தோட்டுக்காரி அம்மன் கதை

Go down

தோட்டுக்காரி அம்மன் கதை Empty தோட்டுக்காரி அம்மன் கதை

Post by parthiban_k on Sat May 16, 2015 11:45 pm

நாஞ்சில் நாட்டிலே கோனாண்டி ராசன், கொந்தனப்ப ராசன் என இரு குறுநில மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்தனர். கோனாண்டியின் தவப்புதல்வி தோட்டுக்காரி மிகவும் அழகானவள். ஒருமுறை தோட்டுக்காரி தன் தோழிகளுடன் பந்து விளையாடிகொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த குரப்பராசன் , அவளை பார்க்க நேரிடுகிறது... அவள் அழகில் மயங்கிய கொந்தனப்பன் மகன் குமரப்பராசன் அவளையே மணக்கவும் முடிவு செய்தான். தன் தந்தை மூலம் பெண் கேட்டுக் கோனாண்டிக்கு ஓலை அனுப்புகிறான். ஓலையைக் கிழித்தெறிந்த கோனாண்டி அதைக் கொண்டு வந்த தூதனையும் சிறுமைப்படுத்தி அனுப்புகிறான். இதனால் ஆத்திரமடைந்த குமரப்பன் கோனாண்டியைப் பழிவாங்கப் படையுடன் புறப்படுகிறான். குமரப்பனுக்கு வாய்ப்பாகத் தோட்டுக்காரி தன் தோழியருடன் பொய்கையில் நீராடிக் கொண்டிருந்தாள். இது கண்ட குமரப்பன் பொய்கையை முற்றுகையிட்டு அப்பெண்ணைப் பிடித்து வந்து தன் கோட்டையுள் சிறை வைத்தான். இதன் விளைவாகக் கோட்டையர் இருவருக்கும் கடும் போர் நடந்தது. போரில் எஞ்சியவன் குமரப்பன் மட்டுமே. இதனையறிந்த தோட்டுக்காரி சிறையிலிருந்து தப்பிச் சென்று அலைவாய்க்கரை அடைந்தாள். அங்கிருந்த வெள்ளியம்பாறை மீதில் தீ வளர்த்து அதனுள் பாய்ந்தாள். தோட்டுக்காரி தப்பியதை அறிந்து அவளைத் தேடி வந்த குமரப்பன் தோட்டுக்காரி தீப்பாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு அவனும் அதே தீயுள் பாய்ந்து மாய்ந்தான். அரனார் அருளால் அவர்கள் முறையே தோட்டழகி அம்மன், குமரப் பெருமாள்(கருங்கிடாய்காரன்) என்ற பெயரில் தெய்வங்கள் ஆயினர்.

parthiban_k

Posts : 9
Join date : 05/07/2011
Age : 32
Location : Kanyakumari

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum