Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
வினாயக் தாமோதர் சாவர்க்கர்
3 posters
Page 1 of 1
வினாயக் தாமோதர் சாவர்க்கர்
பிறப்பும் இளமையும்
வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவர் பிறந்தது மே 28, 1883. இவரது சிறப்பு இவர் ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர். இதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நாம் அறியலாம். அதுமட்டுமல்ல இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியுமாவார்.
இந்திய சுதந்திரத்திற்காக இவர் உருவாக்கியவை இந்தியாவில் அபிநவ் பாரத் சங்கம் , லண்டனில் சுதந்திர இந்திய சங்கம் உருவாக்கினார். இந்து மகாசபையையும் உருவாக்கினார்.
இவர் ஒரு பிறவிப் புரட்சியாளர். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் தனது 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தவர் ஆவார்
சாவர்க்கர் பாரிஸ்டர் படிப்பு படிக்க லண்டன் சென்றார். அங்கும் இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் ஸ்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். சாவர்க்கர் ஆயுதப்போராட்டம் மூலமாக இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை அவர் உலக அளவில் நடத்தினார்
கைதும் சிறைவாழ்வும்
இவரது சீடரான மதன்லால் திங்ரா என்ற மாவீரன் லண்டனில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று இந்தியர்களின் சுதந்திர தாகத்தை அந்நாட்டு மக்களுக்கு புரியச் செய்தார் (1, ஜூலை, 1909). அதற்கு பின்புலமாக இருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி பிரான்ஸ் கடற்கரையில் ஏறிய அவரை பிரிட்டீஷ் போலீசார் துரத்திவந்து கைது செய்தனர். அந்தக் கைது காரணமாக, இரு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சட்டப் போர் நடந்தது. இது உலக அளவில் அப்போது பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன சாவர்க்கர் அந்தமான் சிறையில், செல்லுலர் அறையில் அடைக்கப்பட்டு பயங்கர சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தார் (1911 - 1924). பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட அவர், வாழ்வின் பின்னாட்களை சமூக சீர்திருத்தத்தில் செலுத்தினார்.
இறுதிக்காலம்
பின்னாளில் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியை காங்கிரசுக்கு எதிராக அமைத்தார். மகாத்மா காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, பிறகு குற்றமில்லை என்று விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டபோதெல்லாம் கலங்காத சாவர்க்கர், சுதந்திர பாரத அரசு தன்னை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துவிட்டதே என்று மனமுடைந்த நிலையில் இறுதிக்காலத்தைக் கழித்தார்.
ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். அவர் இறந்தவுடன் இலட்சம் மக்களுக்கு மேல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஒரு சமுதாய வழிகாட்டியாக
அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர். சக்தி வாய்ந்த மொழியில் அவர் எழுதுகிறார்:
“….கிரேக்கர்களும் சகர்களும் ஹுணர்களும் வடக்கே அலை அலையாக படையெடுத்து வந்து தாக்கிய போதும் அவர்களால் நர்மதை நதிக்குத் தெற்கே காலடி வைக்க முடியவில்லை. அதுவும் தவிர கலிங்க சேர சோழ பாண்டிய அரசுகள் மிக வலுவான கடற்படையுடன் காத்திருந்தன. கடல் எல்லையில் அந்நிய படையெடுப்பு அபாயமே இல்லாமலிருந்தது…..”
ஆக ஒரு முழுமையான தேசியவாதியாக, விடுதலைவீரராக,தியாகியாக வாழ்ந்து மறைந்தபின்னரும் இன்றளவும் ஒரு வழிகாட்டியாக திகழும் வீர சாவர்க்கரை அவரது பிறந்ததினமான இன்று நினைவுகூருவோம்.
Re: வினாயக் தாமோதர் சாவர்க்கர்
கண்டிப்பாக பகிர்வுக்கு நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: வினாயக் தாமோதர் சாவர்க்கர்
கண்டிப்பாக....... பகிர்வுக்கு நன்றி :lol: :lol: :lol:அனுராகவன் wrote:என்ன கண்டிப்பு தலைவரெ!!லெட்சுமணன் wrote:கண்டிப்பாக பகிர்வுக்கு நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: வினாயக் தாமோதர் சாவர்க்கர்
நீங்களும்...இப்படியா..லெட்சுமணன் wrote:கண்டிப்பாக....... பகிர்வுக்கு நன்றிஅனுராகவன் wrote:என்ன கண்டிப்பு தலைவரெ!!லெட்சுமணன் wrote:கண்டிப்பாக பகிர்வுக்கு நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum