Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
திருப்பெயர் மோசடிகள்
3 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருப்பெயர் மோசடிகள்
“திருத்தவத்துறைக்கு ஒரு சீட்டு கொடுப்பா” பேருந்தில் ஒரு தமிழ்க்குரல் தனியே ஒலித்தது.
“அந்த ஊருக்கு எல்லாம் இந்த வண்டி போகாதுங்க, இறங்குங்க கீழே!” திருச்சி பேருந்து நிலையத்தில் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் நடத்துனர் அலுத்துக்கொண்டார்.
“பெயர்பலகையில் லால்குடி என்று போட்டிருக்கிறதே”
“ஆமாம், லால்குடிக்கு போகும்”
“லால்குடிதான் திருத்தவத்துறை”
:அதெல்லாம் எனக்குத்தெரியாது. லால்குடின்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டு. ஏறுங்க! ஏறுங்க!
இந்தக்கூத்திற்கு என்ன சொல்ல? லால்குடி என்பது தமிழாம். திருத்தவத்துறை தமிழில்லையாம். இந்த நடத்துனரைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
அவை எங்கே மறைந்தன?
நாம் அவற்றை மறக்கடிக்கச் செய்யப்பட்டோம்.
ஆம்!
வந்தேறிய வடமொழி வெறியர்கள் அரச செல்வாக்கினைப்பெற்று ஆலயங்களில் வீற்றிருக்கும் ஆண்டவனின் தூய தமிழ்ப்பெயர்களையே மாற்றி அமைத்தபோது ஊர்களின் பெயர் எம்மாத்திரம்?
திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
9ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலுள்ள காலத்தேதான் தலப்பெயர், சுவாமி பெயர், தேவிப் பெயர் பலவும் வடமொழியில் ஏற்பட்டுப்பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வரலாயின.
தமிழ்ப்பெயர் = வடமொழிப்பெயர்
மறைக்காடு = வேதாரணியம்
முதுகுன்றம் = விருத்தாசலம்
ஆனைக்கா = கஜாரணியம்
தேன்மொழிப்பாவை = மதுரவசனாம்பிகை
திருவிடைமருதூர் = மத்தியார்ச்சுனம்
சொக்கநாதர் = சோமசுந்தரர்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
தில்லை = சிதம்பரம்
கூத்தரசர் = நடராசர்
ஆட்சிகொண்டநாதர் = பார்க்கபுரேஸ்வரர்
இளங்கிள்ளையம்மை = பாலசுகாம்பிகை (சுகம்=கிளி)
புற்றிடங்கொண்டார் = வன்மீகநாதர்
இருந்தாடழகர் = தியாகராயர்
ஆடானை நாதர் = அஜகஜேசுவரர்
அன்பாயியம்மை = சினேகவல்லி
திரு ஆக்கூர் = கஸ்யபுரம்
தான் தோன்றீசர் = சுயம்புநாதர்
வாளரங்கண்ணி = கட்கார நேத்திரி
அழகியர் = சுந்தரேசர்
அழகாம்பிகை = சுந்தராம்பிகை
பூங்குழலம்மை = சுகுந்த குந்தளாம்பிகை
அண்ணாமலையார் = அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை = அபிதகுஜாம்பாள்
திருபெரும்புதூர் = ஸ்ரீபெரும்புதூர்
திருவரங்கம் = ஸ்ரீரங்கம்
இன்னும் எத்தனை எத்தனையோ!
மேலே கொடுக்கப்பட்ட சில பெயர்களிலே, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கும்போது ஏற்படும் இயல்பான உணர்வும், நெகிழ்ச்சியும் வடமொழிப்பெயர்களில் இல்லை என்பது நடுநின்று ஆய்வார்க்கு நன்கு தெரியும்.
ஆனால் அபிதகுஜாம்பாள் என்று அர்ச்சனைக்குச் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்போது உண்ணாமுலையம்மை என்று சொல்லப்போகிறார்கள்?
சிதம்பரம் மறுபடியும் தில்லையாவது எப்போது?
ஸ்ரீரங்கம் மறுபடியும் திருவரங்கமாவது எப்போது?
விருத்தாசலம் முதுகுன்றமாவது எப்போது?
தூங்குகிறவன் தொடையில்தான் கயிறு திரிப்பார்கள் என்பார்கள். அப்படியானால் தமிழர்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்களா?. அடப்பாவமே! இவர்கள் விழிப்படைவது எப்போது?
அதுவரை அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.
தமிழ்ச்சங்கம் கண்ட பெருமானே!
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
( நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம் ).

Re: திருப்பெயர் மோசடிகள்
சாமி wrote:“

நீங்கள் சொல்வது உண்மைதான். ஸ்ரீ என்பதை புனிதம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு திணிக்கப்பட்ட வார்த்தை என்பது நம்மவர்களுக்கு புரியவில்லை.
இந்த நூற்றாண்டிலாவது விடிவு காலம் வரட்டும்.
நன்றி.
சேயோன்- Posts : 55
Join date : 01/03/2012
Re: திருப்பெயர் மோசடிகள்
தமிழன் தன்மானம் காக்கக் கூடிய பதிவிற்கு தலைவணங்குகிறேன்,
நன்றி,
தங்களுக்கு இறையருள் என்னென்றும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,.
நன்றி,
தங்களுக்கு இறையருள் என்னென்றும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,.
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum