இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யோகாசனம்

Go down

யோகாசனம் Empty யோகாசனம்

Post by ஆனந்தபைரவர் Mon Sep 06, 2010 11:27 pm

யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்.
1.இயமம்:பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.இது இயமம்
2.நியமம்:மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,கலவாதிரு, களவாதிரு.இது நியமம்.
3.ஆசனம்: ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.
4.பிராணாயாமம்:உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.:(பிராணாயாமம்)
5.ப்ரதியாகாரம்:அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்குபிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதே ப்ரதியாகாரம்.
6.தாரணை: நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.
7.தியானம்: செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.
8.சமாதி:ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.நீயே சத்தியம் அது தத்வமஸி.நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.
பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.யோகத்தின் எட்டு அங்கங்கள் பகுதிதான் ஆசனம்.நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.

யோகம்+ஆசனம்(யோகாசனம்).அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம். பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.யோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். இதில் யோகம் என்பது உள்ளத் திற்காகவும், ஆசனம் என்பது உடலுக்காகவும் செய்யப்படுகிறது. இந்த யோகாசனத்தால் தான் மனித வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.யோகசனத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். சிலர் உடலுக்குரிய ஆசனங்களை பயிலுவது தான் யோகாசனம் என்றும், ஒரு சிலர் தியானம் பயிலுவது யோகாசனம் என் றும், வேறுசிலர் மூச் சுப்பயிற்சி (பிராணாயமம்) செய்வதுதான் யோகாசனம் என்றும், இன்னும் சிலர் உண்ணாவிரதம் போன்ற விரதங்கள் இருப்பதே யோகாசனம் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் பதஞ்சலி ஒருவர் மட்டுமே உள்ளத்தின் ஆற்றலை பெருக்க யோகப்பயிற்சி, உடலின் ஆற்றலைப் பெருக்க ஆசனப் பயிற்சி என இரண்டையும் ஒன்று சேர்ப்பதே யோகாசனம் என தெளிவாக்கியவர்.பதஞ்சலி முனிவர் துவாபரா யுகத்தில் வாழ்ந்தவர். இவர் ஆதிசேஷன், லட்சுமணன், பலராமன், ராமானுஜர் என பல அவதாரங்கள் எடுத்தவர். இவர் இந்த உலக மக்களின் நலன் கருதி மனதுக்கு யோக சூத்திரமும், உடலுக்கு சரகம் என்ற வைத்திய நூலும், வாக்கிற்கு வியாகரண பாஷ்யம் போன்ற நூல்களை தந்தவர்.யோகம் என்றால் .கால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின் ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.யோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.ஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.ஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்து தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்தவர்கள் ரிஷிகள், குருமார்கள். உடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன . மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் . யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர்தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே. சாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரந்திரத்தினை அணுகலாம். மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.எண்ணம்.உலகின் எல்லா நிலைகளையும் உருவாக்குவது எண்ணங்களேயாகும்.வாழலும் சூழலும் எண்ணத்தை உற்பத்தி செய்கின்றன.உடம்பு உணர்வு.உடம்பு உயிர்த் தொகுதியில் சேர்ந்தாலும் அது ஒரு ஜடப் பொருளே. ஆனால்மூன்றாவதாக உணர்வுப் பொருள் அதனுடன் சேரும்போது வாழ்கை நடைபெறத்துவங்குகிறது.

ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில் ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.தமிழிலும் ஐம்பூதங்கள் என்று சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அடிப்படையில் திருவள்ளுவர் பகுத்திருக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு என்று இப்புவியை ஐம்பெரும் ஆற்றல்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனப் பண்பாட்டின்படி ஐந்து பூதங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகத் திகழ்கின்றன. இவற்றிலே நீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்து நிலத்தை ஈரப்படுத்துகிறது. நிலத்தில் ஈரம்பட்டு முளைக்கும் மரத்தின் விறகுகள் ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு மூள்கிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்குள் புதைந்து உலோகமாக மாறுகிறது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்; ஓங்கி உயர்ந்து எரிந்து வெப்பத்தை உண்டாக்கும் தீ; வளைந்தும் நிமிர்ந்தும் வளரும் மரம்; பலவடிவங்களில் அடித்தும், வார்த்தும் உருவாக்கப்படும் உலோகம்: வளமான மண் இந்த ஐந்து மூலகங்களும் படைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, இவை ஒன்றை ஒன்று அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. எப்படி என்கிறீர்களா? மரம் நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி, உலோகமாக மாறுகிறது; உலோகக் கருவி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீர் எடுக்க முடிகிறது. தண்ணீரால் புதிய மரங்கள் முளைக்கின்றன. இவற்றின் இந்த படைப்பாற்றலுக்கு எதிரான அழிவாற்றலைப் பார்க்கலாமா? தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரத்தை வெட்டுகிறது. மரம் மண்ணைக்கீறி முளைக்கிறது. மண் தண்ணீரில் கரைகிறது.

பல நூற்றாண்டு காலமாக சீன மக்கள் இந்தப் புவியை நான்கு பகுதிகளாக-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளாகவும், வசந்தம், இலையுதிர்காலம், கோடை, குளிர் என்று நான்கு பருவங்களாகவும், டிராகன், வெள்ளைப்புலி, சிவப்புப் பறவை, கருப்பு ஆமை என்று நான்கு விலங்குளாகவும் பிரித்தே பார்த்துவந்தனர். காலப் போக்கிலே, இவற்றுடன் மையப் பண்பு கொண்ட ஐந்தாவது அம்சம் ஒன்றும் சேர்ந்து கொண்டது. இறுதியில் மரம், நெருப்பு, மண், உலோகம், தண்ணீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இந்தப் புவியை ஆட்டிப் படைக்கத் தொடங்கின. இவை இடைவிடாமல் உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகக் கருதப்படுகின்றன.சீன மக்களின் கருத்துப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஐந்து மூலகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஓராண்டின் ஐந்து பருவங்களும். ஐந்து நிறங்களும், ஐம்புலன்களும், ஐந்து சுவைகளும், எண்களும், உடல் உறுப்புக்களும் இந்த மூலகங்களுடன் இணைத்தே விளக்கப்பட்டன. வசந்த காலத்தில் மரங்கள் வளர்ந்து கோடை காலத்தின் மூலகமான நெருப்பை உண்டாக்குகின்றன. நெருப்பின் சாம்பல் மணணுக்குள் புதைந்து, இலையுதிர் பருவத்தில் கிணறு தோண்டுவதற்குத் தேவையான உலோகமாக மாறுகிறது. கிணறுகளில் இருந்து குளிர் பருவத்தின் மூலகமான தண்ணீர் கிடைக்கிறது

நன்றி http://angelinmery.weebly.com
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum