Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
திருமால் பெருமைக்கு நிகரேது?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருமால் பெருமைக்கு நிகரேது?
உலகத்தைக் காப்பாற்றும் கடவுளாகத் திகழ்பவர் திருமால். இவரை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு எங்கும், எதிலும் தோல்வியில்லை. பாலகனாகிய பிரகலாதனை எத்தனையோ விதங்களில் அவனது தகப்பன் "ஹிரண்யகசிபு' கொடுமை செய்தான். ஆனால் பிரகலாதனோ ஸ்ரீஹரியை தியானித்தபடி அத்தனை இன்னல்களையும் இன்முகத்துடன் எதிர் கொண்டான். திருமால் ஒரு போதும் பிரகலாதனை கை விடவில்லை. எல்லா ஆபத்துகளிலிருந்தும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி, கடைசியில் நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார். அன்று பிரகலாதனுக்காக அண்ட சராசரங்கள் அனைத்திலும் சிங்கப் பெருமாள் வியாபித்திருந்ததை, சுவாமி தேசிகர், கண்ணீர் மல்கத் துதித்துள்ளார். இந்தப் பிரபஞ்சமே "நரசிம்ம கர்ப்பம்' ஆனதாக தேசிகர் புகழ்கின்றார்.
"ராமன்' என்ற சொல்லுக்கு, "மனதை அழகால் ஈர்ப்பவன்' என்ற பொருளும் உண்டு. "ராமனே பரம் பொருள்' என்று மகான்கள் துதிக்கின்றனர். காசியில் மரிப்பவர்கள் காதில், ராம நாமத்தை ஓதி, அந்த ஜீவன்களுக்கு முக்தி அளிக்கின்றார் சிவபெருமான். இந்தக் காட்சியை கோஸ்வாமி துளஸி தாஸர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்ற அருளாளர்கள் பலர் நேரில் தரிசித்துள்ளனர். தான் கண்ட அந்த அற்புதக் காட்சியை, ஒரு கீர்த்தனமாகவே பாடியுள்ளார் துளஸி தாஸர். அதேபோல் ஸ்ரீராமகிருஷ்ணரும் அந்தத் தெய்வீக அனுபவத்தை வெளிப்படுத்த, அவரது சீடர் மஹேந்திரநாத் என்பவர் அதைக் குறித்து வைத்து வெளியிட்டுள்ளார்.
கண்ணனிடம் காம வசப்படாமலேயே காதலித்த "பிரேமை' நிலை உடையவர்கள், பிருந்தாவன கோபியர். "கண்ணனின் சுகமே தங்கள் சுகம்' என்றிவர்கள் வாழ்ந்தனர். இதனை, "தத் சுக சுகித்வம்' என்பார்கள். பிறப்பால் ஆண்களாக இருப்பவர்களும், கோபியரை வழிபட்டால், "கிருஷ்ண பிரேமை' என்னும் பெருநிதியை அடையலாம். "இவ்வுலகில் மானிடர்கள் பெறக் கூடிய பேறுகளில் மிகவும் பெரியது கிருஷ்ண பிரேமையே' என்று வங்கத்தில் அவதரித்த ஸ்ரீசைதன்ய மஹா பிரபு கூறியுள்ளார். ஸ்ரீசுகாசார்யரும், "வந்தே நந்த வரஜ ஸ்திரீணாம்' என்று ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கோபியரின் பக்தியைப் போற்றுகின்றார்.
பக்தர்களிடையே "குல பேதம்' பார்க்கும் வழக்கம் இறைவனுக்கில்லை. "உச்ச நீச காஹி நேணே பகவந்த' என்று ஸ்ரீ துகாராம் என்னும் மராட்டிய மாநில பக்தர், இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றார். "ஏழை, கீழ்மகன் என்று எண்ணாதவன் திருமால்' என்று திவ்விய பிரபந்தமும் போற்றுகின்றது. விதுரர் அளித்த கஞ்சியை விருந்தாக உண்டவன் கண்ணன்! சபரி கடித்துக் கொடுத்த பழங்களை ருசித்துச் சாப்பிட்டவன் கிருஷ்ணன்!
ராம கதையில் மட்டுமல்ல, கிருஷ்ண கதையிலும் ஒரு "கூனி' உண்டு. இவளுக்கு "குப்ஜை' என்று பெயர். கோபியர்கள் கண்ணன் மீது காமம் கலக்காத பக்தி வைத்தனர். குப்ஜையோ கண்ணனின் உறவை நாடினாள். ஆனால் அவளையும் இகழாது அரவணைத்து, கூனியாகவும் அழகற்றவளாகவும் இருந்த அவளை அழகாக்கினான் கண்ணன். அது மட்டுமல்ல, கிருஷ்ணாவதாரம் நிறைவேறிய பிறகு, பற்பல நூற்றாண்டுகள் கழித்து, "ஜனாபாய்' என்ற பெயரில் குப்ஜையைப் பிறக்க வைத்தார் திருமால். அப்போது "சுத்த பக்தி' என்ற வரத்தையும் அவளுக்கு அளித்து, இறுதியில் தன்னுடைய திருவடிகளிலேயே சேர்த்துக் கொண்டார். ஜனாபாய் இயற்றிய கீர்த்தனங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவற்றுள், "ஸôவளே சுந்தர' என்ற பாடல், இன்றும் உலகெங்கிலும் உள்ள விட்டல பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
உபநிடதங்களுக்கு விரிவுரை எழுதிய ஆதிசங்கரர், "பகவத் கீதையும் வேதத்திற்குச் சமம்' என்று கருதி, கீதைக்கும் விரிவுரை எழுதினார். அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று நெறிகளைப் பின்பற்றுவோரும் கீதையை தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றனர். வாக்கில் ராம நாமத்தையும், இதயத்தில் பகவத் கீதையையும் வைத்துப் போற்றியவர் மகாத்மா காந்தியடிகள்.
""அரிய நூல்களை மனனம் செய்வதால் ஆகப் போவது ஒன்றுமில்லை! "கோவிந்தா! கோவிந்தா!' என்று துதிப்பதே மேலானது'' என்பது ஆதிசங்கரரின் வாக்கு. ""அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும்; நீள் விசும்பருளும்'' என்று திருமாலின் திருநாமத்தின் பெருமைகளை "திவ்விய பிரபந்தம்' எடுத்துரைக்கிறது. "திருமாலுக்கு அடிமை செய்' என்று தமிழ் மூதாட்டியான ஒüவைப் பிராட்டியும் வலியுறுத்துகின்றாள். பாற்கடலில் பள்ளி கொள்வானை, பரம பதத்தில் உறைவானை, ஏழுமலை ஆள்வானைப் போற்றுதலே மனிதப் பிறவி பெற்றதன் உண்மைப் பொருள்.
-ஹரி பிரியா

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum