இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

4 posters

Go down

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Empty சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

Post by Dheeran Tue Oct 02, 2012 1:17 am

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Images?q=tbn:ANd9GcQgtAPV2qQJ7Ky2R7hSjfYHuUdA3IJNmpPB-cKe68RHXrIXk9Fv

(சிவலிங்கத்தை பால்வேறுபாட்டைக்குறிப்பிடும் சின்னம் அல்ல என விளக்கும் கட்டுரை - இணையத்தில் கண்டது)

லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்!
சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்!
படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி?


சிவ-லிங்கம் என்றால் சிவக்-குறியீடு-ன்னு பார்த்தோம்!
ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்த வடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க


இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!


* ஹீரோ போல, முருகனும் கண்ணனும் அழகாகச் சிரித்தால் = உருவம்!
* உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ) உருவமும் இல்லை, அருவமும் இல்லை = அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி!

எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக இருக்கு!

லிங்கம்=லிங்+கம்
*லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
*கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (emerge)

இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Lingod


பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்

வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!


தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!


வாங்க சிவலிங்கத்தின் அமைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம்!
சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Shivlingameaning

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்காங்க!

* லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
* அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!

அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது!

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!

* மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!
* அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!

பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!

ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!

இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. MahaSi1


யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக
தேவகீ நந்தன ஸ்ரஷ்டா
-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி"-ன்னு வரும்!
ஆத்ம யோனி-ன்னா ஆத்மா செல்லும் பாதை! இதுக்கு விபரீதமா என்ன பொருளைச் சொல்வீங்க? ஆத்மாவுக்கு ஏதுங்க "யோனி"?


நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மணம் என்று பொருள்! ஆனா இன்னிக்குப் பேச்சு வழக்கில அதுக்குப் பொருளே வேற! அது போலத் தான்!
நாற்றத் துழாய் முடி-ன்னு பாட்டில் வருதே! முகைமொக்குள் உள்ள நாற்றம் போல்-னு வள்ளுவர் கூடச் சொல்றாரு!

ச்சே...துர் நாற்றம் வீசும் மல்லி மொட்டு போலத் தான் காதலும் - அப்படின்னு வள்ளுவர் சொல்லுறாருப்பா - அப்பிடியா பொருள் கொள்வோம்? அன்னிக்கி என்ன பொருளில் வழங்கினாங்களோ, அப்பிடித் தானே எடுத்துக் கொள்வோம்? அதைப் போலவே தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆவுடையார்=சக்தி பீடம், லிங்கம்=சிவ பீடம்-னு பார்த்தோம்!

ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில்,

எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge),
லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)!

= இது தாங்க எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!
இதுக்குத் தான் இத்தனை சொற் குழப்பம், வார்த்தை விளையாட்டு!

சிவலிங்கம் "அதைக்" குறிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் சொல்லி விளக்கலாம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது!
மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு!
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்!

பகுத்தறிவுப் பாணியில் சொல்லனும்னா, நம்ம இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!

இராவணன் தான் பெரிய மானஸ்தன் ஆயிற்றே! "அப்படி" எல்லாமா அவன் கடவுளை வழிபடுவான்?


காளஹஸ்தியில் வெறும் ஆவுடையார் மட்டும் தான்! மேலே லிங்கமே இருக்காது!
வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான்! கீழே ஆவுடையாரே இருக்காது!

அப்போ லிங்கம்-யோனி-ன்னு தப்பு தப்பா வெள்ளைக்கார கனெக்சன் எல்லாம் கொடுக்க முடியாதே! அப்போ என்ன சொல்வீங்க?

அடுத்த முறை ஆலயம் செல்லும் போது,
சிவலிங்க தத்துவம் மிகவும் உயர்ந்த தியான தத்துவம் என்பதை உணர்ந்து கொண்டு,
மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
சஞ்சலமே தேவையில்லை! சங்கரமே தேவை!

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது!

அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
அனைத்துக்கும் பரம்பொருளான பெருமாளே, தன் யோக நித்திரையின் போது, கைகளில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்கிறான்! ஒடுங்கி-விரியும் முத்தொழிலின் தத்துவத்தை உணர்த்தவே இப்படி!

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Padman1

பெருமாள் கையில் சிவலிங்கம் இருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தை இன்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணலாம்!

சைவ-வைணவத்தில் பேதமும் இல்லை!
சிவலிங்கம் என்பது வெறும் காமமும் இல்லை!


அவரவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

மாதவிப் பந்தல் தளத்திலிருந்து எடுத்து சுருக்கி பதியப்பட்டுள்ளதுhttp://madhavipanthal.blogspot.in/

அதன் ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Empty Re: சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

Post by ஹரி ஓம் Sat Oct 06, 2012 7:12 pm

விரிவான விளக்கம்.. ஆசிரியருக்கும்.. பதிவிட்ட உங்களுக்கும் நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Empty Re: சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

Post by Dhantaayuthapaani Sat Jan 19, 2013 4:06 pm

தேடியெடுத்து விளக்கமாக தெளிவுடன் இடப்பட்டுள்ள நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.

அனைத்தையும் கேட்டபுத்தியோடுமட்டுமே காண்பவர்கள் இனியாவது திருந்தினால் சரி.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Empty Re: சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

Post by v.sathish Sat Dec 28, 2013 11:40 pm

மிகவும் அருமையான பதிவு, இந்துமதத்தின் மீது அவதூறுகளை நம் ஆட்களே பரப்பிவரும் இந்த காலத்தில் இப்படியான விளக்கக் கட்டுரைகள் மிகவும் அவசியம். ஒரு நல்ல விசயத்தை தெரிந்துகொண்டேன். அனைவருக்கும் நன்றி

v.sathish

Posts : 4
Join date : 01/07/2012

Back to top Go down

சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு.. Empty Re: சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum