இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்

2 posters

Go down

திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக் Empty திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்

Post by ஹரி ஓம் Sun Dec 25, 2011 10:11 pm


காரைக்கால்: தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

நாத்திகம் பேசுவோரில் பலரும் உள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு தீவிர நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தினர் தீவிர ஆத்திகர்கள்.

அதேபோல சினிமாவில் விவேக்கைப் போல நாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழி வந்தவன் என்று பெருமை பொங்கக் கூறுவது விவேக்கின் வழக்கம். மேலும், தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் விவேக். குறிப்பாக வாஸ்து பார்க்கிறவர்களையும், நாள் நட்சத்திரம் பார்ப்பவர்களையும், சாமியை நம்பி காரியத்தில் இறங்குகிறவர்களையும் இவர் கிண்டல் அடிக்காத படமே இல்லை.

அப்படிப்பட்ட விவேக், திருநள்ளாறு கோவிலுக்குப் போய் சனீஸ்வரனை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்துச் சென்றனர். பரிகாரங்களைச் செய்தனர்.

சனிப் பெயர்ச்சிக்கு அடுத்த நாளான சனிக்கிழமையன்று அமாவாசை என்பதால் அது விசேஷ தினமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதையொட்டி அன்றும் பல லட்சம் பேர் சனி பகவானை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.

அந்த நாளில்தான் காமெடி நடிகர் விவேக்கும் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் உள்ளூர் எம்.எல்.ஏ. சிவாவும் வந்திருந்தார். கோவிலுக்கு வந்த விவேக் ஒவ்வொரு சன்னதியாக சென்று பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் பிரசாதத்தையும் பய பக்தியுடன் வாங்கிக் கொண்டார்.

இந்த திடீர் 'பய' பக்தி எதனாலோ...!
இவருடைய இந்த நாடகம் எல்லாம் சில வருடங்களுக்கு முன் , இவருடைய புது வீட்டு கிரகப்பிரவேசம் அன்றே வெளிபட்டு விட்டது.

நன்றி:தட்ஸ்தமிழ்

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக் Empty Re: திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்

Post by magaraththaan Wed Jan 04, 2012 8:27 am

ஹிந்து சமயப் பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்வது, புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பது உள்ளிட்ட காரியங்களுக்கு ஹிந்துக்களிடையிலேயே ஆதரவு கிடைப்பது வேதனை தரும் விஷயம். நம் ஊரில்தான் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுக் கோயிலிலிருந்து வெளியில் வந்தவுடனேயே, பிள்ளையாரைப் பற்றிய அசிங்கமான பேச்சுக்களை அருகிலுள்ள மேடையில் பேசிக்கொண்டிருப்பதையும் உணர்ச்சியேயில்லாமல் கேட்டுக்கொண்டு போகும் பழக்கம் இருக்கிறதே. மேலும் வழிபாடு செய்பவர்களே கிண்டல், கேலிகளையும் ரசித்துச் சிரிப்பது பெரிய கொடுமை. இதில் மற்றவரை என்ன சொல்வது?

magaraththaan

Posts : 6
Join date : 18/12/2011

Back to top Go down

திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக் Empty Re: திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்

Post by ஹரி ஓம் Fri Jan 20, 2012 3:58 pm

magaraththaan wrote:ஹிந்து சமயப் பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்வது, புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பது உள்ளிட்ட காரியங்களுக்கு ஹிந்துக்களிடையிலேயே ஆதரவு கிடைப்பது வேதனை தரும் விஷயம். நம் ஊரில்தான் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுக் கோயிலிலிருந்து வெளியில் வந்தவுடனேயே, பிள்ளையாரைப் பற்றிய அசிங்கமான பேச்சுக்களை அருகிலுள்ள மேடையில் பேசிக்கொண்டிருப்பதையும் உணர்ச்சியேயில்லாமல் கேட்டுக்கொண்டு போகும் பழக்கம் இருக்கிறதே. மேலும் வழிபாடு செய்பவர்களே கிண்டல், கேலிகளையும் ரசித்துச் சிரிப்பது பெரிய கொடுமை. இதில் மற்றவரை என்ன சொல்வது?
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அய்யா

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக் Empty Re: திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum