இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கருவூரார்

2 posters

Go down

கருவூரார் Empty கருவூரார்

Post by ஹரி ஓம் Sat Jul 28, 2012 4:56 pm


கருவூரார் TN_120821000000

என்ன கருவூராரைக் காணவில்லையா ? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். கருவூரா! மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒவ்வொரு மனிதனும் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் சோவை செய்வதற்காக படைக்கப்பட்டவளே ! சேவையில் நீ கடவுளைக் காணலாம். பராசக்தியை நீ வழிபடு. வாழ்க்கை பற்றிய அரிய ஞானத்தைப் பெறுவாய், என ஆசிர்வதித்தார். பல காலமாக தொண்டு செய்து வந்தார் கருவூரார். இந்நிலையில், வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் , ஒருமுறை தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தண்ணீருக்குள் கண்டான். பெரும் பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. ஆனால், சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை விட்டு அகல மறுத்தது.

எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால், அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான். சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, நான் கண்ட காட்சியைக்ஞூ கூறி, நடன சிவன் சிலை வடிக்க வேண்டுமென்றும், அதற்கு 48 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதாகவும் உத்தரவு போட்டுவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைப்பதனால் செம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். மன்னனோ, எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும், என்ன வித்தை செய்தேனும், தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஏதோ ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டன. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவான் ! அவன் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது ! சிறையில் அடைத்து விடுவானே சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து, சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா ! நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைøப் பணியை முடித்துக் கொடு, என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில், சிற்பிகள் முன்பு ஒரு துறவியின் வேடத்தில் போய் நின்றார். சிற்பிகளே ! உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில் (சுமார் முக்கால் மணி நேரம்) சிலையை நான் தயார் செய்து விடுகிறேன். துறவியே ! நீர் யாரோ எவரோ ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து முடிக்க முடியாததை உம்மால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும் ? நீர் எங்களைக் கேலி செய்கிறீரா ? இல்லை... உமக்கு மாயமந்திரங்கள் தெரியுமா ? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துவது அடியாரான உமக்கு அழகாகுமோ ? என கோபமாகக் கேட்டனர்.

அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவர் என்பது அந்த சித்தாந்திக்கு தெரியாதா என்ன ! அவர் தன் வாதத்தில் உறுதியாக இருந்தார்.என்னதான் நடக்கிறதென பார்ப்போமே என சிற்பிகளும் தலையாட்டினர். கருவூரார் அறைக்கும் சென்றார். யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். அது மிகுந்த பாதுகாப்பு மிக்க இடம் என்பதால், தங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வேறு வழியில் செல்லவே வழியில்லை என்பதால் அதற்கும் சிற்பிகள் சம்மதித்தனர். சொன்னபடி இரண்டே நாழிகையில் அறைக்கதவு திறந்தது. சிற்பிகளே ! உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது, என்றார் சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தனர். ஜெலித்தார் நடராஜப் பெருமான். ஆஹா... இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே, என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும், தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ, அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை வானளவு பாராட்டினான். அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். அமைச்சரே ! நீர் சொல்வதும் சரிதான் ! அப்படியே செய்து பாரும் என்றான் இரணியவர்மன்.

அமைச்சர் அறைக்குள் சென்றாள், தங்கத்தை பரிசேதிக்கும் அதிகாரியை அழைத்தார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம், அரசே ! இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது, என்றார். அமைச்சர் கொதித்துப்போனார். அரசரிடம் ஓடிவந்தார். இரணிய ராஜ மகாபிரபு ! தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை வேண்டும் என்ற உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள், தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். அவர்களது உடல் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. இந்த துறவியை நம்பி மோசம் போனோமே ! முழுமையான தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற கட்டளையை இவன் மீறியதால் தானே, நமக்கு வினை வந்து சேர்ந்தது என யோசித்தவர்கள், மன்னரின் காலடியில் விழுந்தனர். மகாபிரபோ ! தவறு நடந்து விட்டது. நாங்கள், இதோ நிற்கிறானே ! இந்தத் துறவியை நம்பிமோசம் போனோம். பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பலநாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் கூட எங்களுக்கு உயிர்ப்பிச்சை தந்திருப்பீர்கள். ஆனால், கடைசி நேரத்தில் வந்த இவன், சில நாழிகைகளுக்குள் சிலைப்பணியை முடித்து விட்டான். அதுகண்டு, நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள், என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.

துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள், என்றான். எல்லாச்சிற்பிகளும் கைகூப்பி தில்லையம்பலத்தானை வணங்கி, அன்புக்கடலே ! அருள்வடிவே ! நீ எல்லாம் அறிவாய். உண்மை விரைவில் வெளிப்பட வேண்டும். சாவுக்கு நாங்கள் கலங்கவில்லை. ஆனால், திருடர்கள் என்று களங்கம் எங்கள் பரம்பரையைச் சாரும் வகையில் எங்களைக் கொன்று விடாதே, என்று பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் ஞான அறிவுக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணிய ராஜன். ராஜா! என்ன நினைத்து என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ, இப்படிப்பட்ட முட்டாள்தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் ! இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல், தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே ! அவனை உடனே வெளியே அனுப்பு. நான் போக சித்தர். இப்போதாவது புரிந்து கொண்டாயா? என்றதும், இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சித்தர் கருவூராரும் அதையே செய்யவே இப்படி செய்து விட்டேன், என்றான். சரி... சரி... இப்போதே என் பக்தனை விடுதலை செய், என்று அவர் கூறவும், ஆணைகள் பறந்தன. காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர். போகர் இன்னும் கோபமானார்.

இரணியராஜா ! விளையாடுகிறாயா ? கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் ! அந்த சிலையை தூக்கி இந்தத் தராசில் வை. அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன், என்றனர் சீடர்களை பார்க்க, அவர்கள் சிலையை எடுத்து தராசில் வைத்தனர். நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை வைத்தார் போகர். உம்... இதோ நீ விரும்பும் தங்கம், எடுத்துக் கொள், என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு, என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பலத்தானை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் மனமிரங்கினார். இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறாள். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான், என்றார். பின்னர், கருவூரா வெளியே வா, என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார், குருவே ! தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன், என்றார். பின்னர் போகர் மன்னனிடம், நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை, கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார். பின்னர் கருவூரார் தனித்தே பல தலங்களுக்கு சென்றார். ஒருநான் ஒரு காகம் அவர் முன்னால் ஒலைச்சுவடியைப் போட்டது. அதைப் பிரித்து படித்தார் கருவூரார்.

அந்த ஓலையை குருநாதர் போகர் அனுப்பியிருந்தார். அதில், கருவூரா! உடனே தஞ்சாவூருக்குச் செல் அங்குள்ள கோயிலில் சிவலிங்கத்தை நிலைநிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, என எழுதப்பட்டிருக்கறது. கருவூராரும் தஞ்சாவூர் சென்றடைந்தார். கோயிலுக்குள் சென்று கருவறையை அடைந்தார். அங்கே திருப்படி முடிந்து, லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் பயங்கர சிரிப்பொலி கருவூராரின் காதில் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தபோது, ஒரு ராட்சஷி அங்கு நிற்பது கருவூராரின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. பக்திமார்க்கம் தழைப்பதை விரும்பாத அந்த ராட்சஷியைக் கொண்டு சிவபெருமான் ஏதோ ஒரு நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த கருவூரார், உடனடியாக அவளை நோக்கி, ஏ பூதமே ! ஒழிந்து போ, என்று அøõ நோக்கி உமிழ்ந்தார். அவரது எச்சில் அனலாய் மாறி அவளைத் தகித்தது. அவள் சாம்பலாகி விட்டாள். பக்தர்கள், கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால், என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பரதிஷ்டை செய்யுங்கள், என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய, லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும், அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி, கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். ஒருமுறை தான் பிறந்த கருவூருக்கு அவர் சென்றார். அவ்வூர் மக்களில் பெரும்பகுதியினர் அவரது மகிமையை உணர்ந்து கொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தினர். அவர் நிகழ்த்திய அற்புதங்களை சித்துவேலை என்று குற்றம் சாட்டினர். கருவூரார் மனம் வருந்திய போது போகர் அங்கு தோன்றினார். சீடனே ! கவலை கொள்ளாதே. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் பிறரது சொல்லடிக்காக வருத்தும் கொள்ளக்கூடாது. அவர்கள் நம்மைத் தூற்றினாலும், நாம் அவர்களது நன்மை கருதியே செயல்பட வேண்டும். மனம் தளராமல் உன் கடமைகளைச் செய், என்றார். குருவின் இந்த போதனையை ஏற்ற கருவூரார் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், நீங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். போனால் கிடைக்காதது காலம் மட்டுமே ! உங்களைத் தேடி எமதர்மன் எந்த நேரமும் வந்தது விடுவான். அதற்கும் வந்து கடமையை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலைக் காக்க கல்ப சாதனை செய்யுங்கள் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். செல்வம்.... செல்வம் என அலையாதீர்கள். சம்பாதிக்க மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை. அப்படி சம்பாதிப்பதில் பயனும் இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுடன் வரப்போவதில்லை. அம்பாள் மட்டுமே நிலையான செல்வம், என் போதிப்பார்.

இதை ஒரு சாரார் மட்டுமே ஏற்றுக்கொண்டார். பெரும்பாலானவர்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். இந்த சாமியார் வேண்டாததை எல்லாம் மக்களிடம் சொல்கிறான். மக்களை சோம்பேறியாக்கப் பார்க்கிறான். உழைத்தால் தானே அந்த அம்பாளுக்கு கூட பூஜை செய்ய முடியும் ? வெறும் கை முழம் போடுமா ? சரியான வேஷக்காரன், என்றெல்லாம் திட்டித்தீர்த்தனர். ஆனால், போகரின் அறிவுரை தந்த மனஉறுதியால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. தனது மகிமையை நிரூபிக்க அவர் சில அதிசயங்களைச் செய்து காட்ட வேண்டியாதியிற்று. ஒரு கோடைகாலத்தில் மழை பெய்யச் செய்தார். அவ்வூர் அம்மன் கோயில் கதவைத் தானாகத் திறக்கச் செய்தார். இதையும், சித்து வேலை என்றே அவ்வூர் மக்கள் கூறவே, அவர்களைத் திருத்த முடியாது எனக்கருதிய கருவூரார், சில காலம் மட்டும் கருவூரில் தங்கியிருந்து விட்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். மக்களிடம் எவ்வளவோ எடுத்துக்சொல்லியும் அவர்கள் ஆன்மிகத்தின் பக்கம் வர மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்தை அம்பாளிடமே அவர் சொல்லி அழுதார். இதன் பிறகு அவர் திருக்கூருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அவ்வூர் பக்தர்களின் கனவில் தோன்றிய நாராயணன், தன் பக்தன் அங்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அவர்கள் ஊர் எல்லையில் கருவூராரை வரவேற்ற போது, பெருமாளின் லீலையால் தனக்கு கிடைத்த வரவேற்பை எண்ணி கருவூரார் பெருமைப்பட்டார். பின்னர் அவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று, சுவாமியின் பெரைச் சொல்லி இங்கே வா என மூன்று முறை அழைத்தார். நெல்லையப்பர் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், இவ்வூரில் இனிநெல் முறைக்ககூடாது, எருக்கஞ்செடி முளைக்கட்டும் என சாபமிட்டு விட்டு, அருகிலுள்ள மானூருக்கு சென்று விட்டார். தன் பக்தனை அதற்கும் மேலாக சோதிக்க விரும்பாத நெல்லையப்பர், அவரை நேரில் சென்று கோயிலுக்கு அழைத்து வந்தார். அவர் அங்கே வந்ததும் எருக்கங்காடு மறைந்து, வயல்களில் மறைந்திருந்த நெற்கதிர் வெளிப்பட்டது. பின்னர் கருவூரார் திருப்புடைமருதூர் என்ற தலத்திற்கு சென்றார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அங்கு நின்றபடியே நாறும்பூ நாதா என்று சுவாமியின் பெயரைச் சொல்லி அழைத்தார். லிங்கள் சற்றே சாய்ந்து, அவரது இரலைக் கேட்டது. இப்போதும் இவ்வூர் லிங்கம் கருவறையில் சாய்ந்துள்ளது இறிப்பிடத்தக்கது. அதே ஊரிலுள்ள கஜேந்திர வரதப்பெருமாளையும் அவர் தரிசித்தார். பின்னர் திருச்சி அருகிலுள்ள திருவானைக்கவலுக்குச் சென்றார். அங்கே ஒரு பெண் இவரது வாழ்வில் குறுக்கிட்டாள்.

அவளது பெயர் அரபஞ்சி. அவள் ஒரு பொதுமாது. தனது இல்லத்திற்கு வரும்படி அவள், கருவூராரை அழைத்தான். மக்கள் செய்யும் தொழிலை மகான்கள் பார்ப்பதில்லை. எல்லோரையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பார்கள். சிறந்த தொழில் செய்யும் அனைவருமே நல்லவர்கள் என சொல்வதற்கில்லை. அதுபோல மோசமான தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அரபஞ்சியும் அந்த ரகம்தான். அவளது தொழில் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமான் மீது அவளுக்கு அளவு கடந்த பக்தி உண்டு. தங்கள் ஊருக்கு வரும் அடியவர்கள் தனது வீட்டிற்கு வர மாட்டார்களா என அவள் ஏங்குவாள். ஆனால், பொதுமாது தொழிலைச் செய்யும் பெண்ணின் வீட்டிற்கு யார்தான் வருவார்கள் ? கருவூராரோ அவளது இல்லத்திற்கு வர சம்மதித்தார். அவள் ஆனந்தக் கூத்தாடினாள். தனது இல்லத்தை மெழுகி, ரங்கநாதரின் படத்திற்கு தூபதீபம் காட்டி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பகல் முழுவதும் அவர் வரவில்லை. இரவாகி விட்டது. அரபஞ்சி மிகவும் சோர்ந்து போனாள். சித்தர் தன்னை ஏமாற்றிவிட்டாரோ அல்லது இரவுப்பொழுதில் அவரது ஒரு சாதாரண மனிதரைப் போல, தன்னிடம் நடந்து கொள்வாரோ என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தான். அவள் நினைத்தது போல, இரவு வெகுநேரம் கழித்து சித்தர் அவளது வீட்டிற்கு வந்தார். அவளுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்களது பேச்சில் ஆன்மிகத்தை தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. விடிய, விடிய ஒரு மோசமான அனுபவத்தைச் சந்தித்த அரபஞ்சிக்கு அன்றைய இரவு நல்லிரவாக கழிந்தது. விடியும் வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கருவூரார் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினார். அப்போது ஒரு நவரத்தின மாலையை வரவழைத்து அவளுக்கு கொடுத்தார். அதை அன்புடன் பெற்றுக்கொண்ட அவள், நீராடிவிட்டு ரங்கநாதர் முன்னால் வைத்து வணங்கி அணிந்து கொண்டாள்.

அன்று காலையில் ஸ்ரீரங்கம் முழுவதும் களேபரமாக இருந்தது. ரங்கநாதரின் நவரத்தின மாலை தொலைந்துவிட்டதாம், களவு போய்விட்டதாம், கோயிலுக்குள் கொள்ளை நடந்திருக்கிறது.... இப்படி பலவாறாக மக்கள் பேசிகொண்டனர். கோயில் அதிகாரி அர்ச்சகர்களை அழைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அனைவரும் தங்கள் மீது எந்தக் குற்றுமும் இல்லையென்றும், தாங்கள் காலம் காலமாக ரங்கநாதருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்வதைத் தவிர, வேறு எதுவும் அறியமாட்டோம் என்றும் கண்ணீர் வடித்தனர். அந்த நேரத்தில் அரபஞ்சி கோயிலுக்குள் பக்தி ததும்ப நுழைந்தாள். அவளது கழுத்தில் நவரத்தின மாலை ஒன்று மின்னியது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி, கோயில் அதிகாரியும் அதைக்கண்டு அசந்து போனார். அர்ச்சகர்களையும், ஊழியர்களையும் கடுமையான பார்வை பார்ததார். அவருடைய பார்வையின் பொருள் இதுதான். யாரோ ஒருவர், ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நவரத்தின் மாலையைத் திருடிச் சென்று அரபஞ்சியிடம் சந்தோஷமாக இருப்பதற்காக அவளுக்கு பரிசளித்திருக்கிறார்கள் என்பதுதான் ! அரபஞ்சியைக் கண்டதும் கோயில் ஊழியர்கள் அவளை இழுத்து வந்து, அதிகாரியின் முன்னால் நிறுத்தினர். அவர் அரபஞ்சியிடம் இந்த நவரத்தின மாலையை உன்னிடம் யார் கொடுத்தார்கள் ? என்று கேட்டார். அவள் மிகவும் அமைதியாக, நமது ஊருக்கு வந்திருக்கும் கருவூர் சித்தர் பெருமான் இதை எனக்குத் தந்தார். அவரது பேரருளால் கிடைத்த இந்த மாலையை நான் பிரசாதமாகக் கருதி அணிந்திருக்கிறேன், என்றாள். அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. அவரைப் பழிக்காதே ! அவர் பெரிய மகான். அவரைப் போன்றவர்கள் உன் வீட்டின் பக்கம்கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள். உண்மையைச் சொல் ! எனக் கண்டித்தார். அரபஞ்சியோ தனது பதிலில் உறுதியாக இருந்தாள். வேறு வழியின்றி கருவூர் சித்தரை விசாரணைக்கு அழைக்கும்படியான நிர்பந்தத்திற்கு அதிகாரி ஆளானார். கருவூராரை காவலர்கள் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடந்தது. அதிகாரியோ ! அரபஞ்சி சொல்வது உண்மைதான். நேற்றிரவு நான் அவளது வீட்டில்தான் இருந்தேன். ரங்கநாதப்பெருமான் என்னிடம் அவரது நவரத்தின மாலையைக் கொடுத்து, தனது பக்தையான அரபஞ்சியிடம் ஒப்படைக்கச் சொன்னார், அதையே நான் செய்தேன், என்றார் அனைவரும் சிரித்தனர். சித்தரின் பேச்சை யாரும் நம்பவில்லை.

சித்தரிடம் அதிகாரி, கருவூராரே ! நீர் சொல்வது உண்மையானால், அதை அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க வேண்டும், என்றார். கருவூரார் சற்றும் தயங்காமல், ரங்கநாதா... ரங்கநாதா.. இங்கிருப்பவர்களுக்கு உண்மையை சொல், என்று கூவினார். அப்போது அசரீரி எழுந்தது.கருவூரான் சொல்வது உண்மைதான். அரபஞ்சி எனது ஆத்ம பக்தை. அவளுக்கு நானே எனது ரத்தின மாலையை கருவூரான் மூலமாக அனுப்பிவைத்தேன், என்று சொல்ல அடங்கியது.அனைவரும் ரங்கநாதப் பெருமானை துதித்ததுடன் கருவூராரிடமும், அரபஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கருவூரார், தான் பிறந்த கருவூருக்குச் சென்றார். அவரது செல்வாக்கு கண்டு பொறாமை கொண்டிருந்த அவ்வூர் மக்களில் சிலர், அவரது பெரைக் கெடுக்க எண்ணினார். இதற்காக மன்னனிடம் சென்று, கருவூராரின் வீட்டில் மது வகைகள் இருப்பதாகவும், அவர் எந்நேரமும் போதையில் திரிவதாகவும் புகார் கூறினர். மன்னன் காவலர்களை அனுப்பி சோதனை செய்தான். கருவூராரின் வீட்டில் பூஜைப் பொருட்களைத் தவிர எதுவுமே இல்லை. புகார் சொன்னவர்களை அழைத்த மன்னன், அவர்களைக் கடுமையாகக் கண்டித்தான். கருவூராரை வரவழைத்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். ஆனாலும், கருவூரார் மீது கொண்ட பொறாமையால், அவரைக் கொலை செய்ய சிலர் முடிவு செய்தனர். ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். இப்படிப்பட்ட மக்களின் மத்தியில் கருவூராருக்குப் பிடிக்கவில்லை. அவர் அந்த மக்களுக்குப் பயந்து ஓடுவது போல நடத்தார். அவ்வூரிலுள்ள ஆனிலையப்பர் கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அணைத்து கொண்டார். கோயில் என்றும் பாராமல், கொலைகாரர்கள் அங்கும் நுழைந்தனர். அப்போது அவர்களின் கண்முன்னாலேயே கருவூரார் லிங்கத்துடன் ஐக்கியமாகிவிட்டார். இதுகண்டு கொலைகாரர்கள் மனம் திருந்தினர். அவரது சக்தியை எண்ணி வியந்தனர்.

நன்றி:தினமலர்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கருவூரார் Empty Re: கருவூரார்

Post by ராகவா Wed May 28, 2014 10:58 pm

பகிற்வுக்கு மிக்க நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum