இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனுமன் ஜெயந்தி விரத மகிமை

Go down

அனுமன் ஜெயந்தி விரத மகிமை Empty அனுமன் ஜெயந்தி விரத மகிமை

Post by ஆனந்தபைரவர் Sat Sep 18, 2010 9:50 pm

வாயு பூதர் என அன்போடு அழைக்கப்படுவர் ஸ்ரீமன் ஆஞ்சநேயர் ஆவார். பெருமாள் திரு அவதாரம் எடுக்கும் போதெல்லாம் வாயு பூதர் கண்டிப்பாக அவதரிக்கின்றார். திரே தாயுகத்தில் அனுமனாகவும், சூவாபரயுகத்தில் பீமனாகவும் கலியுகத்தில் மத்வாச்சாரியராகவும் உலகில் அவதரித்து பெருமாள் கைங்கர்யம் செய்வதுடன் மக்களையும் காத்தருள் புரிகின்றார் என்பது உலகம் அறிந்ததே.

ஹரி என்றால் சுதந்திரர், தன்னிச்சையாக வரம் வழங்குபவர் என்று பொருள். மற்றவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவுக்கு உபச்சாரம் செய்து அவரது அருளாணைக்கு கட்டுப்பட்டவர்களாகின்றனர். தேவர்களின் இரு பிரிவில் ஒன்று ஜீவர்கள் என்றும் மற்றொன்று ஆதிபூதர்கள் என்றும் வழங்கப்படுகின்றது.

ஜீவர்களில் வாயு பகவான் உத்தமர் என்றழைக்கப்படுகின்றார். இவருடைய அனுக்கிரகத்தால் தான் மற்ற எல்லா ஜீவர்களும் முக்தி நிலை பெறுகின்றார்கள். அதாவது தேவர்கள் மட்டுமின்றி மனிதர்களும் இறைநிலை தியானத்தில் ஒன்ற இந்த ஆன்மாவை ஒடுக்க வாயு பகவானின் பங்களிப்பு தலையாயது. நாம் பேசும் பேச்சு, போற்றும் துதி, விடும் மூச்சு என வாயு பகவானின் அருளாசியால் விழிப்பு நிலை பெறுகின்றது. எனவே ஹரி எல்லாரையும் காப்பதில் உத்தமர் (ஹரிசர்வோத்தமா) வாயு பகவான் ஜீவர்களில் உத்தமர் என வைணவ சம்பிரதாயங்கள் போற்றுகின்றன.

எனவே சர்வ வல்லமை படைத்த வாயுவின் அம்ஸமாக நம் கண்களுக்கு விருந்தாக தோன்றியவர் அனுமன் ஆவார். இவர் மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை நாளில் அமாவாசை திதியும் நிறைந்த வேளையில் மூல நட்சத்திரத்தில் வாயு பகவானுக்கும் அஞ்சனை தேவிக்கும் மகனாக அவதரித்த நாளே அனுமத் ஜெயந்தி நாளாக போற்றி வழிபட்டு வருகின்றோம்.

வரும் புதன்கிழமை 16-12-09 மார்கழி மாதத்தின் முதல் நாளில் இவ்வருடம் அனுமத் ஜெயந்தி வருவது தனிச் சிறப்பு. தேவர்களின் உஷக்காலம் என்றழைக்கப்படும் மார்கழி மகா விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதம் மாதங்களில் நான் மார்கழி என மாதவன் திருவாய் மலர்ந்ததின் நோக்கமே தனது பக்தனான அனுமனன் பிறந்த மாதம் என்பதால் தான் என்றால் அது மிகை ஆகாது. உலகமெங்கும் உள்ள வைணவர்கள் மட்டுமின்றி அனைத்து இந்து மக்களும் போற்றும் நாள் அனுமத் ஜெயந்தி.

சிவனின் அம்சம்:

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ் அனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

அனுமனின் பெயர்கள்:

பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் `பவமானர்' என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் `கபீஷர்' என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது. மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.

அனுமன்-தாடை நீண்டவர்:

அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும். ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன். அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது. எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்:

ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர் சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண் டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

வடைமாலை:

அனுமனுக்கு மிகவும் பிரீத்தியானது வடை. எனவே ஆஞ்ச நேயருக்கு 108, 1008 என்ற எண்ணிக்கையில் வடைகளை தட்டி ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்தால் ராகு-கோதுவினால் ஏற்படும் தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பில் லாபம் கிடைக்கும். மஹாலட்சுமி அருகில் இருந்து உங்களை காப்பாள். சனி கிரக தோஷம், சூரிய, செவ்வாய் கிரஹ தோஷம் நீங்கும்.

வெற்றிலை மாலை

வெற்றிகளைத்தர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. வெற்றிலையில் பாக்கும் ஒரு பணமும் (1 ரூபாய்) வைத்து மடித்து மாலையாக கட்டி அனுவித்து வருவது வழக்கம். அதற்குப் பதில் வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் ஒரு பழமும், குங்குமம், மஞ்சளும் வைத்து சுமங்களிப் பெண்களுக்கு கொடுப்பதும் மிக மிக சிறப்பானது. 108 எட்டுப் பேருக்கு தருவது நல்லது. கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தருவதன் மூலம் வெற்றி தொடரும்.

வெண்ணைக் காப்பு:

ஒரு சில மணி நேரத்தில் கெட்டுவிடுவதை ஒரு சில நாள் கெடாததாக மாற்றி ஒரு சில வாரம் ஏன் வெண்ணெய் சில வருடங்கள் ஆனாலும் கெடாது. (சித்த மருத்துவத்தில் நாள் பட்ட வெண்ணை பயன்படுத்தப்படுகிறது.) ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்துவது உஷ்ணத்தை தனித்து குளிர்ச்சி தருவதாகும். அவ்வெண்ணெய் உஷ்ண ரோகத்தில் இருந்து நம்மை காக்கும். ஆஞ்சநேயருக்கு சாற்றிய
வெண்ணெய் சரும நோய் போக்க வல்லது. அதை உண்ண புத்திரபாக்யம் கிட்டும், முகத்தில் தடவ முகப் பொலிவு உண்டாகும்.

`வீட்டில் ஆஞ்சநேயர் வழிபாடு':

ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து, பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும். வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம், ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீஅனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம், ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி, ஆஞ்ச நேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம். இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார். உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.

தமிழகத்தில் தனிக் கோவில்கள்...

சென்னை நங்கநல்லூர், ஆதி வியாதிஹரஆஞ்சநேயர் கோவில், சுசீந்திரம், நாமக்கல்லில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், திருக்கடைர் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில், செம்பட்டி நிலக்கோட்டை வழியில் அனைப்பட்டியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், சின்னாளப்பட்டி அருகில் மேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில், புதுச்சேரி நலன்குளம் அருகில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்கள் அனுமனின் அனுக்கிரகங்களை அள்ளித் தரும் ஆலயங்கள். முடிந்த மட்டும் இவ்வாலயலங்களுக்கு சென்று வர மேன்மை உண்டாகும். அனைத்து பெருமாள், ராமர் கோவில்களிலும் எழுந்தருளும் ஆஞ்சநேயரை இந்நாளில் வழிபட அனைத்து யோகமும் கிடைக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார். எனவே மீனாட்சி கோவில் சென்றால் இவரை வணங்காமல் வந்துவிடாதீர்கள். இவரை வணங்க உங்கள் வம்சமும் வளர்ந்து வரும். கோவை பீளமேடு அஷ்டபுஜ ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிரசில் சிவலிங்கம், நாகம், சாலிகிராமம் உள்ளன. உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.

ஆஞ்சநேயர் வழிபாட்டுப் பலன்:

கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும், நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில்-படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும்.
புத்திர பாக்யம் கிட்டும், பிறந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள். வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள். எனவே வாருங்கள் ஆஞ்சநேயரை தரிசித்து வருவோம்.

தொகுப்பு: வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum