இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

2 posters

Go down

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Empty இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

Post by சாமி Mon Dec 03, 2012 2:34 pm

சிற்றம்பல அன்பர்: ஐயா! இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதாக கருதப்படுகிறதே? அது உண்மையா?

அறிவாகரர்: ஆரியர்கள் தெய்வத்தின் இருப்பை ஒப்புக் கொள்ளாதவர்கள்; தமிழர்களோ தாம் வாழும் நிலங்களை நான்காகப் பகுத்து நான்கிற்கும் நான்கு தெய்வங்களை உரிமையாக்கி ஒன்றிற்கொன்று வேறுபாடு கற்பிக்காமல் நல்லிணக்கத்தோடு வணங்கி வந்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. எனவே ஓரினத்தார் தெய்வத்தையே வணங்காதவர்களாகவும், மற்றோரினத்தார் தெய்வத்தை வழிபடுவதையே தம் கொள்கையாக உடையவர்களாகவும் இருக்கையில் இருவருக்கும் பொதுவான ஒரு மதம் என்பது எப்படி இருக்க முடியும்? எனவே இந்து மதம் என்பது ஒரு கற்பனை. இது கூட வெள்ளையர்களால் ஆரியர், தமிழர் உள்ளிட்ட மொத்த இந்தியச் சமூகத்தில் தெளிவின்மையால் சுமத்தப்பட்டது. இதை காஞ்சி காமகோடி மகாப் பெரியவரே ஒப்புக் கொள்கிறார். எனவே ஆரியருக்கும், தமிழர்க்கும் பொதுவான ஓர் மதம் இந்துமதம் என்பது அப்பட்டமான பொய்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! தாங்கள் கூறுவதின் உண்மை எங்களுக்குப்புரிகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே. சிவனையும், திருமாலையும், கணபதியையும், முருகனையும், அம்பிகையையும் ஆரியர்களும் வணங்குகின்றனரே!
(தொடரும்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Empty Re: இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

Post by சாமி Mon Dec 03, 2012 2:37 pm

சிற்றம்பல அன்பர்: ஐயா! தாங்கள் கூறுவதின் உண்மை எங்களுக்குப்புரிகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே. சிவனையும், திருமாலையும், கணபதியையும், முருகனையும், அம்பிகையையும் ஆரியர்களும் வணங்குகின்றனரே!

அறிவாகரர்: சரியான கேள்வியைக் கேட்டீர்கள்! இது ஒரு மோசடி.ஆரியர்களின் வேதத்தில் (ரிக், யசுர், சாமம், அதர்வணம்) மேலே கூறிய சிவன் முதலான தெய்வங்களுக்கு இடம் இல்லை என்றாலும், ஆரியர்கள் அவற்றை வணங்குவது அவர்களது வேத விரோதம்.

தெய்வத்தை ஆரியரும் அவரது வேதமும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழர்களோடு தவிர்க்க இயலாதவாறு நேர்ந்துவிட்ட அவர்தம் இனக்கலப்பால் நல்லதை எவரிடமிருந்தும் ஏற்றுக்கொள்வது நல்ல பண்பு. ஆனால் மோசடி எது என்றால் அவரது வேதத்தில் இல்லாத தெய்வங்களை ஏற்றுக் காலப்போக்கில் அந்தத் தெய்வங்கள் எல்லாம் வடவேதத்தில் போற்றப்பட்டிருக்கின்றன என்று கூறத்தொடங்கியது தான் மோசடி. இதற்கென சில சமஸ்கிருத சுலோகங்களைக் காலப்போக்கில் உருவாக்கி, பார்த்தீர்களா இவைகள் எல்லாம் ரிக், யசுர், சாம அதர்வணத்தில் இருக்கின்றன என்று கூறுவது தான் மோசடி. அதற்கும் மேலே தமிழர்தம் தெய்வங்களையே வடவேதத்தில் இருந்துதான் எடுத்துக்கொண்டனர் என்று கூறுவதும், அதை நிலைநாட்டப் பார்ப்பதும் எவ்வளவு பெரிய மோசடி! எவ்வளவு பெரிய அண்டப்புளுகு!

சிற்றம்பல அன்பர்: அப்படியா மோசடி செய்துள்ளனர்! கேட்பதற்கே ஆச்சரியாமாக இருக்கிறதே!

அறிவாகரர்: உங்களுக்குச் சில சான்றுகளைக் காட்டுகிறேன்; காட்டினால் உங்கள் ஆச்சரியம் எல்லாம் காணாமல் போய்விடும். சிவபெருமானைப் பற்றிக் கூறுவதைப் பிறகு பார்ப்போம். முதலில் ஏனைய கடவுளர் பற்றிக்காண்போம். ஏனெனில் சிவபெருமான் பற்றிய விளக்கம் பெரிதாக நீண்டு செல்வது. எனவே அதனை பின்னால் பார்ப்போம்.

இரிக் வேதத்தில் பார்வதி சொல்லப்படுகிறாள் என்று தவறான ஒரு பகுதியை அதாவது மண்டலம் 1-164-41 என்பதைக் காட்டுகிறார்கள். அது வருமாறு:
‘கெளரீர்மாய ஸலிலாநி தட்சயத்யேசுபதி த்விபத்ஸா சதுஸ்பதி!
அஷ்டபதி, நவபதி, பபூவஷீ ஸஹஸ்ராட்சார பரமே வ்யோமந்’


இங்கே வருகிற கௌரீ ஒரு பசுவைக் குறித்தது. இதற்கும் பார்வதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதன் தமிழாக்கம் வருமாறு:
‘கௌரி – வாக்கு – மழை சலங்களால் கற்பித்து எழுகிறாள். ஓரடி, ஈரடி, நான்கடி, எட்டடி, ஒன்பதடி பரம நிலையத்திரத்திலிருக்கும் ஆயிரம் அட்சரங்கள் உள்ள அவள் பாடுகிறாள்’ – M.R.ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

அடுத்து விநாயகர் இரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார் என்பர். அப்பகுதி இரிக் 2-23-1.
‘கணாநாந்த்வா கணபதிம் ஹவாமஹேகவிம் கவீநாமு பமச்ரவஸ்தமம்! ஜ்யேஸ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்தப ஆந:ச்ருண்வந்நூதிபி: ஸீதஸாதநம்’

இதில் வரும் கணபதி ஒரு குறிப்பிட்ட கணங்களுக்குத் தலைவனான பிராமணஸ்பதி என்பவன். இவனுக்கும் விநாயகருக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மேல்கண்ட சுலோகத்தின் மொழிபெயர்ப்பு:
‘பிராமணஸ்பதே! நாங்கள் கணங்களின் கணபதியும் கணத்தலைவனும், கவிகளின் கவியும், ஈடற்ற புகழுடையவனும், முதல்வர்களின் நடுவே பிரகாசிப்பவனும், மந்திரங்களின் உத்தமத் தலைவனும் ஆன உன்னை அழைக்கிறோம். எங்களுடைய அழைப்பைக் கேட்டு உன்னுடைய பாலனங்களுடன் வரவும்.யஞ்ஞஸ்தானத்தில் அமரவும்.’ – M R ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

இதற்கடுத்து முருகப்பெருமான் இரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார் என்று புளுகுவர். அவர் காட்டும் பகுதி இரிக் 1-163-1. அப்பகுதி:
‘யதக்ரந்த: பிரதமம் ஜாயமாந உத்யந்த்ஸ முத்ராதுதவா புரீஷாத் / ச்யோநஸ்யபட்சா ஹரிணஸ்யபாஹீ உபஸ்துத்யம் மஹிஜாதம்தெ அர்வந்’

இதற்கும் முருகனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதன் மொழியாக்கம் வருமாறு:
‘குதிரையே! உன்னுடைய மகத்தான ஜன்மம் அனைவராலும் போற்றத் தகுந்தது. தீ முதல்வனாய் வானிலிருந்தோ, சலத்தில் இருந்தோ பிறந்து முழங்கினாய், உனக்குப் பருந்தின் சிறகுகளும் மானின் கால்களும் இருக்கின்றன.’ – M R ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

இந்த மூன்று இரிக் வேத சுலோகத்தில் பார்வதி, விநாயகர், முருகன் முறையே குறிப்பிடப்பட்டது என்று ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற நூலில் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இதன் மொழிபெயர்ப்பைப் பார்த்தால் இவற்றிற்கும் பார்வதி, விநாயகர், முருகருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிற குட்டு வெளிப்படுகிறது.

எதற்கு இந்த மோசடியைச் செய்ய வேண்டும்? தமிழர்தம் கடவுளர்களை வடமொழி வேதம் குறிப்பிட அதைத் தமிழர்கள் அங்கிருந்து மேற்கொண்டனர் என்று வடமொழியில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அது யாருக்குப் புரியப்போகிறது என்ற நம்பிக்கையில் அண்டப்புளுகை அவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய மோசடி!

(2012 செப்டம்பர் மாத தெய்வமுரசு – ஆன்மிக மாத இதழில் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Empty Re: இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

Post by பத்மநாபன் Wed Dec 05, 2012 8:06 pm

வடமொழி வேதங்கள் தமிழில் நம் முன்னோர்களுக்கு கிடைக்கவில்லை.
தற்போது M R ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.
ஆகையால் உண்மையான வடவேதம் என்ன சொல்கிறது என்பது தற்போது தெரிய வருகிறது.
எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே! சொல்லாத ஒன்றை தம் சுயநலத்திற்காக சொல்லும் இந்த 'சூது' க்காரர்களை கடவுள் என்ன செய்வார்?
அடுத்த பிறவியில் மனிதரினும் கீழ்பிறப்பாக படைப்பாரோ?
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Empty Re: இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum