Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பெரியாழ்வார் காலடியில் விழுந்த பொற்கிழி!-எம்.என். ஸ்ரீநிவாசன்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பெரியாழ்வார் காலடியில் விழுந்த பொற்கிழி!-எம்.என். ஸ்ரீநிவாசன்
பாண்டிய நாட்டு அரியணையை வல்லபதேவன் என்ற அரசன் ஆண்டு வந்த காலம். அதாவது கி.பி.8-ம் நூற்றாண்டின் பின்பகுதி. நல்ல விதத்திலே நாட்டை ஆண்டுவந்த மன்னன், தன் அதிகாரிகளின் மூலம் நாட்டு நடப்பைப் புரிந்துகொண்டது மட்டுமின்றி, அவ்வப்போது தானும் நேரடியாக மாறுவேடத்தில் சென்று மக்களின் குறைகளை அறிந்து, அதற்கேற்ப அரசாட்சி செய்து வந்தான்.
ஒரு நாள் மாறுவேடத்தில் சென்றபோது, ஒரு வீட்டுத் திண்ணையில் அந்தணர் ஒருவர் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம், ‘நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்? உமக்கு என்ன தேவை?’ என்று விசாரித்தான் மன்னன். அந்த அந்தணரும் ‘நான் சேதுயாத்திரை சென்று கொண்டிருக்கிறேன். இந்நாட்டு அரசனின் ஆட்சியில் எந்தத் தீங்கும் நேராது. அதனால், இன்றைய இரவுப் பொழுதை இங்கேயே கழித்துவிட்டு, காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் தங்கினேன்’ என்றார்.
அந்தணரின் பேச்சின் மூலம் அவர் சிறந்த கல்விமானாக இருப்பார் என்று யூகித்து தான் யார் என்று அவரிடம் சொல்லிவிட்டு, ‘எனக்கு நல்லதோர் மார்க்கத்துக்கு வழிகாட்டிட வேண்டும்’ என்று அரசன் வேண்டினான். அந்தணரும், ‘மன்னனே! மழைக் காலத்துக்காக, மீதி எட்டு மாதங்களும் பொருளை சேர்த்துவைத்திட வேண்டும். இரவுக்காக பகல் பொழுதிலும், முதுமைக்காக இள வயதிலேயேயும் சேமிக்க வேண்டும். அதுபோல மறுபிறவியின் நன்மைக்காக, இப்பிறவியிலேயே நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்’ என்ற கருத்துள்ள வடமொழி ஸ்லோகத்தைக் கூறினார். மன்னவனும் வடமொழி கற்றவனாதலால், அதன் பொருளைப் புரிந்துகொண்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவர் சேதுயாத்திரை செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்து அனுப்பினான்.
மன்னனின் மனதில் பெரியவர் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்தன. ‘நான் இறந்துவிட்டால், இவையெல்லாம் என் கூடவா வரப்போகிறது? மீண்டும் மீண்டும் சீரழியும் நிலைதானே அமையும்? இதற்கு என்ன வழி?’ என்றெண்ணிய மன்னனின் மனம், பரம்-பொருளை அறிய நாட்டம் கொண்-டது. தன்னுடைய ராஜகுருவான செல்வநம்பி-யிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டான்.
செல்வநம்பியின் ஆலோசனைப்படி, அந்தரத்தில் தொங்கும் ஓர் பொற்கிழியை அமைத்தான். சரியான விளக்கத்தால் யாராவது பரம்பொருளை நிரூபித்தார்-களேயானால், அந்தப் பொற்கிழியை அவர் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் செய்தான். பல அறிஞர்கள் முயற்சித்தும் பொற்கிழியைப் பெறவில்லை.
மதுரை அருகே ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்துவந்த விஷ்ணுசித்தர் என்ற பக்தரின் கனவில் திருமால் தோன்றி, மதுரைக்குச் சென்று வருமாறு பணித்தார். அதற்கு முன்பாக, விஷ்ணுசித்தரைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில், குடுமிச் சோழியர் வம்சாவளி அந்தணரான முகுந்தபட்டர்- பதுமவல்லி தம்பதிக்கு, குரோத ஆண்டு, ஆனி மாத சுக்ல ஏகாதசியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் பிறந்த ஆண் மகவே (திருமாலின் வாகனமான கருடாம்சமாக) விஷ்ணுசித்தராவார். சிறு வயதிலிருந்தே கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சிபெற்று திறமைசாலியாக விளங்கிய இவர், எப்போதும் திருமாலையே நினைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயிக்குப் புஷ்ப கைங்கர்யமும் செய்து வந்தார்.
இவர் கனவில்தான் திருமால் தோன்றி மதுரை அரசவைக்குச் சென்றுவரப் பணித்தார். கனவு கலைந்து எழுந்த விஷ்ணுசித்தர், திருமாலின் திருவுளப்படியே, அடுத்த நாள் அரசவைக்குச் சென்றார். பரம்பொருள் நம்முடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் விதமாக, நாரணனின் பரத்வத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். பொற்கிழியும் அறுந்து அவர் காலடியில் விழுந்தது. இதைக் கண்ட வல்லபதேவன் மகிழ்ச்சியுற்று அவரைப் பாராட்டி, ‘பட்டர்பிரான்’ என்று பட்டமளித்து, அவரை அலங்கார யானைமீது ஏற்றி அமர வைத்து, நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான்.
அந்த நேரத்தில், வானில் கருடாரூடராகத் திருமால் காட்சியளித்தார். விஷ்ணு சித்தர் பெருமைப்படுத்தப்படுவதைக் கண்டு பெருமாள் ஆனந்தப்பட... விஷ்ணுசித்தரோ, பெருமானின் பேரழகைக் கண்டு அவனுக்குத் திருஷ்டி பட்டுவிடப் போகிறதே என்று வருந்தி, பல்லாண்டு பாடினார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு, அவனுடைய சங்கு சக்கரங்களுக்கும், அவன் திருமாலின் திருமார்பினில் குடியிருக்கும் ‘வடிவார் சோதி வலத் துறையும் சங்குப்பிரானுக்கும், வலமார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும்’ என்று அனைத்துக்கும் பல்லாண்டு பாடி வாழ்த்தினார்.
‘பெருமானுக்குப் பல்லாண்டு பாட இவர் யார், என்ன தகுதி இவருக்கு?’ என்று எவருக்கும் தோன்றலாம். பகவான்மீது ஏற்பட்ட பரிவே, அவரைப் பல்லாண்டு பாட வைத்தது. அன்புடன் வாழ்த்தும் உள்ளத்துக்கு எவ்வித மாறுபட்ட கருத்தும் உண்டோ? இதனால்தான், ஆழ்வார்களிலே இவர் ‘பெரியாழ்வார்’ என்று போற்றப்படுகிறார் விஷ்ணுசித்தர்.
வைணவ சீலரான மணவாள மாமுனிகளோ, ‘பொங்கும் பரிவாலே பெரியாழ்வார்’ என்று போற்றுகிறார்.
இந்தப் பல்லாண்டாகிய வாழ்த்துகளை நித்தமும் இவரிடமிருந்து பெற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில்தானோ, ஆண்டாள் நாச்சியாரை இவர் மகளாய் உலகுக்குக் காட்டிக் கொடுத்து, பெரியாழ்வாருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தருளினான் அந்த கோவிந்தன்!
‘பொங்கும் பரிவாலே பெரியாழ்வார்’ என்று பெயர்பெற்ற விஷ்ணு சித்தரை, ஸ்ரீவில்லிப்புத்தூரிலே தன் அருகிலேயே கொண்டு (ஆண்டாள் - ரங்கமன்னார் - கருடன்), அற்புதமாகக் காட்சியளிக்கிறான் அந்த அரங்கன்.
அன்பர்கள், ஆழ்வாரின் அவதார உத்ஸவங்களில் கலந்துகொண்டு, ஆழ்வார், ஆண்டாள், அரங்கன் ஆகியோர்களின் அருளைப் பெற ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லலாம். பெரியாழ்வாரின் அவதார நன்னாள் 22.6.2010-ல் முடியும்படி பத்து நாட்களுக்கு திருவிழா அமைகிறது.
நன்றி திரிசக்தி
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: பெரியாழ்வார் காலடியில் விழுந்த பொற்கிழி!-எம்.என். ஸ்ரீநிவாசன்
அனைவருக்கும் வணக்கம்
பெரியாழ்வார் என்று சிறப்பித்துக் கூறப் படுகின்ற விஷ்ணு சித்தர் "வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியை"த் தான் போற்றிப் பாடினார். சங்குப் பிரானை அல்ல. இந்தத் தளத்தில் தவறுகள் வந்து விடக் கூடாதே என்ற காரணத்தினால் தான் குறிப்பிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
பெரியாழ்வார் என்று சிறப்பித்துக் கூறப் படுகின்ற விஷ்ணு சித்தர் "வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியை"த் தான் போற்றிப் பாடினார். சங்குப் பிரானை அல்ல. இந்தத் தளத்தில் தவறுகள் வந்து விடக் கூடாதே என்ற காரணத்தினால் தான் குறிப்பிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum