இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

3 posters

Go down

மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது. Empty மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

Post by கார்த்திகா Thu Mar 01, 2012 6:10 am



ஆளுகின்றவன் போலி, அதிகாரிகள் போலி, சாமியார்கள் போலி, பழக்க வழக்கங்கள் போலி, பண்பாடு போலி, அனைத்துமே போலி...

என்ன… நாத்திகனாக மாறிவிட்டானோ என்று பார்கிறீர்களா?? சமீபத்தில் நான் படித்த என்னை மிகவும் தொட்ட ஒரு கவிதையின் கடைசி வரி இது. ப.ழ. கருப்பையா என்பவரால் எழுதப்பட்டது. முழு கவிதையையும் இங்கே கொடுக்காததால் சிலவற்றை சற்று தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடு போலி என்று குறிப்பிடும்பொழுது இக்கவிஞர் நம் பாரம்பரியமாக வந்த பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் போலி என்று கூறவில்லை. தற்கால நிலையை பிரதிபலிக்கும் விதத்தில்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேல்மட்டமாக இதை பார்க்கும் பொழுது இதென்ன இப்படி ஒரு பொதுப்படையான கருத்து என்று தோன்றும். விரக்தியின் வெளிப்பாடோ என்றுகூட நினைக்கக் கூடும். ஆழ்ந்து சிந்தித்தோமானால் அதில் எத்தனை உண்மை அடங்கியுள்ளது என்பது புலப்படும். வாழ்க்கையில் இவைகளை அனுபவபூர்வமாகவே நாம் பார்க்கலாம்.

எதை விளக்குகிறேனோ இல்லையோ இந்த போலி சாமியார்களை சற்றே விரிவுபடுத்தியே தீர வேண்டும். இன்றைக்கு ஆசிரமங்களுக்கு கணக்கில்லை. தெருவுக்கு தெரு மூலைமுடுக்கெல்லாம் காவியுடை நடை போடகிறது. எந்த தொழில் செய்து அது படுத்தாலும் கவலையில்லை. சற்றே மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் பேசத் தெரிந்திருந்தால் போதும். ஒரு ஆசிரமம் ஆரம்பித்து நினைத்ததை சாதிக்கலம், கோடிக்கணக்கில் பணம் கொட்டும். எத்தனை காவியுடை இருந்தாலும் அத்தனைக்கும் கூட்டம் கூட காத்திருக்கிறார்கள். காரணம் அத்தனை பேர் வாழ்க்கையிலும் எண்ணிலடங்கா பிரச்சனைகள். எங்கு சென்று எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற பரிதாப நிலை. ஐந்து நிமிட சந்திப்பிற்கு ஐயாயிரம் ரூபாய் வாங்கும் பேர்போன பிரபலங்கள் முதல் ரோட்டில் துண்டை விரித்து கிளி ஜோசியம் கூறுபவன் வரை, தன் குடும்ப ஜாதக்தை எடுத்துக் கொண்டு ஓடு ஓடு என்று ஓடுபவர்களை பார்த்திருக்கிறேன். அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணம் பறிப்பதோடில்லாமல், பெண்களின் கற்பையும் சேர்த்து சூரையாடுகிறார்கள் சிலர். பல இடங்களில் எதற்கும் துணிந்த சிலர் போலி காவியுடைகளுக்கு ஆண்மீக போர்iவியல் எல்லாவித சேவைகளும் செய்கிறார்கள்.

நான் கண்ட காவியுடைகள் என்ற தலைப்பில் ஒரு தனி புத்தகமே போடலாம். அத்தனை நபர்களை பார்த்திருக்கிறேன் :))). சில.. தானாக ஏற்பட்ட சந்திப்புகள், சில.. உண்மையிருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் நானாக தேடிச் சென்று உண்மையான உண்மையை தெரிந்து கொண்டவைகள் :))). சிலவற்றை முகத்தை பார்த்தே சொல்லிவிடலாம் (அனுபவம் இருந்தால்) :)))). சில காவியுடைகள், கோட்டீஸ்வரர்களுக்கென்றே தயாரிக்கப்படும் பி.எம்.டபுள்யு போன்ற வாகனங்களில் வலம் வருவது என்பது இன்று சகஜமாகிவிட்ட ஒன்று. இவர்களை சுற்றி எந்த நேரமும் வசதி படைத்தவர்கள் பலரும் மொய்த்த வண்ணம் இருப்பார்கள். இவர்கள் இல்லையானால் அவர்கள் தினம் ஒரு கண்டத்தில் ஆண்மீக பேரவை நடத்த முடியாமல் போய்விடுமே. ஆத்மபலம் இருந்தால் அடுத்தவன் பலம் தேவைப்படாதே! இப்படி இருப்பவர்களையும் பாவம் அப்பாவி ஏழைகள் தரிசனம் செய்ய காத்திருப்பார்கள். அறியாமையோ அல்லது அவர்கள் கஷ்ட நிலையோ அவர்களிடமிருந்து உண்மையை பார்க்கவிடாமல் பிரித்துவிடுகிறது. அப்படி ஒரு முறை நான் ஒரு காவியுடையை சந்திக்க காத்திருந்த பொழுது ஒரு சாதாரண பெண்மணி சந்திப்பு அறைக்குள் வந்தாள். பலரும் காத்திருந்தார்கள் அங்கே என்னையும் சேர்த்து. அந்த பெண்ணின் முகத்தில் கவலை ரேகை தாண்டவம் ஆடியது. கண்ணில் சோகம் தளும்பியது. சாமியை பார்க்க வேண்டும் என்றாள் ஒரு சிஷயரிடம். அதற்கு அந்த சிஷ்யர் சொன்ன பதில் - ‘இப்படி எல்லாரும் தொந்திரவு பண்ணிகிட்டே இருந்தா எப்படி? சாமிக்கு உடல்நிலை சரியில்லை. இன்னிக்கு பார்க்க முடியாது. உங்களுக்கு உங்க காரியம்தான் முக்கியமா இருக்கு.’ என்று சற்றே குத்தலாகவும் கடினமாகவும் சொன்னார். என் மனதில் முதலில் எழுந்த கேள்வி – ‘கையிலும் கழுத்திலும் ஏதும் இல்லாத அந்த பெண்மணிக்கு கொடுத்த பதிலை, ஆசிரமத்தில் இருக்கும் எந்த நிர்வாகியோ, சிஷ்யரோ, இதே பதிலை அந்த பெண்ணிற்கு பதிலாக ஒரு பெரும்புள்ளி இருந்திருந்தால் அவரிடம் இப்படி பேசியிருப்பாரா?’ என்பதுதான். பாவம் அந்த பெண்ணிற்கு என்ன பிரச்சனையோ, கவலையோ.. எதிர்பார்ப்புடன் வந்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இடம் வேறு.. நபர் வேறு.. பால் வேறு.. உடை ஒன்றுதான். ஐம்பது வயதை தொடும் நிலையில் உள்ள ஒரு பெண் சாமி. மதிய உணவு நேரத்தில் பலரோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பேச்சு வாக்கில் சர்வ சாதாரணமாக கூறினார்(ள்). எனக்கு திருநெல்வேலி அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் என்று. எனக்கு பகீரென்றது. ஐம்புலன்களை கட்ட முடியாமல் தவிக்கும் என் போன்ற சராசரி சம்சாரி பேசும் பேச்சாயிற்றே அது என்று. அதே பேச்சு வாக்கில் பத்ரினாத் கேதார்நாத் பயணம் பற்றி ஏதோ பேச்சு வந்தது. ஒருவர் கேட்டார் எப்படி அந்த குளிரில் பாதயாத்திரை போக முடிகிறது என்று. சட்டென்று தயக்கமின்றி வந்தது பதில் - ‘நாங்கள் ஹெலிகாப்டரில்தானே சென்றோம்’. அடுத்த ஷாக் எனக்கு.

இங்கே காஞ்சி பரமாசாரியாரை சற்றே நினைத்து பார்க்க தோன்றுகிறது. கலியின் போக்கை கவனத்தில் கொண்டு, காவி உடையை யாரும் களங்கப் படுத்தி பேசிவிடக்கூடாதே என்று ஒரு கட்டத்தில் பல்லக்கில் ஏறுவதை கூட நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு இமயமலை உச்சியிலிருக்கும் பரமேஸ்வரனாகட்டும் அல்லது குமரிமுனை கடலோரத்தில் அரசமரத்து பிள்ளையாராகட்டும்.. பாதணிகூட இல்லாமல் நடையாய் நடந்து சென்றுதான் தரிசனம் செய்திருக்கிறார். ஒரு முறை பெரியவருக்கு அன்னம் பரிமாறுபவர், பெரியவர் விரும்பி சாப்பிடுகிறார் என்று தானாக கற்பனை செய்து கொண்டு தினமும் கீரை சமைத்திருக்கிறார். பெரியவர், ‘என்ன.. தொடர்ந்து கீரை சமைக்கிறியே என்ன காரணம் என்று கேட்க’ அன்பர் ‘பெரியவா பிடித்து சாப்பிட்ட மாதிரி தோணித்து. அதான்..’ என்று இழுக்க.. பெரியவர் ஒரு வாரம் கடும் விரதம் இருந்திருக்கிறார். மறந்தும் ஒரு சந்யாசி எந்த சுகத்திற்கும் அடிமையாகிவிடக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக. நம் போன்றவருக்கு ‘அல்ப கீரையில் என்னவாகிவிடப் போகிறது என்று தோன்றும்’. ஆனால் அந்த மகானுக்கோ சந்யாசிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுதான் குறியாக பட்டது. அதற்காக அன்னம் பரிமாறுபவர் செய்த பிழைக்காக தானே தண்டனையை ஏற்றுக் கொண்டார். இவர் சரீரத்தை விட்டுச் சென்று 15 வருடங்கள்தான் ஆகிறது. சமீபகாலம் வரையிலும் இப்படி ஒரு சந்யாசி நம்மிடையே வாழ்ந்திருக்கிறார். இன்றோ எனக்கு அல்வா மிகவும் பிடிக்கும் என்றும், உடல் நோகாமல் பறந்து பறந்து யாத்திரை செய்தேன் என்றும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் சில காவிஉடைகள் கூறிக் கொண்டு திரிகின்றார்கள். இவர்கள் பின்னால் செல்லவும் கூட்டம் காத்திருக்கிறது. அதுதான் கொடுமை!

இடம் வேறு.. நபர் வேறு.. மேற்சொன்ன அதே பாலினம்.. உடை அம்மனுக்கு உகந்த நிறங்கள் இரண்டு. ஒரு மலை பிரதேசத்தில் நான் தேடிச் சென்ற அனுபவம். அந்த மலையில் அருள் வந்து குறி சொல்லும் ஒரு அம்மையார் (அப்படி ஒரு பிரகடனம்). பெரிதாக கோவில் ஒன்று கட்டும் பணியில் தன்னை அர்பணித்து கொண்டிருக்கிறார் (அப்படியும் ஒரு பிரகடணம்). அந்த வட்டாரத்தில் நிலம் வாங்குவது என்பது கோட்டீஸ்வரர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்று. பக்த கோடிகளின் மூலம் வந்த கோடிகளில் சில ஏக்கர் நிலத்தில் எழுகிறது ஆலயம் (அங்கேயே அவர்கள் இல்லமும்). என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்ற ஆவலில் சென்றேன். சென்றதும், அம்மா பூஜையில் இருக்காங்க குறி சொல்லிகிட்டு இருக்காங்க என்று தெரிய வந்தது. சற்று நேரம் கழித்து வெளியே ஒருவர் வந்தார். நடுத்தர வயது இருக்கும். ஆள் பார்ப்பதற்கு நல்ல படிப்பும், உத்தியோகமும் உள்ளவர் என்று தெரிந்தது. பெங்களுரிலிருந்து அம்மாவை பார்க்க வந்தாராம். சற்று பின்னர் வெளியில் வந்த அம்மையார் என்னையும் என் மனைவியையும் பார்த்துவிட்டு உள்ளே வாங்க என்று அழைத்தார். எங்கள் அருகில் இன்னொருவர் நின்றிருந்தார். ஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் வில்லன் போன்று காட்சியளித்தார். நல்ல உடற்கட்டு, முரட்டு மீசை, தலையில் கைகுட்டையை கட்டிக் கொண்டு.. எனக்கு உள்ளுர பீதி எடுத்தது.. பக்கத்தில் மனைவி இருக்கிறாளே என்று. விஷயம் என்னவென்றால் இவர் அந்த குறி சொல்லும் ஆத்தாளுடைய கணவர். அவரே கொடுத்த தகவல்கள் - ‘நாங்கள் கணவன் மனைவிதான், ஆனா எங்களுக்குள்ள ஏதும் கிடையாது..’ (நான் உன் கிட்ட எதுவுமே கேக்கலியே ராசா.. என்று நினைத்துக் கொண்டேன்.. உன் கட்டிலரைக்குள் எட்டிப் பார்ப்பது எனக்கு அசிங்கம் என்றால் அதை நீயே திறந்து காண்பிப்பது அதைவிட அசிங்கம் என்று மனதில் புலம்பிக் கொண்டேன்.). மேலும் தொடர்ந்தான்… ‘நானே அம்மான்னுதான் அவங்கள கூப்பிடுவேன்.. நான் ஒரு பெரும்புள்ளிக்கு பாடிகார்டாக இருந்திருக்கிறேன் (பாத்தாலே தெரியுதே அப்பு...... என்ன எங்காச்சும் நாலு அப்பு அப்பிடபோற... இது நான் என் மனதிற்குள்...) இப்போ ஆத்தா அருளாள கோவில் பணி மேற்பார்வை பாத்துகிட்டு இருக்கேன்.. அம்மாவ பாக்க தினமும் 200-300 கார் வரும்.. (நான் - எனக்குள்: அடேய்... எனக்கு தெரிஞ்சு இந்த மலையில் ஒரு வாரத்திற்கே மொத்தம் 200 கார் வராதேடா... புருடா உடற்துக்கு ஒரு அளவு இல்ல?)’ இது போன்ற ஸ்வாரஸ்யமான பல தகவல்கள் நாங்கள் கேட்காமலேயே வந்த சேர்ந்தது. அதற்குள்ளாக கட்டுமான பணி செய்து கொண்டிருந்த ஒருவன் பணியாட்களுக்கு கூலி கொடுப்பதற்காக அம்மாவிடம் பணம் கேட்க, அம்மா.. ஐய்யாவை பார்த்து ஜாடை காமிக்க.. அவனிடமிருந்து உரத்த குரலில் அழுத்தமாக வந்த பதில் - ‘அம்மா....... நான் என்னிக்குமா பணத்த கையால தொட்டு இருக்கேன்... நீங்கதான்மா எடுத்து கொடுக்கனும்..’ என்றானே பார்க்கனும். எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு தாங்க முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். உண்மையிலேயே அவன் குரலில் இருந்த தொணி.. உலகநாயகன் கமல் இவனிடம் நடிப்பு கற்றுக் கொண்டிருந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை. நான் என் மனதிற்குள்: ‘ஏன்டா... எங்கள எல்லாம் பாத்தா கேனப்பய மாதிரி தெரியுதா உனக்கு.. என்னடா அல்வா கொடுக்கறீங்க..’ என்று முனுமுனுத்தபடி இருந்தேன்.

இது ஐயாவின் பாணி என்றால்.. ஆத்தா இவனை இன்னமும் மிஞ்சிவிட்டாள். எங்கள் இருவரையும் பூஜை அறைக்குள் அழைத்து சென்றாள். மயக்கி வசியம் ஏதேனும் செய்து விடப்போகிறார்களே என்ற பயத்தில் சற்று உஷாராகவே உள்ளே சென்றேன். கண்களை அங்கும் இங்கும் உருட்டி சந்தேகப்படும்படி ஏதேனும் நடக்கிறதா என்று நோட்டமிட்டவாறே இருந்தேன். எங்கோ காட்டிற்குள் இருந்தோம். அந்தி நேரம் வேறு. எங்களை பார்த்தவுடன் ஆத்தாளுக்கு அருள் இறங்கி பேச ஆரம்பிச்சிட்டாங்க. என் மனைவியை பார்த்து: ‘உனக்கு 2-3 மாசமா உடம்பு சரியில்லாம இருந்திருக்குமே..’. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருத்திருவென விழித்துவிட்டு அப்படி ஒன்றும் இல்லையே ஆத்தா என்றேன். (நகைச்சுவைக்காக ஆங்காங்கே ஆத்தா, அருள், குறி என்று சேர்த்துக் கொண்டுள்ளேன்..). ஆத்தா: இல்லை.. ஏதாச்சும் இருந்திருக்கும். நல்லா யோசிச்சு பார்த்து சொல் என்றார்கள். 2-3 மாதாமாக ஏதேனும் உடல்நலம் சரியில்லாமல் இருந்திருந்தால் மறப்பதற்கு நியாயமில்லை. மீண்டும் அதே பதிலை கூறினோம். இதை எதிர்பாராத ஆத்தா, ஒரு தலைவலி ஜலதோஷமாவது இருந்திருக்கும் என்றார்கள். நான் எனக்குள்: ‘அட ஒரு மனுஷன்னு இருந்தா தலைவலி ஜலதோஷம் வர்றதான்யா செய்யும். இந்த மாதிரி குறி சொல்ல என்னாலகூட முடியுமே..’. முதல் அடியை சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார்கள் ஆத்தா அவர்கள். என் மனைவியின் முகத்தை பார்த்து ‘இவள் குழந்தை மாதிரி, ஒண்ணுமே தெரியாது..’ என்றார்கள். நான் என் மனதிற்குள்: ‘அப்ப நான் கேடிங்கற்த சொல்லாம சொல்றீங்களா ஆத்தா?’. யாராக இருந்தாலும் என் மனைவியோடு ஐந்து நிமிடம் பழகினால் தெரிந்து கொண்டுவிடுவார்கள் அவள் ஏதும் அறியா மடந்தை என்று. காலத்தின் மாசு இன்னும் படியாத நிலை. இல்லையேல் இந்த கேடிக்கு கழுத்தை நீட்டியிருப்பாளா? பாவம் :))). ஆத்தாவின் மகத்தான கண்டுபிடிப்புக்கு நான் மௌனம் சாதிக்க.. ஆத்தா மனதிற்குள்: ‘என்னடா இவன் பிடிகொடுக்கவே மாட்டேங்கறானே.. நமக்கு மேல தில்லாலங்கடியா இருப்பான் போலிருக்கே..’ என்று புலம்பிக்கொண்டு தொடர்கிறார். என்னை நோக்கி: ‘உனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தி.. (நான் என் மனதிற்குள்: இல்லாட்ட உன்ன மாதிரி போலி ஆத்தா எல்லாம் என்ன சாப்பிட்டு ஏப்பம் விட்டுறுவீங்களே..) ஏதோ பெரிய பெரிய வியாபார திட்டம் எல்லாம் வெச்சிருக்கே.. அதுக்குதான் இங்க வந்திருக்கே என்றார்கள்’. நான்: ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே...’ (மனதிற்குள்: ஒண்ணுமே வேணாம்னுதானே எல்லாத்தையும் விட்டுட்டு அமெரிக்கலேந்து வந்திருக்கேன் ஆத்தா...). இப்படி ஆத்தாவின் குறிக்கு எல்லாம் எதிர்மறையாக பதிலளித்ததன் காரணமாக ஆத்தாவின் குறி சொல்லும் சுதி இறங்க ஆத்தா மலையேற முடிவு செய்துவிட்டாள். நாங்களும் ஆளைவிட்டா போதும் என்று ஓட்டம் பிடித்தோம். மற்றொரு முறை ஒரு அரசாங்க அதிகாரியோடு அங்கே செல்வதற்கு வாய்ப்பு கிட்டியது. ஏற்கனவே பழக்கம் என்று அறியாத அந்த அதிகாரி என்னை அறிமுக படுத்தி வைத்தார். ஆத்தாவிற்கு என்னை மறக்க முடியவில்லை அதே சமயத்தில் என் கண்ணை பார்த்து பேசவும் தைரியமில்லை.

இதே போன்று சென்னையில் ஒரு முறை சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒருவன் ‘சார் முகத்தல ஒரு ரேகை தெரியது.. சாருக்கு வெளிநாட்டு யோகம் இருக்கு.. கையை காட்டுங்க குறி சொல்றேன்’ என்றான். நான் என் மனதிற்குள்: ‘உன்னிடம் கையை காண்பித்தால் நீ சொன்ன அந்த ரேகை உண்மையாகிவிடும்.. இளிச்சவாய் என்கிற ரேகையாகத்தான் இருக்கும். அதுவும் இல்லாம வெளிநாட்டுலேந்துதாண்டா வந்திருக்கேன் குருமூட்ட..’ என்றவாறு பதிலேதும் பேசாமல் நடைபோட்டேன்.

போலியாக குறி சொல்வது என்பதின் தாத்பர்யம் என்வென்றால் - நம் முகத்தைப் பார்த்து அளந்துவிடுவது, நாம் சொல்லும் விஷயத்தை வைத்தே பில்டப் கொடுப்பது, மனோதத்துவ அடிப்படையை பயன்படுத்துவது என்று பல முறைகளை கையாள்வதேயாகும். மேலும் இம்மாதிரி இடத்திற்கு செல்பவர்கள் ஏதோ ஒரு பிரச்சனையோடுதான் அங்கே செல்வார்கள். ஆதலால் அவர்கள் வாயாலேயே வார்த்தையை பிடுங்கி அவர்களை வலைக்குள் சிக்க வைப்பது மிகவும் எளிதான ஒன்று. இவர்களின் போலித்தன்மையை கண்டுபிடிப்பது சுலபமான விஷயம். மௌனம் சாதிக்க தெரிந்தால் அவர்கள் சொல்லும் நான்கில் ஒன்றாவது உண்மையாக இருக்காதா என்ற தவிப்பில் மேலும் மேலும் அவர்களே பேசி தன்னுடைய முட்டாள்தனத்தையும், போலித்தனத்தையும் தானே வெளிக் காட்டிவிடுவார்கள்.

எளிமையான தோற்றத்தில் இப்படி ஏமாற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றால் பகிரங்கமாகவே பகட்டான தோற்றமளித்தபோதிலும் அதற்கும் கூட்டம் மயங்கி கிடப்பதை என்னவென்று சொல்வது. உடலெங்கும் ஜொலிக்கும் மினி நகைகடை, சிவக்க சிவக்க கோவைப்பழம் போன்ற செவ்விதழ் உதட்டு சாந்தின் (லிப்-ஸ்டிக்) உதவியோடு, வாசனை திரவியங்கள் (டல்கம் பவுடர், சென்ட் போன்றவை), ஜிலுஜிலுவென பளபளக்கும் புடவை என்று ஆண்மீக போர்வையில் நடக்கும் அலங்கோலங்கள் ஏறாளமாகிவிட்டன. மாடலிங் துறையில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த துறையை பின்பற்றவதற்கு காரணம் இதில் அப்பாவி மக்கள் கொட்டும் பணமே. ஆனால் எல்லாவற்றிற்கும் கூட்டம் அலைமோதுவதுதான் பரிதாபமான விஷயம்.

இதற்கு தீர்வென்ன? நீங்கள் தான்!! பின்னணி தெரியாமல் எல்லோரிடமும் போய் விழுவதுதான் காரணம். பிரச்சனை இருப்பதால் தானே தீர்வைத் தேடிப் போகிறோம் என்கிறீர்களா? உண்மைதான். ஆனால் தவறான இடத்திற்கு சென்றால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடப் போகிறதா? இருப்பது போதாதென்று மேலும் பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குவதுதான் மிச்சமாகும். காவியுடை என்பது மிகப் புனிதமான ஒரு விஷயம். ஞானம் என்பது பல கோடிகளில் ஒருவருக்கே முழுமையாக வாய்க்கப்பெறும் ஒன்று. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற இடத்திற்கு சென்றால்தான் உண்மையான தீர்வு கிடைக்கும். உதாரணத்திற்காக சில இடங்களை சொல்ல வேண்டுமானால் - ஸ்ரீ காஞ்சி பரமாசாரியார் அதிஷ்டானம் (காஞ்சிபுரத்தில்), ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம் (மந்தராலயம்) மற்றும் அவருடைய மிருத்திகா பிருந்தாவனங்கள், ஸ்ரீ ரமண மஹரிஷி பிருந்தாவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் மஹா அவதார் பாபாஜி என்று சில ஞானிகளை சொல்லலாம். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திரர் தான் சமாதியான பின்பும் பிருந்தாவனத்தில் ஜீவனோடு 700 ஆண்டுகள் இருந்து உண்மையான அன்போடும் பக்தியோடும் என்னைத் தேடி வருவோரை காப்பேன் என்று அறுதியிட்டு கூறியுள்ளார். இன்றும் அவருடைய உண்மை பக்தர்களுக்கு எண்ணற்ற அதிசியங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இதை திரு. அம்மன் சத்தியநாதன் எழுதியுள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமை என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது தெரிகிறது. படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கும். இப்படி ஒரு கருணையா என்று நினைக்கும் பொழுது நம்மையும் அறியாமல் கண்கள் பனிக்கும். இதே போன்றுதான் காஞ்சி மாகபெரியவரின் தரிசன அனுபவங்கள் புத்தகமும். எந்த மகானை தேடிச் சென்றாலும் அதற்கு தேவை ஒன்றே ஒன்றுதான் - உண்மையான, திடமான, ஆழ்ந்த, தூய்மையான பக்தி. இது இருந்தால் எதையும் பெறலாம் ஆண்டவனிடமிருந்து, எப்படிப்பட்ட மீளா துயரிலிருந்தும் மீளலாம்.

ஜோசியமோ, ஜாதகமோ பொய்யல்ல. எல்லாம் வான சாஸ்திரத்தையும், கணித சாஸ்திரத்தையும் சேர்த்து முறையாக கையாளும்பொழுது துள்ளியமாக கணிக்கக்கூடிய ஒன்று. ஆனால் இன்றைய தேதியில் இவைகளில் 99 சதவீதத்திற்கும் மேலாக போலியாகிவிட்டது. முதலில் குழந்தை பிறக்கும் பொழுது ஜாதகம் குறிப்பது என்பது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒன்று. பிறந்த நேரம் சில நிமிடங்கள் மாறினாலும் தவறான ஜாதகம் குறிக்கப்பட்டுவிடும். இன்றைய தேதியில் நம்மில் எத்தனை பேருக்கு இப்படி துள்ளியமாக ஜாதகம் குறிக்கப்பட்டிருக்கும் என்பதை சொல்ல அவசியமில்லை. மேலும் ஜோசியம் கூறுபவராகட்டும் ஜாதகம் குறிப்பவராகட்டும், அதற்கு தேவையான அறிவை (படிப்பை) ஒரு குருவின் மூலம் முறைப்படி பெற்றிருக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் உரிதான நியமங்களை பக்தி சிரத்தையோடு அனுதினமும் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருப்பவரிடம் சக்தி இருக்கும். அவர் சொல்லும் விஷயங்களில் உண்மை இருக்கும். சொல்லும் பரிகாரங்களில் பலன் இருக்கும். மேலும் இவ்விரண்டு பணியையும் வியாபார நோக்கோடு செய்யவே கூடாது. அவ்வாறு செய்பவற்றில் அவர்களுக்குதான் பலனே தவிர (நீங்கள் கொட்டும் பணம்) உங்களுக்கு எந்த பலனும் இருக்காது. தெய்வீகமாக செய்யும் பொழுதுதான் ஜோசியமும், ஜாதகமும் பலனைத் தரும். இதை நன்கு தெரிந்து கொண்டோமானால் பேர் பேராக ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஓட மாட்டோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது கர்மவினை என்ற ஒன்று இருக்கிறது. நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாம் அனுபவிக்கும் சுகமும், துக்கமும் முன் ஜென்ம தொடர்ச்சியே. எனக்கு தெரிந்து நான் யாருக்கும் தீங்கு செய்ததில்லையே நான் ஏன் இப்படி கஷ்டப்படுகிறேன் என்று நம்மில் பலர் நினைப்பது இயல்பு. இந்த ஜென்மத்தில் ஏதும் செய்யவில்லை என்றால் நம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினைக்காக இப்பொழுது அனுபவிக்கிறோம் என்று அர்த்தம். உண்டியலில் காசை கொட்டுவதாலும், ஆயிரம் பரிகாரங்களாலும் நம் தீவினையை குறைக்க முடியாது. ஆயினும், எதற்காக செய்கின்றோம் என்றால் ஆண்டவனின் சந்நிதியில் இருக்கும் பொழுது நம் மனது லேசாகிறது. நம் நினைவுகள் சற்றே கஷ்டத்தைப் பற்றி சிந்திக்காமல் திசைதிரும்புகிறது. நாம் கொடுக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு ஏதோ நன்மை பயக்கிறது. ஆண்டவன் தரிசனத்தில் மனது புத்துயிர் பெறுகிறது. ஆண்டவன் துணையோடு கஷ்டத்தை சுமக்கும் பொழுது அதன் சுமை தெரிவதில்லை.

இப்படி, மதத்தையும் மத விஷயங்களையும் சரிவர புரிந்து கொள்ளாமல் மக்கள் ஒரு பக்கம் அவதிப்படுகிறாhகள் என்றால்.. என் மதம்தான் எல்லாவற்றையும்விட உசத்தி, எங்கள் மதக் கடவுளை பின்பற்றினால் சொர்க்கம் நிச்சயம், இல்லையேல் நரகத்திற்குதான் போக வேண்டும் என்றெல்லாம் சொல்லி தன் பக்கம் இழுக்கும் கூட்டம் பரவலாக பார்க்கலாம்.

எந்த விதத்திலும் சரி.. குறிப்பாக சேவையை பொருத்தவரை மக்களை மத வாரியாக பிரித்துப் பார்த்து பழக்கமில்லை எனக்கு. பொது சேவையென்றால் அது யாருக்கு வேண்டமானாலும் செய்ய கடமைபட்டுள்ளேன் என்ற கொள்கையை கடைபிடிப்பவன் நான். ஒரு முறை பிற மதத்தை சார்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் குறைவாக இருப்பதால் குழந்தைகள் படிப்பு பாதிக்கிறது என்று அறிந்து, என் மனைவியை அங்கே பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். மத மாற்றம் வெளிப்படையாகவே செய்யும் நிறுவனம் என்று எனக்கு நன்கு தெரியும். இருப்பினும் அதைப் பற்றி கவலைகொள்ளாமல் குழந்தைகளின் படிப்பை நினைத்து இந்த ஏற்பாடு செய்தேன். ஆனால் இவர்கள் லேசுபட்டவர்கள் இல்லை நம்மையும் இவர்கள் பக்கம் இழுப்பார்கள் என்பதை எதிர்பார்த்து பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினேன். அவரிடம்.. இது வேறு மதத்து பள்ளி என்பதற்காக என் மனைவி இங்கே உங்களுக்கு உதவுவதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. ஆனால் எங்கள் தனிப்பட்ட விஷயமான மதம் பொருத்தவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை அதை முறைபடி பின்பற்றுபவர்கள். ஆதலால் உங்கள் பள்ளியில் மதம் சம்மந்தபட்ட எந்த செயல்களிலும் என் மனைவி கலந்துகொள்ள மாட்டார்கள்.. இதற்கு சம்மதமானால் இங்கே உதவிக்கு அனுப்புகிறேன் என்று கூறினேன். அதற்கென்ன அவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தால் போதும் என்று கூறினார்கள். அது வெறும் பேச்சளவே என்பது எனக்கு தெரியும். ஆதலால் என் மனைவிக்கு மத சம்பந்தமாக எந்தந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு பல கோணல்களில் பயிற்சி அளித்திருந்தேன். இருந்தும் விழிப்போடே இருந்து வந்தேன். அவ்வப்போது நானும் சென்று அவர்களின் நடவடிக்கைகளை (இது சம்மந்தமாக) கவனித்து வந்தேன். சில வாரங்கள் சென்றன. எனக்கு ஒரு புகார் வந்தது. என் மனைவி பள்ளி பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதில்லை, வகுப்பிலேயே இருந்து விடுகிறார்கள் என்று. தலைமை ஆசிரியரை சந்தித்து மீண்டும் நிபந்தனைகளை நினைவுபடுத்தினேன். மண்டையை நன்கு ஆட்டிக் கொண்டாள். என்னிடம் பாச்சா பலிக்காது என்பது அவளுக்கு தெரியும்.

ஒரு நாள் நான் என் அலுவலத்திலிருந்து மதியமே வீடு திரும்பிவிட்டேன். சற்று ஓய்வு எடுக்கலாம் என்று படுத்திருந்தேன். என் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பள்ளியில் ஏதோ கொண்டாட்டம் என்னையும் கலந்து கொள்ள சொல்கிறார்கள் ஆதலால் நான் வருவதற்கு நேரமாகும் என்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் பளிச்சென்று ஒரு விஷயம் உதயமானது. இவர்களுக்கு கொண்டாட்டம் என்றால் முதலில் ஒரு மணிநேரம் கடவுள் சம்மந்தமாக பாடல்கள் மற்றும் இதர விஷயங்கள் செய்து விட்டுத்தானே தொடங்குவார்கள். என மனைவியையும் அதில் கலந்து கொள்ள செய்திருப்பார்கள் என்று உள் மனது சொல்லிற்று. விருவிருவென எழுந்து வண்டியை எடுத்துக் கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் பள்ளியில் இருந்தேன். நினைத்தது நடந்து கொண்டிருந்தது. கூட்டுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் என் மனைவி அங்கே கையை பிசைந்து கொண்டிருந்தாள். அந்த பாடல் முடிந்தவுடன் அவளை வெளியே வரும்படி சைகை காட்டினேன். அத்தனை பேருக்கு மத்தியில் திடீரென எழுந்துவர தயங்கியவள் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவள் பின்னாலேயே அந்த மதத்து கன்னி ஒருவர் வந்தார் திரும்பி அழைத்துச் செல்ல. எனக்கு கலெக்டரோடு உடனடியாக சந்திப்பு இருக்கிறது என் மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்று கூறி அவளை அழைத்து வந்து விட்டேன். அத்துடன் பதினைந்து நாள் முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்வதை நிறுத்த வேண்டியதாயிற்று.

அத்தனை மதங்களையும் அன்புடன் அரவணைத்து போக வேண்டும் என்று நினைப்பவன் நான். பல மதத்து கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். இனி செல்லவும் தயங்க மாட்டேன். அவர்கள் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இதை தைரியமாக செய்வதற்கு காரணம் மதங்களைப் பற்றிய தெளிவான சிந்தனைதான். என் தாய் மதத்தில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான். திடமான மனது இருக்கும் பொழுது நம்மை எவராலும் திசை திருப்ப முடியாது. என் தாய் மத விஷயங்களைப் பொருத்த மட்டில் அவைகள் என தனிப்பட்ட விஷயங்கள். அதில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டேன். என்னை பேசிக் கவிழ்கலாம் என்று நினைப்பவர்களுக்கு நான் இடம் கொடுப்பதும் இல்லை. ஆனால் விஷயம் தெரியாதவர்களை, அறியா குழந்தைகளை, வாழ்க்கையில் அனுபவம் இல்லாதவர்களை மெல்ல மெல்ல இழுத்து அவர்கள் மiதை எளிதில் கலைத்து தன் பக்கம் இழுக்கும் கூட்டம் ஏறாளமாக செயல்படுகிறது. அதில் விழுபவர்களும் ஏறாளம்.

குறிப்பாக ஏழைகளின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மதமாற்றம் நடைபெறுவது உலகம் முழுவதும் சகஜமாக நடந்துவரும் ஒரு செயல். பணம், இலவச கல்வி, இலவச மருத்துவம் என்று வாரி இறைத்தால் யார்தான் தன் குடும்பத்திற்காக மாறமாட்டார்கள். எந்த கடவுளை கும்பிட்டால் என்ன என்று தோன்றாமலா போகும்? பொதுவாக குழந்தைகளை மாலை கூடுதல் பாடத்திற்கு (டியுஷன்) நாம் பணம் கட்டி சேர்ப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது மாலை வகுப்புக்கு குழந்தைகளை அனுப்பினால் மாதம் ஐநூறு ரூபாய் தருகிறார்கள் பல இடங்களில். மாலை வகுப்பு என்கிற பெயரில் அங்கே நடப்பது மதமாற்றம். இதில் படு உஷாராக இருப்பவர்களும் உண்டு. வரும் பணத்தை ஏன் விடுவானேன் என்று குழந்தைகளை அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் நம் மதத்து கடவுளைத் தவிற வேறு எதையும் கும்பிடக் கூடாது என்று மாற்று வைத்தியம் செய்து மதநம்பிக்கையை தக்க வைத்துக் கொள்பவர்களும் உண்டு. காலம் எப்படி இருக்கிறது பாருங்கள்...

ஒரு இந்து ஒரு கிற்ஸ்தவனை மாற்றினாலும் அது தவறுதான். அதையே மாற்றி செய்தாலும் அதுவும் தவறுதான். இது அத்தனை மதத்திற்கும் பொருந்தும். ஒருவன் ஏன் மதம் மாறுகிறான்? அவனுக்கு தன் மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதது ஒரு முக்கிய காரணம். தன் மதத்தில் தான் தேடுவது கிடைக்கவில்லையென்றால் பிற மதத்தை முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் மாறுகிறான். இவனுக்கு அங்கும் திருப்தி ஏற்படுவதில்லை. கடைசியில் இவனால் எந்த மதத்திற்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகிறது. மொத்தத்தில், மதமென்னும் போர்வைக்குள் மக்களின் அறியாமையை, இயலாமையை, தேவையை, ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை குழப்பத்திற்கு ஆளாக்குவது நன்றாகவே நடைபெறுகிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என் மதம்தான் உசத்தி மற்றவை மட்டமானவை என்ற போக்கில் மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை புகுத்தி ஒருதாய் வயிற்று பிள்ளைகளாய் வாழமுடியாமல் விரிசல்களை ஏற்படுத்தி பார்ப்பதில் என்ன லாபம். அவரவருக்கான பாதையில் செல்வதே நன்மையை பயக்கும். சேரும் இடம் ஒன்றாக இருக்கும் பொழுது எந்த பாதையும் ஒன்றைவிட ஒன்று உசத்தியும் இல்லை, குறைந்ததும் இல்லை. எல்லா ஆறுகளும் வௌ;வேறு பாதையை கடந்து வந்தாலும் கடைசியில் கடலில்தான் சங்கமம் ஆகின்றன. இந்த விசாலமான நோக்கே அமைதிக்கு வழிவகுக்கும்.

மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

கலாச்சாரம் சம்மந்தப்பட்ட ஒரு ரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டிய விஷயத்தை சற்றே நகைச்சுவையாக பார்த்துவிட்டு இக்கட்டுரையை முடிக்கிறேன். வேறு வழியில்லை. மனம் நொந்து போனால் எனக்குதான் ரத்தக் கொதிப்பு வரும். வேறு எதுவும் நடக்காது. ஒரு கிராமப்புற பகுதியில் ஷேர்-ஆட்டோ பயணம் ஒன்று மேற்கொள்ள வேண்டடியதாயிற்று ஒரு முறை. நான் ஓட்டுநர் பக்கத்திலேயே தொத்திக் கொண்டிருந்தேன். பின்னால் வயது வந்த ஆண்கள் பெண்கள் என்று கலந்து அமர்ந்திருந்தார்கள். வண்டி களிம்பியதும், ஓட்டுநர் (ஒரு வாலிப பையன்) கையிலிருந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனை அழுத்தினான். ஆட்டோவில் ரிமோட் கன்ட்ரோல் பயன்படுத்தக் கூடிய சாதனத்தை நான் அதுவரை பார்த்ததில்லை. அதுவும் கிராமபுரத்தில். தொழில்நுட்பம் எப்படி தழைத்திருக்கிறது என்று பிரம்மித்திருந்தேன். அந்த ரிமோட் கன்ட்ரோல் ஒரு இசைக் தட்டு கருவியை கிளப்பிவிட்டது. இதோ முதல் பாடல்; உங்களுக்காக:

‘நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா...’ என்று ஆரம்பித்தது. வண்டியில் வயது வந்த பெண்கள் இருப்பதை நினைத்து நான் நெளிய ஆரம்பித்தேன். ஓட்டுநர் ஏதும் செய்வதாக இல்லை. தாங்க முடியாமல் வேறு பாட்டை போடேன் என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு மறுபடியும் ரிமோட் கன்ட்ரோல் பட்டனை அழுத்தினான். அடுத்த பாடல்:

‘ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே...’ நான் ஏதோ ஆட்டோதான் தீ பற்றிக்கொண்டுவிட்டது என்று திரும்பி பார்ப்பதற்குள்... ‘நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ கண்ணே...’ என்று தொடர்ந்தது பாடல். இந்த பாடலையும் மாற்ற சொன்னால் என்னை ஆட்டோவை விட்டு இறக்கி விட்டுவிடுவான் என்கிற பயத்தில் பேசாமல் அமர்ந்திருந்தேன். கண்ணாடியில் பார்த்த பொழுது தெரிந்தது.. பின்னால் இருந்த கிராமத்து இளசுகள் (இருபாலரும்) பாட்டை நன்கு ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது. ஐயோ கடவுளே என்று நொந்து போயிருக்கையில் பாடல் ஒரு வழியாக முடிந்தது. அப்பா! என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த பாடல்:

‘வா முனிமா வா முனிமா வா முனிமா வா... நீயும் நானும் ஜோடி, சும்மா பீச்சு பக்கம் வாடி...’ ஒரு இளசு பின்னாலிருந்து குரல் கொடுக்கிறது: ‘செம்ம கலக்ஷென் வெச்சுருக்கபா..’ என்று!

பாட்டு முடிவதற்குள் நல்ல வேளையாக நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. அவசர அவசரமாக காசை கொடுத்துவிட்டு தேராத கூட்டம் என்று ந
கார்த்திகா
கார்த்திகா

Posts : 59
Join date : 04/11/2011

Back to top Go down

மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது. Empty Re: மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

Post by சேயோன் Thu Mar 01, 2012 12:56 pm

அருமையான கட்டுரை.

இந்த மதமாற்றம் கண்டிக்கப்படவேண்டியது. பொருளாதார ஏழ்மையை பயன்படுத்தியே இந்த மாற்றங்கள் நடக்கின்றன. இதை விட பெரிய கூத்து அவர்களுடைய 'மார்க்கெட்டிங்' வேலையை பள்ளிகளிலே ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மாதிரி பள்ளிகளைக் கண்டறிந்து நம் குழந்தைகளை அதில் சேர்க்காமல் இருப்பதுதான் ஓர் எளிய வழி.

இன்னுமொரு குறை அவரவர் மொழியில் அவரவர் கடவுளை வணங்க விடாதது.

தமிழ் தெரிந்தவன் தமிழில் வணங்குவதை எதிர்க்கும், அல்லது வணங்கவிடாமல் மறைமுக தாக்குதல் நடத்தும் கோயில் பிராமணர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

புரியாத பாஷையில் கடவுளை வணங்கும் போது பக்தனுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இது வேற்று மதத்தவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.


சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது. Empty Re: மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

Post by அருன்ப்ரகாஷ் Thu Mar 01, 2012 1:52 pm

நல்ல கட்டுரை,
இந்த தவறுகளுக்கு நாமும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்று நல்ல அரசியல்வாதி இல்லாமல் இல்லை ஆனால் நாம் சுயநலம்காரணமாக அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. இலவசங்களுக்கும் சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு கேடிகளை தேர்ந்தெடுத்து விடுகிறோம்.நல்ல குருமார்கள் நமக்கு அருகிலே கூட இருக்கலாம், ஆனால் நாம் வாங்கிய கடனை சத்தியிருந்தும் திருப்பி கொடுப்பதிலிருந்து தப்பவும், தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழவும் ஆசைப்பட்டு போலிகளிடம் மாட்டிக்கொள்கிறோம்.

உள்ளத்தில் உண்மை இருந்தால்,உண்மையோடு பிரார்த்தனைசெய்தால் நல்லோர் தொடர்பு கண்டிப்பாக கிடைக்கும்.

ஒருசந்தேகம், கிருத்திகா என்றபெயரோடு ஒரு பெண்மணியின் படத்தையும் வைத்துள்ளீர்கள் ஆனால் உங்களது மனைவியைப்பற்றி கூறியுள்ளீர்கள், ஒருவேளை ஆண்கள் யாரேனும் எழுதிய கட்டுரையை பிரசுரித்துவிட்டீர்களா?

அருன்ப்ரகாஷ்

Posts : 4
Join date : 24/11/2011

Back to top Go down

மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது. Empty Re: மதநெறி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி அறவே கூடாது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum