Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மாசி மாத மகிமைகள்!
Page 1 of 1
மாசி மாத மகிமைகள்!
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் திருவிழாக்களையும் வழிபாடுகளையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் மாசி மாதத்தின் சிறப்பு நிகழ்வுகள் சிலவற்றை இங்கு காண்போம்.
ஷட்திலா ஏகாதசி- 18-2-2012
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம். இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஐந்து விதமாகப் பயன்படுத்துவார்கள்.
✷ எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.
✷ எள் தானம் செய்வது.
✷ எள்ளால் ஹோமம் செய்வது.
✷ எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.
✷ எள் அன்னம் உண்பது.
பல தர்மங்கள் செய்த பெண் ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள். சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத் தாலும் உணவு மட்டும் கிடைக்க வில்லை. ஏனெனில் பூவுலகில் இருக் கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. பின்னர் ஒரு துறவி யின் ஆலோசனைப்படி, தேவலோகப் பெண்ணொருத்தியின் ஷட்திலா ஏகாதசி விரதப் பலனை இவள் பெற்றாள். அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது. எனவே, இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது.

Re: மாசி மாத மகிமைகள்!
மயானக் கொள்ளை- 21-2-2012
மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.
அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, "கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்.
அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.
அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது.
இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசை யாக நடக்கும். சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்விழா பிரம் மாண்டமாக நடக்கிறது.

காரைக்கால் அம்மையார்
வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ் கிறார். கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், "இறைவா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர். ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, "திருவந்தாதி' என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார். இரட்டை மணிமாலை என்னும் நூலும் காரைக்கால் அம்மையார் இயற்றியதே.
அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடியருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும்.
அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.

வித்தியாசமான வேண்டுதல்!
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில், 20 கிலோமீட்டர் தொலை விலுள்ளது வளயகுளம் என்னும் தலம். இங்குள்ள ஆலயத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். பொதுவாக பக்தர்கள் வேண்டிக்கொள்ளும்போது, காணிக்கையாகப் பணமோ பொருளோ தருவதாக வேண்டிக் கொள்வர். ஆனால் இங்கு மாசி மாத மகா சிவராத்திரியன்று நாடகம் நடத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் பதிவு செய்துகொள்ளும் வரிசைப்படி, சிவராத்திரி இரவு தொடங்கி 20 இரவுகள் நாடகம் நடத்துவர். எப்போதும் முதல் நாள் நாடகம் "வீர அபிமன்யூ'தான்!
குழந்தைப் பேறில்லாதோர், நோயால் அவதிப்படுவோர், இன்னும் இதுபோன்ற நீண்ட நாள் பிரச்சினையுள்ளோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, வேண்டுதல் நிறைவேறியதும் அடுத்த ஆண்டு நாடகம் நடத்துகின்றனர். வேண்டுதல் நிச்சயம் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.

குபேரன் பேறு பெற்ற தலம்!
திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.
ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.
சொர்க்கவாசல் கடக்கும் தாயார்!
பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை (18-2-2012) இங்கு கண்டு மகிழலாம்.
நக்கீரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum