Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பூஜைப் பொருட்களின் தத்துவம்

Go down

பூஜைப் பொருட்களின் தத்துவம் Empty பூஜைப் பொருட்களின் தத்துவம்

Post by ஹரி ஓம் on Mon Aug 22, 2011 4:41 pm


பூஜைப் பொருட்களின் தத்துவம் God-siva

கோயிலுக்குச் செல்லும்போது, வீணாகாத பழத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பூஜைக்கு மலர்களை உபயோகிக்கும்போது காயாகி பழமாக மாறக்கூடிய மலர்களை விட்டு விட்டு மற்றவற்றை உபயோகிக்க வேண்டும்.

மனிதன் தன்னுடைய பூர்வ ஜென்ம பயனாகவே உலக பந்தங்களில் அகப்பட்டு சிரமப்படுகிறான். இந்த அனுபவம் ஐந்து புலன்களின் மூலமாக ஏற்படுகிறது. இதைக் குறிப்பிடும் விதமாகவே ஐந்து விரல்களைக் குவித்துக் குனிந்து மலர்களை எடுக்கிறோம். இந்த வாசனைகள் நீங்கிவிட்டால் நம்முடைய ஜென்மம் உய்வடையும். இதைக் காட்டும் விதமாக ஐந்து விரல்களைக் குவித்து நிமிர்த்திப் பூஜைக்காக விக்கிரகத்தின் மீது மலர்களை போடுகிறோம்.

பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கும்போது வாசனைகளின் பயனாக விளையும் கர்ம வினைகளையே இறைவன் பாதங்களில் வைத்து அவற்றில் இருந்து விடுதலையை நாடுகிறோம்.

தேங்காய் நீண்ட நேரம் வீணாகாமல் இருக்கக் கூடியது. அதனாலேயே அது கோயிலுக்கு நிவேதனமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அதில் ஒரு தத்துவமும் அடங்கி இருக்கிறது.

தேங்காய் மட்டை வெளியே பார்ப்பதற்கு மிருதுவாக இருக்கிறது. உள்ளே இருப்பது நாரும், சொரசொரப்பான ஓடும் உள்பாகமாக இருக்கின்றன. அதற்குள்ளேயே இனிய வெண்மை நிறம் கொண்ட தேங்காய் பதமாக அமைந்திருக்கிறது. கோவிலில் வெளிமட்டையை நீக்கி விட்டு சிறு அளவு குடுமியை வைத்துத் தேங்காயை அர்ச்சனைக்காக சமர்ப்பிக்கிறோம். அர்ச்சகர் தேங்காயை உடைத்து விட்டு, சிறு குடுமியை நீக்கி தேங்காயின் மூன்று கண்களையும் வெளிப்படுத்தி நைவேத்தியம் செய்கிறார். தேங்காயின் மிருதுவான வெளிபாகம் மனிதனின் உடம்பைக் காட்டுகிறது. கரடுமுரடான தேங்காய் ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சங்கடங்களை உணர்த்துகிறது. அது அகற்றப்பட்டு இறைவனின் அருளைப் பெறும்போது இனிமையான உட்பாகம் கிடைக்கிறது. மனித உடம்பின் ஸ்தூல, சூட்சும ஆன்மீக வடிவங்கள் மூன்றுமே இப்படித் தேங்காயில் உருவகமாக அமைந்திருக்கின்றன. தேங்காயில் மூன்று கண்ணைத் திறந்து காட்டுவது, இறைவனின் சந்நிதியில் நமது ஞானக்கண்ணைத் திறந்து காட்டுவதற்கு ஒப்பாகும்.

பூஜைப் பொருட்களின் தத்துவம் God-siva

நன்றி: ஈகரை

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

View user profile

Back to top Go down

பூஜைப் பொருட்களின் தத்துவம் Empty Re: பூஜைப் பொருட்களின் தத்துவம்

Post by அரங்க. வரதராஜன் on Wed Aug 31, 2011 7:44 am

எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை, கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வாசகங்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையில் எங்குமே காணப்படவில்லை. அவ்வாறு ஆதாரம் எதுவும் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். மாறாக, இதுபோன்ற கருத்துக்களை நமது ஹிந்து ஆன்மீக வாதிகளுக்கு மத்தியில் பரவ விட்டுவிட்டு நமது சிந்தனையை திசை திருப்பும் ஒரு மோசடி முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. உண்மை என்னவென்றால், போர்க்களத்தில் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் பார்த்தனுக்கு, போர்புரிந்து எதிரிகளை (தர்ம விரோதிகளை) அழிக்கவேண்டும் என்று உபதேசித்து அதன்படி செயல்பட்டால் என்னென்ன நற்பலங்கள் கிட்டும் என்று பட்டியலிடுகிறார் பகவான் கிருஷ்ணர்! மாவீரன் பார்த்தனுக்கு யோகேஸ்வரனான் கிருஷ்ணன் செய்த உபதேசம், அநீதியை கண்டு சகிக்காமல் எதிர்த்து போராடி வெற்றி பெறவேண்டும் என்பதையே வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதை நினைவிற்கொண்டு இந்த தவறான வாசகங்களை, கீதையிலிருந்து எடுக்கப்பட்டதாக மேற்கோளாக காட்டவேண்டாம் என்று வேண்டுகிறேன்.

அரங்க. வரதராஜன்

Posts : 3
Join date : 31/08/2011

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum