Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஆசார்ய மத்வர்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஆசார்ய மத்வர்
ஆசார்ய மத்வர்
******************
******************
பாரத நாட்டின் பெருமைகள் பலப்பல. எனினும் அதன் தனிப் பெரும் பெருமை அடங்குவது. அது உலகிற்கு அளித்துள்ள தத்வஞானத்தில், மெய் ஞானத்தில் இந்த நாடு கண்ட வளர்ச்சிக்கு முன், இன்றைய உலக விஞ்ஞான வளர்ச்சியேகூட ஈடாகாது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கை பலன்கள் கண்கூடு. மேலும் மேலும் அதிக வசதிகள் இருப்பினும் விஞ்ஞானத்தில் தெரிந்ததைவிட தெரியாததே அதிகம் என் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்!. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என கல்விக்கரசி ஸரஸ்வதி தேவியே இந்த தத்துவம் அறிந்தவர்களுக்கு விஞ்ஞானம் தெளிந்த நீரோடை. தெரியாதவர்களுக்கு மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் ஓர் அஞ்ஞானம் - இருட்டு - அழிவுப்பாதை.
கத்தி வைத்திருப்பவனுக்கு புத்தி சரியாக இருப்பின் சுகம். தவறினால் துக்கம். கத்தி - விஞ்ஞானம் (ஜடம்). புத்தி - மெய்ஞானம் (சுகம்) தவறினால் அஞ்ஞானம் (துக்கம்)
எனவே நம் ரிஷிமுனிகள் மெய்ஞானத்தில் அதிக வளர்ச்சியை தேடினார்கள். அதற்கு அடிபணிந்தார்கள். விஞ்ஞானத்தை ஆக்கபூர்வமாக ஓர் எல்லைக்குள் உபயோகித்துக்கொண்டார்கள். அடிபணிய வைத்தார்கள். இதன் பலன் பூர்ண சுகம்!
எந்த ஒன்றை தெரிந்துகொண்டால் எல்லாம் தெரியுமோ ; எந்த ஒன்று தெரியாவிட்டால், மற்ற எது தெரிந்தும் சுகம் இல்லையோ - அந்த ஒன்றை தெரிந்தாயோ? என கல்விச் செருக்குடன் வந்த மகன் நிசிகேதனைப் பார்த்து தந்தை உத்தாலகர் காடகோபநிஷத்தில் கேட்டது, இந்த மெங்ஞான அறிவைத்தான்.
இந்த நாடு கண்ட மெய் ஞானிகள் அநேகம், அநேகம் விஞ்ஞானிகள் இந்த உலகில் உள்ள பொருட்களை ஆராய்ந்து விஞ்ஞானி அறிவை வளர்ப்பது போல, மெய்ஞானிகள் இந்த உலகின் முழு முதற் காரணத்தை தம் அனுபவத்தால் அறிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்கிறார்கள். காணும் பொருட்கள் எப்படி இயங்குகின்றன என விஞ்ஞானம் தேடினால், இப்படி இயங்குவதற்கு காரணமான கண்ணில் காணாத காரணத்தை மெய்ஞானம் தேடுகிறது. மெய்ஞானத்துள் விஞ்ஞானம் அடக்கம்.
இந்த நாட்டின் மெய்ஞான அறிவிற்கு நதிமூலம் வேதங்கள் (யாராலும் இயற்றப்படாதவை) மற்றும் அது தழுவிய வேதாந்தம், இதிஹாஸம், புராணங்கள் முதலியவை. இவையெல்லாம் அனுபவங்களின் தொகுப்புகள். புதிர்கள் புரிந்துகொள்வது எளிதல்ல. எடுத்துக்கூற நல்ல ஆசிரியர்கள் தேவை. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு ஆசிரியர்கள் - அதாவது ஆசாரியர்கள் - இதைச் செய்திருக்கிறார்கள். இதுவும் ஓர் வளர்ச்சியின் தொடர்ச்சியே !
இந்த அறிவின் வளர்ச்சிக்கு பலநூறு, ஆயிரம் என் சாதனையாளர்கள் காரணமாயிருப்பினும், காலத்தால் அழியாது நம்மிடையே மததில் நிற்கும் வேதாந்த ஆசாரியார்கள் மூவரே! சங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வர் ஆகிய மூவரில் சங்கரர் முதலில் தோன்றினார்.
வேதங்கள் பொய், இறைவன் இல்லை என பறைசாற்றி, ஆனால் அதில் கூறப்பட்ட அஹிம்சை, தர்மம் என் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்ட புத்த மதம் பரவலாக இந்த நாட்டில் திணிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் சங்கரர் தோன்றினார். வேதத்தையும் அதில் கூறப்பட்டுள்ள பல தத்துவங்களையும் மீட்டுக்கொடுத்து இந் நாட்டின் அடிப்படை ஞான விளக்கை மறுபடியும் ஏற்றினார். வேதத்திற்கு புறம்பான-தவறான-புத்த மதத்தை தடுத்து நிறுத்தியதில் சங்கரருக்கு பெரும் பங்குண்டு.
ஆனால், புத்த மதத்தின் சூன்யம் (ஒன்றும் இல்லை) ஷனிகம் (எல்லாம் தற்காலிகமே) போன்ற சில தவறான அடிப்படை தத்துவங்கள் சங்கரரை அவர் அறியாமலே வசப்படுத்திவிட்டன. இது எந்த காலத்தின் கட்டாயம் போலும். ! கால நாயக இறைவனின் திருவிளையாடல். 32 வயதிற்குள் நாடெல்லாம் நடந்து திரிந்து புத்த மத்ததை தடுத்தவர், அதிலுள்ள ‘அனீஸ்வர’ (கடவுள் இல்லை) வாதத்தை மறுத்தவர், வேத மத்ததை விவரிக்கும் போது கடவுள் ‘நிராகாரன்’ (உருவமற்றவன்) ‘நிர்குணன்’ (குணமற்றவன்) அநீர்வசனீயன் (சொல்லமுடியாதவன்) 'உலகமே மாயை' (பொய்) 'எல்லாம் கடவுளே' , 'எல்லோரும் கடவுளே' என் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லி புத்தமத அடிப்படைகளையே பெயர் மாற்றி (அத்வைதம் என்று) கொடுத்துவிட்டடார்! இது நடந்தது 8-ம் நூற்றாண்டில்.
இந்தக் குறையை பெரிதும் நீக்கியவர் அடுத்து வந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமானுஜர். எல்லோரும் கடவுள் அல்ல. கடவுள் ஒருவனே. வேதத்தில் அவன் பெயர் நாராயணன். மற்றவர்கள் அவனுக்கு அடிபணியும் தேவதைகள். இவற்றை மனதில் பதிய வைத்து வாழ்க்கையில் நடைமுறைபடுத்தியவர் ராமானுஜர்.
ஆனால் சில வேதாந்த கருத்துக்கள் சரியாக வெளிப்படவில்லை. கடவுளுடன் ஜீவர்களுக்கு முக்தியில் சரிசமமான ஆனந்தம், ஜீவர்களிடையே குணத்தால் வரும் ஏற்றத் தாழ்வுகளில் சில வித்யாசங்கள், கடவுளின் அவதாரங்களில் ஏற்றத்தாழ்வுகளை காணுதல், உலகத்தை கடவுளின் சரீரம் என உருவகப்படுத்துதல் மற்றும் இவைபோன்ற நுட்பமான கருத்துக்களில் திருத்தங்கள் தேவைப்பட்டன.
இந்த மாற்றங்களுடன் கூடிய வேதாந்த கருத்துக்களின் உண்மையான மற்றும் முழுமையான உருவகத்தை நமக்குக் கொடுத்தவர் 13-ம் நூற்றாண்டில் வந்த ஆசாரிய மத்வர். சங்கரர் புதுப்பித்த மெய்ஞானம் முழுமை வடிவத்தை பெற்றது மத்வர் காலத்தில்தான். இந்த ஆசாரியர்கள் கூறிய கருத்துக்களை சரி, தவறு என காணாமல் இதை மெய்ஞானத்தில் ஓர் பரிணாம வளர்ச்சி என்று காண்பதே பயன் தரச்கூடியது. இந்த வளர்ச்சியின் சிகரம் கண்டவர் ஆசாரிய மத்வர்.
ஆசாரிய மத்வரின் காலம் கி.பழ 1238 முதல் கிபி ஹ1317 வரை உடுப்பியிலிருந்து 8-மைல் தெலைவிலுள்ள 'பாஜக' எனும் மலை சூழ் சிற்றூரில் அவதரித்தார். தந்தை மத்யகேஹ பட்டர். தாய் வேதவதி. இவருக்கு முன்னால் ஓர் தமக்கையும் பின்னால் ஓர் தம்பியும் பிறந்தனர். தமக்கையின் பெயர் கல்யாணிதேவி. இந்த தம்பியே பிற்காலத்தில் ஸ்ரீ மத்வரால் ஸந்யாஸ தீட்சை கொடுக்கப்பட்டு விஷ்ணுதீர்த்தராக மாற்றம் கண்டவர்.
சிறு வயதிலேயே தன் அஸாத்ய புத்திபலம், புஜபலங்களை மத்வர் வெளிப்படுத்தினார். பள்ளிப்படிப்பில் அதிக கவனம் செலுத்தாதவர், ஆசிரியருக்கே புதிய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு தன் படிப்பறிவை காண்பித்தவர். கற்றுக்கொள்ள வந்தவர் அல்ல இவர், கற்றுக் கொடுக்க வந்தவர் !ஆமாம் குருவிற்கே குருவானவர்.!!.
தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் 'வாஸுதேவன்' ஸந்யாஸம் கிடைத்தபோது வந்த பெயர் 'பூர்ணப்ரநர்' என்பது. வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்டபோது பெற்ற பெயர் 'ஆனந்த தீர்த்தர்' . இது தவிர, 'மத்வ' , 'தஸப்ரமதி' போன்ற பெயர்களை வேதமந்திரங்களில் இவரை குறிக்கின்றன. 'ஸ்ரீமத்வ பிஜயம்' எனும் காவியத்தில் நாராயண பண்டிதர் இவரை நு}ற்றுக்கணக்கான, பொருள் பொதிந்த பெயர்களால், கவிநயத்துடன் குறிப்பிடுகிறார்.!
'ஸ்ரீ மத்வ விஜயம்' நூல்தான் ஸ்ரீ மத்வரின் வாழ்க்கை சரித்திரத்திற்கு முக்கிய ஆதாரம். இதன் ஆசிரியர் நாராயண பண்டிதர் மத்வரை நேரில் கண்டவர். மேலும் மத்வரின் ப்ரதம சிஷ்யரான த்ரிவிக்ரம பண்டிதரின் புதல்வர். இதைப் போன்ற ஆதார பூர்வமான சரித்திர பதிவு மற்ற ஆசாரியர்களுக்கு கிடைக்கவில்லை.
இதையும், மற்ற சில முக்கியமான ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு மத்வரின் வாழ்க்கை சரித்திரத்தையும், மேலும் அவருடைய சாதனை, போதனை, வேதக் கருத்துக்கைள அவர் விளக்கிய விதம், எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் பொருந்தும் அடிப்படை சித்தாந்தங்கள், அவருடைய சமூக கருத்துக்களும் மக்கள் சேவையும், விஞ்ஞான உலகில் மெய்ஞானத்தின் முக்ய பங்கு என்பதனை பின்னர் காண்போம்.
நன்றி:தத்வ வாத இதழ்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum