Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மந்திரங்கள்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மந்திரங்கள்
இராம பக்தனாகிய அனுமனுக்கு, இராமபிரான் ஒரு அரிய மந்திரத்தை உபதேசம் செய்தார். அத்துடன் "இது மிகவும் ஆற்றல் மிக்க மந்திரம்.எல்லோருக்கும் சொல்லக் கூடாது.இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளவர்களிடம்தான் உபதேசம் செய்யவேண்டும்....எனவே நீ மனதுக்குள்ளேயே உருச் செய். " என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
மறுநாள் வெளியே பறையறிவிக்கும் ஒலி கேட்டு, உப்பரிகையின் வழியே பார்த்தார் இராமபிரான்.அதிர்ச்சி அடைந்தார்......... திகைத்தார். ஏனெனில் , தான் அனுமனிடத்தில் கூறிய மந்திரத்தை, பறையொலியெழுப்பிக் கூறியவண்ணம், தெருத்தெருவாக வலம் வந்து கொண்டிருந்தார் அனுமன்.
"சே....என்னதான் அனுமனாக இருந்தாலும், கடைசியில் தனது இனத்தின் புத்தி அவனுக்கும் வந்துவிட்டதே" என்று மனம் நொந்த இராமபிரான், உடனே, அனுமனை அழைத்துவரச் சொல்லி சேவகர்களை அனுப்பினார்.
அனுமனும் வந்தார். அவரைப் பார்த்த இராமன்" அனுமா.......பக்குவம் உள்ளவர்களுக்குச் சொல்லவேண்டிய மந்திரத்தை, இப்படிப் பறையறிவித்து விட்டாயே" என்று கூறி வருந்தினார்.
அதற்கு அனுமன், " இல்லை இராமா.....நான் தவறேதும் செய்யவில்லையே!...பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டும்தானே உபதேசம் செய்தேன்..தாங்கள் வேண்டுமானால், எனது பறையறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த சிலரை அழைத்துக் கேட்டுப் பாருங்கள்" என்றார்.
அனுமன் கூறியபடியே, பறையறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களில் சிலரை அழைத்து வரச்சொன்னார்.அவர்களிடம் , " அனுமன் பறையறிவித்து என்ன கூறினான்" என்று வினவினார்.
பாமரர்களோ புரியவில்லை...ஏதோ உளறிக்கொண்டு சென்றார், என்றார்கள்.
சிலர், அனுமன் புரியாத மொழியில் விகடமாகப் பேசினார் என்றார்கள்.
பக்குவம் உள்ள ஞானிகள் மட்டும், " ஆகா......இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபட வழிகாட்டும் அற்புதமான பிரணவ மந்திரம் அல்லவா கூறினார் அனுமன் என்றார்கள். இதைக் கேட்ட இராமபிரான், அனுமனின் அறிவு நுட்பத்தை உணர்ந்து பாராட்டினார்.
இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பெரும்பாலோனோர், பலவகையான மந்திரப் பாடல்களை சுலோகங்களை, புத்தகத்தில் இருந்து மணப்பாடம் செய்துகொண்டு, வார்த்தை அலங்காரத்துடன் பாடுகிறார்களே தவிர அதன் உண்மையை, பொருளை, அந்த மந்திரங்களை, எப்படி தமது வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவது என்றெல்லாம் தெரியாமலேயே இருக்கிறார்கள். அவர்கள் சுலோகங்களைச் சொல்லுவதைக் கேட்பவர்களும்,,,ஆஹா....எப்படிச் சொல்லுகிறான் ..பார்...மிகவும் சக்தியுள்ளவன் என்று சிலாகிக்கிறார்கள்.ஆனால் உண்மை அப்படி இருக்கிறதா?சுலோகங்களையும் மந்திரங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால் மட்டும் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடக்க முடியுமா? கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.
மந்திரங்களைக் கேட்பதினாலோ, அதனை மனப்பாடம் செய்வதாலோ மட்டும் ஆற்றல் வந்துவிடுவதில்லை.கேட்ட மந்திரத்தின்மீதும், அதை உபதேசித்த குருவின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைப்பவனுக்கே ஆற்றல் பிறக்கிறது.
ஒரு சிறிய கதை நினைவிற்கு வருகிறது.ஒரு ஆறு. அந்த ஆற்றில் எப்போதும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒரு பால் விற்கும் பெண்மணி, தினமும் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று, அங்கே ஆசிரமம் அமைத்து வாழ்ந்துவரும் ஒரு துறவிக்குத் தேவையான பாலை ஊற்றிவிட்டு வரவேண்டும். பல நாட்கள், படகு நேரத்துக்கு கிடைக்காத காரணத்தால், அந்தப் பெண்மணியால், துறவிக்குத் தேவையான பாலை தக்க சமயத்தில் கொடுக்க இயலாமல் தாமதம் ஆனது. அவள் தாமதமாக வரும்போதெல்லாம், ஏன் தாமதம் என்று துறவி கேட்பார். அவளும் , ஆற்றில் வெள்ளம். படகு கிடைக்கவில்லை என்று பதிலளிப்பாள்.
ஒருநாள் துறவி, அந்தப் பெண்ணிடம், " அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு பூசைக்குரிய பால் நேரத்தில் கிடைக்கவேண்டும்.ஆற்று வெள்ளத்தின் மேல் நடந்து வந்தாவது நேரத்துடன் பால் கொடுக்கவேண்டும் " என்றார்.அப்பாவியான அந்தப் பெண், " குருவே, இதுபோன்ற காரியமெல்லாம் என்னால் செய்ய இயலுமா? தங்களின் அருள் கிடைத்தால் ஒருவேளை தாங்கள் கூறியபடி நீர்மேல் நடப்பேன் " என்றாள். மனதுக்குள் சிரித்துக்கொண்ட துறவி, எதையாவது கூறியாகவேண்டுமே என்று நினைத்து, "நீரே...நீரே...வழிவிடு" என்ற இந்த வார்த்தைகளை மந்திரமாக ஏற்று, என்று ஒரு லட்சம் தடவை கூறிவிட்டு, நீரின்மேல் நட... உன்னால் நடக்க இயலும் என்றார்.அப்படியே குருவே என்று அந்தப் பெண் போய்விட்டாள்.
அடுத்து இரண்டு நாட்கள் பால்காரப் பெண் வரவில்லை.மூன்றாவது நாள், பூசைக்குரிய சரியான நேரத்தில் பால் கொண்டுவந்தாள்.
துறவி அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். ஆற்றிலே வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . படகும் ஓடவில்லை. நீ எப்படி இக்கரைக்கு வந்தாய் என்று கேட்டார்.
அதற்கு அவள், " குருவே....தாங்கள் உபதேசித்த மந்திரத்தை, தாங்கள் கூறியபடியே லட்சம் முறை உருச் செய்தேன்.இன்று காலை ஆற்றங்கரை வந்ததும் , நீரே...நீரே வழிவிடு என்றபடி நடந்தேன். நீரின்மேல் நடக்க முடிந்தது.எல்லாம் தங்கள் கருணைதான்" என்றாள்.
இதைக் கேட்ட குரு திகைத்து, வாயடைத்துப் போனார். அவர் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகளை, அவள் உண்மையென நம்பி, அந்த நம்பிக்கையை தன் மனதில் உறுதியாக வளர்த்து, நீர்மேல் நடக்கும் சக்தியைப் பெற்றாள்.
மந்திரம் என்பதை ஒரு திண்டுக்கல் பூட்டின் சாவி என்று வைத்துக் கொள்வோம்.சாவி கையில் இருந்தாலும், பூட்டை எல்லோராலும் திறக்க இயலாது.அதற்குரிய நுட்பம் வேண்டும்.மன உறுதி வேண்டும்.மந்திரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மனதுடன் ஒருமுகப் படுத்தும் நுட்பம் தெரியாதவரை பயனில்லை.
'ஓம்' என்ற சொல்லே நம் உள்ளம் என்னும் திருக் கோவிலைத் திறக்க உதவும் ஒரே திறவுகோல்.அதற்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும், அந்தத் திருக்கோவிலினாற்றல் வளாகத்தை நமக்கு உணர்த்தும் ஒளிவிளக்குகள்.அதனால்தான், அனைத்து மந்திரங்களும் "ஓம்" என்ற ஒலியுடன் தொடங்குகிறது.
ஓம்.......என்ற ஒலி மூன்று படிகளை உடையது. அதாவது, அகரம், உகரம், மகரம் என்ற ஒலி நிலைகள்.
பயிற்சியின்போது ஐந்து நிலைகளாக விரியும்.
அகரம் - விழிப்பு நிலை.
உகரம் - கனவு நிலை
மகரம் - உறக்க நிலை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....என்ற தொடர் ஒலி , கனவற்ற உறக்கத்தை உணர்த்தும் துரிய நிலை.
தொடர் ஒலியின் இறுதில் ஏற்படும் அமைதி. தன் இழந்த சமாதி நிலை.. அதை துரியாதீத நிலை என்போம்.
ஆக , ஐந்து நிலைகள்.
முதலில் மந்திரங்களை, உதட்டை அசைத்துச் சொல்லவேண்டும்.பழகிய பின்பு, உதட்டையோ நாவையோ அசைக்காமல், மனத்தை மட்டும் அசைத்துச் சொல்லப் பழகவேண்டும். இறுதியில் நம்முள் இருந்து மந்திரம், நீர் ஊற்று போல் தானே அலை அலையாஇப் பொங்கி வெளி வரவேண்டும்.
இப்படி மந்திரங்கள் கூறுவதில் ஆற்றல் வருகிறதொ இல்லையோ, நமது மனதுக்கு சிறந்த ஆற்றல் கிடைக்கிறது.

Similar topics
» சிவ மந்திரங்கள்
» காயத்ரி மந்திரங்கள்
» மகத்தான மந்திரங்கள்
» தந்திர யோக மந்திரங்கள்
» முக்கிய மந்திரங்கள்
» காயத்ரி மந்திரங்கள்
» மகத்தான மந்திரங்கள்
» தந்திர யோக மந்திரங்கள்
» முக்கிய மந்திரங்கள்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum