இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

2 posters

Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 4:56 pm

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Vadiraj%20Swami%20-%20Hayagreeva%20Avatara
முதலில் ஹயக்ரீவர் பற்றிய ஒரு சின்ன அறிமுகம். அநேகமாய் இரு பதிவுகளாய்
வெளிவரும்னு நினைக்கிறேன். ஏற்கெனவே ராமாயணத்தைத் தோற்கடிக்கிறோம்னு ஒரு
புகழ்ச்சி இருக்கு நம்ம பதிவுக்கு. ஆகவே கூடியவரையில் சுருக்கமாய்!

எப்போவுமே கல்விக்குத் தனிச் சிறப்பு. அந்தக் கல்விக்கு அதிபதியாய் நாம்
அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை! ஆனால் அந்த சரஸ்வதிக்கும் ஒரு குரு உண்டு
என எத்தனை பேருக்குத் தெரியும்?? அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின்
நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர்
ஹயக்ரீவரே! ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். ஆனால் இன்றைய கல்வி
வயிற்றுப் பாட்டுக்காக இருப்பதால் அதில் சந்தோஷம் இருந்தாலும் பேரானந்தம்
என்பது இருக்க முடியாது. ஆனந்தம் வேறே, சந்தோஷம் வேறே இல்லையா??? சந்தோஷம்
எப்போவும் தனித்து இருக்காது, தனித்து வராது. கூடவே துக்கமும் வரும். ஆனால்
ஆனந்தம் அப்படி இல்லை. சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை
இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது,
ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச்
செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும்
அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஆன ஹயக்ரீவர் தோன்றியது எப்படி? நான்கு வேதங்களின்
துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை
நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப்
பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த
வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். (
தேவி மஹாத்மியத்தில் வரும் மது, கைடபர்கள் இவர்கள் இல்லை. ஆகவே அவர்கள் என
நினைத்துக் கொள்ள வேண்டாம்.) வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே
இல்லையே?? உலகை இருள் சூழ்ந்தது. பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும்,
வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக்
குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல்,
ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே
இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு,
சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக்
கிளம்பினார்.

"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்" என்றும்,

"வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை
பயந்தவனே! எனக்கருள் புரியே" என்றும் முறையே எட்டாம் திருமொழியிலும், மூன்றாம்
திருமொழியிலும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.

அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து
பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற
திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்ற மகான்கள் பலர் உண்டு. அவர்களில்
ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் முக்கியமானவர்கள் என்றாலும்,
மாத்வாச்சாரியாரால் நிர்மாணிக்கப் பட்ட அஷ்ட மடங்களில் ஒன்றான ஸோதே மடத்தின்
பீடாதிபதியாகவும், பிறக்கும்போதே தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்டவரும்,
பிறந்ததிலிருந்து ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை உண்டு வளர்ந்தவரும், ஹயவதன
என்னும் முத்திரையோடு பலப் பல கீர்த்தனைகளை ஹயக்ரீவர் பால் எழுதியவரும் ஆன
ஸ்ரீவாதிராஜ தீர்த்தர்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty Re: ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 4:57 pm

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Vadiraj
தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்ட குழந்தை!
எந்தவொரு காரியத்துக்குமே காரணங்கள் கட்டாயமாய் இருக்கும். ஆராயப் போனால் நம்
அறிவுக்கு உகந்த முறையில் சரியான பதில் எல்லாவற்றுக்கும் கிடைப்பது இல்லை.
பொதுவாகவே நம் பெரியோர்கள் அதனாலேயே நம்மை எதையும் அதிகம் ஆராயாதே எனச் சொல்லி
வருகின்றார்கள் போலும். இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன், காரணத்தை
மட்டுமல்லாது, காரியத்தையும் அவனே அறிவான். மாத்வாசாரியாரின் மகத்தான வழியைப்
பின்பற்றுபவர்களுக்கு அவர் ஸ்தாபித்த 8 மடங்கள் பற்றித் தெரிந்திருக்கும். அந்த
எட்டு மடங்களின் தலைமை குருவாக இருப்பவரே மாறி, மாறி உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன்
கோயிலின் வழிபாடுகளைச் செய்து வருகின்றனர் இன்றளவும். அதில் ஒன்றான ஸோதே
மடத்தின் அதிபதியான வாகீச தீர்த்தர் ஒரு ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு
தம்பதிகள் அவரை வந்து பார்த்துக் காலில் விழுந்து வணங்கி விண்ணப்பம் கோரி
நின்றனர். தம்பதிகளுக்குத் திருமணம் ஆகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தைப் பேறு
இல்லை. ஆகவே வாகீச தீர்த்தரிடம் தங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றனர் இருவரும்.

வாகீச தீர்த்தர் ஒரு மகான். நடக்கப் போவதை அறிந்தவர். அவர் சொல்கின்றார்:
"உங்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுவும் ஆண் குழந்தையாகவே பிறக்கும். ஆனால்
அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே எங்கள் ஸ்ரீமடத்திற்குக் குழந்தையைத் தந்து
விடவேண்டும், சம்மதமா?" என்று கேட்கின்றார். தம்பதிகள் தடுமாறினார்கள். குழந்தை
நிச்சயம் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தையே பிறக்கும். ஆனால் பிறந்த குழந்தையை
எவ்வாறு ஸ்ரீமடத்திற்குத் தருவது?? கொஞ்சம் கலங்கினர் இருவரும். பேசாமல்
நின்றனர். மகான் யோசித்தார். இவர்கள் இவ்வாறெல்லாம் வழிக்கு வரமாட்டார்களே??
என்ன செய்வது??? வாகீச தீர்த்தர் சொல்கின்றார்:"சரி, நான் வேறொரு யோசனையைச்
சொல்கின்றேன். பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை
உங்களுக்கு. ஆனால் அது வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை
ஸ்ரீமடத்துக்கு. சம்மதமா?" என்று கேட்கின்றார்.

போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருக்கிறது இருவருக்கும். அப்பாடா,
குழந்தையாவது வீட்டுக்கு வெளியே பிறப்பதாவது?? எப்படியும் வீட்டுக்கு உள்ளேயே
குழந்தை பிறக்கும், நாமும் குழந்தையை மடத்துக்குக் கொடுக்கவேண்டியதில்லை, ஆகவே
இதுக்கு சரினு சொல்லிடுவோம். இருவரும் ஒத்துக் கொண்டனர். வாகீச தீர்த்தர்
அளித்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வருகின்றனர்.
இவர்கள் பெயர் இருவிதமாய் வழங்குகின்றது. ஒரு சாரார் தேவரநாம பட்டர்-கெளரிபாய்
என்றும் இன்னும் சிலர், ராமாசார்யர்-சரஸ்வதி என்றும் சொல்கின்றனர். நமக்கு
முக்கியம் ஸ்ரீவாதிராஜரே. ஆகவே அதைக் கவனிப்போம்.

வாகீச தீர்த்தரின் வாக்குப் பலித்தது. கெளரிபாயின் வயிற்றில் திரு உதித்தது.
பட்டருக்குக் கவலை அதிகம் ஆனது. மனைவியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து
வந்தார். வெளியே எங்கும், எதற்கும் மனைவியை அனுப்புவதில்லை. தானே
வெளிவேலைகளையும் சேர்த்துக் கவனித்து வருகின்றார். வீட்டின் பின்பக்கம் ஆன
தோட்டத்துக்கோ, மாட்டுத் தொழுவத்துக்கோ கூட மனைவியை அனுப்பாமல் அதையும் தானே
கவனித்துக் கொண்டு மனைவியின் நடமாட்டத்தையே கட்டுப் படுத்திக் கொண்டு வந்தார்.
பிரசவம் என்பது எப்படியும் வீட்டின் உள்ளே தானே நடக்கும் என்ற நம்பிக்கையும்
அவருக்கு இருந்தாலும், ஒருவேளை என்ற சந்தேகமே இவ்வாறெல்லாம் அவரை நடக்க
வைத்தது.

நாட்கள் சென்றன. கெளரிபாய் நிறை கர்ப்பிணி. வீட்டுக்குத் திடீரென ஒரு
விருந்தினர் வந்தார். வேறு வழியில்லை. கர்ப்பிணியான கெளரிபாயே எழுந்து அவரைக்
கவனித்தார். சாப்பாடு சாப்பிடும் நேரமும் வர, இருவருக்கும் நிறை கர்ப்பிணியான
கெளரிபாயே உணவும் பரிமாறினார். அப்போது வீட்டின் கொல்லைப்புறம் திறந்திருந்தது.
அது வழியாக ஒரு மாடு உள்ளே நுழைந்தது. அவர்கள் மாடு இல்லை அது. கொல்லையில்
தோட்டம் வேறே இருந்தது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு அர்த்தமும்
உண்டல்லவா??? மாடு உள்ளே நுழைந்ததின் காரணமே, உலகுக்குச் செல்வத்தை இவர்களே
வைத்துக் கொள்ளப் போகின்றார்களோ என்ற பயமாயும் இருக்கலாமோ???

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபடியால் வேறு வழியில்லாமல் கெளரிபாய் வெளியே
வர நேரிட்டது. வெளியே வந்து மாட்டை விரட்டினார். அதுவா, வேகமாய் ஓட மறுத்தது.
நகர மறுத்துச் சண்டித்தனம் வேறே. மாட்டைச் சற்றுக் கோபத்துடனேயே வேகமாய் ஓடிப்
போய் விரட்ட ஆரம்பிக்கின்றார் கெளரிபாய். திடீரென ஓட ஆரம்பித்த மாடு வேகமாய்
ஓடி மறைய, மாட்டின் பின்னால் இயல்புக்கு மாறாக வேகமாய் ஓடிய கெளரிபாய்க்கு வீடு
நோக்கித் திரும்பும் எண்ணம் வர வைத்தது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலி. வேதனையில்
துடித்த அவர் வீடு நோக்கி அவசர, அவசரமாய்த் திரும்ப முயல, திரும்ப முடியாமல்
அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார் நடக்கக் கூட முடியாமல்.

அப்போது பார்த்தால் வாசலில் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த இருவர் நிற்க, என்னவெனப்
போய்ப் பார்க்கின்றார் பட்டர். ஒரு தங்கத் தாம்பாளத்தை அவர் கையில் கொடுத்துப்
பிறக்கும் குழந்தை பூமியில் படுமுன்னே அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்துமாறு
வாகீச தீர்த்தர் சொன்னதாய்ச் சொல்லவே, கலங்கிய பட்டர் அப்போது தான் மாட்டைத்
துரத்திய மனைவி வீட்டினுள் நுழையவில்லை எனப் புரிந்து வேகமாய் வெளியே ஓட,
அப்போது ஒரு ஒளிமயமான ஆண்குழந்தை பிறக்க, செய்வதறியாது, தன் கையில் இருந்த
தங்கத் தாம்பாளத்தில் அந்தக் குழந்தையை ஏந்தினார் பட்டர். வேறு வழி இல்லை.
நிபந்தனையில் ஜெயிப்போம் என நினைத்தால் இறைவன் அருள் இவ்வாறு இருக்கின்றதே!
குழந்தையை எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்திற்குச் சென்று வாகீச தீர்த்தரிடம்
குழந்தையை ஒப்படைக்கின்றார் பேச்சுப் படியே பட்டர். பட்டரைப் பார்த்த வாகீசர்,
உலகு உய்ய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும்.
அந்தக் குழந்தை உங்கள் குழந்தையாக இருப்பான் என்று ஆசீர்வதிக்கின்றார்.
மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி
வளர்த்தார் வாகீச தீர்த்தர். கூடவே குழந்தைக்கு ஞானமும் ஊட்டப் பட்டது. அந்தக்
குழந்தைதான் வாதிராஜர்.

அடுத்து வாதிராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அற்புதங்களும், கடலை நைவேத்தியமும்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty Re: ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 4:58 pm

ஸ்ரீவாதிராஜர் மடத்தின் அதிபதியாக ஆன சமயம். ஸ்ரீமடத்தை ஒட்டி, தனியார்
ஒருவரின் நிலம் மிக மிகப் பெரிய பரந்த நிலம், இருந்தது. அதன் உரிமையாளர்
நிலத்தில் கடலையை விதைத்திருந்தார். கடலையும் செழிப்பாய் வளர்ந்திருந்தது.
பயிர்கள் இன்னும் சிறிது காலம் போனால் கடலையை எடுக்கலாம் என்ற நிலைமை.
தினம்போல் அன்றும் நிலத்துச் சொந்தக் காரர் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்ல
வந்திருந்தார். அப்போது அங்கே ஒரு பகுதியில் பயிர்கள் மிகவும் சிதிலம் அடைந்து
காணப் பட்டது. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறுநாளும் சென்று பார்க்க,
மீண்டும் அதே மாதிரியாக, இன்னும் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப் பட்டது.
“ஆஹா, யாரோ வந்து திருடித் தின்கின்றனர், அல்லது எடுத்துச் செல்கின்றனர்.”
என்று எண்ணிய நிலத்துக் காரர் அன்று இரவு எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க
வேண்டும் என்று எண்ணியவராய், இரவு நேரம் நிலத்திலேயே ஒரு பக்கம் மறைவாய்க்
காத்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் ஸ்ரீமடத்தில் இருந்து கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்தோடு
ஒரு குதிரை ஒன்று வந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்
படுத்தியது. தாங்க மாட்டாக் கோபத்தோடு நில உரிமையாளர் ஓடிப் போய் அந்தக்
குதிரையை விரட்டினார்.
குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஸ்ரீ மடத்தினுள் புகுந்து கொண்டது. சரி, இங்கே
தானே இருக்கப் போகின்றது, பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினார்
நிலத்துக் காரர். மறுநாள் நேரே ஸ்ரீ வாதிராஜரிடம் சென்றார். நடந்தவற்றை
அப்படியே விவரித்தார். இது என்ன நியாயமா? என்று நியாயமும் கேட்டார். ஆனால்
வாதிராஜரோ மறுக்கின்றார். ஸ்ரீ மடத்திற்கு எனச் சொந்தமாய்க் குதிரையே கிடையாது
என்றும், நிலத்துக்காரர் சொல்லுவது உண்மையாக இருக்குமா என்றும் சந்தேகப்
படுகின்றார். நிலத்துக் காரரோ அடித்துச் சொல்கின்றார். தான் தன்னிரு கண்களால்
நடந்தவற்றைப் பார்த்ததாய். எனினும் மீண்டும் அன்று இரவும் பார்க்கப் போவதாயும்,
அதன் பின்னர் மீண்டும் வாதிராஜரை மறுநாள் வந்து பார்ப்பதாயும் சொல்லிவிட்டுச்
செல்கின்றார்.

அன்று இரவு. மீண்டும் நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகே மறைந்திருந்து
காவல் காக்க, மீண்டும் அதே வெள்ளைக் குதிரை மடத்தில் இருந்து வெளியே வந்து
வழக்கம்போல் நிலத்திற்குள் நுழைந்து, பயிர்களைச் சேதப் படுத்தத் தொடங்கியது.
கடலைச் செடிகள் மிதிபட்டன, தின்றது போக மற்றவை சேதம் ஆயின. பின்பு எப்படி
வந்ததோ அது போலவே மடத்தினுள் நுழைந்து மறைந்தது. நிலத்துக் காரர் குதிரையைத்
துரத்திக் கொண்டு வந்தவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. சாதாரணக் குதிரைக்கே
வேகம் அதிகம். இது சாதாரணக் குதிரை அல்லவே. அசாதாரண வேகத்துடன் ஓடி
மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் வாதிராஜரின் முன்னிலையில் வந்து நின்றார்
உரிமையாளர். “ஸ்வாமி, இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது எனக்கு. என்
இரு கண்களால் நன்றாய்க் கண்டு விட்டேன். வெள்ளைக் குதிரை ஸ்ரீமடத்தில் இருந்தே
வெளியே வந்து என் நிலத்தினுள் புகுந்து கடலைச் செடிகளைத் தின்றுவிட்டு சேதமும்
பண்ணிவிட்டு, ஓடி மறைந்துவிட்டது.” என்று சொல்கின்றார். வாதிராஜரோ திகைப்புடன்
ஸ்ரீ மடத்தில் குதிரையே கிடையாது, ஆனால் இவர் இப்படிச் சொல்லுகின்றாரே என்றார்.

ஆனால் நிலத்துச் சொந்தக் காரரோ, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும்
வலியுறுத்தினார். மேலும் ஏற்கெனவேயே நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டதாயும்,
குதிரையை அடக்காவிட்டால் மேலும் ஏற்படும் இழப்பைத் தன்னால் தாங்க முடியாது
எனவும் சொல்லுகின்றார். வாதிராஜர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இழப்பைத் தானே
ஈடு செய்வதாயும், இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்லுமாறும் கேட்டுக்
கொள்ளுகின்றார். ஆனாலும் ஸ்ரீமடத்தில் குதிரையே கிடையாது என்பதை வலியுறுத்தவும்
தவறவில்லை அவர். நிலக்காரர் ஒருமாதிரியாக நஷ்ட ஈடு கிடைக்குமே என்று ஆறுதலுடன்
சென்றார். மீண்டும் நிலத்தை மதிப்பீடு செய்யச் சென்றவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஓடோடி வந்தார் வாதிராஜரிடம். “ஸ்வாமி, ஸ்வாமி, இது என்ன அதிசயம்?? ஒரே
மாயாஜாலமாக அல்லவா இருக்கின்றது. எங்கெங்கே சேதங்கள் ஏற்பட்டனவோ அந்த இடத்தில்
எல்லாம் தங்கக் கடலைகள். ஸ்வாமி, அந்தக் குதிரை சாதாரணமானதல்ல. தெய்வீகக்
குதிரை. தாங்களே வந்து பாருங்கள் அந்த அதிசயத்தை!” என்று பரவசத்துடன்
கூறுகின்றார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty Re: ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 4:58 pm

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Vadirajaவாதிராஜர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னர் தியானத்தில் அமர்ந்தார். அவர்
கண்களுக்கு வெள்ளைக் குதிரையாக வந்து நிலத்தில் திருவிளையாடல் புரிந்தது ஸ்ரீ
ஹயக்ரீவரே என்பது புரிந்தது. தியானம் கலைந்தது. நிலத்து உரிமையாளரோ அற்புதம்
செய்த குதிரையை மீண்டும் காணவேண்டும் என ஆசைப் படுகின்றார். வாதிராஜருக்கு
உண்மை நிலைமை புரிய, இனி அந்தக் குதிரை கண்ணில் காண முடியாது எனப் புரிய,
நிலத்துக்காரரை எச்சரிக்கின்றார். விபரீத ஆசை வேண்டாம் என்றும், அந்தக்
குதிரையை இனியும் பார்க்க முயன்றால் ஒருவேளை கண்பார்வையே போய்விடும் என்றும்
சொல்லுகின்றார். நிலத்துக் காரரோ, பிடிவாதமாய்க் கண் போனாலும் பரவாயில்லை,
என்று அன்று இரவு மீண்டும் நிலத்துக்குப் போய்க் குதிரையின் வரவை
எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, குதிரையும் வந்தது. அதைப் பார்த்ததுமே
அவர் கண்பார்வையும் போனது. ஆனாலும் நிலத்துக்காரர் கவலைப்படாமல் இறைவனின் அவதார
சொரூபத்தைத் தரிசிக்க முடிந்ததை எண்ணி மன மகிழ்ந்து இருந்தார். ஆனால் ஸ்ரீ
வாதிராஜர் அவ்வாறு இருக்க முடியாமல் ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்ள, நிலத்துச்
சொந்தக் காரரின் கண்பார்வை திரும்புகின்றது.

தெய்வீகக் குதிரையின் காலடி பட்ட இந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே
சொந்தம் என்று நிலத்துச் சொந்தக் காரர் அந்த நிலத்தை ஸ்ரீமடத்துக்கே
கொடுக்கின்றார். அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வேகவைத்து
வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து, ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும்
வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி என்று
அழைக்கப் படுவதாய்த் தெரிகின்றது. (எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா,
தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)

ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு
கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார்
ஸ்ரீவாதிராஜர். அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில்
ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில்
வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார். ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம்
மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும்
உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு
ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது
ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில்
ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால்
வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர்
தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள்
,அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம்
கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு,
ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.

ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா
இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப்
புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும்
உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப்
பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே
விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, “வாதிராஜ குள்ளா” என்னும் ஒருவகைக்
கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக்
குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும்
ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே
செய்து வழிபடலாம். ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து
ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம்
ஆண்டு “ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty Re: ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:39 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்   Empty Re: ஸ்ரீ வாதிராஜர்-கீதாசாம்பசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum