இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நாகலிங்கப்பூ

2 posters

Go down

நாகலிங்கப்பூ Empty நாகலிங்கப்பூ

Post by ஹரி ஓம் Sun Sep 04, 2011 5:35 pm


நாகலிங்கப்பூ Hkk

ஆன்மீக அதிசயம்:

ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது

அறிவியல் அதிசயம்:

இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

தன்மை:

மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

மருத்துவத்திலும் அதிசயமே:

ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

காணப்படும் இடங்கள்:

இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

நாகலிங்கப்பூ Khkk


நன்றி:suvaithacinema
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாகலிங்கப்பூ Empty Re: நாகலிங்கப்பூ

Post by Venkatesh A.S Tue Sep 06, 2011 1:59 am

தகவலுக்கு மிக்க நன்றி. நாகலிங்க பூ , அதன் இலை, காய், மரம் எல்லாமே அதிசயம் தான். இதனை தவிர இந்த பூவின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். வெளியில் எங்காவது இந்த நறுமணத்தை உணர நேர்ந்தால் ஒரு வித தெய்வீக உணர்வு ஏற்படும்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum