனியாக ஒரு இடிந்துபோன கோவில் மீது மசூதியைக் கட்டவில்லை. அவர் எல்லா கோவில்களையும் இடிக்க ஆணையிட்டார். இந்துக்களுக்குப் புனிதமான காசி விஸ்வநாதர் ஆலயம் இதிலொன்று. இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்ட கோவில்கள் மீது மசூதிகளை எழுப்ப ஆணையிட்டார். அவருக்கு கைக்கெட்டியவை உடனே அழிக்கப்பட்டன அங்கு மசூதிகள் எழுப்பப்பட்டன. சில உதாரணங்கள். கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா, குஜராத் கடற்கரையில் திரும்பக்கட்டப்பட்ட சோமநாதர் ஆலயம், காசியில் விஷ்ணு ஆலயம் இடிக்கப்பட்டு ஆலம்கீர் மசூதி கட்டப்பட்டது, அயோத்தியிலுள்ள 'திரேத்யுகத்துக் கோயில் '(Neg 60) அதில் ஒன்று.. அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்ட கோவில்கள் லட்சக்கணக்கில்லையென்றாலும் ஆயிரக்கணக்கானவை. அவரது ராஜசபைக்கட்டளைப்படியே 'காபிர்களின் எல்லாப் பள்ளிக்கூடங்களை இடிப்பதற்கும், அவர்களது கோவில்களை அழிப்பதற்கும், காஃபிர்களின் மதவழிபாடுகளை அழிப்பதற்கும், பழக்கவழக்கங்களை முடிப்பதற்கும் அவுரங்கசீப் அவரது அனைத்து பிராந்திய கவர்னர்களுக்கும் ஆணையிடுகிறார் ' என்பதுதான். அவரது வரலாற்றாளர்கள் இந்த அழிவுகளை கணக்கெடுக்கிறார்கள். 'ஹாசன் அலி கான் வந்தார். 172 கோவில்களும் அந்த இடங்களும் அழிக்கப்பட்டன என்று உரைத்தார் '

மாபெரும் அரசரானவர் சித்தூர் சென்று 63 கோவில்களை அழித்தார்... அம்பர் என்னும் இடத்திலுள்ள கோவில்களை அழிக்க நியமிக்கப்பட்ட அபு தாராப் 66 கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்று தெரிவித்தார்....அவுரங்கசீப் கோவில்களை மட்டும் அழிக்கவில்லை, அந்த கோவில்களை உபயோகப்படுத்தியவர்களையும் அழித்தார். அவரது சொந்த சகோதரரான தாரா சிக்கோ இந்து மதத்தில் ஆர்வம் காட்டியதற்காக கொல்லப்பட்டார். அவுரங்கசீப் நடத்தும் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்ததற்காக சீக்கிய குருவான டேஜ் பகதூர் தலை துண்டாடப்பட்டது. இப்படி இருக்க, ரோமிலா தாப்பரும் பார்சிவல் ஸ்பீயரும் பேசும் நல்ல சகிப்புத்தன்மை வாய்ந்த அவுரங்கசீப் என்பது இந்த மறுப்புவாதத்துக்கான மகத்தான முயற்சி. என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூட சுல்தான் அரசாட்சியின்போது நடத்திய கொடுமைகள் பற்றி கண்டு கொள்வதில்லை. பிரோஸ் ஷா துக்ளக் இந்துக்களை முஸ்லீம்களாக்க வெற்றியடையாத முயற்சிகளை மேற்கொண்டார். சில நேரங்களில் அவர்களைக் கொடுமைப்படுத்தினார் என்றும் ஒரே ஒரு வரி. பிரிட்டிஷ்காரர்களுக்கு அதில் உள்நோக்கம் இருந்தது. முஸ்லீம்கள் செய்தவைகளை மறைத்து இந்துக்களையும் காங்கிரஸையும் அடக்க அவர்கள் செய்தது. இதே மறுப்புவாதத்தை நேருவும் காங்கிரசும் செய்ததுதான் சோகமானது. அது வேறு கதை.

இதில் நிறைய சந்தோஷமாக இருக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள்தான். எத்தகைய முட்டாள்கள் இந்த இந்துக்கள். இவர்களை கோடிக்கணக்கில் கொன்றோம். இவர்களிடமிருந்து தேசத்தை பிடுங்கிக்கொண்டோம். இவர்கள் மீது கலவரங்கள் கொண்டுவந்தோம். இருந்தும் இவர்கள் நம்மை காப்பாற்றுகிறார்கள்... ஆனால் பெரும்பாலான இந்திய முஸ்லீம்கள் தேவபந்தி போதனையை ஆதரிப்பவர்கள் என்பது இந்துக்களுக்குத் தெரியாதா ? (இந்தியா ஒருகாலத்தில் தாருல்-இஸ்லாம் (இஸ்லாமிய தேசம்)ஆக இருந்தது. மீண்டும் அது இஸ்லாமிய தேசமாக ஆகவேண்டும் என்பது தேவபந்தி போதனை). பலதடவை காங்கிரஸ் அக்கிராசானராகவும், கல்வி அமைச்சராகவும் இருந்த மெளலானா அபுல் கலாம் ஆசாத் இந்தப் போதனையின் கொள்கை பரப்பாளராக இருந்தவர். இந்த போதனைக்கு எதிராக, கவிஞர் முகமது இக்பால் தலைமையில் அலிகார் போதனை பாகிஸ்தானை உருவாக்கவேண்டும் என்று கோரியது. அலிகார் போதனையில் நமக்கு முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்த வகுப்பைச் சேர்ந்த முகமது ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றை திருத்தி எழுதப்புகுந்த முயற்சிதான். 1920இல் முகமது ஹபீப் தனது மாபெரும் புத்தகத்தில் 4 தேற்றங்களை வைக்கிறார். 1. இந்துக்களை படுகொலை செய்ததாகவும், கோவில்களை உடைத்ததாகவும், இந்துப்பெண்களை கடத்திக்கொண்டுவந்ததாகவும், குழந்தைகளை கொன்றதாகவும் கூறும் முஸ்லீம்களாலேயே எழுதப்பட்ட கையேடுகளும், அரண்மனைக் குறிப்பேடுகளும் 'அரண்மனை கவிஞர்களாலும், ஆர்வமுடைய வரலாற்றாசிரியர்களாலும் தங்கள் அரசர்களை சந்தோஷப்படுத்த எழுதப்பட்ட உயர்வுநவிற்சி அணிக் கதைகள் ' 2. கொடும்கொலைகள் உண்மையிலேயே நடந்தன. ஆனால் அவை மத்திய ஆசியாவிலிருந்து உள்ளே வந்த துருக்கிய கொள்ளைக்காரர்களால் நடத்தப்பட்டன. 3. கோவில்கள் உடைக்கப்பட்டன, ஆனால் அவை உள்ளே இந்துக்கள் சேமித்துவைத்திருந்த தங்கம் வெள்ளிகளுக்காக முஸ்லீம் படைகள் நடத்திய திருட்டுகள். 4. கோடிக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம்களாக மாறியதற்கு காரணம் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதல்ல. 'நடந்து என்னவென்றால், பெரும்பாலான மக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். தங்கள் சுய எண்ணத்தினால் அவர்கள் இந்து மனுஸ்மிருதியை விட்டுவிட்டு முஸ்லீம் ஷாரியாவை தெர்ந்தெடுத்துக்கொண்டார்கள். ஏனெனில் இவர்கள் கெட்ட பிராம்மணர்களால் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். '

ஹபீப் அவர்களுக்கும் அவரது போதனை வகுப்புக்கும் துரதிர்ஷ்டவசமாக, முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குறிப்பேடுகளை மிகவும் தெளிவாக, தேதிவாரியாக அழகாக குறித்துச் சென்றிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள், தாங்கள் தங்கள் மதக்கடமையைச் செய்வதாகவும், கொலைகள் புரிவதும், மக்களை அடிமைப்படுத்துவதும், கோவில்களை இடிப்பதையும் தெய்வ காரியமாக கருதினார்கள். கஜினி மஹமது துருக்கியராக இருந்தாலும் (9967-1030) ஒரு காட்டுமிராண்டி அல்ல. அவர் கலைகளயும் இலக்கியத்தையும் ஆதரித்தவர். ஒவ்வொருதடவை கோவிலை இடித்த பொழுதும், ஒவ்வொருதடவை இந்துக்களை கொன்றபின்னரும் அவர் குரானை ஓதினார். பிர்தெளஸ் ஷா துக்ளக் (1351-1388) தான் எழுதிய குறிப்பேட்டிலேயே இந்துக்கோவில்களை இடித்ததும் இந்துக்களை கொன்றதையும் மிகுந்த பக்தியுடன், கடவுள் நம்பிக்கையுடன் செய்யப்பட்ட செயலாக எழுதுகிறார். 'இந்துப்பண்டிகையின்போது நானே அங்கு சென்றேன். அந்த பண்டிகை கொண்டாடும் தலைவர்களை நானே கொன்றேன். அந்த பண்டிகை கொண்டாடும் இந்து நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் அனைவரையும் கொல்ல ஆணையிட்டேன். அவர்கள் வழிபடும் சிலைகள் இருக்கும் கோவில்களை அழித்தேன். அங்கு மசூதிகளை கட்டினேன். ' இறுதியாக எல்ஸ்ட் குறிப்பிடுவதுபோல 'முஸ்லீம்கள் குரான் சொன்னதையே செய்தார்கள். இந்த முஸ்லீம்கள் குற்றவாளிகள் அல்லர். குரானே குற்றவாளி '(Negationism in India, p. 44)

கடைசியில் முஸ்லீம் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து இந்துமதம் தப்பித்தது என்பது மிகவும் பெரிய அதிசயம். இது இந்துமதம் எவ்வளவு ஆழமானது, அதன் கர்மா எப்படிப்பட்டது, அந்த நம்பிக்கை கொண்டவர்கள் மனதில் எவ்வளவு ஆழமாக அது உறைந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. முஸ்லீம் கொடுமைகளை சுட்டுவிரல் காட்டி நாங்கள் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால் அந்த தவறுகள் நடக்கவேயில்லை என்று மறுக்கப்படக்கூடாது. அந்த தவறுகள் திரும்பிச் செய்யப்படக்கூடாது. உண்மையான கேள்வி ' எப்போதாவது இஸ்லாம் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளுமா ? '. வன்முறையை போதிக்கும் கீதையை வாழ்வின் ஆதாரமாக கொண்டிருந்த ரிஷியும் யோகியுமான அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியபோது பரந்த நோக்கோடு பேசினார். 'சகிப்புத்தன்மை மிகுந்த மதத்தை பின்பற்றுபவர்களோடு வாழ்வது பெரியதல்ல. ஆனால் 'நான் உன்னை சகித்துக்கொள்ளமாட்டேன் ' என்று கூறும் மதத்தைப் பின்பற்றுபவர்களோடு சாந்தியாக இணைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ? ' இந்து எல்லோரையும் அரவணைத்துச் செல்ல தயாராக இருக்கிறான். ஆனால் இந்த மையமான உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டால்தான். (Sri Aurobindo India 's Rebirth 161,173) செப்டம்பர் 1909இல் எழுதியதைப் பாருங்கள். 'எந்த ஒரு எழுத்தும் காரியமும் எத்தனையோ முகமதியர்களுக்கு ஆட்சேபமாக இருக்கும். பொது அமைதி கெட்டுவிடும் என்று இந்த காரியங்களும் எழுத்துகளும் பெரும்பாலும் தடுக்கப்பட்டுவிடும். இந்துக்கோவில்களில் கும்பிடுவதுகூட இவர்களுக்கு ஆட்சேபமாக இருக்கும் என்று இந்த அடிப்படையில் தடை செய்யப்பட்டுவிடலாம். (India 's Rebirth p. 55). எத்துணை தீர்க்க தரிசனம். சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்பட்டதும், முஸ்லீம்கள் வருத்தப்படலாம் என்று இந்து கோவில் ஊர்வலங்கள் நகரங்களில் தடை செய்யப்படுவதும் இன்றும் காண்கிறோம். விரைவிலோ, அல்லது தாமதமாகவோ, இந்துக்கள் இந்துமதத்தின் பெருமையை நிலைநாட்டுவார்கள் என்று நம்பினார்.

இங்கு 'ஒரே கடவுள் ' சித்தாந்தத்தைப் (monotheism) பற்றி ஒரு வார்த்தை சொல்லவேண்டும். இதுவே இஸ்லாமை புரிந்துகொள்ள உதவும் சாவி. பல கடவுள்களை கொண்டாடும் பழங்காலத்திய மதங்களின் எதிர்ப்பாய்த் தங்கள் மதங்கள் உருவானதாக கூறுகிறார்கள் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும். 'ஒரே ஒரு உண்மையான கடவுள் எங்கள் கடவுள்தான். மற்றவை எல்லாம் உபயோகமற்ற சிலைகள் '. இந்த 'ஒரு கடவுள் ' 'பல கடவுள் ' எதிர்ப்பு வியாபாரம்தான், பல கடவுள்களை கும்பிடும் மக்கள் மீது, முக்கியமாக தத்துவார்த்தத்தில் ஆழமானதும், பல கோடி மக்கள் நம்பிக்கையுறும் இந்துமதம் மீது, ஆழமான, தீவிரவாத, வன்முறை மிகுந்த கொலைவெறி கொண்ட போராட்டத்தை இஸ்லாம் நடத்த ஏதுவாயிற்று. இதுவே, இரு பெரும் 'ஒரு கடவுள் ' நம்பிக்கைகளான இஸ்லாமும், கிரிஸ்தவமும் கைகோர்க்கவும் ஏதுவாயிற்று. இந்திய முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்திய பிரிட்டிஷாரின் பழக்கங்களை பாருங்கள். உலக முஸ்லீம் தலைவர்களிலேயே மிகவும் தாராளவாதியான தலைவர்களில் ஒருவரான மொராக்கோ அரசரின் சமீபத்திய பேட்டியில் 'எங்களுக்கு (முஸ்லீம்களுக்கு) கிரிஸ்தவர்களோடு எந்தவித சண்டையும் கிடையாது. எங்கள் போராட்டமெல்லாம் பல கடவுள்களை கும்பிடுகிற மக்கள் மீதும், இஸ்லாமிய கடவுள்மீது நம்பிக்கையற்றவர்களோடுதான் '

ஆனால், இந்துமதம் சந்தேகமின்றி ஒரு 'ஒரு-கடவுள் ' மதம் தான். அது பல வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் மதம். அது 'முகமது காட்டியது மட்டுமே கடவுள், அதை நம்பவில்லை என்றால் நான் உன்னை கொல்வேன் ' என்று சொல்வதில்லை. பதிலாக அது 'முகமது காட்டியது மட்டுமல்ல, யேசு, கிருஷ்ணர், புத்தர், ஏன் கன்பூசியஸ் கூட கடவுளின் வடிவம்தான் ' என்று சொல்கிறது. கிரிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதை பக்தியற்றவழி ( 'impious ') என்று அழைக்கிறார்கள். ஆனால் இதுவே உலகை ஒரு கடவுள் வழியில் பார்க்கச் சிறந்த அடித்தளம். 'நீ கிரிஸ்துவை(அல்லது அல்லாவை) நம்பவில்லை என்றால் நான் உன்னை கொல்வேன் ' என்ற கொள்கையால், கோடிக்கணக்கான தென் அமெரிக்க பழங்குடியினர் கிரிஸ்துவர்களால் கொல்லப்பட்டார்கள், கோடிக்கணக்கான இந்துக்கள் அராபியர்களால் கொல்லப்பட்டார்கள். இறுதியில் கேள்வி, இன்றைய முஸ்லீம்கள் இந்து மதத்தை ஒரு நல்ல மதமென ஏற்கத் தயாராக இருக்கிறார்களா ? இல்லை என்றுதான் வருத்தத்துடன் சொல்லவேண்டும். உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் மத்தியில் இந்துமதம் இன்னும் ஒரு மிக மோசமான 'கடவுள் நம்பிக்கையற்ற '(Infidel religion) மதமாகவே இருக்கிறது. இதுவே அவர்களது மதம் அவர்களிடம் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு நேரத்திலும், பிரார்த்தனை ஆரம்பிக்கும் ஒவ்வொரு வரியிலும் சொல்கிறது. 'அல்லா மட்டுமே கடவுள் ' அவர்களது முல்லாக்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்களிடமிருந்து உலகைக் காக்க ஒரு ஜிஹாதுக்கு அந்த முஸ்லீம்களை ஒவ்வொரு பிரார்த்தனையின்போதும் அழைக்கிறார்கள். பாபரின் போர்ப்படைகள் இங்கு இல்லாமலிருக்கலாம். ஒவ்வொரு நாளும் 100000 இந்துக்களை இனிமேலும் கொல்ல இயலாது போகலாம். ஆனால் இன்னும் பம்பாயில் சில குண்டுகளை வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரிவினை வாதத்தை தூண்டிவிடலாம். அணுகுண்டையும் தேவைப்படும்போது பிரயோகிக்கலாம். (அது ஒரேயடியாய் பிரச்சினையை முடித்துவிடலாம்). ஒரு முஸ்லீம் இந்தியனுக்கு ஒரு இந்து இந்தியன் தோழன், சக இந்தியன். ஆனால் அவனது மதமோ அவனுக்கு கடவுள் நம்பிக்கையற்றவனை (Infidel) வெறுக்கவே தினந்தோறும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதுவே இன்றைய பிரச்னையின் மூலாதாரம். இந்த புதிரை விடுவிப்பதன் மூலமே இஸ்லாமின் தொடர்ந்த நீண்ட வாழ்வும் இருக்கிறது.

முஸ்லீம் ஆக்கிரமிப்புகளால் இந்தியாவிற்கு நடந்த வெளிப்படையான காயங்களை முழுவதுமாகக் கணக்கிட்டுவிட முடியாது. இந்து இந்தியாவின் உள்காயங்களையும் ஆன்மீக அழிவையும் கணக்கிடுவது இன்னும் கடினமானது. ஆனால் மீண்டும், பலிவாங்குவதோ, பழைய பூதங்களை கிளப்புவதோ கேள்வியல்ல என்பதைச் சொல்லவேண்டும். துரதிர்ஷ்டவசமாக முஸ்லீம் ஆக்கிரமிப்பால் நடக்கும் அழிவுகள் முடியவில்லை. பாபராலும், மகமூதுவினாலும், அவுரங்கசீப்பாலும், முகலாயர்களாலும் விதைக்கப்பட்ட விதைகள் முதிர்ச்சியுற்றுவிட்டன. இன்றைய 12 கோடி முஸ்லீம்கள், தாம் முன்பு அமைதி விரும்பும் இந்துக்களாக இருந்தோம் என்பதையும், விரும்பாத ஒரு மதத்துக்குக் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டோம் என்பதையும் மறந்து விட்டார்கள். சில நேரங்களில் எது தமது கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கருதினார்களோ அதே தீவிரவாதத்தையும், சகிப்புதன்மையற்ற போக்கையும் தமதேயாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அரவிந்தர் சொன்னது போல 'இன்றைய முஸ்லீம்களில் 90 சதவீதத்தினர் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள். இந்துக்களைப்போலவே இவர்களுக்கும் சொந்தமானதுதான் இந்தியா. ' (Rebirth of India, p.237) முகமதியர்களால் விதைக்கப்பட்ட பிரிவினைவாதம் இன்று முதிர்ச்சியுற்று பாகிஸ்தான் என்னும் பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது. அது மூன்று போர்களாகவும், அணுகுண்டுப்போர் என்னும் பேயாகவும் தெற்கு ஆசியாவை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும், காஷ்மீர் அயோத்தி போன்ற இடங்களில், இந்தியாவை முஸ்லீம்நாடாக்கக் கோரும் முகலாய கூப்பாடு மறைந்துவிடவில்லை என்பதை, கார்கில் சமீபத்தில் உதாரணம் காண்பித்தது போல, ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஃப்ரான்ஷ்வா காதியே அவர்கள் லே ஃபிகாரோ என்னும் பிரஞ்சு பத்திரிக்கையின் இந்திய பகுதி பத்திரிக்கையாளர். பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில் என்னும் இடத்தில் வசிக்கிறார்.

நன்றி: http://www.infidels.org

இந்த கட்டுரை திண்ணையில் இருந்து எடுத்தாளப்பட்டது
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum