இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

Go down

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு Empty புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

Post by ஆனந்தபைரவர் Sat Aug 07, 2010 10:00 pm

அரவிந்தன் நீலகண்டன்


குமரி மாவட்டம். வெள்ளிமலைச்சாரலின் அடிவாரம்….மாலை வேளை தொலைவில் கேட்கிறதா உங்களுக்கு? ஹிந்து வித்யா பீட மாணவர்கள் பாடுகிறார்கள். “அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகிறாள்…”

அவர்களில் எவரும் தொலை நோக்கி மூலமாக வானத்தை பார்த்தவர்களில்லை. ஆனால் தன் வாழ்நாள் முழுவதையும் வானோக்கி மூலமாக விண்மீன்களை காண்பதிலேயே செலவிட்ட ஒரு விஞ்ஞானி இதே முடிவுக்கு வந்து ஏறக்குறைய இதே வரிகளை கூறுகிறார் என்றால்…மேற்கத்திய மரபின் புனித பயணம் அது என்று சொல்லலாம். வான் நோக்கியின் நானூறு ஆண்டுகால புனிதபயணம் - பிரம்மத்தை வான்வெளியில் தரிசிக்க. galileo“Whereas you, Galileo, the son of the late Vincenzo Galilei, Florentine, aged seventy years, were in the year 1615 denounced to this Holy Office for holding as true the false doctrine…..” இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கியக் கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாகப் பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர், தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார். சில அடிகளே உள்ள, மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு, விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? ஆம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கலிலியோ கலிலி என்கிற கணிதப் பேராசிரியர் தமது வான் நோக்கியை வெனீஸ் நகரின் நகரசபையாருக்கு சமர்ப்பித்தார்.

ஆனால் அது அன்று வான் நோக்கியாக வாங்கப்படவில்லை. தொலைநோக்கியாக குறிப்பாக, கப்பல் படையெடுப்புக்களைப் பார்க்கும் இராணுவ உபகரணமாகத்தான் வாங்கப்படவிருந்தது. அறிவியலின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள், ’தொலைநோக்கியை முதன் முதலாக வானத்தை நோக்கி திருப்பி வான் ஆராய்ச்சி செய்தவரும் கூட கலிலியோ அல்ல’ என்கிறர்கள். ஆனால் கலிலியோவின் முக்கியத்துவம் அவர் முதன் முதலாக தொலைநோக்கியை இரவு வானின் விண்மீன்களையும் கிரகங்களையும் நோக்கும் கருவியாக பயன்படுத்தினாரா என்பதில் இல்லை. 1610 இல் அவர் தொலை நோக்கியை வான் நோக்கியாகப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருந்ததுடன், தாம் கண்டவற்றை ஒழுங்காகப் பதிவு செய்தார். galileo_galilei_discorsi_e_dimostrazioni_matematiche_intorno_a_due_nuove_scienzeஅதன் அடிப்படையில் வானத்தில் கோள்களின் இயக்கங்கள் குறித்து கணிக்கவும் செய்தார். முக்கியமாக, 1610 ஆம் ஆண்டு அக்டோ பர் 1 முதல் டிசம்பர் 30 வரை வெள்ளி கிரகத்தின் வளர்கலை-தேய்கலைகளை அவர் கவனித்து வரைபடங்களாக்கினார். தாலமியின் புவி மையக் கோட்பாட்டின் (Geo-centric theory) அடிப்படையில் வெள்ளியின் கலைகளை விளக்க முடியாது என உணர்ந்த கலிலியோ இதன் அடிப்படையிலேயே கோப்பர்நிக்கஸின் சூரிய மையக்கோட்பாட்டினை ஆதரித்து நூல் எழுதினார். பின்னர் நடந்தவை வரலாற்றின் முக்கிய மைல்கற்கள். அடிப்படை வாத மேற்கத்திய மதத்துடன் அறிவியலுக்கு ஏற்பட்ட மோதல் இன்றைக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வானியலை பள்ளிச் சிறார்களுக்கும் சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்வது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கிறது. பிரபஞ்சமெங்கும் வெளிப்படும் அழகிலும் ஒழுங்குணர்விலும் ஒரு இறைத்தன்மையை உணருவதன் மூலம் பெறும் ஆன்மிக அனுபவம் அது. மத எல்லைகளைத் தாண்டி மானுடத்தை சிருஷ்டியுடன் இணைக்கும் ஆன்மிகம் அது. அறிவியலைப் பொது பிரக்ஞைக்குக் கொடுப்பது ஆரோக்கியமான சமுதாய சூழ்நிலை உருவாக முக்கியமான தேவை. இதில் பெரிய பங்காற்றியுள்ள ஒரு ஆளுமை ஜான் டோப்ஸன் (John Dobson). “விண்மீன் துறவி” (Star Monk) என அழைக்கப்படும் ஜான் டோப்ஸன் (John Dobson) இராமகிருஷ்ண மடத் துறவியாக இருந்து வானியலாளர் ஆனவர்.
johndobson2002

John Dobson

இன்றக்கும் தென் கலிபோர்னிய வேதாந்த நிறுவனத்தில் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் குறித்து ஆண்டுக்கு இருமாதங்கள் வகுப்புகள் எடுக்கிறார் தொண்ணூறு அகவையைத் தாண்டிய இந்த மாமனிதர். இவரது மிகப்பெரிய வாழ்நாள் சாதனை அனைவராலும் எளிதாக பயன்படுத்த முடிந்த, விலை குறைவான, சக்தி வாய்ந்த வான்நோக்கிகளை உருவாக்கியது. டோப்ஸன் வான்-நோக்கி (Dobson Telescope) என அழைக்கப்படும் இவர் வடிவமைத்த தொலைநோக்கிகளே அமெரிக்காவில் இளைய தலைமுறையினரிடையே வானியலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் உந்து சக்தியாக அமைந்தது. இன்று அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அவர் உருவாக்கிய “நடையோர வானியலாளர்கள்” (sidewalk astronomers) என்ற பொதுஜன வானியல் ஆர்வலர்கள் அமைப்பு பரவியுள்ளது. ஜான் டோ ப்ஸன் வானியலுக்கும் அதனூடாக நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனத்துக்கும் வேதாந்தத்துக்குமான இணைத்தன்மை குறித்து கூறுவதை கேளுங்கள்:

அனைத்தின் அடிப்படையான இருப்பினை, காலமும் வெளியுமாக வெளிப்படும் அதனை அன்னையாகக் கண்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். நாம் எதையும் செய்யவில்லை அனைத்தியக்கத்திலும் அன்னையே செயல்படுகிறாள்.


டோப்ஸன் லாவோட்ஸை மேற்கோள் காட்டுகிறார்: அவளில் சரண் புகுந்தேன் இப்போதும் என்றென்றும் அவளுக்கே தலை வணங்குவேன்.

சில கணங்களில் ஜான் டோப்ஸனின் அறிவியல் இசைதுதியாகவே மாறுகிறது:

அன்னையே ஹைட்ரஜன்! அன்னையே அகணித தாரா கணங்கள்! கடும் உலோகங்களை உதிர்ப்பவள் அவளே. பாறை மேலோடுகள் கொண்ட கிரகங்களாகுவதும் அவளே. அவளே புவியெங்கும் தாதுக்களானாள். அவற்றை சேகரித்து நம்மை ஜனித்தாள். சூரிய ஒளியாகி தாவரங்கள் மேல் தகித்தாள். பிராணவாயு வெளியேறியது. தாவரங்களை நாம் புசித்தபடி இப்பூமியின் பரப்பெங்கும் நாம் அவசர அவசரமாக ஓடுகிறோம். நமக்கு எல்லாம் தெரியுமென்ற எண்ணம். ஆனால் அனைத்துமாகி நிற்கும் அவளது ஆட்டத்தில் நாம் ஒரு அங்கமென்பதை மறந்தோம். காலத்திலும் வெளியிலும் மாற்றமற்ற அது தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் அசைவற்றத்தன்மையென்றொன்று இருக்குமா? அது இல்லையெனில் மின்சாரம் இருக்குமா? அபின்னமான அது தன்னை வெளிக்காட்டவில்லையெனில் ஈர்ப்புப் புலமும் எதிரெதிரானவையிடம் ஈர்ப்பும் இருக்குமா? இருமையிலிருந்து பன்மை வரவில்லையெனில் நமக்கு தனிமங்களின் அணு எண் அட்டவணை கிட்டியிருக்குமா? பன்மையினை இருமை பேணாவிடில் அணுக்கள்தாம் இருக்குமா? இப்படித்தான் நான் பிரபஞ்சத்தை பார்க்கிறேன். வெளி என்பது பலவற்றை பிரிக்கும் ஒன்றல்ல. ஒன்றானதை பலவானது போல காட்டிடும் ஒன்று. அவ்வெளியில் அந்த ஒருமை ஒளிர்கிறது அவ்வொளி எங்கும் எதிலும் பிரகாசிக்கிறது. [ஜான் டோப்ஸன், பிப்ரவரி 28 2002]

நிறுவன கிறிஸ்தவத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு புனித புயணத்தின் பரிணாம வளர்ச்சி இன்று பாரதத்தின் வேதாந்த மரபினில் இசைவு பெறுவது பொருத்தமான விஷயம் தான. ஆம் அறிவியலை பாட முடியும் - இங்கு இந்த மண்ணின் கலாச்சாரத்தில் இந்து மண்ணின் ஆன்மிகத்தில் - கவிதையாக இறைத்துதியாக…எளிய பஜனைப் பாடலாகக்கூட:

அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதி பராசக்தி ஆடுகிறாள்
சகல சராசரத்தும் தங்க சிலம்பொலிக்க
ஜெகதீஸ்வரி அவள் ஆடுகிறாள்
அகிலாண்டேஸ்வரி ஆடுகிறாள்

அகில உலகில் உள்ள ஆருயிர் இனங்களும்
ஆழப்பெருங்கடலில் வாழுயிர் இனங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கு தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகிறாள்
ஆதி பராசக்தி ஆடுகிறாள்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum