Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.
Page 1 of 1

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால், இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?
அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.
இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.
திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.
1. அறம் சாரந்த பிரச்சனைகள்
2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.
பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.
இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.
மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.
உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?
அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12
பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.
சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம், திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.
அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.
இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.
இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum