இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-மோக்ஷஸம்ந்யாஸ யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-மோக்ஷஸம்ந்யாஸ யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-மோக்ஷஸம்ந்யாஸ யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 11:02 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அதாஷ்டாதஷோ அத்யாய:।

மோக்ஷஸம்ந்யாஸ யோகம்அர்ஜுந உவாச।
ஸம்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்।
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக்கேஷிநிஷூதந॥ 18.1 ॥ஸ்ரீபகவாநுவாச।

காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது:।
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:॥ 18.2 ॥த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:।
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே॥ 18.3 ॥நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம।
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:॥ 18.4 ॥யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்।
யஜ்ஞோ தாநம் தபஷ்சைவ பாவநாநி மநீஷிணாம்॥ 18.5 ॥ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச।
கர்தவ்யாநீதி மே பார்த நிஷ்சிதம் மதமுத்தமம்॥ 18.6 ॥நியதஸ்ய து ஸம்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே।
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:॥ 18.7 ॥து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஷபயாத்த்யஜேத்।
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்॥ 18.8 ॥கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுந।
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:॥ 18.9 ॥ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே।
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஷய:॥ 18.10 ॥ந ஹி தேஹப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத:।
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே॥ 18.11 ॥அநிஷ்டமிஷ்டம் மிஷ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்।
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸம்ந்யாஸிநாம் க்வசித்॥ 18.12 ॥பம்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே।
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்॥ 18.13 ॥அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்।
விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பம்சமம்॥ 18.14 ॥ஷரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:।
ந்யாய்யம் வா விபரீதம் வா பம்சைதே தஸ்ய ஹேதவ:॥ 18.15 ॥தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:।
பஷ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஷ்யதி துர்மதி:॥ 18.16 ॥யஸ்ய நாஹம்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே।
ஹத்வா அபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே॥ 18.17 ॥ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா।
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸம்க்ரஹ:॥ 18.18 ॥ஜ்ஞாநம் கர்ம ச கர்தாச த்ரிதைவ குணபேதத:।
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி॥ 18.19 ॥ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே।
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்॥ 18.20 ॥ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்।
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்॥ 18.21 ॥யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்।
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.22 ॥நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்।
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே॥ 18.23 ॥யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹம்காரேண வா புந:।
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்॥ 18.24 ॥அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம்।
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே॥ 18.25 ॥முக்தஸங்கோ அநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:।
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே॥ 18.26 ॥ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோ அஷுசி:।
ஹர்ஷஷோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:॥ 18.27 ॥அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஷடோ நைஷ்க்ருதிகோ அலஸ:।
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே॥ 18.28 ॥புத்தேர்பேதம் த்ருதேஷ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஷ்ருணு।
ப்ரோச்யமாநமஷேஷேண ப்ருதக்த்வேந தநம்ஜய॥ 18.29 ॥ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே।
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.30 ॥யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச।
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ॥ 18.31 ॥அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா।
ஸர்வார்தாந்விபரீதாம்ஷ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ॥ 18.32 ॥த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:।
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.33 ॥யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதே அர்ஜுந।
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ॥ 18.34 ॥யயா ஸ்வப்நம் பயம் ஷோகம் விஷாதம் மதமேவ ச।
ந விமும்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ॥ 18.35 ॥ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஷ்ருணு மே பரதர்ஷப।
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி॥ 18.36 ॥யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்।
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்॥ 18.37 ॥விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரே அம்ருதோபமம்।
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 18.38 ॥யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:।
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.39 ॥ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:।
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:॥ 18.40 ॥ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப।
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச।
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।
தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே।
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா॥ 18.50 ॥புத்த்யா விஷுத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச।
ஷப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச॥ 18.51 ॥விவிக்தஸேவீ லக்வாஷீ யதவாக்காயமாநஸ:।
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித:॥ 18.52 ॥அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்।
விமுச்ய நிர்மம: ஷாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 18.53 ॥ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி।
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்॥ 18.54 ॥பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஷ்சாஸ்மி தத்த்வத:।
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநம்தரம்॥ 18.55 ॥ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஷ்ரய:।
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஷாஷ்வதம் பதமவ்யயம்॥ 18.56 ॥சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।
புத்தியோகமுபாஷ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ॥ 18.57 ॥மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி।
அத சேத்த்வமஹம்காராந்ந ஷ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி॥ 18.58 ॥யதஹம்காரமாஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே।
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி॥ 18.59 ॥ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா।
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஷோபி தத்॥ 18.60 ॥ஈஷ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஷே அர்ஜுந திஷ்டதி।
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா॥ 18.61 ॥தமேவ ஷரணம் கச்ச ஸர்வபாவேந பாரத।
தத்ப்ரஸாதாத்பராம் ஷாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்॥ 18.62 ॥இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா।
விம்ருஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு॥ 18.63 ॥ஸர்வகுஹ்யதமம் பூய: ஷ்ருணு மே பரமம் வச:।
இஷ்டோ அஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்॥ 18.64 ॥மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ அஸி மே॥ 18.65 ॥ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ।
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷ்யயிஷ்யாமி மா ஷுச:॥ 18.66 ॥இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந।
ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ அப்யஸூயதி॥ 18.67 ॥ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி।
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஷய:॥ 18.68 ॥ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஷ்சிந்மே ப்ரியக்ருத்தம:।
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி॥ 18.69 ॥அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:।
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:॥ 18.70 ॥ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச ஷ்ருணுயாதபி யோ நர:।
ஸோ அபி முக்த: ஷுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்॥ 18.71 ॥கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா।
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநம்ஜய॥ 18.72 ॥அர்ஜுந உவாச।
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயா அச்யுத।
ஸ்திதோ அஸ்மி கதஸம்தேஹ: கரிஷ்யே வசநம் தவ॥ 18.73 ॥ஸம்ஜய உவாச।
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:।
ஸம்வாதமிமமஷ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்॥ 18.74 ॥வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்।
யோகம் யோகேஷ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம்॥ 18.75 ॥ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்।
கேஷவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:॥ 18.76 ॥தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:।
விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:॥ 18.77 ॥யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:।
தத்ர ஷ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம॥ 18.78 ॥ஓம் தத்ஸதிதி ஷ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஷ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
மோக்ஷஸம்ந்யாஸயோகோ நாம அஷ்டாதஷோ அத்யாய:॥ 18 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'மோக்ஷஸம்ந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த பதினெட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

ஓம்
ஷாம்தாகாரம் புஜகஷயநம் பத்மநாபம் ஸுரேஷம்।
விஷ்வாதாரம் ககநஸத்ருஷம் மேகவர்ணம் ஷுபாம்கம்।
லக்ஷ்மீகாம்தம் கமலநயநம் யோகீபிர்த்யாநகம்யம்।
வம்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம்॥


அர்ஜூனன் : கேசியை அழித்தவரே, தியாகத்தையும் துறவையும் பற்றி அறிய விரும்புகிறேன்.

பகவான் : பலனை விரும்பி செய்யும் செயல்களின் பலனை, தான் அனுபவிக்காமல் விட்டுக் கொடுப்பது தியாகம் என்றும், அச்செயல்களையே விட்டு விடுவது சன்யாசம் என்றும் பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.

எல்லாவிதமான பலன் தரும் செயல்களையும் துறக்குமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது என முனிவர்கள் கூறுகின்றனர்.

மஹாத்மாக்களைக் கூட தூய்மைப்படுத்துவதால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது; பலன் பாராது ஒரு கடமையைப் போல இவை செய்யப்பட வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.

விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் துறக்கக்கூடாது; மோகத்தால் துறந்தால் அத்துறவு தமோ குணத்தாலானது.

கடமைகளை, உடல் வருத்தத்திற்குப் பயந்து துறந்தால், அது ரஜோ குணமாகும். இதற்கு துறவின் பலன் கிட்டாது.

செய்வதற்காக மட்டுமே, விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் பற்றின்றி செய்பவனது துறவு, சத்வ குணத்தாலானது.

சத்வ குணத்தவன், மங்கலச் செயல்களில் பற்று வைப்பதோ, அமங்கலச் செயல்களை வெறுப்பதோ இல்லை. செயல்பாடுகளிலும் அவனுக்கு சந்தேகம் வருவதில்லை.

உடலுடையவனுக்கு செயலைத் துறப்பது கடினம். எனவே செயலின் பலனைத் துறப்பவனே தியாகி எனப்படுவான்.

தியாகமற்றவனுக்கு இறப்பிற்குப் பின் சுவர்க்க, நரக அல்லது நடுநிலை எனும் மூவித கர்ம விளைவுகள் உண்டாகின்றன. சன்யாசிக்கு அவைகள் இல்லை.

பலவானே, செயலுக்கு முழுவடிவு தரும் ஐந்து காரணிகள் : இடம், இடமளிப்பவன், இந்திரியங்கள், இஷ்டம், இறுதியில் இறைவன் என ஸாங்க்ய தத்துவம் தெரிவிக்கிறது.

உட‌ல் ம‌ன‌ம் வாக்கினால் எதைச் செய்தாலும் அவை ச‌ரியான‌தோ அல்ல‌து த‌வ‌றான‌தோ இந்த‌ ஐந்து கார‌ணிக‌ளாலேயே உருவாகின்ற‌ன‌. இக்கார‌ணங்க‌ளைக் க‌ருதாது, த‌ன்னைக் கார‌ண‌மாக‌க் க‌ருதுப‌வ‌ன் அறிவாளி அல்ல‌; விஷ‌ய‌ங்க‌ளை உள்ள‌ப‌டி காண்ப‌வ‌னும‌ல்ல‌.

பொய் அக‌ங்கார‌மின்றி, ப‌ற்றின்றி இருப்ப‌வ‌ன் உல‌க‌த்தாரைக் கொன்றாலும் கொல்லாத‌வ‌னாவான். த‌ன் செய‌ல்க‌ளால் அவ‌ன் ப‌ந்தப்ப‌டுவ‌தில்லை.

அறிவு, அறிவின் இல‌க்கு, அறிப‌வ‌ன் இவையே செய‌லைத் தூண்டுப‌வை. க‌ருவி, க‌ர்ம‌ம், க‌ர்த்தா இவை செய‌லுக்கான‌ இருப்பிட‌ங்க‌ளாகும்.

முக்குண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ அறிவு, செய‌ல் ம‌ற்றும் செய‌ல்ப‌டுவோர் இருக்கின்ற‌ன‌ர்.

வேறுப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ளில் வேற்றுமையின்றி ஒரே ஆன்மீக‌ இய‌ற்கை (ஆன்மா) இருப்ப‌தாய் காணும் அறிவு ச‌த்வ‌ குண‌த்திலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

வெவ்வேறு உட‌ல்க‌ளில் வெவ்வேறான‌ உயிரின‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ அறியும் அறிவு ர‌ஜோ குண‌த்தினாலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

உண்மையைப் ப‌ற்றிய‌ அறிவின்றி, ஒரு காரிய‌த்தையே பிடிவாத‌மாய் பிடித்துக் கொண்டு, அதையே எல்லாமாக‌ அறியும் அறிவு த‌மோ குண‌த்தாலான‌து.

பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, கடமையாகக் கருதி, பலன் விளைவுகளைத் துறந்து ஆற்றப்படும் செயல் சத்வ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பெரும் ஆசையுடனும், பெரும் முயற்சியுடன், பொய் அகங்காரத்துடன் ஆற்றப்படும் செயல்கள் ரஜோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பின்விளைவயும், பந்தப்படுவதையும் பாராது அறியாமையுடனும், பிறருக்கு தீமை தரும்படியும் துவங்கப்பட்ட செயல்கள் தமோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பற்று நீங்கியவனாய், பொய் அகங்காரமற்றவனாய், உற்சாகம் ஊக்கமுடையவனாய், வெற்றி தோல்விகளில் நடுநிலை கொண்டவனாய் செயல்படுபவன் சாத்வீகன் ஆவான்.

செயலின் பலனில் இச்சை கொண்டவனாய், அதனை அனுபவிக்க விரும்புகிறவனாய், பேராசை, பொறாமை கொண்டவனாய், தூய்மையற்றவனாய், மகிழ்வும் சோர்வும் கொள்பவனாய் செயல்படுபவன் ரஜோ குணத்தவன் ஆவான்.

சாஸ்திர விதிகளுக்கு எதிராய் நடப்பவனாய், அறிவற்றவனாய், முரடனாய், ஏமாற்றுபவனாய், புறங்கூறுபவனாய், சோம்பேறியாய், கடுகடுப்பு கொண்டவனாய், காலம் தாழ்த்துபவனாய் செயல்படுபவன் தமோ குணத்தவன் ஆவான்.

அர்ஜுனா, முக்குணங்களுக்கேற்ப செயலாற்றுபவனது விவேகமும், மன உறுதியும் மூவகைப்படும்.

செய்யத்தகுந்தது - தகாதவை எவை, பயம் கொள்ளத்தக்கது - தகாதது எவை, பந்தப்படுத்துவது - விடுபடுத்துவது எவை. இவைகளை முன்கூட்டியே அறியும் விவேகம் சத்வ குணத்திலானது. (நல்லது நல்லதாகவும், கெட்டது கெட்டதாகவும் தெரிகின்றது).

அங்கனம் பகுத்தறிய இயலாத, தர்ம அதர்மங்களின் போக்கினையறியாத ஒருவனின் விவேகம் ரஜோ குணத்திலானது. (நல்லது கெட்டது தெரியாது).

அதர்மத்தை தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் அறியும் விபரீத விவேகம் தமோ குணத்தாலானது. (நல்லதெல்லாம் கெட்டதாகவும், கெட்டதெல்லாம் நல்லதாகவும் தெரியும்).

மாறா உறுதியுடன், மனம், வாழ்வு, புலன் செயல்கள் இவற்றைக் கட்டுடன் வைத்திருப்பவனது உறுதி சத்வ குணத்திலானது.

அறம், பொருள், இன்பம் இவற்றின் பலன்களை பற்றுடன் விடாமல் வைத்திருப்பவனின் மன உறுதி ரஜோ குணத்திலானது.

அதிக உறக்கம், கனவு, அச்சம், கவலை, கடுப்பு, பிடிவாதம் கொண்டவனின் மனவுறுதி தமோ குணத்தாலானது.

கட்டுண்ட ஆன்மாக்களின் மூவித சுகங்களைப் பற்றி அறிவாயாக.

முதலில் விஷம் போன்றும், பிறகு அமிர்தம் போன்றும் அனுபவிக்கப்படும் சுகம் சத்வமானது.

விஷயத்தொடர்பில், முதலில் அமிர்தம் போன்றும், முடிவில் விஷம் போன்றும் அனுபவிக்கும் சுகம் ரஜோ குணத்திலானது.

தன்னுணர்வுக்குத் தடையாயும், துவக்க முதல் இறுதி வரை மயக்கத்துடனும், சோம்பலுடனும் அனுபவிக்கும் சுகம் தமோ குணத்திலானது.

தேவர் உலகிலும், இவ்வுலகிலும் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுபட்டவர் எவருமிலர்.

குணங்களுக்கும், அதன் தன்மைக்கேற்பவும் செயல்படுபவர்களாயும் (ஸ்வபாவம்) மக்கள் - அந்தணர், ஆள்வோர், வணிகர், உழைப்போர் என நால்விதமாக உள்ளனர்.

மன அடக்கம், புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், இறைவன் இருப்பதை ஏற்று நடத்தல் - இவை அந்தணரின் இயல்பும் அதற்கேற்ற செயல்களுமாகும்.

தீரம், வீரம், உறுதி, வளமை, புறங்காட்டாமை, ஈகை, இறைமை ஆகியவை ஆள்வோருக்கான இயல்புகள்.

விவசாயம், பசுக்களைக் காத்தல், வளர்த்தல், வியாபாரம் இவை வணிகரின் இயல்புகள். இட்ட பணியைச் செய்தல் உழைப்போருக்கான இயல்புகள் ஆகும்.

அவரவர் தமது இயல்புக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் திருப்தியும், பக்குவமும் அடையலாம்.

எல்லா உயிர்களின் மூலமாயும், எங்கும் நிறைந்தும் இருப்பவருமான இறைவனை, தம் கடமைகளை சரிவர செய்தபடி வழிபடுவதால் ஒருவன் படிப்படியாக நல் நிலையை அடையலாம்.

நிறைவாய் ஆற்றப்படும் பிற தர்மத்தை விட - குறைவாய் ஆற்றப்பட்டாலும் சொந்த தர்மமே சிறந்தது. ஏனெனில் சொந்த தர்மத்தின் விளைவுகள் ஒருவனுக்கு பாவத்தைத் தருவதில்லை.

குற்றம் நிறைந்ததாயினும் தனது இயல்பான தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் தீயைப் புகழ் சூழ்ந்திருப்பது போன்று எல்லா முயற்சிகளையும் குற்றம் சூழ்ந்துள்ளது.

விஷயங்களில் பற்றின்மையாலும், சுகங்களில் நாட்டமின்மையாலும் துறவின் அதே பக்குவத்தைப் பெறலாம்.

குந்தி மகனே, எப்படி செயல்பட்டால் பிரம்ம நிலையை அடையலாம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

தூய அறிவுடன், உறுதியான மனதுடன், புலன் விஷயங்களைத் துறந்து, தனித்து வாழ்பவனும், சிறிதே உண்பவனும், உடலையும், நாவையும் அடக்கி தியானம், வைராக்கியத்துடன், கர்வம், வலிமை, பெருமை, காமம், கோபம், உடமையுணர்வு இல்லாதவனாயும் இருப்பவன் - நிச்சயமாக பிரம்மத்தளத்திற்கு உயர்த்தப்படுகிறான்.

அவன் உடனடியாக பரப்பிரம்மத்தை உணர்கிறான். அவன் இழப்பிற்காக வருந்துவதுமில்லை. எதையும் அடைவதற்காக ஏங்குவதுமில்லை. சம நோக்கு உடையவனாய் என்மீது தூய பக்தியைப் பெறுகிறான்.

பக்தித் தொண்டால் மட்டுமே என்னை உள்ளபடி ஆறிந்து எனது நாட்டிலுள் நுழைய முடியும்.

செயல்களில் ஈடுபட்டாலும் என் பக்தன் எனது கருணையால், எனது பாதுகாப்பில் அழிவற்ற பரமபதத்தை அடைகிறான்.

எனவே என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பில் செயல்படு. இதனால் என்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாய்.

எனது உணர்வினால் மட்டுமே எனது கருணையைப் பெற்று, எல்லா துன்பங்களையும் கடக்க முடியும். அகங்காரத்தால் இதை நீ ஏற்க மறுத்தால், உன்னை நீ இழப்பாய்.

என் பேச்சைக் கேளாமல், நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் ஸ்வபாவமே செய்ய வைத்துவிடும்.

அர்ஜூனா, முழுமுதற் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருந்தவாறு, இயந்திரம் போன்ற உயிரினங்களின் பயணத்தை வழி நடத்துகிறார். முழுவதும் அவரைச் சரணடை. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும் நித்திய தலத்தையும் அடைவாய்.

ஞானங்களிலெல்லாம் ரகசியமானதை உனக்குச் சொல்லி விட்டேன். இனி நீ ஆராய்ந்து உன் விருப்பப்படியே செய்.

என்னையே நினைத்து, என் பக்தனாயாவாக‌. என்னை வழிபட்டு உன் வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ என்னிடம் தவறாது வந்து சேர்வாய். நீ எனக்கு நண்பன் என்பதால் இந்த வாக்குறுதியைத் தருகிறேன்.

எல்லா மதங்களையும், அவற்றின் மீதான உனது அபிமானங்களையும் விட்டு என்னைச் சரணடைந்தால், எல்லா பாப விளைவுகளிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். நீ பயப்படத் தேவையில்லை.

தவமில்லாதவன், பக்தியற்றவன், எனக்குத் தொண்டாற்றுவதில் பொறாமையுள்ளவன் இவர்களுக்கு இந்த ரகசிய ஞானம் கூறப்படலாகாது.

பக்தர்களிடம் இந்த பரம ரகசியத்தை விளக்குகிறவனுக்கு, பக்தித் தொண்டு உறுதியாகிறது. அவன் முடிவில் என்னை அடைகிறான். அவனை விட எனக்கு விருப்பமான தொண்டன் உலகில் யாருமில்லை. எவரும் ஆகவும் முடியாது.

தர்மங்கள் நிறைந்த இவ்வுரையாடலைக் கற்பவன், அறிவால் என்னை வழிபடுகிறான் என நான் அறிவிக்கிறேன்.

பொறாமையின்றி, நம்பிக்கையுடன் இதைக் கேட்பவன், பாப விளைவுகளினின்றும் விடுபட்டு, நல்லோர் வாழும் உலகை அடைகிறான்.

தனஞ்சயா, கவனத்துடன் கேட்டாயா? உன் மயக்கம் நீங்கியதா?

அர்ஜூனன் : அச்யுதா, என் மயக்கம் தெளிந்தது; உமது கருணையால் எனது நினைவைப் பெற்றேன்; உறுதியானேன்; உமது சொற்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு மகாத்மாக்களான ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜூனனும் உரையாடியதைக் கேட்டேன். அற்புதமான இவ்விஷயங்களைக் கேட்டதால் என் ரோமம் சிலிர்க்கின்றது. வியாஸ தேவரின் கருணையால் யோகிகளின் இறைவனான ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம் நேரடியாகக் கூறிய மிக ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து கணம் தோறும் இன்பமடைகிறேன். மன்னா, பகவானின் அற்புத உருவை எண்ணி நான் வியப்புடன் மகிழ்கிறேன்.

யோகிகளுக்கெல்லாம் இறைவனான ஸ்ரீகிருஷ்ணரும், சிறந்த வில்வீரனான அர்ஜூனனும் இருக்குமிடத்தில், நிச்சயமாக செல்வமும், வெற்றியும், அசாதாரணமான திறனும், நீதியும் இருக்கும் என்பது எனது அபிப்ராயமாகும்

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum