இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யோகம் மற்றும் தியானம்

+2
Venkatesh A.S
Dheeran
6 posters

Go down

யோகம் மற்றும் தியானம் Empty யோகம் மற்றும் தியானம்

Post by Dheeran Thu Oct 20, 2011 8:57 pm

யோகம் மற்றும் தியானம் Bhuththar
பொதுவாக தியானம் என்பது துறவிகளும், உலகவாழ்வில் பற்றில்லாதவர்களும், வயதானவர்களும் பயிலக்கூடியது எனும் கருத்து பரவலாக நிலவுகிறது. மேலும் தியானம் பயில்வதற்கு சிரமமானது எனும் கருத்தும் நிலவுகிறது. உண்மையில் தியானம், அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக,எளிமையாகப் பயிலக்கூடிய விதத்தில் ஞானியர்களாலும் யோகியர்களாலும் வடிவமைத்து தரப்பட்டுள்ளது.

எல்லாக் காலங்களிலுமே தியானம் நம்நாட்டில் அனைவராலும் இறைவழிபாட்டோடு இணைத்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபங்களெல்லாம் அதையே உணர்த்துவனவாக அமைந்துள்ளன, கோவிலில் இறை தரிசனம் முடிந்ததும் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு செல்லும் வழக்கம் இதன் அடிப்படையில் தோன்றியதே ஆகும், இதை நாம் உணராமல் தியான மண்டபத்தை உணவுக்கூடமாக்கியதோடல்லாமல் அமைதியாக அமர்ந்து செல்வதையும் சடங்காக மாற்றி விட்டோம்.

ஒருவர் வாழ்க்கையை நல்லாவிதமாகவாழ முதலில் நம்மை அடுத்து இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களிடம் நல்லவிதமான தொடர்பில் நாம் இருக்க வேண்டும், அடுத்து உறவினர்கள்,நண்பர்கள்,பிறகு சமுதாயம் என வரிசையாக நமது தொடர்பு எல்லை விரிந்து கொண்டே செல்கிறது ,இந்த அனைத்து உறவுகளையும் நாம் முறையாகப் பாராமரிக்க வேண்டும். யார் ஒருவர் இதை செம்மையாக செய்கிறாரோ அவரே வெற்றிகரமான மனிதராகிறார்.

இப்படி வெளிஉலகில் தொடர்புகளை பராமரிக்கும் செயல்முறையில் நாம் கடமை தவறி விடக்கூடாது ,தவறிழைத்துவிடக்கூடாது, அனைத்துக்கும் மேல் நாம் நமது ஆனந்தத்தையும் மன அமைதியையும் இழந்து விடக்கூடாது. இதுதான் இன்றைய வாழ்க்கைகயில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். இச்சவாலை சமாளித்து வெற்றிபெற அமைதியான மனமும், கூர்மையான புத்தியும் வேண்டும்.இவை இரண்டும் நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் வாய்க்கும்.

ஆக நல்வாழ்வு என்பது நலமான உடல், தெளிந்த புத்தி,அமைதியான மனம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இவற்றைப்பெற நமக்கு யோகம் வேண்டும்.

யோகம் என்பது என்ன ?
யோகம் தர்சனங்களுள் ஒன்று,ஆனந்த வாழ்வை அளிக்கக் கூடியது.
யோகம் என்பது கீழ்கண்ட அங்கங்களை உடையது.

1. இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. பிரத்யாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இதில் முதல் இரண்டும் புலனடக்கம்,மனக்கட்டுப்பாடு குறித்தவை.

இயமம் - உயிர் கொலை தவிர்த்தல்,உண்மை பேசுதல், பிறர் பொருளை திருடாமை, அடக்கம் உடைமை, நடுநிலை தவறாத நிலை,பகுத்துண்ணல்,கள் மற்றும் காமத்தை தவிர்த்தல் ஆகியன.

நியமம் - தவம்,ஆன்மிக விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல்,இறை பக்தி,கொடை,போன்றவை.

ஆசனம்,பிராணாயாமம்,ஆகியன பயிலக்கூடிய பயிற்சிகள்.பிரத்யாகாரம்,என்பது புலன்கள் அடங்குவது. தாரணை என்பது மனம் ஒருமுகப்படும் நிலை.தியானம் என்பது விழிப்புடன் கூடிய ஓய்வு.தியானத்தின் பயன் சமாதி,அதுதான் முழுமை,வார்த்தைகளால் விளக்கமுடியாத நிலை.

தியானம்பற்றி விவரமாக தெரிந்துகொள்ளவே இந்த விளக்கங்களெல்லாம் மற்றபடி இது ஒன்றும் சிக்கலான கடைபிடிப்பதற்கரிய விஷயம் அல்ல.
ஓரளவு புலனடக்கத்துடன், ஆசனங்களையும்,பிராணாயாமாவையும் பழகிவந்தால் சிறிது சிறிதாக முன்னேறி அனைவராலும் ஆனந்தமும் அமைதியும் பெற முடியும்.
இதன்பலன்



• ஆரோக்கியமான உடல்
• தெளிந்தமனம்
• புத்திக்கூர்மை


விரைவாகவும்,முழுமையாகவும்,ஆன்மிக அனுபவம் பெற குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.

உடல் மனம் புத்தி ஆகியன நன்றாக இருந்தால் வாழ்க்கை ஆனந்த மயமாகவும்,வெற்றிகரமானதாகவும் இருக்கும்.இதற்கும்மேலாக எதேனும் கிடைக்குமா? தொடர்ந்து பயின்று வாருங்கள் ஆச்சரியங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
நன்றி ; artoflivingpollachi.blogspot.com


Last edited by dheeran on Thu Oct 20, 2011 9:01 pm; edited 1 time in total (Reason for editing : தவறாக தலைப்பிடப்பட்டுவிட்டது)
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by Venkatesh A.S Fri Oct 21, 2011 7:50 pm

நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by Dheeran Sun Oct 23, 2011 9:43 am

நன்றி,திரு.வெங்கடேஷ் A.G
வாழ்துக்களுடன்,
தீரன்.S
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by உமா Sat Nov 05, 2011 5:02 pm

நன்றி ....
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by ramalakshmi Mon Jan 16, 2012 9:59 pm

மிக அற்ப்புதமான விளக்கம்

ramalakshmi

Posts : 3
Join date : 16/01/2012

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by ramalakshmi Mon Jan 16, 2012 10:00 pm

மிக அற்ப்புதமான விளக்கம்

ramalakshmi

Posts : 3
Join date : 16/01/2012

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by sreenu09 Wed Jan 18, 2012 6:24 pm

அய்யா,
நான் தியானம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். மேலும் ஜாதகம் பற்றியும் தெரிந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளேன். எனது இ மெயில் முகவரி sreenu09@yahoo.கோ.இன்




sreenu09

Posts : 1
Join date : 18/01/2012

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by ராகவா Sun Aug 17, 2014 9:07 pm

நன்றி..நன்றி...விளக்கம் அருமை
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

யோகம் மற்றும் தியானம் Empty Re: யோகம் மற்றும் தியானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum