Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஒரு நிமிஷம்! ஒரு எச்சரிக்கை!
Page 1 of 1
ஒரு நிமிஷம்! ஒரு எச்சரிக்கை!
சம்பாதித்த
பணத்தையெல்லாம் இழந்து விட்டோம் அல்லது செலவழித்து முடித்து விட்டோம்
என்றால் என்றாவது ஒருநாள் கடின உழைப்பிருந்தால் நிச்சயம் சம்பாதித்து
விடலாம்
எனது நண்பர் ஒருவர் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்
குடும்ப நிற்வாகத்தை அவருடைய அண்ணாதான் கவனித்து வந்தார்
இவருக்கும் இவர் மனைவிக்கும் சொத்துக்களை பிரித்து தனியாகத் தந்துவிட்டால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு
இதனால் அண்ணாவை அவசரப் படுத்தி நச்சரித்து சிலநேரம் சங்கடப் படுத்தி சொத்துக்களை பிரித்து வாங்கி விட்டார்
சில ஏக்கரா நிலங்களும் ஒரு நவீன அரிசி ஆலையும் இவர் பங்காக வந்தது
அது முதல் இவரின் நடவடிக்கையே மாறிவிட்டது
தன்னிடமிருந்த சாதாரண அம்பாசீடர் காரை விற்று விட்டு 1983 ஆம் ஆண்டிலேயே 6 லக்ஷ்ச ரூபாய்க்கு வெளிநாட்டு கார் வாங்கினார்
காலில் போடும் செருப்பிலிருந்து சாப்பாடு வரையிலும் ஆடம்பரம் தலைவிரித்தாடும்
விளைவு...?
சில வருஷங்களிலே கடன் தலையை மொட்டையடித்து விட்டது
சொத்து சுகம் எல்லாம் போயே போய் விட்டது
முடிவாக சொந்த அண்ணா கிட்டேயே மாதச்சம்பளத்திற்கு சேர்ந்தார்
பிறகு சிறிது சிறிதாக முன்னேறி அண்ணனின் தயவில் இன்று ஒரளவு நல்ல நிலையில் இருக்கிறார்
இதை இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் பணம் என்பது நம்மைவிட்டு போனாலும் வந்து விடும்!
ஆனால் காலம் என்ற நேரம் இருக்கிறதே அது நம்மை விட்டுப் போனால் பிறகு நாம் எவ்வளவு முயன்றாலும் நம்மிடம் வந்து சேரவே சேராது
அதனால்தான் காலமும் இளமையும் போனால் வராது என்று சொன்னார்கள்
இந்த உண்மை பலருக்கு புரிவதே இல்லை
எந்த வேலையாக இருந்தாலும் உடனடியாக செய்ய விரும்பாமல் நாளை நாளை என்று
தள்ளிப் போட்டுக் கொண்டே போயி கடைசி நிமிடத்தில் ஆத்திரப் பட்டு
அவசரப்பட்டு அள்ளித் தெளித்த அவசரக்கோலயாய் அனைத்தையும் அரைகுறையாக
முடித்து தானும் கெட்டு நம்பியவர்களையும் அவதிக்கு உள்ளாக்குவார்கள்
எனக்கு தெரிந்த பையன் ஒருவன் படிக்கும் வயதில் சரியாக படிக்க வில்லை
10 ஆம் வகுப்பை தாண்ட முடியாமல் அல்ல மனசில்லாமல் தோற்று
அப்பா சேர்த்து விட்ட வேலையையும் ஒழுங்காக செய்யாமல்
சினிமா இயக்கப் போகிறேன் என்று சென்னைக்கு போய்
ஹைதராபாத் தாவி மும்பைக்கு சென்று முட்டி மோதி ஒன்றும் செய்ய முடியாமல் ஊர் திரும்பி
பெற்றோர்களை உருட்டி மிரட்டி ஒரு அப்பாவிப் பெண்னை கைப்பிடித்து
இன்று அவளுக்கும் பாரமாக வீண்கதைகளை பேசி அலைகிறான்
இவனை பொருப்பில்லாதவன் என்று சொல்லலாம் சோம்பேறி என விமர்சிக்கலாம்
ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனை உயிர் இருந்தும் வாழாதவன் என்றுதான் சொல்வேன்
ஏனென்றால் இவன் இழந்தது திரும்பி பெறவே முடியாத காலத்தை
இனி இவன் முயற்சித்தாலும் படிக்க முடியாது
வேலை செய்ய புத்தியும் உடம்பும் வளையாது
பெற்றோர்களும் அவர்களுக்குப் பிறகு மனைவியும்தான் இவனை காப்பாற்ற வேண்டும்
உடம்பில் வலு இருக்கும் வரை கஷ்டம் தெரியாது
வயதாகி விட்டால் நாடி தளர்ந்து விட்டால் பெண்டாட்டி பிள்ளைகள் மூலையில் தள்ளியபின்தான் சிந்திப்பான்
இவனைப்போன்ற பலர் அப்போதும் யோசிப்பதில்லை
இல்லாத வீராப்பைத்தான் பேசுவார்கள்
இப்படி எத்தனையோ நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்
உங்கள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ இத்தகைய பிரகஸ்பதிகள் வாழலாம்
இவர்களைப் பார்த்து தயவு செய்து இறக்கப்படாதீர்கள் பரிவு காட்டாதீர்கள்
உங்களின் அனுதாபத்தைக் கூட தங்களது வெற்றியாக நீங்கள் அவர்களுக்கு
கடமைப்பட்டவர்கள் என்றுதான் பார்ப்பார்களே தவிற உணர்வுகளை புரிந்துக் கொள்ள
மாட்டார்கள்
அவர்ளை நீங்கள் வெறுத்தால் உங்கள் எதிர்ப்பைக் காட்டினால் திருந்த ஒரு சந்தர்ப்பம் அமையலாம்
எனவே காலத்தை பயன் படுத்தாதவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்
ஒரு நிமிஷம்!
ஒருவேளை நீங்களே அப்படிப்பட்டவர்கள் என்றால்.....?
எச்சரிக்கை!
உங்களையும் நாளை மற்றவர்கள் கைவிடுவார்கள்!
புதிய கதைகள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/03/blog-post_14.html
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum