இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்!

Go down

இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்! Empty இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்!

Post by சாமி on Tue Oct 09, 2012 12:59 am

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் அவர்களைக் கொண்டு சேதுபதி அரசர் மிகப்பெரிய கருத்தரங்கத்தை நடத்தினார். விவேகானந்தரை, சேதுபதி அரசர்தான், சிகாகோவிற்கு அனுப்ப ஊக்கம் கொடுத்து அமெரிக்கப் பயணச் செலவை ஏற்றார். விவேகானந்தர் சிகாகோவில் பல்வேறு மதத்தலைவர் களிடையே சொற்பொழிவாற்றி அனைவரையும் ஈர்த்து உலக அளவில் புகழ் பெற்றார் என்பது நாம் அறிந்தது.

அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது அவரை வரவேற்று சேதுபதி மேற்கூறிய கருத்தரங்கத்தை நடத்தினார். சிகாகோவைப் போலவே இங்கேயும் பல சமயத்தலைவர்கள் தத்தம் சமயக் கருத்துகளை எடுத்தியம்ப அழைக்கப்பட்டிருந்தனர்.
சாங்கியம், மீமாம்சை, யோகம், வைணவம், சாக்தம், ஏகான்மவாதம் முதலான பல்வேறு சமயம் சார்ந்த பெரியோர்கள் பேசியபின் செம்பொருள் துணிவு (வடமொழி வார்த்தை: சைவசித்தாந்தம்{வார்த்தை மட்டும்தான் வடமொழி : கொள்கை தமிழருடையது }) சார்பாகத் தம் கருத்துக்களை எடுத்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் மறைமலைஅடிகளின் ஆசிரியரான சைவ சண்டமாருதம் எனப்படும் சோமசுந்தர நாயக்கர்.

செம்பொருள் துணிவு (சைவசித்தாந்தம்) கூறும் முப்பொருள் உண்மையை எளிய முறையில் இப்படி விளக்கினார் நாயக்கர்.
தானே அறியும் பொருள் – இறைவன்
அறிவித்தால் அறியும் பொருள் – உயிர்களாகிய நாம்
அறிவித்தாலும் அறியாதது – சடமான உலகம்

இவற்றைதான் இறை(பதி), உயிர்(பசு), தளை(பாசம்) என்கின்றனர். இந்த முப்பொருள் உண்மையை இப்போது அறிவித்துள்ளேன். அறிவித்தாலும் அறியாத மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். அது அவர்களது தன்மையின் காரணத்தால் அமைந்தது என்று கூறினார். பலத்த கைதட்டல் கிடைத்தது.

விவேகானந்தர் மொழி பெயர்ப்பாளர் உதவியோடு இதை மீண்டும் சொல்லக்கேட்டு மிகவும் மகிழ்ந்து, இக்கொள்கை அமெரிக்காவிற்குப் போகுமுன் நான் அறிந்திருந்தால் நான் இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் என்று ஆர்வத்துடன் நாயக்கரின் செம்பொருள் துணிவு (சைவசித்தாந்தம்) பேச்சை முழுமையாகக் கேட்டார்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்! Empty Re: இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்!

Post by ஹரி ஓம் on Tue Oct 09, 2012 12:56 pm

வீரமைந்தனின் பதிவுக்கு நன்றி சாமி அய்யா

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்! Empty Re: இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்!

Post by பத்மநாபன் on Wed Dec 05, 2012 8:08 pm

நல்ல தகவல் ஐயா!
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்! Empty Re: இதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum