Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

Go down

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Empty அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

Post by kannanjayan on Wed Apr 06, 2011 3:11 pm

என்ன எழுத்து சித்தர் பாலகுமாரனின் தலைப்பு போல் இருக்கின்றதோ? அதே தான். நான் பார்த்து தேடி (மன்னிக்கவும் என்னை தேட வைத்து) கண்டு கொண்ட(ஆட்கொள்ளப்பட்ட) ஒரு அம்பிகையைபற்றி தான் இந்த பதிவு .
இந்து மதம் மிக புராதானமானது. பழமையும் பெருமையும் அதன் இரு தூண்கள். பல வழிகளில் இந்து மதத்தின் தொன்மையை சற்றே பார்க்கும் போது மனம் பிரம்மிக்க தான் செய்கிறது . என்னை பொறுத்த வரை அதற்கு உண்மையான காரணம் எது என்று எண்ணினால் அது பெண் வழிபாடாக இருக்கலாம். ஆக பெண்மையை, அதன் புனிதத்தை போற்றும் வகையில் நாம் ஒவ்வொரு கோவிலிலும் அம்பிகையை (நாச்சியாரை ) வெவ்வேறு வடிவங்களில் போற்றி வணங்குகிறோம். ஆக அன்னையின் ஆயிரம் வடிவங்களில்(என் சித்தம் முழுதும் உள்ள வடிவங்களில்) இரண்டு வடிவம் உள்ள கோவிலை பற்றி பார்போமா ?? வாருங்கள் என்னுடன்........
திருவாரூர்.......... மாவட்டம் என்று வடிவம் எடுத்துள்ள இடம்.. இங்கு மணிமுத்தாறு நதியும் கமலாலயக் குளமும் வளம் சேர்க்க அங்கு நடுநாயகமாய் இரண்டு அம்பிகைகள்.
திருவாரூர் என்றதும் நினைவிற்கு உடனே வருவது ஆழித்தேரும் தியாகேசரும் தான். பின்ன மால் வழிபட்ட மூர்த்தம் அன்றோ ? சிறப்பு இல்லாமல் இருக்குமோ ?
[center]அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே ThiruvarurCar

சிவபிரானே ஆலால சுந்தரரிடம் பொன்னை பத்திரமாக எடுக்க சொன்ன கமலாலய குளமும் உள்ள புண்ணிய பூமி அன்றோ?
கோவிலின் குளத்தின் நடுவுலயே ஒரு கோவில் (நடுவாங்கோவில் ) உள்ள பூமி.
அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே 3


இந்த பூமிலே ஒரு பெண்ணாக பிறந்தவள் இறைவனை அடைய இரண்டு வழிகள் உண்டு
·
  • நல்லறமாக இல்லறம் நடத்தி இறைவனை அடைவது
    · யோக வடிவில் துறவறம் மேற்கொண்டு இறைவனை அடைதல்


சற்றே வேத காலத்தில் பார்த்தால் பெண்களை மேலே சொன்ன இரண்டு வடிவில் சொல்லி இருக்கிறார்கள் ஸத்தியோவோது மற்றும் பிரஹ்மாவாதினி தான் மேலே சொன்ன இரு வகை பெண்கள்.
சரி இந்த கதை ஏன் இங்கு எதற்கு என்று எண்ணுவது புரிகிறது?
இந்த கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருவரும் இந்த இரண்டு வகை பெண்களின் வடிவம்
இந்த கோவிலில் எத்துனை முக்கியம் தியகராஜரோ அத்துனை ஏன் அதற்கும் மேல் முக்கியம் உள்ளவள் அன்னை கமலாம்பிகை.மேலே சொன்ன பெண்களில் இந்த அன்னை யோக வடிவம் கொன்டவள். ஆம் யோகத்திற்க்கே உள்ள அன்னை இவள். இந்த அன்னை வித்யாச வடிவம் கொன்டவள். இவள் பிறை சூடி கங்கை அணிந்து நந்தி வாகனம் கொண்டு தனிக்கோவிலில் கொடிமரம் கொண்டு இருப்பவள். இவளின் வடிவம் பார்போமா??
அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Kamalaambaal
அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே G_L1_598
கிழக்கு(வடகிழக்கு) நோக்கி எழுந்தருளும் நம் அன்னை நான்கு கரத்தினள். மேல் கரங்களில் ஒன்றில் பாசக்கயறு மற்றொன்று அக்ஷயமாலை. கீழ் கரத்தினில் வலது கரம் தாமரையை தாங்க இடது கரமோ தாங்கு கரமாய் அம்மையின் இடையை பற்றி கொள்கிறது. ஆனால் அலங்காரத்தில் மேல் கரங்கள் தெரியாது.
கமலம்பிகையின் திருவடிகள் வியப்புறு வண்ணம் உள்ளன. ஒரு கால் மீது மற்றொரு கால் இட்டு யோகாசனத்தில்(த்யானத்தில் யோக வடிவில்) இருக்கிறாள். இந்த கோலத்துக்கே “சிவயோகம்” அல்லது சிவராஜயோகம் அல்லது வீரராஜயோகம் என்று பெயர். அதாவது சின்னஞ்சிறு பெண் போலவும் அதே நேரத்தில் அண்ட பகிரண்டமும் கரைக்கண்ட ஞான உச்சமும் கொன்டவள்.
இந்த அன்னையும் லலிதையின் வடிவமாகவே எனக்கு தோன்றுகிறது. ஏன் எனில் அன்னையின் பெயரில் உள்ள க கலைமகளையும் ம மலைமகளையும் ல அலைமகளையும் குறிப்பிடுவது மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி அக்ஷமாலை தாங்குபவள். உமையவள் பாசத்தையும் லக்ஷ்மி தாமரையும் தாங்குபவள் ஆனால் இங்கு அன்னையோ மூன்றையும் வைத்து இருக்கிறாள். ஆக அவள் மூன்று அன்னையையும் உள்ளடக்கிய ஒரே வடிவமாய் இருக்கிறாள் அன்னை.
பிறையும் கங்கையும் சூடியவள்(ஆமாம் யோகிகளின் திருமுடி குளிர்ந்து இருக்கும் பிரகாசமாகவும் இருக்கும்). நந்தி வாகனம் கொன்டவள்
(சிவாம்சமும் பொருந்தியவள் பின்னே லலிதை என்றும் காமேஸ்வரனை உள்ளிலே கொன்டவள் தானே). தனி மண்டபத்தில் சங்க,பதும நிதி வாயிலை காக்க ஆட்சி புரிகின்றாள்.
உற்சவர் மனோன்மணி. (மனோன்மணி அன்னையை பற்றி பின் ஒரு தனி பதிவு போடுகிறேன் ). அத்துணை சிறப்பு இந்த பெயருக்கு. சுருக்கமாக மனங்களை தட்டி எழுப்புபவள்.
சரி யோக வடிவை தரிசித்தோம். செல்வோமா இல்லற வடிவை பார்க்க???

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Neelothpalambal

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Neelothpalambalmain

இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறாள் இந்த அன்னை. நீலோத்பலாம்பிகை. தூயத் தமிழில் அல்லியங்பூங்கோதை. பெயரில் இருந்தே கையில் அல்லி(குவளை) ஏந்தியவள் என்று புரியும் ஆம் சரி தான். கருங்குவளையை ஏந்தியவள் வலது கரத்தில். இடது கரமோ ஆனந்தத்தின் பிறப்பிடம், உத்வேகத்தின் தேன்கிண்ணம். ஆம் சேடி பெண் ஒருத்தி முருகனை கையில் தூக்க அவனது பிஞ்சு விரலை பற்றி இருக்கிறது அன்னையின் கரம்.
ஆம் அன்னையின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்ய ஒளி. பின்னே இருக்காதா ?? உலகத்துக்கே நாயகி ஆனாலும் தன் பிள்ளையை கையோடு வைத்த ஆனந்தம்.
ஆக இதன் உள்ளார்ந்த விளக்கம் தான் என்ன ?? இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் அன்னை பராசக்தியின் பிள்ளை அன்றோ ? மகனே நான் இருக்கிறேன் உன்னை கை பிடிக்க கரம் பற்றி நான் காப்பேன் என்று அவள் புன்சிரிப்பு காட்டுகிறது. அன்னை வரப்ரசாதி. இவளுக்கு தனி சிவ மூர்த்தம் இல்லை.
அன்னை கமலம்பிகயோ யோக நெறிக்கு வழிக்காட்ட இவளோ இல்லற நல்லறத்துக்கு வழி வகுக்கிறாள். ஆக இருவர் நோக்கமும் ஒன்றே ஒன்று தான் .. ஜீவ உஜ்ஜீவனம். ஆம் என் மக்களாகிய நீங்கள் நன்றாக வாழ வேண்டும். நான் இருக்கிறேன் அஞ்சாதே..
பல கோவில்களில் அன்னை கட்டிய வலம்பித முத்திரையுடன்இருப்பதே இதை சொல்ல தான் ஆனால் இங்கோ அன்னை ஒரு படி மேலே வந்து சொல்லுகிறாள்...

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்
[code]


Last edited by kannanjayan on Wed Apr 06, 2011 6:10 pm; edited 1 time in total

kannanjayan

Posts : 4
Join date : 05/04/2011
Age : 28
Location : Nagercoil

View user profile http://thanksforseeing.blogspot.com/

Back to top Go down

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Empty Re: அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

Post by நடத்துனர் on Wed Apr 06, 2011 3:17 pm

வாழ்த்துக்கள் கண்ணன் , மிக அழகாக இருக்கிறது உங்களின் கட்டுரை.

உங்களால் இன்று நாங்களும் அன்னையை கண்டுகொண்டோம் , நன்றி

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

View user profile

Back to top Go down

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Empty Re: அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

Post by ஹரி ஓம் on Wed Apr 06, 2011 4:16 pm

அருமை கண்ணன்

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

View user profile

Back to top Go down

அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே Empty Re: அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum