இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


குணத்ரய விபாக யோகம்

3 posters

Go down

குணத்ரய விபாக யோகம் Empty குணத்ரய விபாக யோகம்

Post by eegaraiviswa Mon Apr 04, 2011 9:12 pm

குணத்ரய விபாக யோகம்

தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார்.

பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.



ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைடத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்

श्रीभगवानुवाच
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥१४- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் |
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய: = எதை அறிந்து எல்லா முனிவர்களும்
இத: பராம் ஸித்³தி⁴ம் க³தா: = இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ
ஜ்ஞாநாநாம் உத்தமம் = அந்த ஞானங்களிலேயே உயர்ந்த
பரம் ஜ்ஞாநம் = பரம ஞானத்தை
பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி = மறுபடி உரைக்கிறேன்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.

इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥१४- २॥

இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: |
ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||

இத³ம் ஜ்ஞாநம் உபாஸ்²ரித்ய = இந்த ஞானத்தை அடைந்து
மம ஸாத⁴ர்ம்யம் ஆக³தா: = அதனால் என்னியல்பு பெற்றோர்
ஸர்கே³ அபி ந உபஜாயந்தே = படைப்புக் காலத்தில் பிறவார்
ப்ரலயே ந வ்யத²ந்தி ச = ஊழியிலும் சாகமாட்டார்

இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥१४- ३॥

மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் |
ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||

பா⁴ரத = பாரதா
மம மஹத்³ப்³ரஹ்ம யோநி = பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்
அஹம் தஸ்மிந் க³ர்ப⁴ம் த³தா⁴மி = அதில் நான் கருத்தரிக்கிறேன்
தத: ஸர்வபூ⁴தாநாம் ஸம்ப⁴வ: ப⁴வதி = எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன

பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.

सर्वयोनिषु कौन्तेय मूर्तयः संभवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥१४- ४॥

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||

கௌந்தேய = குந்தியின் மகனே
ஸர்வயோநிஷு = பல விதமான பிறப்பிடங்களிலும்
யா: மூர்தய: ஸம்ப⁴வந்தி = எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ
தாஸாம் மஹத் ப்³ரஹ்ம: யோநி: = அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்)
அஹம் பீ³ஜப்ரத³: பிதா = நான் விதை அளிக்கும் தந்தை

எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.

सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसंभवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥१४- ५॥

ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: |
நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||

மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
ஸத்த்வம் ரஜ: தம இதி = சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்
ப்ரக்ருதிஸம்ப⁴வா: கு³ணா: = பிரகிருதியில் எழுவன
தே³ஹே = இவை உடம்பில்
அவ்யயம் தே³ஹிநம் = அழிவற்ற ஆத்மாவைப்
நிப³த்⁴நந்தி = பிணைக்கின்றன

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥१४- ६॥

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |
ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||

அநக⁴ = பாவமற்றவனே
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸ²கம் = அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது
அநாமயம் = நோவற்றது
ஸுக²ஸங்கே³ந = அது இன்பச் சேர்க்கையாலும்
ஜ்ஞாநஸங்கே³ந ச = ஞானச் சேர்க்கையாலும்
ப³த்⁴நாதி = கட்டுப்படுத்துவது

அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.

रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥१४- ७॥

ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |
தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||

கௌந்தேய = குந்தி மகனே
ராகா³த்மகம் ரஜ: = விருப்ப இயல்புடையது ரஜோகுணம்
த்ருஷ்ணா ஸங்க³ ஸமுத்³ப⁴வம் வித்³தி⁴ = அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்
தத் தே³ஹிநம் கர்மஸங்கே³ந = அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்
நிப³த்⁴நாதி = கட்டுகிறது

ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥१४- ८॥

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |
ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||

பா⁴ரத = பாரதா!
ஸர்வதே³ஹிநாம் மோஹநம் தம: = உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ
அஜ்ஞாநஜம் வித்³தி⁴ = அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்
தத் ப்ரமாத ஆலஸ்ய நித்³ராபி⁴ = அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்
நிப³த்⁴நாதி = கட்டுப்படுத்துகிறது

தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!

सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत ॥१४- ९॥

ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத |
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||

பா⁴ரத = பாரதா
ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி = சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது
ரஜ: கர்மணி = ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது
தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய = தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை)
ப்ரமாதே³ உத ஸஞ்ஜயதி = மயக்கத்தில் பிணிக்கிறது

சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.

रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥१४- १०॥

ரஜஸ்தமஸ்²சாபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி பா⁴ரத |
ரஜ: ஸத்த்வம் தமஸ்²சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||

பா⁴ரத = பாரதா
ரஜ: தம: ச அபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி = ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது
ஸத்த்வம் தம: ச ரஜ: = சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது
ததா² ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம: = அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது

பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥१४- ११॥

ஸர்வத்³வாரேஷு தே³ஹேऽஸ்மிந்ப்ரகாஸ² உபஜாயதே |
ஜ்ஞாநம் யதா³ ததா³ வித்³யாத்³விவ்ருத்³த⁴ம் ஸத்த்வமித்யுத || 14- 11||

யதா³ அஸ்மிந் தே³ஹே ஸர்வத்³வாரேஷு = எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும்
ப்ரகாஸ² ஜ்ஞாநம் உபஜாயதே = ஞான ஒளி பிறக்கிறதோ
ததா³ ஸத்த்வம் உத = அப்போது சத்வ குணம்
விவ்ருத்³த⁴ம் இதி வித்³யாத் = வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்

இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.

लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥१४- १२॥

லோப⁴: ப்ரவ்ருத்திராரம்ப⁴: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ ப⁴ரதர்ஷப⁴ || 14- 12||

ப⁴ரதர்ஷப⁴ = பாரதக்காளையே!
ரஜஸி விவ்ருத்³தே⁴ = ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து
லோப⁴: ப்ரவ்ருத்தி = அவா, முயற்சி,
கர்மணாம் ஆரம்ப⁴: = தொழிலெடுப்பு
அஸ²ம: ஸ்ப்ருஹா = அமைதியின்மை, விருப்பம்
ஏதாநி ஜாயந்தே = இவை தோன்றுகின்றன

அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!

अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥१४- १३॥

அப்ரகாஸோ²ऽப்ரவ்ருத்திஸ்²ச ப்ரமாதோ³ மோஹ ஏவ ச |
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ குருநந்த³ந || 14- 13||

குருநந்த³ந = குருகுலச்செல்வமே!
தமஸி விவ்ருத்³தே⁴= தமோ குணம் ஓங்குமிடத்தே
அப்ரகாஸ²: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத³: மோஹ ஏவ ச = ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்
ஏதாநி ஜாயந்தே = இவை பிறக்கின்றன

ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!

यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥१४- १४॥

யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴ து ப்ரலயம் யாதி தே³ஹப்⁴ருத் |
ததோ³த்தமவிதா³ம் லோகாநமலாந்ப்ரதிபத்³யதே || 14- 14||

யதா³ தே³ஹப்⁴ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴= எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே
ப்ரலயம் யாதி = இறக்கிறானோ
ததா³ து உத்தமவிதா³ம் = அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின்
அமலாந் லோகாந் = களங்கமற்ற உலகங்களை
ப்ரதிபத்³யதே =அடைகிறான்

சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.

रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥१४- १५॥

ரஜஸி ப்ரலயம் க³த்வா கர்மஸங்கி³ஷு ஜாயதே |
ததா² ப்ரலீநஸ்தமஸி மூட⁴யோநிஷு ஜாயதே || 14- 15||

ரஜஸி ப்ரலயம் க³த்வா = ரஜோ குணத்தில் இறப்போன்
கர்மஸங்கி³ஷு ஜாயதே = கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான்
ததா² தமஸி ப்ரலீந: = அவ்வாறே, தமஸில் இறப்போன்
மூட⁴யோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்

ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥१४- १६॥

கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் |
ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||

ஸுக்ருதஸ்ய கர்மண: = நற்செய்கையின்
ப²லம் து ஸாத்த்விகம் = பயனே சத்வ இயல்புடைய
நிர்மலம் ஆஹு: = நிர்மலத் தன்மை என்று கூறுவர்
ரஜஸ: ப²லம் து³:க²ம் = ரஜோ குணத்தின் பயன் துன்பம்
தமஸ: ப²லம் அஜ்ஞாநம் = தமோ குணத்தின் பயன் அறிவின்மை

சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.

सत्त्वात्संजायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥१४- १७॥

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப⁴ ஏவ ச |
ப்ரமாத³மோஹௌ தமஸோ ப⁴வதோऽஜ்ஞாநமேவ ச || 14- 17||

ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே = சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது
ரஜஸ: லோப⁴ ஏவ ச = ரஜோ குணத்தினின்றும் அவாவும்
தமஸ: ப்ரமாத³ மோஹௌ ச = தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
அஜ்ஞாநம் ஏவ ப⁴வத: = அஞ்ஞானமும் தோன்றுகின்றன

சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥१४- १८॥

ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்⁴யே திஷ்ட²ந்தி ராஜஸா: |
ஜக⁴ந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ⁴ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||

ஸத்த்வஸ்தா² : ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி = சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள்
ராஜஸா: மத்⁴யே திஷ்ட²ந்தி = ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள்
ஜக⁴ந்ய கு³ண வ்ருத்திஸ்தா²: = மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க்
தாமஸா: அத⁴: க³ச்ச²ந்தி = தாமஸர் கீழே செல்வர்

சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.

नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥१४- १९॥

நாந்யம் கு³ணேப்⁴ய: கர்தாரம் யதா³ த்³ரஷ்டாநுபஸ்²யதி |
கு³ணேப்⁴யஸ்²ச பரம் வேத்தி மத்³பா⁴வம் ஸோऽதி⁴க³ச்ச²தி || 14- 19||

யதா³ த்³ரஷ்டா கு³ணேப்⁴ய: = எப்போது பார்ப்பவன் குணங்களை
அந்யம் கர்தாரம் ந அநுபஸ்²யதி = தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ
கு³ணேப்⁴ய: ச பரம் வேத்தி = குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ
ஸ: மத்³பா⁴வம் அதி⁴க³ச்ச²தி = அவன் என் இயல்பை அறிவான்

குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.

गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥१४- २०॥

கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் |
ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்²நுதே || 14- 20||

தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் = உடம்பிலே பிறக்கும்
ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத்ய = இந்த மூன்று குணங்களையும் கடந்து
ஜந்ம ம்ருத்யு ஜரா து³:கை²: = பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும்
விமுக்த: அம்ருதம் அஸ்²நுதே = விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்

உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.

अर्जुन उवाच
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥१४- २१॥

அர்ஜுந உவாச
கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ |
கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே || 14- 21||

அர்ஜுந உவாச ப்ரபோ⁴! = அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே
ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத: = மூன்று குணங்களையும் கடந்தோன்
கை: லிங்கை³: ப⁴வதி = என்ன அடையாளங்களுடையவன்?
ச கிமாசார: = எங்ஙனம் ஒழுகுவான்?
கத²ம் ஏதாந் த்ரீந் கு³ணாந் அதிவர்ததே = இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

श्रीभगवानुवाच
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥१४- २२॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட³வ |
ந த்³வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||

ஸ்ரீப⁴க³வாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
பாண்ட³வ = பாண்டவா
ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ = ஒளி, தொழில், மயக்கம் – இவை
ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும்போது
ந த்³வேஷ்டி = இவற்றைப் பகைத்திடான்
நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி = நீங்கியபோது இவற்றை விரும்பான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.

उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥१४- २३॥

உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே |
கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||

ய: உதா³ஸீநவத் ஆஸீந: = புறக்கணித்தான் போலே இருப்பான்
கு³ணை: ந விசால்யதே = குணங்களால் சலிப்படையான்
கு³ணா: ஏவ வர்தந்தே இதி = குணங்கள் சுழல்கின்றன என்று
ய: அவதிஷ்ட²தி = எவன் எண்ணி இருக்கிறானோ
ந இங்க³தே = அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை

புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥१४- २४॥

ஸமது³:க²ஸுக²: ஸ்வஸ்த²: ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: |
துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: || 14- 24||

ஸ்வஸ்த²: ஸமது³:க²ஸுக²: = தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன்
ஸம லோஷ்ட அஸ்²ம காஞ்சந: = ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன்
ப்ரிய அப்ரிய: துல்ய தீ⁴ர: = இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்
துல்ய நிந்தா³ ஆத்ம ஸம்ஸ்துதி: = இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்

துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.

मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥१४- २५॥

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே || 14- 25||

மாநாபமாநயோ: துல்ய: = மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான்
மித்ரா அரிபக்ஷயோ: துல்ய: = நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ = எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான்
ஸ: கு³ணாதீத: உச்யதே =அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்

மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.

मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥१४- २६॥

மாம் ச யோऽவ்யபி⁴சாரேண ப⁴க்தியோகே³ந ஸேவதே |
ஸ கு³ணாந்ஸமதீத்யைதாந்ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 14- 26||

ச ய: அவ்யபி⁴சாரேண = மேலும் எவன் வேறுபாடில்லாத
ப⁴க்தியோகே³ந மாம் ஸேவதே = பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ
ஸ: ஏதாந் கு³ணாந் ஸமதீத்ய = அவன் இந்த குணங்களைக் கடந்து
ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்

வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.

ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥१४- २७॥

ப்³ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச |
ஸா²ஸ்²வதஸ்ய ச த⁴ர்மஸ்ய ஸுக²ஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||

ஹி அவ்யயஸ்ய ப்³ரஹ்மண: ச = ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும்
அம்ருதஸ்ய ச = சாவற நிலைக்கும்
ஸா²ஸ்²வதஸ்ய த⁴ர்மஸ்ய ச = என்றும் இயலும் அறத்துக்கும்
ஐகாந்திகஸ்ய ஸுக²ஸ்ய = தனிமையின்பத்துக்கும்
அஹம் ப்ரதிஷ்டா² = நானே உறைவிடம்

சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.

eegaraiviswa

Posts : 26
Join date : 04/04/2011

Back to top Go down

குணத்ரய விபாக யோகம் Empty Re: குணத்ரய விபாக யோகம்

Post by chitraganesan Thu Oct 31, 2013 11:59 am

R

chitraganesan

Posts : 9
Join date : 15/10/2013
Age : 61
Location : Sathanoor{Kumbakonam}Tamilnadu.

Back to top Go down

குணத்ரய விபாக யோகம் Empty Re: குணத்ரய விபாக யோகம்

Post by ஹரி ஓம் Fri Nov 01, 2013 12:46 am

chitraganesan wrote:R
இங்கு இணைந்ததில் நன்றி. உங்களுக்கு இங்கு பதிவிடும் முறை பற்றி ஏதேனும் தகவல் தேவையா
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குணத்ரய விபாக யோகம் Empty Re: குணத்ரய விபாக யோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum