இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்

3 posters

Go down

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா?  உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர் Empty பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்

Post by knesaraajan Sun Mar 18, 2012 11:48 pm

நம்ப முடியவில்லை! ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை!!
அந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! போன பிறவியில் நான் யார் என்பதை என்னால் சொல்லமுடிகிறது!! என் சிஷ்யர்களில் ஒருவரான ராஜ்மோகன் மூலமாக அறிமுகமான உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்தான் என்னைப் பிரமிக்கவைத்த அந்த மனிதர். அவரது அற்புத ஆற்றல் பற்றி ராஜ்மோகன் எழுதிய கட்டுரையினை இங்கே பதிவு செய்கிறேன். சவாலைச் சந்திக்கவிரும்புகிறவர்கள் ஜெயச்சந்தரைச் சந்தியுங்களேன்!


பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவாலான பயிற்சிக்கு அழைக்கிறார் சென்னை டாக்டர்.
கேட்பதற்கு கொஞ்சம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.
முற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கிறது என்று சொன்னால் நம்புவோமா? அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன் என்று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல்லை”னு கேட்கத்தோணும் இல்லையா?. ஆனால் முடியும் என்று சவால் விடுகிறார் ஒரு உளவியல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவியில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக்குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதித்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்.
பெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நடத்திவரும் சென்னையை சேர்ந்த இவர்,பூர்வஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ் டேண்டம்-ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகாசத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகிறார்.
பெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் யிற்சி மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப்பார்க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெயச்சந்தர். உடல்முழுவதும் இனம்காணமுடியாத வலி என்கிறார் அவர்.
”எப்போதில் இருந்து”
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”
”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..?”
வந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.
“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ?” ஆச்சர்யமுடன் கேட்கிறார் டாக்டர்.
“ வலி இன்னும் இருக்கிறது…குறையவில்லை…!” வந்தவர் கண்களில் வேதனை தெரிகிறது.
”சரி நாம முயற்சி பண்ணி பார்க்கலாம்..” என்ற டாக்டர் அவரை வசதியாகப் படுக்கச் சொல்கிறார்.கண்களை மூடிக்கொண்டே மூச்சை மட்டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கிறார்.
இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவனைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடினமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
அந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.
காலம் அவரால் சொல்லமுடியவில்லை.
இடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.
அவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்” என்று கேட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்” என்கிறார்.
மனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல்மொழி ஒரு போர்வீரன் மும்முரமாக சண்டையிடும் அசைவுகளைத் தருகிறது.அவரிடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளையிடுகிறார் டாக்டர்.
மேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில் காண்பித்தவராக “ஆ……….!” என்ற அலறுலுடன் கைககளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போல பாவனை செய்கிறார்.
அவரின் முகத்தில் மரணவேதனை தெரிகிறது.கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் “என்ன நடக்கிறது..!” என்று கேட்கிறார்.
“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.
“நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.
”எப்படி இறக்கிறீர்கள்…!”
“ஈட்டியால் குத்தப்பட்டு..”
” இப்போது எங்கு இருக்கிறீர்கள் ”
“கீழே என் உடல் இருக்கிறது….நான் உடலின் மேல் மிதந்துக்கொண்டிருக்கிறேன்…”
“உடல் எப்படி இருக்கிறது”
“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயிரற்று கிடக்கிறது”
இதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிகழ்வுதான் இன்றைய இப்போதைய உடல்வலியாக தொடர்கிறது. இந்த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.
பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில ஆழ் மனக்கட்டளைகளை பிறப்பிக்கிறார்,பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனைகள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக்கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறார். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.
சிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர்.இப்போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.
சிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்ததை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழுவதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.
நமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.இது ஏதேனும் கண்கட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண்டும் பேசுகிறார்.
” என்ன சார்..இன்னும் நம்பிக்கை இல்லையா..? நீங்கள் விரும்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன்…!” என்கிறார்.
கொஞ்சம் யோசனைக்குப் பிறகு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..!” என்று தோன்ற தயாரானேன்.
அதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களைமூடிக்கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.
உள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம் உஷாராகவே எண்களைச் சொல்லி வந்தேன்.
கொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.
உள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரித்தேன்.
நிபுணர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் முதலில் இருந்து எண்ணுமாறு கூறுகிறார்.
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்.
நூறு….
தொண்ணுற்றி ஒன்பது….
தொண்ணுற்றி எட்டு….
தொண்ணுற்றி ஏழு…..
“…………………………………………….”
“…………………………………………….”
“எண்பத்தி ஒன்று….”
“………………………………………………”
“ எ…ழு…ப….த்……”
“அ…று….”
எப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.
சுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…
ஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.
உளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.
” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”
“…………………………………………………………”
“என்னுடன் பேசுங்கள்…பயப்படவேண்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”
“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”
கிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊடுருவ என்னை சுற்றிலும் பார்த்தேன்.
நான் ஒரு விமானத்தில் அமர்ந்து இருந்தேன்.
விமானம் பறந்துகொண்டிருந்து.
பார்பி பொம்மை போன்ற அழகு பணிப்பெண்கள்,முன்னும் பின்னும் நடந்துசென்று பயணிகளுக்கு சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனிகளின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.
எனக்கும்தான்….!
”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.
“ஹும்….!.......எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் ?
”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.
கண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத்திருந்த அந்த வினாடி நேரம்…..

“ டமார்…….”
என் உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமானம் சிதறி…ஒரு பெரும் ஜுவாலையாக கீழே போய்க்கொண்டிருக்க….

நாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..
கடவுளே….! எங்கள் உடல் எங்கே….?
கீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்றுகொண்டிருந்தது.
கடவுளே என் உடல்…..எங்கே?
அந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.
எனக்கு புரிந்து.
நான் இறந்துவிட்டேன். என் விமானம் வெடித்து சிதறிவிட்டது.
என்னைப்போல உடலைத்தொலைத்த நேகா தேவதையும்,இன்னும் பிற தேவதைகளும் இதோ உடலைத்தொலைத்து என்னைப்போல..என்னைப்போல…. மிதந்துகொண்டு…..
எந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்
அழிந்து…வெறும் என்னைப்போல்…..
என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
மேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு வாக்மூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.
“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.
”1978..”
“எந்த இடம் ? “
“அனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இருக்கவேண்டும்…”
சில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல்கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.
நம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..? இல்லை வெறும்….கற்பனையா..?
“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில் தேடி,ஒரு தகவலைக்காட்டுகிறார்,
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
மும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,
”நான் பிறந்த ஆண்டு 1978”
”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…?” டாக்டர் கேட்க
“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”
“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ்வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்…..உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..?
“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினைத்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.
டாக்டர் சிரித்தார்.
”என்ன சார் இன்னும் நம்பலையா ?....உங்களுக்கு உளவியலில் ஆர்வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்.....இதை உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்…..”
இரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.
நம்பிக்கை வந்தது..
புனர்ஜென்மம்…முற்பிறவி என்பது உண்மையே.
இப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வஜென்மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதைகளை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறுகிறார்கள்.
உண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடுவார்கள்.
ஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவுமறைவு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று" விரும்புவர்களுக்கு கற்றுத்தருகிறேன்" என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்.
சென்னையில் முதல் முறையாக வரும் 07.08.2010 மற்றும் 08.08.2010 அன்று “ பூர்வஜென்ம சிகிச்சை” பற்றிய இரண்டு நாள் பயிலரங்கத்தை நடத்துகிறார் திரு.சி.ஜெ.ஜெயச்சந்தர். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்
கைப்பேசி : 09886420936 / 9176952838 / 9551546565
மின்னஞ்சல் : info@basixinc.or
இணையம் : www dot basixinc dot org
- ராஜ்மோகன் (9686444400)

knesaraajan

Posts : 42
Join date : 20/02/2012

Back to top Go down

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா?  உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர் Empty Re: பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்

Post by tmm_raj_ramesh Mon Mar 19, 2012 4:27 pm

தொகுப்பிற்கு நன்றி,

முன் ஜென்மம்
மறு ஜென்மம் என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மை,
எங்கிருந்து வந்தோம் என்பது தான் முன் ஜென்மம்,
எங்கே செல்லப்போகிறோம் என்பது தான் மறு​ஜென்மம்,
முன் ஜென்ம பாவக் கடன்களை அடைத்து புண்ணியத்தை சேர்த்து அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்வோமாக,

நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா?  உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர் Empty Re: பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்

Post by ஹரி ஓம் Mon Mar 19, 2012 4:45 pm

புரியாத புதிர் தான் நாம்... பகிர்வுக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா?  உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர் Empty Re: பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum