இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காயத்ரி மந்திரம்

Go down

காயத்ரி மந்திரம்  Empty காயத்ரி மந்திரம்

Post by ஆனந்தபைரவர் Fri Aug 27, 2010 11:43 pm

காயத்ரி மந்திரம்  Gayatri021

ஆகாயத்தில் எங்கோ வெகு தூரத்தில் இடி இடிக்கிறது. அதன் ஓசை நம் காதுகளை வந்தடைகிறதே, எப்படி? அந்த ஒலிஅலைகளைக் காற்று சுமந்து வந்து நம் காதுகளில் சேர்க்கிறது. இவ்வாறு ஒலி அலைகளைச் சுமந்து செல்லும் காற்றின் தனிப்பிரிவை "ஈதர் ஒலி அலைகள்' என்று கண்டறிந்தார் விஞ்ஞானி மார்க்கோனி! அவரே கம்பியில்லாமல் (ரண்ழ்ங்ப்ங்ள்ள்) ஒலியைச் செலுத்தும் ரேடியோவைக் கண்டறிந்தவர் என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறு காற்றில் பரவி வரும் ஒலி அலைகளிலிருந்து அற்புதமான சப்தங்களை- மந்திரங்களை அறியும் ஆற்றலை நம் நாட்டு ரிஷிகளும் முனிவர்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர்.

அவ்வாறு அறிந்த மந்திர ஒலிகளை அவர்கள் மிக ரகசியமாகப் பாதுகாத்து, தங்களது சிறந்த சீடர்களுக்கு மட்டுமே உபதேசித்து வந்தனர். இவற்றின் பயன்பாடு பெரும்பான்மையான மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் மறைத்தே வைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் வேதத்தை "மறை' என்ற சொல்லால் தமிழில் குறிப்பிட்டனர்.

மந்திர ஒலிகளின் பயனை அனைவரும் பெற வேண்டும் என்னும் எண்ணமுடைய ஒருவர் துவாபர யுகத்தில் தோன்றினார். அவரே வியாச பகவான்! ஒலி வடிவமாய் மட்டுமே இருந்த வேதத்தை வரி வடிவத்திற்கு (எழுத்திற்கு) கொண்டு வந்தவர் வியாசரே. பரவலாக இருந்த வேதத்தைத் தொகுத்து ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு பிரிவாக்கியவரும் வியாசரே! இதனாலேயே இவர் வேதவியாசர் எனப்பட்டார்.

யாரால், எப்பொழுது சொல்லப்பட்டது என்று அறிய முடியாதது வேதம்! எனவே கடவுளே சொன்னது என்ற நம்பிக்கை நிலைத்து விட்டது. அதனாலேயே கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இறைவனாகிய பரம்பொருளை "வேதமுதற் காரணன்' என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளான். தனது இராம காவியத்தில் இராவணன் வாயால் இந்தச் சொல்லைக் கூற வைத்துள்ளான்.

இத்தகைய பெருமையுடைய வேதம் எண்ணற்ற மந்திரங்கள் அடங்கியது. ஒரு சில சொற்களைப் பல்லாயிரக்கணக்கான முறை மன ஒருமைப்பாட்டு டன் சொன்னால் அதுவே மந்திரமாகிவிடும். அத்தகைய வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

இந்த மந்திரத்திற்குரிய தேவியே ஸ்ரீகாயத்ரி தேவி! பிரணவ வேதத்தின்படி இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தவர் ஸ்ரீவிராட் விஸ்வ பரப் பிரம்மமே! (விஸ்வம்- உலகம்). இவரது தேவியே காயத்ரி. அவளுக்கு அகிலாண்டேசுவரி (சகல உலகங்களுக்கும் தாய்) என்ற திருநாமமும் உண்டு. காயத்ரியே பரப்பிரம்மத்தின் சத்சித் ஆனந்த ரூபமானது. எனவேதான் சூரிய மண்டலத்தில் சூரியனையும்; காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகியோரை ஓருருவமான காயத்ரியாகவும் மூன்று வேளையும் தியானிக்கின்றனர் இந்துக்கள்.

காயத்ரியின் உருவத்தை,

"முக்தா வித்ரும ஹேமநீல தவளவ

சாயீர்முகை: த்ரீட்க்ஷணை

ருக்தா பிந்து நிபர்த்த ரத்ன மகுடாம்

தத்வார்த்த வர்ணாத்மிகாம்

காயத்ரீம் வரதாபயாங்குச பசாம்

சுப்ரம் கபாலம் கதாம்

சங்கம் சக்ரகதார விந்த்ய குளம்

ஹஸ்தைர் வஹந்தீம் பஜே'

என்று வேதம் விளக்குகிறது.

முத்து, பவழம், தங்கம், கருப்பு, வெண்மை ஆகிய ஐந்து வண்ணங்களில் ஐந்து திருமுகங்களையுடையவள் காயத்ரி! ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களுடையவள். சந்திரக் கலையை நவரத்தினத் திருமுடி யில் அணிந்தவள். தத்துவார்த்த மான 24 எழுத்து வடிவான வள். வரதம், அபயம், கபாலம், அங்குசம், பாசம், சங்கு, சக்கரம், இரு செந்தாமரை, கதாயுதம் முதலியவற்றைக் கரங்களில் ஏந்தியவள். ஒளி மிக்க மகர குண்டலங்களை அணிந்தவள். ஆதிசக்தி, பரா சக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய ஐந்து சக்திகளைக் கொண்டவள் காயத்ரி.

வேத ஆகமங்களின் தாயாகி அறிவினைத் தோற்றுவித்து, ஞான தீபமேற்றி ஒளியை வழங்கக்கூடியது காயத்ரி மந்திரம். எனவேதான், "மந்திரங் களில் நான் காயத்ரியாவேன்' என்கிறான் கீதாசார்யனாகிய கண்ணன்!

காயத்ரி மந்திரம்

"ஓம் பூர் புவஸ்வ: தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோயோந பிரசோதயாத்.'

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

உலகில் தோன்றிய முதல் ஒலி "ஓம்' என்கிற பிரணவமே. அந்தப் பிரணவ ஒலியுடன் தோன்றிய ஒளியே சூரியன். "பர்க்கன்' என்பது சூரியனைக் குறிக்கும். தமிழில் "அருக்கன்' என்பர். "அருக்கன் அணி நிறமும் கண்டேன்' என்கிறார் பேயாழ்வார்.

உலகில் அணுசக்தி முதலான அனைத்து சக்திகளுக்கும்

மூல சக்தி சூரிய சக்தியே. சூரியனுக்கு அந்த சக்தியைத் தந்தது யார்? காயத்ரி தேவியே! எனவேதான் காயத்ரி மந்திரம் சூரியனை முன்னிலைப்படுத் திச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் நற்பலன்கள் பல உண்டு.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

குறைந்தது 32, 64, 96, 108 முறையாவது ஜபிக்க வேண்டும். நாள்தோறும் மூன்று வேளையும் (காலை 108, நண்பகல் 32, மாலை 64) என்ற வாறும் ஜபிக்கலாம். இதனால் மனம் ஒருநிலைப் படும். தீய ஆசைகள் தோன்றாது. இறை அருளை யும் ஆன்மிக உணர்வுகளையும் வளர்க்கும். நினைவாற்றல் பெருகும். கலைமகள் அருளும் திருமகள் அருளும் ஒருசேரக் கிடைக்கும். மனம் ஒரு கோவிலாகி பெருவாழ்வு வாழலாம்; பேரின்பமடையலாம்.

தொலைபேசிக் கருவியிலுள்ள ஒலிவாங்கி (தங்ஸ்ரீங்ண்ஸ்ங்ழ்) போன்ற அமைப்புடையதுதான் நமது காதுகள். ஆனாலும் அன்றைய முனிவர்களும் ரிஷிகளும் ஆகாயத்தில் பரவி வந்த வேத ஒலிகளைக் கிரகித்துக் கொண்டது போன்ற ஆற்றல் இன்று நமக்கு இல்லை. அவர்கள் உடலை, உயிரை மட்டுமின்றி ஆன்மாவையும் வளர்த்து வந்தனர். நாம் ஆன்மா என்பதன் பொருளையே மறந்துகொண்டு வருகிறோம். ஆனால் அறிவியல் முன்னேற்றம் நம்மிடம் பெருகியுள்ளது. அதன் பயனே இன்று சின்னஞ்சிறார் முதல் தொண்டு கிழவர்வரை கையடக்கமாய் காதோரம் வைத்துக் கேட்கும் செல்போன். ஆனால் அருள்வழியில் எதனை யும் கேட்பதில்லை. பொருள் தேடும் வழியிலும், பொழுதுபோக்கும் வழியிலும்தான் கேட்கிறோம்.

விஞ்ஞானம் வளராத நாளில் மெய்ஞ்ஞானம் மூலம் காற்றில் பரவும் ஒலிகளின் பொருளை உணர முடிந்தது. தற்போது அணுசக்தியும் அறிவியலாற்றலும் பெருகி இருந்தும், தன்னைத் தானே உணரும் மெய்ஞ்ஞானம் வளர அறிவிய லைப் பயன்படுத்தவில்லையே.

ஆகவே மெய்ஞ்ஞானத்தால் விஞ்ஞானம் வளர்ந்தது என்று மட்டுமே மகிழலாம். விஞ் ஞானத்தால் மெய்ஞ்ஞானம் வளரும் காலம் வர வேண்டும். மனிதன் தேவனாகாவிட்டாலும் மனிதனாக வாழ்வாங்கு வாழ வேண்டும். அதற்கு காயத்ரி போன்ற மந்திரங்களின் பயனறிய வேண்டியது அவசியம்.

மனிதன் எப்படியாவது வாழ்ந்துவிட்டால் போதும் என்று எண்ணக்கூடாது. வாழ்வாங்கு வாழ அறிந்துகொள்ள வேண்டும்.

நன்றி நக்கீரன் வார இதழ்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum