Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
ARIVOM ARTHA SASTHIRAM -அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில்சாணக்கியர்மிக முக்கியமானவர். இவர் சந்திரகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மொத்தம் பதினேழு அத்தியாயங்களும், முன்னூறுக்கு மேற்பட்ட ஸ்லோகங்களும் கொண்டது. இந்த அற்புத நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தில் இருந்து சில முக்கிய அறிவுரைகளை இத்தொடரில் படிப்போம்.
முதல் அத்தியாயம்:
1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.
2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.
3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும். பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது.
5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.
6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன், வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.
7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்கும், தவறு செய்வதற்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்கும் செல்ல மாட்டான்.
8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.
10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.
தொடரும்

sadasivam- Posts : 11
Join date : 18/12/2011
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
தங்கள் ஊக்கத்துக்கு நன்றி
sadasivam- Posts : 11
Join date : 18/12/2011
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
இரண்டாம் அத்தியாயம்:
1. எவன் ஒருவனுக்கு அவனது சொல்படி நடக்கும் மகன் இருக்கிறானோ, விருப்பத்தை உணர்ந்து நடக்கும் மனைவி இருக்கிறாளோ, ஏவல் செய்யும் முன் வேலை செய்யும் வேலைகாரன் இருக்கிறானோ அவனுக்கு அவனது வீடே சொர்க்கமாகும்.
2. உங்கள் முன் இனிமையாக பேசி பின், புறம் கூறுபவர்களை நம்ப வேண்டாம், அது மேலே பாலும் உள்ள விஷமும் உள்ளது போன்றது.
3. கீழான நட்புடன் சேர வேண்டாம், மேலோட்டமாக பழகும் நண்பனையும் நம்பவேண்டாம்.ஏனென்றால் இவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நம்மை பற்றிய ரகசியங்களை வெளியிட தயங்க மாட்டார்கள்
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
5. அறியுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயுலும் வாய்ப்பை தேடித் தருவான்.
6. ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
7. மனைவியிடம் இருந்து பிரிந்து இருத்தல், தன் இனத்தாரை சாராத்திருத்தல், போரில் தப்பிய எதிரி, கொடுங்கோலனிடம் வேலை செய்தல், வறுமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகிய ஆறில் ஒன்று இருந்தாலும் அதில் உள்ளவனை அது தீ இல்லாமல் சுடும்.
8. ஆறின் கரையோரம் உள்ள மரம், அடுத்த வீட்டில் உள்ள மனையாள், ஆலோசகர் இல்லாத அரசர் இவை உறுதியாக அழிந்து போகும் விஷயங்கள்.
9. சமஅளவில் உள்ளவர்களிடம் ஏற்படும் நட்பு நிலையாக இருக்கும்,மன்னனின் கீழ் செய்யும் வேலை மரியாதைக்குரியது. பொது இடங்களில் சற்று வியாபார நோக்குடன் இருப்பது நலம், அழகான பெண் அவளது வீட்டில் பாதுகாப்பாக இருப்பாள்.
10. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காத பெற்றோர் அவர்களுக்கு எதிரி ஆவார்.
11. பல கெட்ட பழக்கங்கள் அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பதால் விளைகிறது. நல்ல பழக்கங்கள் முறையான கண்டிப்பால் வளர்கிறது. ஆதலால் உங்கள் குழந்தைகளையோ, மாணவர்களையோ தேவையான நேரத்தில் கண்டியுங்கள்.

மூன்றாம் அத்தியாயம்
1. இந்த உலகத்தில் எவர் ஒருவருமே நிரந்தரமாக இன்பத்தில் இருப்பதில்லை, நிரந்தரமாக துக்கத்தில் இருப்பதில்லை.
2. முட்டாளுடன் சேர வேண்டாம், அவன் இரண்டு கால் மிருகத்தை போன்றவன். அவனுடைய ஒவ்வொரு செயலும் நமக்கு துன்பத்தை விளைவிக்கும்.
3. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
4. ஒரு குடும்பத்தை காக்க ஒருவனை இழக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டை காக்க ஒரு கிராமத்தை இழக்கலாம்.
5. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

நான்காம் அத்தியாயம்
1. ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.
2. உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள், உங்கள் ஆத்மா மேண்ணை அடைய வேண்டிய செயல்களை செய்யுங்கள். ஏனென்றால் மரணத்தின் நெருக்கத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?
3. கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
4. ஒரு நல்ல மகனே குடும்பத்திருக்கு வேண்டும், பயன் அற்ற பல பிள்ளைகளை பெறுவதை விட ஒரு நல்ல மகன் இருக்க வேண்டும். வானத்தில் ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் ஒளி வீசுவது சந்திரன் மட்டுமே.
5. துக்கத்தை தீர்க்க மூன்று விஷயங்கள் உதவும், தமது சந்ததியினர், மனைவி, கடவுள் சேவை.
6. இறைவழிபாடு ஒருவராக செய்ய வேண்டும், கற்பது இரண்டு பேராக, பாடுவது மூவராக, பயணம் செய்யும் பொது நால்வராக, விவசாயம் செய்யும் பொது ஐவராக, போரில் பலர் சேர்த்து, செய்வது வெற்றியை தேடித் தரும்.
7. அடிக்கடி பிரயாணம் செய்வது ஆணுக்கு வயது முதிர்ச்சியை தரும், ஒரே இடத்தில் கட்டி வைத்தால் குதிரைக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், கணவனுடன் தாம்பத்தியம் இல்லையென்றால் பெண்ணுக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், தங்க நகைகள் வெயிலில் வைத்தால் பழையன ஆகி விடும்.
8. சரியான நேரம், சரியான வருமானம், சரியான செலவு, சரியான நண்பர்கள், சரியான இடம் ஒருவனுக்கு சக்தியை தரும்.
9. கடவுள் பக்தி இல்லாத நபரும், அறிவு இல்லாத குருவும், அன்பு இல்லாத மனைவியும், அக்கறை இல்லாத உறவினர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை ஆகும்.
10. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ
இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.
11.குழந்தை இல்லாத வீடு வெறுமையாக இருக்கும், உறவினர் இல்லாதவனுக்கு எல்லாத் திசையும் வெறுமையாக இருக்கும், முட்டாளின் இதயம் வெறுமையாக இருக்கும், ஆனால் வறுமையில் வாடுபவனுக்கு எல்லாமே வெறுமையாக இருக்கும்.

» அறிவோம் ஆயிரம்..
» இந்து மத வரலாற்று தொடர் - 1
» இந்து மத வரலாற்று தொடர் - 2
» தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான ஓம் நமசிவாய டிவி தொடர் மீண்டும் தமிழில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum