இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

3 posters

Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by Dheeran Thu Mar 29, 2012 4:22 pm

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.

’அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)

‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.

தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.

தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.

பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.

அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்

‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’

என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘

என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.

source :
திரு சுப்பு அவர்கள் - tamilhindu.com
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 49
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty Re: சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by tmm_raj_ramesh Fri Mar 30, 2012 4:10 pm

தீரன் ஐயா.



நீங்கள் சொல்லவருவதெல்லாம் சரிதான்.

தமிழன் எல்லா மொழியினருக்கும் எல்லா மதத்தவருக்கும் தன்னுடைய மொழியைக் கொடுத்துவிட்டு அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

கோவில் கருவரை முதல் பாவம் தொலைக்கும் கருமாதி வரை தன் மொழியை இழந்துவிட்டான். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தீரன் ஜயா ஏற்றுக் கொண்டார் என்பதற்காக மாற்று மொழியை ஏற்றுக் கொள்வதற்கு என் போன்றோர் மனதில் இடமில்லை.



தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty Re: சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by Dheeran Mon Apr 23, 2012 5:34 pm

வணக்கம் நண்பரே,

இத்துணை ஆயிரம் ஆண்டுகளாகக் காக்கப்பட்ட தமிழனின் உண்மையான பாரம்பரியம் தற்காலத்தில் மறக்கடிக்கப்பட்டது எனும் நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாமும் முயற்சிசெய்துவருகிறோம்.

தமிழும்,சமஸ்கிருதமும் ஒன்றை ஒன்று மேம்படுத்திவருகின்றன.
தமிழன் தனது கோவில்களையும் வாழ்க்கை நெறிகளையும் நாத்திகர்களிடமும், வேற்றுமதப் பிரச்சாரகர்களின், கைக்கூலிகளிடமும் இழந்துவிடக்கூடாது என்பதே நமது விருப்பமும்.
நன்றி.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 49
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty Re: சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by svelan74 Tue Apr 24, 2012 10:25 am

தீரன் அவர்க்ளே,

அருமையான பதிவுக்கு நன்றி. தோழர் ஜீவாவின் நேர்மையும், மறைமலை அடிகளின் தனித்தமிழ் தகிடுதத்தமும் தெளிவாகிறது.

ஒரே நிறுவனமே பொறியியலாளர்களுக்கு கடினமான கோடிங் உள்ள ஒரு மென்பொருளையும், அலுவலகத்தில் பணிபுரிவோருக்கும், வீட்டிலிருந்து பயன்படுத்துவோருக்குமாக இன்னொரு எளிமையான மென்பொருளையும் உருவாக்குகிறார்களே? ஏன் அப்படி தமிழையும், வடமொழியையும் ஏன் தென்னாட்டைச் சேர்ந்தவனே உருவாக்கியிருக்கக் கூடாது? இன்றளவும் தென்னாட்டைச் சார்ந்தவர்கள் தானே வடமொழியை அழகாக உச்சரிக்கின்றனர்?

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty Re: சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by Dheeran Mon Apr 30, 2012 12:41 am

svelan74 wrote:தீரன் அவர்களே,

அருமையான பதிவுக்கு நன்றி. தோழர் ஜீவாவின் நேர்மையும், மறைமலை அடிகளின் தனித்தமிழ் தகிடுதத்தமும் தெளிவாகிறது.
செந்தில்

கருத்திட்டமைக்காக திரு செந்தில் அவர்களுக்கு எனது நன்றிகள்,

நண்பரே பகுத்தறிவு,மொழிப்பற்று ஆகிய போர்வையில் சிலர் பொய்களையே திரும்ப திரும்ப கூறிவருகின்றனர். ஆயிரம்முறை சொன்னாலும் பொய் உண்மையாகிவிடாது.

பன்னிரு திருமுறைகள் தந்த தமிழ்ச் சான்றோர்களையும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய ஞானிகளையும் முழுமையாகப்படித்தால் அவர்கள் எவ்விடத்தும் சமஸ்கிருதத்தை ஒதுக்கவில்லை என்பது புலனாகும். அவர்கள் அம்மொழியை அன்னியமொழியாகக் கருதவில்லை. நமது அன்றாட உரையாடலிலும் அம்மொழி கலந்துள்ளதை யாவரும் அறிவர்.

//ஆரியனே// என்று சிவபெருமானை சான்றோர்கள் அழைப்பதை பல பதிகங்களில் காணலாம். இதிலிருந்து ஆரியன் என்பது ஒரு இனத்தைக் குறிக்காது என்பதை எவரும் எளிதில் உணரமுடியும்.அவ்வாறிருக்க "ஆரியர்கள் வேற்று இனம் அவர்கள் தமிழரை அழித்தனர்" என்பது போன்ற பொய்களை எத்துனைமுறை மாற்றி,மாற்றி இட்டாலும் அது உண்மையென்று ஒருபோதும் ஆகாது.

அகத்தியர் தமிழ்முனி. ஆனால் அவரையே சிலர் ஆரிய இனத்தான் என்று கூறுகின்றனர். இவர்கள் சிவபெருமானையும் நாளை இப்படித்தான் சொல்லப்போகிறார்கள்.

அகத்தியர் தமிழகம் வந்ததை கடக்கமுடியாத விந்தியமலையை ஆரியர்கள் கடந்ததைக் குறிக்கும் என்று சொந்தக் கற்பனைகதை போடுகிறார்கள். முதலில் வட இந்தியாவில் வாழ்ந்த திராவிடரை ஆரியர் தோற்கடித்துத் தெற்கே துரத்தினர் என்றனர். பிறகு மலையைக் கடக்கமுடியாததால் ஆரியர்கள் தெற்கே வரமுடியவில்லை என்றனர். அனைத்தையும் இழந்து தோற்று ஒடுபவர்களால் கடக்கமுடிந்த மலையை வலிமையுடன் இருக்கும் வெற்றியாளர்களால் கடக்கமுடியாதா என்ன? அகத்தியர்வரும்வரை காத்திருக்கவேண்டியதன் அவசியம் என்ன? பொய்யைக்கூட ஒழுங்காகச் சொல்லத்தெரியாதவர்களுக்காக நாம் வருந்தத்தான் முடியும்.

ஆயினும் பொய்களைமறுத்து உண்மையை நிலைநாட்ட பொறுமையும், விடாமுயற்சியும் தேவைப்படுகிறது நண்பரே என்னசெய்வது நாம் வாழ்வது கலியுகமாயிற்றே...
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 49
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா? Empty Re: சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum