Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி .யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!
ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.
வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :
அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)
திருக்குறள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
மனுஸ்மிருதி
இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே
பொருள்
பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.
மனுஸ்மிருதி
சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச
பொருள்
சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.
மனுஸ்மிருதி
கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்
ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.
திருக்குறள்
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
உரை
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை – 57
மனுஸ்மிருதி-9 : 12
பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை
வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)
-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை
இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழராகத் தெரிகிறார் போலும். MAY GOD BLESS YOU.

Re: கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
நீங்கள் ஆரியர்கள் ஒரு இனம் அல்ல என்றும்,தமிழர்கள் மதம் வேதமதமே என்றும் பலகட்டுரைகள்மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.
எனினும் இன்று பலர் தமிழர் மதம் இந்துமதம் அல்ல என்றும், வேதங்களும் சமஸ்கிருதமும் தமிழருக்கு எதிரானவை, தமிழர் கொள்கைக்கு எதிரானவை என்றும் கூறி அதற்கு ஆதரவாக வள்ளலாறையும் மேற்கோளாகக் காட்டி உள்ளனர். இவற்றிற்கு தங்களது விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி.

Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Re: கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
தண்டாயுதபாணி wrote:நீங்கள் ஆரியர்கள் ஒரு இனம் அல்ல என்றும்,தமிழர்கள் மதம் வேதமதமே என்றும் பலகட்டுரைகள்மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.
எனினும் இன்று பலர் தமிழர் மதம் இந்துமதம் அல்ல என்றும், வேதங்களும் சமஸ்கிருதமும் தமிழருக்கு எதிரானவை, தமிழர் கொள்கைக்கு எதிரானவை என்றும் கூறி அதற்கு ஆதரவாக வள்ளலாறையும் மேற்கோளாகக் காட்டி உள்ளனர். இவற்றிற்கு தங்களது விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி.
வணக்கம் நண்பர்களே!
திரு. தண்டாயுதபாணி அவர்களுக்குத் தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிப்பு கோருகிறேன்.
இப்பொழுது நமது கருத்துக்கு வருவோம்.
1. முதலில் இன்று நடைமுறையில் உள்ள இந்திய இனங்கள் பற்றிய நவீன கோட்பாடுகள் முழுமையடையாதவை,
2." ஆரிய இனம்" எனும் கோட்பாட்டை முன் வைத்தவர்கள் (மாக்ஸ்முல்லர் போன்றோர்) முதலில் ஆரியப் படையெடுப்பு என்றனர்,பின்னர் அதை அவர்களே மாற்றி ஆரியர் குடியேற்றம் என்றனர் பிறகு ஆரியக்கலப்பு என்று முடித்தனர். இவற்றை எனது மற்றபதிவுகளில் ஆய்வுக்கட்டுரைகளுக்கான லிங்க் குகளுடன் தெரிவித்துள்ளேன். ஆகவே ஆரியர் தமிழரான திராவிடரை வென்று அவர்தம் மொழி பழக்கவழக்கம் ஆகியவற்றை நம்மீது திணித்தனர் என்பது சுத்த அபத்தம் என்பது உறுதியாகிறது. ஆகவே சம்ஸ்கிருதம் நம்மேல் திணிக்கப்பட்ட மொழி அல்ல.
3. சமஸ்கிருதம் நம்மீது திணிக்கப்படவில்லை அது பாரத புண்ணிய பூமிக்கு பொதுவானமொழி என்பது உறுதியானதும் , பிழைப்புக்கு மொழியைப்பயன்படுத்துவோரும், அரசியலுக்கு மொழிவெறியைப் பயன்படுத்த விரும்பியோரும், மதத்தை அரசியல் அதிகாரம் மற்றும் பகட்டு வாழ்க்கைக்கு கருவியாக்க முயன்ற கிருத்துவ மதத்தின் போதகர்களும், மாற்றுவழியை ஆராய முற்பட்டனர்.
அந்த மாற்றுவழிதான் தமிழர்கள்தான் சிவனைக் கண்டுபிடித்தனர், சைவத்தை உருவாக்கியது தமிழர்கள், வேதங்கள் தமிழரைப்பார்த்து காப்பியடித்தவை, என்பன போன்ற வாதங்கள்.
இந்த வாதங்கள் ஒருவகையில் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம், ஆம், நமது பார்வை, இந்தியாவிலிருக்கும் இந்தோ-ஆரியன், மற்றும் திராவிடன், என்று நவீன ஆய்வாளர்கள் எனப்படுவோரால் அழைக்கப்படும் நாம் அனைவரும் ஆதியில் ஒரே இனமாகத்தான் இருந்தோம் எனும் அடிப்படை உண்மையின் வழியில் செல்லுமானால் இவை உண்மைகளே!
மாறாக இது வேங்கடத்துக்குத் தெற்கே இருக்கும் நிலப்பகுதியில் வாழ்ந்த ஒரு தனிப்பட்ட சிறு இனக்குழுவாகத் தமிழரைக் குறுக்கி, சைவமும், ஞானமும் அவர்களது தனிப்பட்ட கண்டுபிடிப்பு எ ன் று சொன்னால் அது கெடுமதியாளரின் கலகமேயன்றி வேறல்ல.
குழப்பத்தை ஏற்படுத்தி மக்களைப் பிரித்து ஆதாயமடையவேண்டுமென்றால் ஒன்று தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் அல்லது தான்மட்டுமே பெரியவன் எனும் ஆணவத்தை ஏற்படுத்தவேண்டும், ஹிட்லர் ஆணவத்தைத்தூண்டி அவனது இனத்தை துன்பத்தில் தள்ளினான், இன்றைய தமிழ்க்காவலர்கள் என்போர் தாழ்வுமனப்பான்மை, ஆணவம் இரண்டையுமே ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்தம் விடாமுயற்சியால் ஈழத்தில் தமிழரை அழித்தாயிற்று, இனி இந்திய தமிழன்தானே பாக்கி.
இந்த உண்மைகளை விளக்கிப் பலபதிவுகள் இட்டாயிற்று, என்னசெய்ய குழப்பவாதத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
4. தனித்தமிழ் வேண்டுவோர் என்போர், முதலில் திருமூலரை இழுத்தனர், பின்னர் சைவசமயம் தழைக்கவந்த நால்வரை இழுத்தனர் , புறநானூரை மேற்கோள் காட்டினர், பின்னர் உலகின் ஒரே திராவிடரான வீரமணியை மேற்கோள் காட்டினர் , யார் யாரையோ இழுத்து முடியாமல் இப்பொழுது வள்ளலாரையும் இழுத்துவிட்டு விட்டனர் .
பரவாயில்லை வீரமணி பின்னால் போவதைவிட வள்ளலார் வழியில் சென்றால் இவர்களுக்குப் புண்ணியமாவது கிடைக்கும்.
வள்ளளாரை மொழிப் பிரச்சினைக்குள் இழுக்கும் முன்னர் அவரைப்பற்றி சிறிது நாம் அறிந்துகொள்வது நலம்.
- வள்ளலார் சொன்னது புதிய சமயம்
- அவர் உருவ வழிபாடு, சடங்குகள், ஆகியவற்றை நீக்கி கொல்லாமையை போதித்தார்.
- அவரது மதத்தில் வேள்விகளுக்கு இடமில்லை ( அது தமிழ்முறை வேள்வியானாலும்)
- அவர் 63 நாயன்மார்களையும் தத்துவம் என்றே சொன்னார். அவர்களை மனிதர்களாக ஏற்கவில்லை.
ஆனால் தனித்தமிழர் வேண்டுவது , புதிதாக இவர்கள் உருவாக்கும் தனித் தமிழ் வேதம், தமிழ்ச்சைவம்,தமிழ் ஆகமம், தமிழ் வேள்வி, தமிழ்ச் சடங்கு.
இவை எதையும் வள்ளலார் ஏற்கவில்லை. அவர் தம்மை சைவர் அல்ல என்றே அறிவிக்கிறார்.
நாம் விரும்புவது, நால்வர் முதலிய ஆன்றோர் காட்டிய வேத ஞானம், அவர் கைக்கொண்ட வாழ்வியல் நெறி. அதுவே உண்மைச் சைவம். அது நம் முன்னோர்கள் வகுத்த வேத சமயங்களான ஆறு சமயங்களுள் ஒன்று. அவற்றிற்கு ஆதாரம் , தேவாரம், திருவாசகம், திருமந்திரம், இன்னும் பல.
ஆக சைவத்தை ஏற்காத வள்ளலார், சடங்குகளை ஏற்காத வள்ளலார் சைவ சடங்குகளுக்கும் வேள்விகளுக்கும் சமஸ்கிருதத்தைவிட தமிழ் சிறந்தது எனக்கூற வழியே இல்லை.
தனித்தமிழ் வேண்டுவோர் சிவாலயங்களில் சமஸ்கிருதம் ஆகாது என்றும் சடங்குகளில் சமஸ்கிருதத்துக்குபதில் தமிழ் மந்திரம் வேண்டும் என்போராவார்.ஆகவே சைவ நிலையங்களில் எம்மொழி பயன்படுத்தப்படவேண்டும் எனும் வாதத்துக்கு வள்ளலாரை மேற்கோள்காட்டுவது பொருத்தமற்றவாதமாகும்.
வள்ளலார் வாழ்வியலை எளிமைப்படுத்த விரும்பினார். அவர்பெற்ற ஞானத்தை போதித்தார். அது சன்மார்க்கிகளுக்கு சரி. அதை சைவர்களோ மற்ற வைதீக மதத்தினரோ கடைபிடிக்க வேண்டியதில்லை. அதேபோல் எந்த ஒரு ஹிந்துவும் சன்மார்க்கியாகவும் எந்தத்தடையும் இல்லை.
தமிழருக்கு தமிழகத்தில் அன்றாட வாழ்வில்பயன்படுத்த சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் சிறந்தது. நாம் தமிழில்தானே பேசுகிறோம் சமஸ்கிருதத்தில் அல்லவே. அதேபோல் ஒருவர் நல்ல சைவராக, வைணவராக ஹிந்துவாக இருக்க சமஸ்கிருதம் கற்றே ஆகவேண்டும் என நம் முன்னோர்கள் அல்லது ஆன்மிக பெரியோர்கள் யாரும் கூறவும் இல்லையே.
ஒரு ஹிந்து உயர்ந்த ஆன்மிக ஞானம் பெற முயலும்போது அதற்கு சமஸ்கிருதம் அவசியமாகிறது. இறை பற்றிய கோட்பாடுகள் உயரிய சிந்தனைகள் அம்மொழியில் உள்ளன. நமது மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் வேதங்கள் அம்மொழியில் உள்ளன.
ஆகவே அவற்றை மறவாதிருக்கவும், முன்னோர்களுடனான நமது தொடர்பும், பல்வேறு மொழி பேசும் ஒரே இனத்தோன்றல்களான ஒரேமதத்தைக்கடைபிடிக்கும் பல்வேறுபட்ட மக்களுக்குள் இருக்கவேண்டிய இணைப்பும் தொடர்ச்சியும் அறுபடாமல் இருப்பதற்கும் வழிபாட்டுதளங்களிலும் சடங்குகளிலும் அவர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதும், ஆன்மிகத்தில் மேன்மையும் விசாலமான அறிவும் வேண்டுவோர் சமஸ்கிருதம் கற்பதும் அவசியமாகும்.
நன்றி.
Re: கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
வணக்கம்,
பதிலுக்கு நன்றி தீரன்அய்யா.
பதிலுக்கு நன்றி தீரன்அய்யா.
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Re: கைக்கொண்ட அறத்தாலும் தமிழன் ஆரியனே!
தமிழர், ஆரியர் பாகுபாடுபற்றி விரிவாக ஆராயும் முதன்மைக்கட்டுரையும், பதில்களும் அற்புதம் . அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Similar topics
» நான் தமிழன்
» தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்
» தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)
» தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்
» தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum