Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அறிவோம் ஆயிரம்..
2 posters
Page 1 of 1
அறிவோம் ஆயிரம்..

1. முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
-
சிவன்
-
--------------------------------
-
2. தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்...
-
திருமால்
-
---------------------------------
-
3. மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை....
-
மீனாட்சி
-
----------------------------------
-
4. விசாலாட்சி என்பதன் பொருள்.....
-
அகன்ற கண்களைப் பெற்றவள்
-
---------------------------------
-
5. நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி...
-
கண்ணுடைய நாயகி
-
------------------------------------
-
6. கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்...
-
இந்திரன்
-
---------------------------------
-
7. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
-
ருத்ராட்சம்
-
---------------------------------------
-
8. கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது?
-
தாட்சண்யம்(கருணை)
-
----------------------------------
-
9. முருகனுக்கு எத்தனை முகங்கள்?
-
ஆறு
-
---------------------------------------
-
10. சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற
பெயரால் அழைப்பர்.
-
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
-
-----------------------------------
நன்றி: ஆன்மிகமலர்
Re: அறிவோம் ஆயிரம்..
-
1. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்....
-
தை முதல்நாள்(மகர சங்கராந்தி)
-
--------------------------------
-
2. "ஞாயிறு போற்றுதும்' என்று சூரியனை போற்றும்
இலக்கியம்...
-
சிலப்பதிகாரம்
-
----------------------------------------
-
3. சூரியனின் ரதத்தில் இருக்கும் குதிரைகள் எத்தனை?
-
ஏழு
-
------------------------------------
-
4..சூரியவம்சத்தில் உதித்த கொடைவள்ளல்....
-
கர்ணன்
-
------------------------------------
-
5. சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் பறந்த வீரன்....
-
அனுமன்
-
--------------------------------------
-
6. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை .... என்று குறிப்பிடுவர்
-
ஆத்மகாரகர்( ஆத்மாவிற்கு உரியவர்)
-
-----------------------------------
-
7. சூரியன் முழுஆற்றலோடு எந்த ராசியில் இருப்பார்?
-
மேஷம்(சித்திரைமாதம்)
-
---------------------------------------
-
8. சூரியனின் ஒற்றைச் சக்கர தேருக்கு சாரதியாக இருப்பவர்....
-
அருணன்
-
--------------------------------------
-
9. சூரியனுக்கு ஆற்றல் தரும் காயத்ரி மந்திரத்தை
உலகிற்கு வழங்கியவர்...
-
விஸ்வாமித்திரர்
-
----------------------------------------
-
10. சூரியவம்சத்தில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்....
-
ராமாவதாரம்
---------------------------------------
நன்றி: ஆன்மிக மலர்
Re: அறிவோம் ஆயிரம்..

-
மாத்தி யோசி"
என்பதுதான் ஆன்மிகம் நமக்குச்
சொல்லுவது, நம்மிடம் எதிர்பார்ப்பது.
.காலம் காலமாக யுக யுகமாக ஒரே விதமான
சடங்குகள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள், பூஜைகள்,
புனஸ்காரங்கள், பட்சணங்கள் என்று அனுபவித்துக்
கடவுளுக்கும் போர் அடித்திருக்கும். கடவுளுக்கும்
வெறுப்பு வந்திருக்கும்.
-
அதனால்தான் வழக்கமான பக்தர் திருக்கூட்டத்துக்கு,
நத்தை மாதிரி மெதுவாக ஊர்ந்து வந்து அருள்
செய்யும் கடவுள், மாத்தி யோசிக்கும் பக்தர்களுக்கு,
உடனடியாக கை மேல் பல னாக அருள் செய்கிறாரோ
என்றே தோன்றுகிறது.
-
வேதாத்ரி, ஓஷோ, ஈஷா, இஸ்கான் என்ற புதுமைச்
சிந்தனையாளர்களின் போதனைக்கு அருள் செய்தது,
நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது,
முதுகில் பிரம்படி பட்டது, பிள்ளைக்கறி கேட்டது,
காலால் தன்னை மிதித்து வணங்கிய கண்ணப்ப
நாயனாருக்கு அருள் செய்தது என்று பலதும்
சொல்லலாம்.
-
கடவுளை கடவுளாக பாவித்து, பயந்து, வரம் கேட்டு,
பஜனை செய்த கூட்டத்தில் ஆடிப்பூரம் உதித்த
ஆண்டாள் முற்றிலுமாக மாற்றி யோசித்தாள்.
கடவுளைக் காதலனாகப் பாவித்தது, திருமணம் செய்ய
ஏங்கியது, புகழ்ச்சி மந்திரத்திற்குப் பதிலாக கடவுளை
வர்ணித்துக் காதலாகி, காமமாகிக் கசிந் தது எல்லாமே
கூட கடவுளுக்கும் புது அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
-
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் நின்றெதிர்ப்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
-
என்று துவங்கும் ஆண்டாளின் திருமணக் கனவு,
சூடிக்கொடுத்த மாலையாக, மறுபடியும் புரட்சி அவதாரம்
எடுத்தது.
-
''மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம்
பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்" என்று கல்யாணத்தில்
நிறைவு செய்தது. தனக்கு முன்னும் இல்லை, பின்னும்
இல்லை. என்னுமளவிற்கு புரட்சி தேவதையானவள்
ஆண்டாள். மாத்தி யோசித்தாள். மாலை மாத்தி யோசித்தாள்.
கடவுளோடு ஐக்கியமானாள்.
புதுமைகளைத்தான் கடவுளும் விரும்புவானோ?
இல்லையெனில் கடவுளுக்கும் போரடிக்குமோ?
-
-----------------------------------------
ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி: நக்கீரன் (ஆன்மீகம்)
Re: அறிவோம் ஆயிரம்..
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
-
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும்
கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும்
உள்ளது.குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக்
கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம்
தஞ்சம் அடைகிறது.
தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக்
குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை
கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.
யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது
புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு
யானை புலப்படவில்லை.
இவற்றைப் போல் உலகத்தையும், உலகப்
பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு
அவை புலப்படுவதில்லை. உலகமாகவே
காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை.
இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக
அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது
-
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
-
(திருமந்திரம் : -2290)
-
இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக்
காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
என்ற பழமொழி எழுந்தது.
-
எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள
இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம்
பெற்றுள்ளன..
-
——————————————
(படித்ததில் பிடித்தது)
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே
-
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும்
கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும்
உள்ளது.குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக்
கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம்
தஞ்சம் அடைகிறது.
தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக்
குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை
கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.
யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது
புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு
யானை புலப்படவில்லை.
இவற்றைப் போல் உலகத்தையும், உலகப்
பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு
அவை புலப்படுவதில்லை. உலகமாகவே
காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை.
இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக
அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது
-
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
-
(திருமந்திரம் : -2290)
-
இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக்
காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
என்ற பழமொழி எழுந்தது.
-
எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள
இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம்
பெற்றுள்ளன..
-
——————————————
(படித்ததில் பிடித்தது)
Re: அறிவோம் ஆயிரம்..

-

-
கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத்
தரிசிக்கலாம். இதற்கு "திரிபங்கி' என்று பெயர்.
ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி
வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது
மற்றொன்று!
"குறுவெயர் புருவம் கூடலிப்ப' என்று ஆழ்வார் பாடியது
போல் கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு
ஊதுவது மூன்றாவது வளைவு!
இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை "திரிபங்கி லலிதாகாரன்'
என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.
-
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக்
குறிக்கின்றன. "கண்ணனின் தலையில் உள்ள மயில் பீலி,
சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது' என்கிறார்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
கண்ணனின் சக்தியே "ராதை' ஆவாள். அவளைத் தலை மீது
வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் பீலி மூலமாக
அறிவிக்கின்றான் மாதவன்.
"திரிபங்கி'யாக உள்ள கிருஷ்ணனை வழிபடுபவர்களுக்கு
ராதையோடு சேர்ந்து திருவருள் புரிகின்றான் அந்தப் பரமாத்மா.
அவர்கள் அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றை அடைந்து,
இறுதியில் ராதையின் திருவருளும் கைகூட, ஞானத்தைப்
பெற்று "கோலோகம்' என்னும் முக்தி நிலையையே அடைந்து
விடுகின்றனர்.
கிருஷ்ணார்ப்பணம்!
-
------------------------
By புண்டரீக வித்யாநிதி
நன்றி: தினமணி (வெள்ளி மணி)
Re: அறிவோம் ஆயிரம்..
மனத்தை ஒடுக்குவதற்கு யோகமும் ஞானமும்
தேவை. ஞானம் இல்லாத வெறும் யோகம்
விடுதலையளிக்காது.
-
யோகம் இல்லாத ஞானமும் பயனற்றது. இரண்டு
இறக்கைகளால் பறவை பறப்பது போன்று, யோகம்,
ஞானம் ஆகிய இரண்டினாலும் நாம் உயர்நிலை
எய்தி பரமாத்மா நிலை காண வேண்டும்.
-
வேதாந்தத்தில் குறிக்கப்பெற்றுள்ள சாமமும்
தாமமும் யோகத்தின்பாற்பட்டவை. எண்ணம்
முதலிய விருத்திகளை நீக்கிய மனநிலையே
சாமம். புலன்களைக் கட்டுப்படுத்தலே தர்மம்.
-
எளிமை, பணிவு, அனுசரித்தியங்கும் இயல்பு,
சகிப்புத் தன்மை, பரந்த மனப்பான்மை,
சலமனற்ற நிலை, உறுதி, இலட்சியத்தில் பற்று,
சேவை மனப்பான்மை, பிரபஞ்சத்தின்பால் அன்பு
ஆகிய அனைத்தும் தெய்வீகம்.
இவை கைவரப் பெற்றால், யோகம், துறவு,
ஞானம் யாவும் நமக்குக் கிட்டி நாம் இறைநிலை
எய்தவராகி விடுவோம்.
-
----------------------------------------
--சுவாமி சிவானந்தர்
நன்றி: வெள்ளி மணி
தேவை. ஞானம் இல்லாத வெறும் யோகம்
விடுதலையளிக்காது.
-
யோகம் இல்லாத ஞானமும் பயனற்றது. இரண்டு
இறக்கைகளால் பறவை பறப்பது போன்று, யோகம்,
ஞானம் ஆகிய இரண்டினாலும் நாம் உயர்நிலை
எய்தி பரமாத்மா நிலை காண வேண்டும்.
-
வேதாந்தத்தில் குறிக்கப்பெற்றுள்ள சாமமும்
தாமமும் யோகத்தின்பாற்பட்டவை. எண்ணம்
முதலிய விருத்திகளை நீக்கிய மனநிலையே
சாமம். புலன்களைக் கட்டுப்படுத்தலே தர்மம்.
-
எளிமை, பணிவு, அனுசரித்தியங்கும் இயல்பு,
சகிப்புத் தன்மை, பரந்த மனப்பான்மை,
சலமனற்ற நிலை, உறுதி, இலட்சியத்தில் பற்று,
சேவை மனப்பான்மை, பிரபஞ்சத்தின்பால் அன்பு
ஆகிய அனைத்தும் தெய்வீகம்.
இவை கைவரப் பெற்றால், யோகம், துறவு,
ஞானம் யாவும் நமக்குக் கிட்டி நாம் இறைநிலை
எய்தவராகி விடுவோம்.
-
----------------------------------------
--சுவாமி சிவானந்தர்
நன்றி: வெள்ளி மணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum