இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில்

Go down

புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் Empty புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில்

Post by ராகவா Sat Sep 28, 2013 3:01 pm

வரலாற்று நோக்கு
புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் I1-300x225
யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டத்தின் சைவமணித்தீவாம் அனலைதீவு பிள்ளையார், சிவன், அம்பாள், முருகன், விஸ்ணு, ஐயனார் பைரவர் என அனைத்து இந்துக்கடவுளர்களின் திருக்கோவில்களை தன்னகத்தே கொண்டு ஆன்மீக சிந்தனையை வளர்த்து வருகின்றது. இதில் சிவபூமியாக விளங்கும் புளியந்தீவு எனும் புனிதபூமி அனலைதீவின் தெற்கே அருள்மணம் வீசும் ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவிலை தாங்கி நிற்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் விருட்சம் என ஒரு ஆலயத்திற்கு இருக்கவேண்டிய அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்வாலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக மஹோற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தருணத்தில் ஆலயத்தின் வரலாற்றை நோக்குமிடத்து, நாகவழிபாட்டின் தொன்மை, கிராமிய வழிபாட்டின் முக்கியத்துவம், ஈழத்தின் அட்டஈஸ்வரங்களில் ஒன்றான நாகேஸ்வரம் பற்றிய வரலாறு, நயினை நாகபூசணி அம்பாளுடைய ஆலயத்திற்கும் அனலை புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலயத்திற்குமிடையிலான தொடர்புகள் போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.புளியந்தீவு எனும் புண்ணியச்சேத்திரம் அனலைதீவவுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறு தீவாகும். இதன் தெற்கே நயினாதீவு சுமார் ஒரு கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விருதீவுகளையும் பாம்பன்கடல் எனும் தொடுகடல் பிரிக்கின்றது. தென்னஞ்சோலையாகக் காணப்படும் புளியந்தீவு பௌதீக ரீதியில் பற்றைக் காடாக காணப்படுவதோடு பாம்புகளின் புகலிடமாகவும் விளங்குகின்றது. இத்தீவின் தென்புறத்தே கிழக்கு நோக்கியவாறு தோற்றமளிக்கும் ஸ்ரீ நாகேஸ்வரரும் நயினையை நோக்கியவாறு நாகராஜேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர். மேலும் ஆலய விருட்சமாக அரசமரம் விளங்குவதோடு சிவனுக்குரிய கொண்றை மரமும் புனிதமாக வளர்க்கப்படுகின்றது. இவை தவிர ஆலய தீர்த்தமாக சேது தீர்த்தம் எனும் கடல் தீர்த்தமும் நாகபுஸ்கரணி எனும் திருக்கேணித்தீர்த்தமும் அமையப்பெற்றுள்ளது. நகுலேஸ்வர தீர்த்த கேணியின் சாயலை ஒத்த மேற்படி கேணியின் மேலதிக நன்னீர் சேதுகடல் தீர்த்தத்துடன் கலப்பதால் இது “சங்கம தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.நாகேஸ்வரன் ஆலய வரலாறுகள் பற்றி பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகளும் வரலாற்று சம்பவங்களும் கூறப்பட்டு வருகின்றன. இவற்றில் காலத்தால் முந்திய நாகவழிபாடு ஈழத்திலும் வேரூன்றிக் காணப்பட்டது அதிலும் சிறப்பாக நயினாதீவு, புளியந்தீவு போன்ற தீவுகளில் நாகவழிபாடு சிறப்புற்று விளங்கியதாக கூறப்படுகின்றது. இதன் எச்சமாகவே புளியந்தீவில் நாகதம்பிரான் வழிபாடுகளும் இயற்றப்பட்டு அதுவே பின்னாளில் சிவாலயமாக பரிணமித்தது என்று கூறப்படுகின்றது. மேலும் சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம் போன்ற விரத புராணங்களை இயற்றிய ‘நா’வன்னாப்புலவர் அவர்களால் இயற்றப்பட்ட இலங்கை மான்மியம் எனும் பாநூலில் நாகேஸ்வர மான்மீயம் என்ற 400 பாக்களின் மூலம் புளியந்தீவு சிவாலயம் பற்றி அறியமுடிகிறது. இவரது பாடல்களின் பொருள் அடிப்படையிலும் மூதாதையர்களின் செவிவழி கதைகளின் அடிப்படையிலும் புலியேத்தி ஆகிய புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் கோவில் பண்டைய காலத்தில் அட்ட (எட்டு) ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கியமை புலப்படுகின்றது. (இருப்பினும் இவ் நாகேஸ்வரம் நயினை நாகபூசணி ஆலய சூழலில் பண்டைய காலத்தில் காணப்பட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.) எனினும் அட்டஈச்சரங்கள் ஈழத்தின் நாற்திசைகளிலும் கடலோரமாக அமையப்பெற்று காணப்பட்டமை சிறப்பம்சமாகும். பண்டைய அட்ட ஈஸ்வரங்களாக வடக்கே நாகேஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் கிழக்கே திருக்கோணேஸ்வரம், மாமாங்கேஸ்வரம் தெற்கே தேவநுவர தொண்டீஸ்வரம், மேற்கே சிலாபம் முன்னேஸ்வரம், இரத்மலானை நந்தீஸ்வரம், ஆகியனவே அவையெனக்கூறப்படுகின்றன.இவை தவிர நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கும் இச்சிவாலயத்திற்கும் இடையிலான இரு தொடர்புகள் கூறப்படுகின்றது. இதில் ஒன்றாக புளியந்தீவில் வசித்த நாகம் ஒன்று தினமும் தனக்கு பூஜிக்கப்பட்ட அல்லது சிவனுக்கு பூஜிக்கப்பட்ட மலர் ஒன்றினை தனது வாயால் கௌவி கடல் வழியாக வந்து நயினை நாகபூசணியை வழிபட்டு திரும்பி வந்ததாக நம்பப்பட்டு வந்தது. இது தொடர்பான சித்திரங்கள், ஓவியங்கள் இரு ஆலயக் கட்டியங்களிலும் நயினை அம்பாளுடைய சித்திரத்தேரிலும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. தவிர இச்சம்பவம் நயினை ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவில் 11ம் திருவிழாவின் ஒரு பகுதியாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அது மட்டும் இன்றி இவ் நாக வழிபாட்டிற்கு சான்று பகர்வது போன்று நயினை நாகபூசணி ஆலய கடலோரத்தில் காணப்படும் பாம்பன் கல், கருடன கல் போன்ற கற்பாறைகள் உணர்த்தும் செய்தியாகும் அதாவது நாகம் அம்பாளைத் தரிசிக்க வழமைபோல் கடலில் செல்ல கருடன் பாம்மை வழிமறித்து இரையாக்க எண்ணி பாறையில் உட்கார்ந்து கொண்டதாகவும் அப்பாம்பு பயந்து பிறிதொரு கல்லில் பாதுகாப்புத் தேடி சுற்றிக் கொண்டது என்றும் இச்சம்பவத்தை அவ்வழியால் பயணித்த இரத்தினக்கல் வியாபாரி கண்ணுற்று அப்பாம்பை காப்பாற்றி விட்டதாகவும் இதன் பயனாய் அவ்வியாபாரி செல்வந்தனாகி அம்பாளுக்கு திருக்கோவிலை கட்டுவித்தான் என்றும் பின்னர் அவ்வாலயம் சிவன் சன்னதி, அம்பாள் சன்னதி என இரு சன்னதிகளையும் மூன்று தேர்களையும் கொண்டு விளங்கின என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறாக வளர்ச்சிகண்ட நிலையில் தான் நாகப+சணி அம்பாள் ஆலயம் போர்த்துக்கீசரால் தகர்க்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் Empty Re: புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில்

Post by ராகவா Sat Sep 28, 2013 3:02 pm

இரண்டாவது தொடர்பாக, 1620 – 24 காலப்பகுதியில் போர்த்துக்கீசரால் நாகபூசணி அம்பாள் ஆலயம் தக்கப்பட்டபோது ஆலய பூசகர்களால் அவ்வாலய அம்பாள் விக்கிரகம் நயினை வடமேற்கில் ஓர் ஆலமரப்பொந்திலும் நாகதம்பிரான் (சிவலிங்கம்) விக்கிரகம் புளியந்தீவில் அரசமரப்பொந்திலும் மறைத்து வைக்கப்பட்டு வழிபாடுகள் இயற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது. இந்த வரலாற்று சம்பவங்கள் தவிர தேவர்கள், வியாக்கிரமபாதர், பதஞ்சலி போன்ற முனிவர்களும் இவ்வாலயத்தினை வழிபட்டதாகவும் பின்னாளில் பல முனிவர்களும், ரிஷிகளும் இத்தீவில் காணப்பட்ட இயற்கை மூலிகைகளை கொண்டு நோய் பிணிகளை நீக்கி வந்ததாகவும், புலிமுகம் கொண்ட அரசன் ஒருவன் தனது சாபம் நீங்க முனிவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இத்தலத்தில் தங்கியிருந்து சிவனருளாலும் மூலிகை மருந்தாலும் அவனது புலிமுகம் மறைந்து மனித முகம் கிடைக்கப்பெற்றான் என்று கூறப்படுகின்றது. இதனாலேயே இத்தீவிற்கு “புலியேத்தி” என்ற பெயர் தோன்றிற்று என்கின்றனர் சான்றோர். மேலும் இவ்வாலயச் சூழலில் பிற்காலத்தில் கதிரவேலுச்சாமியார், நயினை முத்துக்குமாரசாமிச் சித்தர் (புலவர்) போன்றோர் சிவாலயத்தில் தங்கியிருந்து தியானத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் முத்துக்குமாரசாமிப்புலவர் சிவன் மீது கவியும் பாடியள்ளார். இவ்வாறாக அனலை – புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் ஆலய வரலாறுகள் பல கூறப்பட்டுவருகின்றது.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் அருள் மகிமையும் கொண்ட இச் சிவாலயத்தில் இதுவரை காலமும் ஞாயிறு தோறும் நாகவழிபாடாக பாம்பிற்கு பால் அபிஷேகமும் ஆவணி ஞாயிறுகளில் சூரிய வழிபாடும் இயற்றப்படுதலானது தமிழர்களின் கிராமிய, தொன்மை வழிபாடுகளை சுட்டிநிற்க்கின்றன. சிவராத்திரி, ஆனி உத்தரம், திருவெம்பாவை, நடேசரபிஷேகங்கள், பிரதோசவிரதங்கள், சோமவாரம், போன்ற சிவ விரதங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது சிறப்பம்சம் ஆகும். அதிலும் மார்கழித் திருவாதிரை என்பது பல நூற்றாண்டு காலங்களாக யாழ் தீவக, மக்கள் அனலைதீவு, நெடுந்தீவு வழியாக சிதம்பரம் சென்று திருவாதிரை நடனக் காட்சியை கண்டுகளிப்பதாகவும் கடல்கொந்தளிப்பு, காலநிலை சீர்கேடுகளின் போது அங்கு செல்லமுடியாத வேளை இவ்வாலயத்தில் அனைத்து மக்களும் கூடி தில்லைக் கூத்தை கண்டுகளித்து வந்ததாக கூறப்படுகின்றது. இத்திருவாதிரை திருநடனம் இன்றுவரை சிறப்பாக இடம்பெறுகின்றது.

திருவெம்பாவை சிறப்பாக இடம்பெற்று வந்தாலும் சிவனுக்கு மஹோற்சவம் இடம்பெற வேண்டும் என்பது அடியார்களின் நீண்ட கால வேண்டுதலாக இருந்தது. அந்தவகையில் ஆவணி மாத பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாகக் கொண்டு பத்து தினங்கள் மஹோற்சவம் இடம்பெறுகின்றது. விஷேட திருவிழாக்கள் ஈழத்திற்கு விடியலையும் உலகிற்று அமைதியையும் தந்தருள எல்லாம் வல்ல நாகராஜேஸ்வரி அம்பிகாதேவி சமேத ஸ்ரீ நாகராஜேஸ்வரப் பெருமான் தீயவற்றை அழித்து நல்லவற்றை காப்பதாக அமையவேண்டும். இவை தவிர காலாகாவமாக தொடர்புடையதும் காலவசத்தால் பிரியப்பெற்ற அம்மை அப்பன் தொடர்பை மீண்டும் தொடங்கி வைக்க 1960களில் நயினை, அனலைப் பெரியோர்கள் மேற்கொண்ட “தெப்பைத்திருவிழாவின் போது நயினை அம்பாள் புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் ஆலயத்திற்கு எழுந்தருளுதல்” என்ற தீர்மானம் அப்போதைய காலநிலை சீர்கேடு, இறங்குதுறை பாவனையில் இல்லாமை போன்ற தடங்கல்களால் நிகழப்பெறவில்லை எனினும் தற்போது புதிய இறங்குதுறை சிவன் ஆலய முன்றலில் அமையப்பெற்றுள்ளதாலும் நவீன இயந்திரப் படகுகளின் பாவனை அதிகரித்துள்ளமையையும் கருத்தில் கொண்டு இரு ஆலய பரிபாலனசபையினரும் கலந்தாலோசித்து புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலய திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போதோ அல்லது நயினை நாகபூசணி அம்பாளின் தெப்பைத்திருவிழாவின்போதோ அல்லது இரு ஆலய வருடாந்த உற்சவங்களின் போதோ இறைவன் இறைவியர் எளுந்தருளி அருள்பாலிப்பது(இது சங்கம உற்சவம் எனப்படும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதலுக்கு ஒப்பானது) இரு ஊரின், நமது மதத்தின், நமது நாட்டின் ஒற்றுமைக்கு வழிசமைக்கும் என்பது பக்தர்களின் விரும்பும் பிரார்த்தனையும் ஆகும்.
புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் I3
புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோவில் I2
தொகுப்பாக்கம் - க.குமரன்
(இக்கட்டுரை ‘அனலைதீவு வாழ்வும் வளமும்’ என்ற நூலில் உள்ள மேற்படி ஆலயம் தொடர்பான கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டது.)
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum