Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நமசிவாய வில் பித்தலாட்டம்
5 posters
Page 1 of 1
நமசிவாய வில் பித்தலாட்டம்
பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.
1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?
नमःशिवाय
இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும். (அதாவது வடமொழி अ, आ, इ, ई, उ, …) (தமிழில் அ, ஆ, இ, ஈ … போல ).
இதை மறைப்பதற்கு அவர்கள் தமிழ் நமசிவாய வை
நம:சிவாய
என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
: இந்த நிறுத்தற்குறியீடு (PUNCTUATION MARK) க்குப் பெயர் முக்காற்புள்ளி (COLON).
(சான்று:-
தமிழ் நிலங்கள் ஐந்து வகை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
இதைப் போன்ற இடங்களில் இந்த நிறுத்தற்குறியீட்டைப் பயன்படுத்துவார்கள்.)
தமிழ் நமசிவாய நடுவில் : எதற்கு?
2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.
(ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள வேத மந்திரங்கள் புத்தகத்தில் உள்ள கீழ்வரும் செய்தியைப் பார்க்கவும்)
விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”
ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

யஜுர் வேதம் 4.5.8.1
“ ஓம் நம சம்பவே ச மயோபவே ச நம சங்கராய ச மயஸ்கராய ச நம சிவாய ச சிவதராய ச ஓம் ”விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”
ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
நல்ல விளக்கம்
தொடரட்டும் உங்கள் தேடல் கிடைக்கட்டும் அனைத்திலும் வெற்றி
நன்றி.
தொடரட்டும் உங்கள் தேடல் கிடைக்கட்டும் அனைத்திலும் வெற்றி
நன்றி.
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
திரு ராஜ்ரமேஷ் அவர்களுக்கு,
திரு சாமி அவர்கள் இதே கருத்தை கீழ்கண்ட வேறோர் பதிவில் இட்டார். கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.
http://www.tamilhindu.net/t2035-topic
அதை மறுத்து சமயச்சான்றோடு சொன்ன கருத்துக்களுக்கு
அங்கே அவர் பதிலிடவில்லை. அவர் முதலில் கூறிய கருத்துக்களுக்கு சான்றுகளும் தரவில்லை. தற்போது அவருடைய தவறான கருத்தை மீண்டும் வேறோரு பதிவிடுகிறார் என்றால் அவர் நோக்கம் தவறானதாக படுகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தில்

svelan74- Posts : 30
Join date : 31/07/2010
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
திரு சாமி அவர்களுக்கு,
தங்களுடைய முந்தைய பதிவில் தமிழில் நமசிவய என்பது தான் பஞ்சாக்ஷரம் என்று சொன்னீர்கள். இங்கே நமசிவாய என்ற தமிழ் பஞ்சாக்ஷரத்திலிருந்ததை வடமொழியாளர்கள் நம: சிவாய என்று மாற்றிவிட்டார்கள் என்று கூறுகிறீர்கள். எது தங்களின் தெளிவான கருத்து? நமசிவய என்பதா இல்லை நமசிவாயவா?
மேலும் தாங்கள் இட்ட பதிவைப் பார்த்துவிட்டு வடமொழி இலக்கணம் அறிந்த ஒரு பெரியவரை கேட்டேன். அவர் ":" என்பது விஸர்கம் எனப்படும்..அது வார்த்தை எண்ணிக்கையை கூட்டாது என்றார். ராமன் என்று நாம் தமிழில் சொல்வது வடமொழியில் ராம: என்று வரும்..எழுத்து எண்ணிக்கைப்படி ராம: என்பது இரண்டு எழுத்து சொல்லாக தான் வரும் என்றார்.
24 எழுத்துக்களை கொண்டது என்று சொல்கின்ற காயத்ரி மந்திரத்திலும் தத்+ஸ+வி து:+வ+ரே+ணி+யம்+பர்+க:+தே+வஸ்+ய+தீ +ம+ஹி+தீ+யோ+யோ +ந: ப்ர+சோ+த+யாத்) இந்த விஸர்கங்களை சேர்க்காமல் தான் 24 எழுத்துக்கள் வரும் என்றும் சான்று கூறினார்.
மேலும் தமிழில் ஆய்த எழுத்தையும், ஒற்றெழுத்துக்களையும் எப்படி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்விதில்லையோ அது போல் ":" என்ற விஸர்கத்தையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றார்.
இதில் மேலும் ஏதாவது தங்களுக்கு ஐயம் இருந்தால் அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்.

svelan74 wrote:

வடமொழி நெடுங்கணக்கில் : என்பது ஓர் எழுத்து. ஒலி அளவில் அதாவது மாத்திரை அளவில் வேண்டுமானால் குறையலாமே தவிர (தமிழில் குறில் நெடில் போல) எழுத்தே இல்லை என்பது ஆகி விடாது.
எவ்வளவோ திரித்து சொல்லியிருக்கிறார்கள். இதை மட்டும் ஏன் திரிக்காமல் விட்டு வைக்க.
எனக்கு ஏதும் ஐயம் இல்லை. காய்தல் உவத்தல் இன்றி எதையும் பாருங்கள். உங்கள் 'பெரியவரையும்' பார்க்கச் சொல்லுங்கள். அது நிச்சயமாக உங்களால் முடியாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்வது என்னுடைய கடமை.நன்றி
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
திரு சாமி அவர்களே,
நமசிவய தான் பஞ்சாக்ஷரம் என்றீர்கள். மறுத்து நமசிவாயவே என்று தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டினேன். அதற்கு எந்த பதிலும் தரவில்லை. இங்கே ":" என்பது ஒர் எழுத்தாக கொள்ளவேண்டும் என்று சொன்னீர்கள். இல்லை என்று வடமொழியில் புலமை பெற்ற ஒருவரிடம் கேட்டு அவர் கூறிய மறுப்பையும், அவர் கொடுத்த காயத்ரி மந்திரம் சார்ந்த சான்றையும் கொடுத்தேன். இப்போது வடமொழி நெடுங்கணக்கில் இப்படி வரும் என்கிறீர்கள். நெடுங்கணக்கில் கூறியுள்ள இடத்தைச் சுட்டி சான்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எல்லாருக்கும் தெளிவு பிறக்கும்.

நமசிவாயவின் போன பதிவிற்கு ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி சாமி அவர்களே
பத்மநாபன்- Posts : 28
Join date : 05/04/2012
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
திரு சாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு ஏதாவது ஆதாரம் தருவீர்கள் என்று இரண்டு நாட்கள் காத்திருந்தேன். தாங்கள் உண்மையை அறியவோ, உணர்த்தவோ இந்த பதிவுகள் இடவில்லை என்பது தெளிவாகின்றது. ஆதலால் தங்களிடம் அறிவார்ந்த சான்றுகளையோ, விவாதத்தையோ எதிர்பார்த்து பலனில்லை. ஆதாரமற்ற விஷயங்களுக்கு நிழல் மனிதர்கள் மூலம் நீங்களே பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திருமூலர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)

svelan74 wrote:திரு சாமி அவர்களுக்கு,
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)
செந்தில்
திருமூலர் பாடலை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே.
தூங்குபவர்களைதான் எழுப்ப முடியும். தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது .
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
புரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு புத்தி வந்தால் சரி
செந்தில்
செந்தில்
svelan74- Posts : 30
Join date : 31/07/2010
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
கவலைப்படாதீர்கள்!svelan74 wrote:புரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு புத்தி வந்தால் சரி
செந்தில்
கடவுள் உங்களுக்கு உறுதியாக புத்தியைக் கொடுப்பார்.
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
ஆம்..நீங்கள் கூறுவது சரி. நல்ல புத்தியை கொடுத்து விட்டார்...!
ஆதாரமற்ற மற்றும் ஆராய்ச்சியற்ற செய்திகளைப் பரப்பி, எழுப்பப்படும் நியாயமான கேள்விகளுக்கும் விடையளிக்காத மூடருக்காக பொன்னான நேரத்தை விரயம் செய்யாதே என்று.
செந்தில்
ஆதாரமற்ற மற்றும் ஆராய்ச்சியற்ற செய்திகளைப் பரப்பி, எழுப்பப்படும் நியாயமான கேள்விகளுக்கும் விடையளிக்காத மூடருக்காக பொன்னான நேரத்தை விரயம் செய்யாதே என்று.
செந்தில்
svelan74- Posts : 30
Join date : 31/07/2010
Re: நமசிவாய வில் பித்தலாட்டம்
சாமி wrote:பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது.
ஆதாரப்பூர்வமான கட்டுரை. நன்றி சாமி
சேயோன்- Posts : 55
Join date : 01/03/2012

» விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்
» தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான ஓம் நமசிவாய டிவி தொடர் மீண்டும் தமிழில்
» நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்திரசேகரர்
» நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum