இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யஜுர் வேத சுருக்கம்

Go down

யஜுர் வேத சுருக்கம்  Empty யஜுர் வேத சுருக்கம்

Post by ஆனந்தபைரவர் Fri Jan 07, 2011 4:33 pm

சூரியன் முதன்முதலாக உதித்தெழுந்தபோதே:பூமி தோற்றுவிக்கபட்டபோதே:நட்சத்திரங்கள் கண்சிமிட்ட ஆரம்பித்தபோதே:மனிதர் முதல் எண்பத்து நான்காயிரம் வகை உயிர்களும் படைக்கபட்டபோதே :காற்று முதல் முறையாக வீச தொடங்கிய போதே :நீர் நெருப்பு முதலிய அனைத்தும் உருவாக்கப்பட்டபோதே ,இறைவனால் சொல்லபட்டது வேதம் .

தன்னால் படைக்கப்பட்டவை அனைத்தும் எப்படி இயங்குகின்றன ? அவற்றின் செயல்கள் தீர்மானிக்கபடுவது எவ்வாறு ?அவைகளின் பலன்கள் என்னென்ன ?அதனை பெறுவது எப்படி ?என எல்லா விவரங்களையும் பரம்பொருள் பிரம்மனுக்கு சொல்ல ,அவை உலகெங்கும் மந்திர ஒலிகளாக பரவின அதுவே வேதத்தின் தோற்றம்

அந்த மந்திர ஒலிகளை தங்கள் தவசக்தியால் கேட்டறிந்து உலகிற்கு சொன்னவர்கள் ரிஷிகள் .மிக நீண்ட அதனை எளிமையாக்கும் நோக்கோடு நான்கு பிரிவுகளாக ,ரிக் யஜுர்,சாம ,அதர்வண என பிரித்து தொகுத்தார் வியாச மாமுனிவர்

வேதத்தின் நான்கு பிரிவுகளிலும் பேதங்கள் ஏதுமில்லை என்றாலும் ,எளிமையானது என்பதாலும் ,வாழ்க்கைக்கு தேவையான அறிய கருத்துக்களை உள்ளடக்கியது என்பதாலும் உயர்வாக சொல்லப்படுவது யஜுர் வேதம் .

மகத்தானதாக கருதப்படும் யஜுர் வேதத்தின் சுருக்கத்தை இப்பொழுது பார்ப்போம் .
பெயர் காரணம்

யாஜுஸ் என்றால் மனம் எனபது பொருள் ,இயற்க்கை நியதி முதல் உயிர்களின் இயக்கம் வரை அனைத்தையும் விளக்கமாக கூறி ,மனதை தெளிவு படுத்துவதால் ,வேதத்தின் இந்த பகுதி "யஜுர் வேதம்" என்று பெயர் பெற்றது
'யஜுர் என்பதற்கு சாதனம் என்றும் ,வெளிப்படையானது என்றும் வேறு அர்த்தங்கள் உண்டு எதையும் அடைவதற்குரிய சாதனாமாக ,அதற்குரிய மந்திரங்களை வெளிப்படையாக கூறியிருப்பதால் யஜுர் வேதம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள் .

எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம் எனபது போல் ,வேத புருஷனுக்கு தலையாக இருப்பது யஜுர் வேதமே என்று புரணாங்கள் சொல்லுகின்றன

நான்கு பிரிவுகள்
வேதம் எளிமைபடுத்தபடுவதர்க்காக நான்காக பிரிக்கப்பட்டது போல் ,யஜுர் வேதமும் நான்காக பிரிக்கப்பட்டது
நான்காக பகுக்க பட்டாலும் 'அத்வர்யு,ஹோதா,உத்காதா,ப்ரும்ம யக்ஞம் என சதுர்ஹோத்ரம் அடங்கியதே யஜுர் வேதம்

வைசம்பாயனர்
வியாசரின் சீடரான வைசம்பாயனரே யஜுர் வேதத்தை உலகில் பரவ செய்தவர் .யஜுர் வேதத்தை நான்கு பிரிவுகளாக பகுத்தவ்ரும் இவரே யஜுர் வேதத்தை உலகில் பரவ செய்த போது, அது 27 சாகைகள் கொண்டதாக இருந்தது .பின்னர் சேர்க்கப்பட்ட சாகைகளுடன் எண்பத்தாறு சாகைகள் கொண்டதாக வளர்ந்தது என்றும் ,அதன் பின்னர் 101 சாகைகள் உள்ளதாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது .

யஜுர் வேதத்தில் முதலில் இருந்த 86 சாகைகள் கிருஷ்ணயஜூர் சாகைகள் என்றும் பின்னர் சேர்ந்த 15 சாகைகள் சுக்லயஜுர் சாகைகள் என்றும் அழைக்கபடுகின்றன .
கிருஷ்ண யஜுர் சாகைகளுடன் சுக்ல யஜுர் சாகைகள் எப்படி யாரால் சேர்க்கப்பட்டன என்பதற்கு,சுவையான கதை ஒன்று கூறப்பட்டுள்ளது .

சுக்ல யஜுர் சாகைகள்
வைசம்பாயனர் ,சீடர்கள் பலருக்கு யஜுர் வேதத்தை கற்று தந்து உலகில் பரவ செய்தார்.அந்த சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர்.

ஒரு சமயம் உலகில் இருந்த முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி , மேருமலையின் உச்சியில் விவாதம் நடத்துவது என்று தீர்மானித்தனர் .அதற்க்கான நாள் குறிக்கப்பட்டது .விவாதத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அப்படி வரத்தவறினால் அவர்களை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது .
தவிர்க்க இயலாத காரணத்தால் அந்த விவாத கூட்டத்தில் வைசம்பாயனர் கலந்து கொள்ள முடியாமல் போனது .அதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது .
குருவிற்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, சீடர்கள் அனைவரும் விரதமிருக்க போவதாக சொல்ல ,அவர்களை தடுத்தார் யாக்ஞவல்கியர் .
"நான் ஒருவன் விரதமிருந்தாலே போதும் குருதேவரின் தோஷம் நீங்கி விடும் "என்று கம்பீரமாக சொன்னார்".
அவர் அப்படி சொல்வது ,தான் என்னும் அகந்தையால் பேசுவது போல் தோன்றியது .வைசம்பயானருக்கு.
அவ்வளவுதான் ..... தன சீடன் என்றும் பார்க்காது :என்னிடம் கற்ற வேதத்தை நீ விட்டுவிடு ....!" என்று சாபமிட்டார் .
மறுநிமிடம் ,வைசம்பாயனரிடம் தான் கற்ற யஜுர் வேதத்தை முழுவதையும் கக்கினார் யாக்ஞவல்கியர் அதனை பிற சீடர்கள் தித்திரிப்பறவைகளாக உருமாறி கொத்தி தின்றனர் .

குருவிடம் கற்ற ஞானத்தை இழந்ததற்காக கொஞ்சமும் வருந்தவில்லை யாக்ஞவல்கியர் .அங்கிருந்து புறப்பட்டு சென்றவர்.சூரியனை நோக்கி தவமிருக்க தொடங்கினார்
யாக்ஞவல்கியரின் தவாக்னி சூரியனையே சுட்டெரிக்க குதிரை வடிவில் தோன்றி அவருக்கு ஆசியளித்தான் சூரியன் .
"எண் குருவிடமும் இல்லாத யஜுர் வேத சாகைகளை நீங்கள் எனக்கு கற்பிக்க வேண்டும் " என வரம் கேட்டார் யாக்ஞவல்கியர்.

அப்படியே ....! என்ற சூரியன் ,சுக்ல யசுர்வேதம் என்ற 15 சாகைகளை யாக்ஞவல்கியருக்கு கற்பித்தார் முன்பே வைசம்பாயனரால் உலகிற்கு அறிவிக்கபட்ட 86 சாகைகள் அடங்கிய கிருஷ்ணயஜுர் வேதத்தோடு யாக்ஞவல்கியருக்கு சூரியனால் சொல்லப்பட்ட சுக்ல யஜுர் வேடமும் ஒன்றிணைந்து யஜுர் வேதம் 101 சாகைகள் அடங்கியதாகியது.
யக்ஞவல்கியரிடமிருந்து சுக்ல யஜுஸ் சாகைகளை கண்வர் போன்ற ரிஷிகள் கற்றறிந்தனர்

யஜுர் வேத காலம்


வேதம் குறிப்பிட்ட களத்தில் தோன்றியது என சொல்வது தவறானது என்கிறது யஜுர் வேதம் .பிரளயத்துக்கு பின் பிரபஞ்சம் தோன்றும் ஒவ்வொரு முறையும் ,பரம்பொருளால் நான் முகனுக்கு உபதேசிக்கபடுகிறது வேதம்

மீண்டும் அது ரிஷிகளால் கேட்டரியபட்டு உலகில் மீண்டும் பரவ செய்யபடுகிறது .எனவே வேதம் எனபது காலத்துக்குள் அடங்காதது .அது தோன்றுவதோ மறைவதோ இல்லை .ஊழிகாலத்திற்க்கு பிறகும் உலகில் நிலையாக இருப்பது வேதம் மட்டுமே .

யஜுர் வேதத்தில் இருப்பது என்ன

பரம்பொருளால் படைக்கப்பட்ட உலகில் உள்ள அனைத்து உயிர்களை பற்றியும் அவற்றின் இயக்கம் எப்படி அவற்றை கட்டுபடுத்தி தேவையான பலனை பெறுவது போன்ற விளக்கங்களும் யஜுர் வேதத்தில் மந்திரங்களாக அமைந்து உள்ளது அது மட்டுமின்றி யார் யார் எதைஎதை கடைபிடிக்க வேண்டும் ? எந்தெந்த என்னென காரணம் ? எந்த மாதிரியான வேள்விகளால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் ? ஆறு பருவங்களும் தவறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? என்று கூறும் யஜுர் வேதத்தில் ,அதிசயிக்கும்படியாக ஆகாய விமானம் பற்றியும் சொல்ல பட்டிருக்கிறது .

யஜுர் வேதத்தின் முப்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள ஏழாவது செய்யுளில் "மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது மைல்கள் தொடர்ந்து பயணிக்க கூடிய ஊர்திகள் திறமை மிக்கவர்களால் விண்வெளியில் செலுத்தபடுகிறது.அது நீரும் அக்னியும் இருப்பதால் இயங்குகிறது அந்த ஊர்தி தொடர்ந்து இயங்குவதற்குகாக யாகத்தீ அணையாது காக்கப்படட்டும் " என்று சொல்லபட்டிருப்பது விமானத்தை பற்றியே எனப்படுகிறது .

உடலியல் உயிரியல் பொருளியல் அறிவியல் மருத்துவம் கணிதம் என அனைத்தையும் பற்றியும் கூறும் வேதத்தினை குறிப்பிட்டவர்கள் மட்டுமே கற்க வேண்டும் என்று சொல்லப்படுவது ஏன்?
இந்த கேள்விக்கான பதிலும் யஜுர் வேதத்தில் இருக்கிறது

வேதம் பொதுவானது
ஆமாம் வேதம் பொதுவானது அதை கற்கவோ கேட்கவோ ஆண்-பெண் ,உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று எந்த பாகுபாடும் கிடையாது இப்படித்தான் சொல்கிறது யஜுர் வேதம்
அதுவும் யாரோ சொல்லாமல் வேத புருஷனே சொல்வதாக அமைந்து உள்ளது
யஜுர் வேதத்தின் இருபத்தாறாம் அத்தியாத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள ஸ்லோகம.
" உயர்வான இந்த வேதத்தினை ,உலக உயிர்கள் அனைத்தும் கற்றும் அறிந்தும் உய்வதற்காகவே நான் கூறுகிறேன் இதனை எவ்வித பாகுபாடும் இன்றி எல்லோரும் கறக்கலாம் !" என்று பரம்பொருள் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது .

எல்லோருக்கும் பொதுவான வேதத்தினை கற்றிட கட்டுபாடுகள் விதித்தது ஏன் ? யஜுர் வேதமே பதில் சொல்கிறது .


Last edited by Admin on Fri Jan 07, 2011 10:31 pm; edited 1 time in total
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

யஜுர் வேத சுருக்கம்  Empty Re: யஜுர் வேத சுருக்கம்

Post by ஆனந்தபைரவர் Fri Jan 07, 2011 10:30 pm

உச்சரிப்பு முக்கியம்

வேத மந்திரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒலி அதிர்வின் மூலம்,பஞ்ச பூதங்களை கட்டுபடுத்தி அவற்றால் பயன்பெறும் வகையில் அமைந்தவை .மந்திர ஒலிகள் சரியாக எழ வேண்டுமானால் மந்திரங்கள் மிக சரியாக உச்சரிக்க படவேண்டும் .

மிக சிறிய தவறு கூட மிக பெரிய பதிப்பை உருவாக்கிவிட கூடும் மேலும் வேதத்திற்கு வரி வடிவம் அதாவது எழுத்து வடிவம் கிடையாது.(ஆரம்பத்தில் ஸ்வரணம் என்னும் கேள்வி அறிவாலையே வளர்ந்தது வேதம் அதனால் ஸ்ருதி என்ற பெயரும் வேதத்திற்கு உண்டு).

வேத மந்திரங்களை எழுத்து மூலம் சரிவர புரிய வைக்கமுடியாது என்பதும் அதற்கு ஒரு காரணம் .உச்சரிப்பு தவறினால் உபத்திரவம் உண்டாகும் என்பதை விளக்க யஜுர் வேதத்தில் ஒரு கதையும் சொல்ல பட்டிருக்கிறது .

விருத்திராசுரன் கதை

த்வஷ்டர் என்னும் அரக்கனின் மகன் ,விஸ்வரூபன் அவனை ஒரு போரின்போது கொன்றழித்தான் இந்திரன் ,அதனால் கோபம் கொண்ட த்வஷ்டா ,உக்கிரமாக ஒரு யாகம் செய்தான்.

யாகத்தின் முடிவில் அதற்க்கான பலனை அளிக்க யாக புருஷன் வெளிப்பட்ட போது 'இந்திரனை அழிப்பவன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் ' என கேட்க்க நினைத்த த்வஷ்டா , அதற்க்கான மந்திரத்தை சொன்னான் .

அப்படி சொன்னபோது மந்திரத்தின் உச்சரிப்பில் த்வஷ்டா செய்த தவறினால் ' இந்திரனால் அழிபவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்' என்ற அர்த்தம் ஏற்பட்டது யாகபுருஷன் " அப்படியே ஆகட்டும் என சொல்லி மறைந்தான் " என சொல்லி மறைந்த பின்னரே விபரீதத்தை உணர்ந்தான் த்வஷ்டா . இருந்தும் பயன் என்ன ?

யாகத்தின் பலனால் த்வஷ்டாவிர்க்கு பிறந்த விருத்திகாசுரனும் இந்திரனால் அழிக்கபட்டான் இப்படி தவறு ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்பதர்க்காகவே வேதத்தின் பொருளை ஜடாலட்சணத்துடன்(அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளுடன்) அறிந்தவர்கள் மட்டுமே அதனை சொல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது (தைத்ரியசம்ஹிதை 2 வது காண்டத்தில் காணப்படும் கதை இது ) தகுதி வாய்ந்த குருவிடமிருந்து வேதத்தினை கற்றிட எவருக்கும் எந்த கட்டுப்படும் விதிக்க வில்லை என்கிறது யஜுர் வேதம் .

யாகமா? ஆராய்ச்சியா?

ஒவ்வொரு பலனையும் பெறுவதற்காக ஒவ்வொரு யாகம் நடத்துவது வேதம் சொல்லும் சொல்லும் வழி 'இப்படி யாகங்கள் புரிவது எனபது , தற்க்காலத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தி அவற்றின் மூலம் பலனை பெறுவதற்கு சமமானது ! அதையே மறைமுகமாக சொல்வது போல் அமைந்துள்ளன யஜுர் வேத ஸ்லோகங்கள் என்றும் ஒரு கருத்தும் உண்டு .
காரணம் மனித உடலமைப்பு பற்றி விவசாயத்தை விலங்குகளை பற்றி என அனைத்துக்கும் விளக்கம் கூறுகிறது யஜுர் வேதம் .
இதில் கூறப்பட்டுள்ள ஒவொரு ஸ்லோகமும் விஞ்ஞான பூர்வமான கருத்தையே உள்ளாடை உள்ளது என்று கூறப்படுகிறது உதாரணமாக மிதரனும் வருணனும் இணைந்தால் மட்டுமே மழை உண்டாகும் எனபது.பிராண வாயுவும்(ஆக்ஸிஜென்) ஹைட்ரஜென் இணைந்தால் நீர் உண்டாகும் என்ற விளக்கத்தையே மறைபொருளாக சொல்லியுள்ளது .பிராண வாயு உயிர்களின் நண்பன் என்ற பொருளில் மித்ரன் என்று சொல்லப்படுகிறது , எனபது போன்று வேத மந்திரங்களுக்கு விஞ்ஞான பூர்வ விளக்கங்களும் கூறப்படுவது உண்டு மேலும் யஜுர் வேதத்தில் கணிதம் குறித்த அறிவும் விளக்கப்படுகிறது .

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum