Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
Page 1 of 1
பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடி, அன்னக்காவடி, பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தியும், ஆணி காலணி அணிந்து வந்தும் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாள் வாகனத்தில் சண்முக நதிக்கு எழுந்தருளினார். அங்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4.35 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி வள்ளி தெய்வானை சமேதரரராய் முத்துக்குமாரசாமி மலர்களா லும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வீரபாகு, விநாயகர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தனித்தேர்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, கோயில் யானை தேரின் பின்புறம் தள்ள தேர் மாலை 4.45 மணிக்கு நிலையில் இருந்து ரத வீதிகளில் உலா வந்தது.
இரவு 7.30 மணிக்கு தந்த பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் நாகராஜன், நகராட்சி தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று வையாபுரி கண்மாயில் வாண வேடிக்கையும், 10ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 11.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் 10 நாள் தைப்பூச விழா நிறைவடைகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பழநி நகரில் குவிந்திருந்தனர்.
திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று தைப்பூசத்தையொட்டி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30க்கு விசுவரூப தீபாராதனை, விஜயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திர தேவர் கடலில் நீராடியபின் தீர்த்தவாரி நடந்தது.
நன்றி: தினகரன்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
» ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா
» ஓணம் திருவிழா - வரலாறு
» வீரவநல்லூரில் வியாகப்பர் ஆலயத் திருவிழா
» பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன்
» ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா
» ஓணம் திருவிழா - வரலாறு
» வீரவநல்லூரில் வியாகப்பர் ஆலயத் திருவிழா
» பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum