இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அஷ்டவர்க்க அதிசயங்கள்.

3 posters

Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by tmm_raj_ramesh Mon Mar 26, 2012 6:51 pm

அனைவருக்கும் 337 மதிப்பெண்கள் தான்.

அனைவரும் சமம் தான். நாடாளும் மன்னன் முதல் கடைக்கோடி மனிதன் வரை அனைவரும் ஜோதிடத்தின் முன் சமம் தான். இறைவன் அனைவருக்கும் சமமாகத் தான் கொடுத்துள்ளான்.



12 பாவங்கள். 27 நட்சத்திரங்கள் 9 கோள்கள் 108 பாதங்கள் இப்படி அனைவருக்கும் சமம் தான். அதேபோல அஷ்டவர்க்க பரல்கள் (மதிப்பெண்கள்) 337 தான். 12 பாவங்களின் மொத்த கூடுதல் தான் இந்த 337 மதிப்பெண்கள். ஆனால் யாராருக்கு எந்த எந்த கட்டத்தில் மதிப்பெண்கள் அதிகம் எதில் குறைவு என்பதில் தான் இறைவனின் சூட்சமம் அடங்கியுள்ளது.



மொத்தம் 337 மதிப்பெண்கள் 12 பாவங்கள் சராசரி 28.



சராசரிக்கு குறைந்த மதிப்பெண் பெற்ற பாவங்கள் குறைந்த பலனையும்

சராசரிக்கு அதிகம் மதிப்பபெண் பெற்ற பாவங்கள் அதிக பலனையும் அளிக்கும்.



மேலும் ஒவ்வொரு பாவங்களும் குறைந்தது எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான அட்டவணை.



முதல் பாவம் - 25

இரண்டாம் பாவம் - 22

மூன்றாம் பாவம் - 29

நான்காம் பாவம் - 24

ஐந்தாம் பாவம் - 25

ஆறாம் பாவம் - 34

ஏழாம் பாவம் - 19

எட்டாம் பாவம் - 24

ஒன்பதாம் பாவம் - 29

பத்தாம் பாவம் - 36

பதினொன்றாம் பாவம் 54

பனிரெண்டாம் பாவம் 16

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by சாமி Mon Mar 26, 2012 7:24 pm

சோதிடம் பற்றிய தங்கள் கட்டுரை நன்றாக உள்ளது. அஞ்சல் வழியில் முறையாக சோதிடம் கற்றுத் தரமுடியுமா?
பதில் வேண்டுகிறேன்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by tmm_raj_ramesh Mon Mar 26, 2012 9:58 pm

நன்றி
தங்களின் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறேன்,
நன்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by Venkatesh A.S Thu Mar 29, 2012 4:09 pm

நண்பரே, முதல் , ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் பாவங்கள் / வீடுகள் தானே ஒருவருக்கு முக்கியமாக கருதப்படுவது. அப்படியானால் அவற்றில் தானே அதிகமான பரல்கள் வேண்டும் ? பதினோன்றில் (என்னதான் லாப ஸ்தானமானாலும் ) அதிகமாகவும், ஏழில் மிகவும் குறைவாகவும் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தயவு செய்து கூற முடியுமா? மேலும் நம்மில் நிறைய பேர் மேலோட்டமாக ஜாதக பலன் சொல்வது ( வெறும் வீடுகள் மற்றும் கிரக பார்வைகள் வைத்து ) எந்த அளவிர்க்கு துல்லியம் இருக்கும்? கிரகங்கள் டிகிரீ முறையில் ( ஒவ்வொரு கிரகத்திர்க்கும் உள்ள பாகை வித்தியாசங்கள் ) தரும் பலன்கள் என்று ஒரு புத்தகத்தில் என்றோ படித்தேன். அதை பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன். மிக்க நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by tmm_raj_ramesh Thu Mar 29, 2012 6:14 pm

நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி வினாக்கள் பிறக்கும் போது தான் தேடல்கள் அதிகமாகி சரியான விடைகள் கிடைக்கும்.



இலாபம் என்பது என்ன?



பத்து ரூபா பொருளை 11ரூபாய்க்கு விற்பதும் இலாபம் தான்.

உடன் வேலை பார்ப்பவரைவிட நமக்கு ஒரு ரூபாய் சம்பளம் அதிகம் கிடைத்தாலும் இலாபம் தான்.

சரியான வயதில் நல்ல மனைவி கிடைத்தாலும் இலாபம் தான்.

பத்தே மாதத்தில் சுகப்பிரசவமாக நல்ல நேரத்தில் பிள்ளையைப் பெறுவதும் இலாபம் தான்.

சுறுக்கமாக இலாபம் என்பது குறைந்த யோகத்தைக் கொண்டு அதிக பயனை அடைவது. இப்பொழுது கூறுங்கள் இலாபத்திற்கு அதிக மதிப்பெண் வேண்டுமல்லவா. அப்படிஇல்லையென்றால் எல்லாத்திற்கும் போராட வேண்டும். 7ம் இடம் மனைவி தான் மனைவி மட்டுமல்ல நண்பர்கள் கூட்டாளிகள் மாரகம் இப்படி எல்லாம் 7ம் இடம் தான். இதில் ஜாதகர் அடுத்தவர்களை நம்பி மட்டுமே அடிஎடுத்து வைக்க முடியும் ஆனால் 11ம் இடம் சிறப்பானால் மட்டுமே உங்களுக்கு இவர்களால் இலாபம். இல்லையேல் இவர்கள் கிடைப்பார்கள் ஆனால் இலாபம் கிடைக்காது.



கோள்கள் நட்சத்திரம் நட்சத்திர பாதம் பார்வைகள் அஷ்டவர்க்கம் சட்பலம் ஆருடம் இவற்றிற்கெல்லாம் மேலாக இறைவனின் அருள் இருந்தால் நல்ல பலன்களை கூறலாம் அதற்கு டிகிரி சுத்தம் தேவையில்லை. நட்சத்திர பாதம் பார்த்தால் மட்டுமே சரியான பதிலைக் கூற முடியும். டிகிரி பார்ப்பது இரு ஜாதகங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது மட்டுமே பயன்படும். மற்றபடி பாதசாரம் மட்டும் கூட போதுமானது.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by Venkatesh A.S Thu Mar 29, 2012 6:51 pm

நண்பருக்கு மறுபடியும் நன்றி, தாங்கள் கூறுவது சரி. ஆனாலும் எனக்கு ஒரு சிறிய நெருடல் உள்ளது. 9 ஆம் வீட்டின் மகத்துவம் தேவை தானே? எல்லாமே லாபமாக இருந்து அவைகளை அனுபவிக்கும் பாக்கியம் வேண்டுமல்லவா? அதே சமயத்தில் சர லக்கினங்களுக்கு 11 ஆம் இடம் பாதக ஸ்தானமல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக சில பேருக்கு ஜாதகம் பார்க்காமலேயே / கோவிலுக்கு செல்லாமலேயே நன்றாக உள்ளார்களே ? அது அவர்கள் செய்த புண்ணியம் என்றால் , இன்று பாவங்களை ( நாம் நன்றாக, வசதியாக இருக்கிறோம் என்கிற மமதையில் ) சம்பாதிக்கிறார்களே ? இது எப்படி நியாயமாகும் ?
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by tmm_raj_ramesh Sun Apr 08, 2012 10:52 am

ஜாதகம் பார்க்காவிட்டால் என்ன ஆகும்.
 
முறையாக முயற்சி செய்யாவிட்டால் எதையெல்லாம் இழந்துவிடுவோமோ அதைஎல்லாம் இழந்துவிடுவோம்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

அஷ்டவர்க்க அதிசயங்கள். Empty Re: அஷ்டவர்க்க அதிசயங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum