இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி

Go down

அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி Empty அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி

Post by ஆனந்தபைரவர் Tue Nov 02, 2010 9:41 pm

அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி P83
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த - பெற்றிமையோர்

- என்று மூவரைப் போற்றுகிறார் மணவாள மாமுனிகள். அந்த மூவர்- பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார்!

பன்னிரு ஆழ்வார்களில் 'முதலாழ்வார்கள்' என்ற சிறப்புக்குரியவர்கள் இந்த மூவரும். இவர்களுக்கு இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. இந்த மூன்று ஆழ்வார்களும் தாயின் கர்ப்பவாசத்தில் பிறக்காமல், அயோநிஜர்களாக அவதரித்தவர்கள்!

காஞ்சி- சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுக்கு அருகில், பொய்கை ஒன்றில், அழகிய தாமரை மலரில் (ஐப்பசி திருவோணத்தன்று) அவதரித்தவர் பொய்கையாழ்வார். பொய்கையில் அவதரித்ததால் இந்தப் பெயர்.

மாமல்லபுரத்தில், குருக்கத்தி மலரில் (ஐப்பசி- அவிட்டம்) அவதரித்தவர் பூதத்தாழ் வார். பிறந்தது முதல் ஸ்ரீமந் நாராயணனின் குணங்களையே அனுபவித்து வந்தவர் என்பதால், இவருக்கு பூதத்தாழ்வார் என்று திருநாமம்! இப்போதும், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள தோட்டத்தில், இவரின் பிறந்த நாள்- கிழமையைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றைக் காணலாம்!



சென்னை- மயிலாப்பூரில் ஒரு கிணற்றில், அல்லிப் பூவில் (ஐப்பசி- சதயம்) அவதரித்தவர் பேயாழ்வார். தோன்றிய நாள் முதல், பகவத்பக்தியுடன் நெஞ்சழிந்து, அழுதும் தொழுதும் பேய்பிடித்தவர்போல் இருந்து வந்தவர். அதனால் இவருக்கு, 'பேயாழ்வார்' என்று பெயர். 'மஹதாஹ்வயர்' என்றும் ஒரு பெயர் உண்டு. இவர், திருமழிசையாழ்வாருக்கு ஆசார்யராக விளங்கினார்.

'முக்குணத்தில் இரண்டவை அகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று' என்பதற்கேற்ப, முதலாழ்வார்கள் மூவரும் ரஜோ மற்றும் தமோ குணங்கள் இல்லாமல், சத்வகுணம் நிரம்பியவர்களாக திகழ்ந்தனர். எப்போதும் பகவத் சிந்தனையுடனும், ஒருநாள் இருந்த இடத்தில் மறுநாள் இராமல், ஓடித் திரியும் யோகிகளாய் வாழ்ந்தனர். இவர்கள் மூவருமே ஒருவரையருவர் அறிந்துகொள்ளாமல் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தனராம்!

மூவரையும் ஒன்றிணைத்து, இவர்களைக் கொண்டு உலகை வாழ்விக்கத் திருவுளம் கொண்டான் எம்பெரு மான். ஒருநாள், சூரியன் மறைந்த பிறகு திருக்கோவலூர் எனும் ஊரை அடைந்தார் பொய்கையாழ்வார். அங்கு மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று ஓர் இடைகழியில் (சிறிய இடத்தில்) படுத்துக்கொண்டார்.வெளியே மழை பெய்தது. சற்று நேரத்தில் பூதத்தாழ்வார் வந்தார். பரஸ்பர அறிமுகத்துக்குப் பின், இருவரும் அமர்ந்து பகவானின் குணங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து பேயாழ்வாரும் வந்தார். அது சிறிய இடம். ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்காரலாம்; மூவர் நிற்கலாம். கும்மிருட்டில் முகம்கூட தெரியாத நிலையில், மூவரும் நெருக்கமாக நின்றுகொண்டனர். இந்த நிலையில், நான்காவதாக ஒருவர் நடுவில் இருப்பது போல் தோன்றியது. அந்தப் புதிய நபர் யார்? பொய்கையார் விளக்கேற்றிப் பார்க்க நினைத்தார். பூமியாகிய தகழியில் (அகலில்) கடல் நீராகிய நெய்யைக் கொண்டு, சூரியன் எனும் விளக்கை ஏற்றினார். அப்போதும் புறவிருள் நீங்கியதே தவிர, அகவிருள் நீங்கவில்லை. உடனே பூதத்தாழ்வார், அன்பாகிய அகலில், ஆர்வமாகிய நெய்யை ஊற்றி, சிந்தையாகிய திரியிட்டு, ஞான விளக்கேற்றினார்.இருள் நீங்கியது. அடுத்து பேயாழ்வார்... தங்களிடையே நின்றிருக்கும் பகவானைச் சேவித்ததைக் கூறினார். மூவரும் ஆனந்தித்தனர்!

'வையம் தகளியா' என்று துவங்கி 100 பாசுரங்களை (முதல் திருவந்தாதி) பொய்கையாழ்வாரும், 'அன்பே தகளியா' என்று துவங்கி 100 பாடல்களை (2-ஆம் திருவந்தாதி) பூதத்தாழ்வாரும், 'திருக்கண்டேன்' என்று துவங்கி 100 பாசுரங்களால் (3-ஆம் திருவந்தாதி) பேயாழ்வாரும் அந்தத் திருவிடத்தில் பாடியருளினார்களாம்.

இந்த மூன்று அந்தாதிகளிலும் முக்கியமான பொருள் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. உலகம், கடல், சூரியன் எனும் முப்பொருளையும் கூறி, இவற்றைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றார் பொய்கையாழ்வார். அவன் தான் நாரணன் என்றார் பூதத்தாழ்வார். அவன் நாரணன் மட்டுமல்ல, திருநாரணன் என்று பேயாழ்வார் விளக்கினார். ஆக, மூவரும் சேர்ந்து... 'உலகம் யாவையும் தாமுளவாக்கிலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு டையான் அவனே ஸ்ரீமந் நாராயணன்' என்ற தத்துவத்தை வெளியிட்டார்கள்அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி P85
முதலாழ்வார்களின் பாசுரங்களில் சுவைமிகு விஷயங்கள் இன்னும் பல உண்டு!

உலகளந்த பெருமாளைக் கண்ட பொய்கையாழ்வார், பிரளயத்தின்போது எல்லா வற்றையும் தன்னுள் அடக்கி, தனது பெரிய திருமேனியைச் சுருக்கி, ஆல இலையில் சயனித்த எம்பெருமானின் திறத்தை வியக்கிறார், தனது பாசுரத்தில். அத்துடன், ''நீ கண் வளர்ந்த அந்த ஆலந்தளிர் எங்கிருந்து வந்தது? கடலில் வந்ததா; அல்லது, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணில் இருந்து வந்ததா என்பதை நீ விளக்க வேண்டும்'' என்று பெருமாளிடமே கேட்கிறார்.

மேலும் அவர், ''உலகளந்தவனாக வளர்ந்தபோது, உன் திருவடிகளால் அளப்பதற்கு இடமாக இருந்தது பூமி. ஆனால், இந்த அவதாரத்தைவிட வராக அவதாரம் பெரியது. அப்போது, பெரிய பூமி உன் கோரைப் பற்களில் சிறியதாகத் தங்கி இருந்ததாம். இப்படிப்பட்ட பெருமையை 'மயர்வறமதிநலம்' அருளப் பெற்ற ஆழ்வார்களால் காணமுடியுமே தவிர, தன் முயற்சியால் காணமுடியாது!'' என்று போற்றுகிறார்.

பூதத்தாழ்வார் பாசுரங்களோ திருவேங்கட மலையின் சிறப்பு களை வர்ணிக்கின்றன.

தன் துணையை மலைச் சாரலில் அழைத்துச் சென்றது ஆண் யானை. அந்த இடம் மூங்கில் காடு. யானைகளுக்கு இள மூங்கில்களைச் சாப்பிட ஆசை. ஆண் யானை இரண்டு மூங்கில்களை எடுத்து, அருகிலிருந்த மரத்திலிருந்து தேன் கீழே கொட்டுவதைக் கண்டு, மூங்கிலை இரண்டு புறமும் தேனில் நனைத்து, பெண் யானைக்குக் கொடுத்தது. அந்த காட்சி ஆழ்வார்க்கு ஞானப் பார்வையில் தெரிந்தது. இது நடந்த இடம், முகில்வண்ணான திருவேங்கடமுடையானின் மலைச்சாரல் என்கிறார்.

அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி P87
இந்தப் பாசுரத்தை சொல் வதற்கு முன், 'ஆழ்வாரே! நீர் உம்மைப் பெருந்தமிழன் என்று சொன்னீரே! ஒரு இனிய பாசுரம் பாடும்' என்று எம்பெருமான் கேட்க பூதத்தாழ்வார் இந்த பாசுரத்தைப் பாடினாராம்!

'பிற்காலத்தில் ராமாநுஜ முனிவேழம் திருமலைக்குச் சென்றபோது, தன் சீடர்களான பெண் யானைகளுக்கு 'த்வய' மந்திரம் என்ற இரண்டு வரிகளைக் கொண்ட மந்திரத்தை அஷ்டாக்ஷர மகாமந்திரம், சரம ஸ்லோகம் ஆகிய இரண்டையும் கலந்து சொன்னாராம்.

பேயாழ்வாரோ திருவல்லிக் கேணியை சிலாகிக்கிறார்:

''பகல் மறைந்து இரவு தலைக்காட்டும் நேரம். பரந்த கடலின் நீண்ட கைகள் போன்ற அலைகள் கரைக்கு வந்து செல்கின்றன. பெரியவர் களைப் பார்க்கச் செல்லும்போது கையில் ஒன்றுமில்லாமல் செல்லக்கூடாது. அதற்கேற்ப சமுத்திர ராஜனின் ஒவ்வொரு அலையும் முத்துக்களையும் பவழங்களையும் திருவல்லிக் கேணி கடற்கரையில் சேர்க் கின்றன. முத்துக்கள் வெண்மை; பவழம் சிவப்பு! அழகான இடங்களில் பல வண்ணங் களிலான விளக்குகள் இருக்கும். இங்கே முத்துக்குவியல் அந்தி விளக்கு, பவழங்கள் அணி விளக்கு. இப்படியிருக்க, பிராட்டியோடு கூடிய பெருமான் இருக்குமிடத்தில் அழகுக்கு குறைவேது?'' என்று விவரிக்கும் பேயாழ்வார், பிராட்டியை அல்லித்தாமரையாள் என்று சிறப்பிக்கிறார். இந்தக் கார ணத்தை ஒட்டியே இப்பகுதிக்கு திருவல்லிக்கேணி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆழ்வாரின் கருத்து.

முதலாழ்வார்களின் இறை பக்தியும் தமிழ்ச் சுவையும் போற்றத் தக்கவை!

மணவாள மாமுனிகளை பணிவோம்
அன்பெனும் அகலில் ஞான விளக்கேற்றி P84
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம்' என்று பெரியோர்கள் போற்றுவர். ஆம், ஸ்ரீமணவாள மாமுனிகள் அவதரித்தது இந்த நன்னாளில்தான் (சாதாரண வருடம்). ஆழ்வார்திருநகரி தலத்தில், 'திருநாவீறுடையபிரான்தாஸரண்ணர்' என்ற மகானுக்குப் புத்திரனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள். பிள்ளைக்குத் திருவரங்கனின் பெயர் திகழ வேண்டும் என்று பெற்றோர் இவருக்கு அழகிய மணவாளன் என்று பெயரிட்டார்களாம்.

ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியாக வாழ்ந்த அழகிய மணவாளன் தம்முடைய பக்தி, ஞான, வைராக்கியத் தின் பலனால் 'திருவாய்மொழிப்பிள்ளை' என்று சிறப்பிக்கப்பட்ட திருமலையாழ்வாரின் சீடராகும் பேறு பெற்றார்.

ஆழ்வார்திருநகரியில் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு கோயில் அமைக்கவேண்டும் என்று திருவாய் மொழிப்பிள்ளைக்கு விருப்பம். ஆசார்யரின் திருவுள்ளம் உவக்கும்படி எம்பெருமானாருக்குச் சந்நிதி அமைத்தார் அழகிய மணவாளர். அதனால் மகிழ்ந்த ஆசார்யர் இவரை, 'யதீந்த்ர ப்ரவணர்' என்று அழைத்தாராம்.

சந்நிதி அமைத்ததுடன் ஸ்ரீராமானுஜர் திருவடிகளில் 'யதிராஜவிம்சதி' என்ற ஸ்தோத்திரத்தையும் சமர்ப்பித்தார், அழகிய மணவாளர். நாளடைவில் தனக்குப் பிறந்த குமாரருக்கும் 'இராமாநுசப் பிள்ளை' என்று ஆசார்யரின் ஆலோசனைப்படி பெயரிட்டாராம்!

ஸ்ரீரங்கத்தில் சடகோப ஜீயரிடம் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசிக்கச் செல்ல, திருவரங்கன் மகிழ்ந்து, 'அழகிய மணவாள மாமுனிகள்' என்று பெயரிட்டுச் சிறப்பித்து, பல்லவராயன் மடத்தையும் கொடுத்து, கடைசிக் காலம் வரை அந்த மடத்தில் இருக்கச் செய்தாராம். மடத்தின் ஒரு பகுதியை காலக்ஷேபக் கூடமாக ஆக்கி, அதற்கு 'திருமலையாழ்வார் மண்டபம்' என்றே பெயரிட்டு காலக்ஷேபங்களை நடத்திவந்தாராம் மணவாள மாமுனிகள்.

இவரின் சிறப்பை உலகறியச் செய்ய அரங்கன் அருள் புரிந்த சம்பவம் ஒன்றுண்டு.

ஒருமுறை, நம்பெருமாள் திருவுளப்படி ஸ்ரீரங்கம்- பெரிய திருமண்டபத்தில் ஒரு வருடம் முழுக்க திருவாய்மொழி காலக்ஷேபம் செய்தாராம் மணவாள மாமுனிகள். நம்பெருமாளும் உற்ஸவங்களையெல்லாம் விட்டு, காலக்ஷேபம் கேட்டாராம். திருவாய்மொழி முழுதும் பூர்த்தியாகும் நாளில், பஹூமான சிறப்பு அளிக்கும் நேரத்தில், 4 வயது சிறுவனாக வந்த நம்பெருமாள், மணவாள மாமுனிகளைப் பார்த்து கைகளைக் கூப்பி 'ஸ்ரீசைலேஸ தயாபாத்ரம்' என்று தொடங்கும் ஆச்சர்யமான ஸ்தோத்ரத்தை அருளினாராம்.

மணவாள மாமுனிகளைப் போற்றும் இந்த ஸ்தோத்திரம், எம்பெருமானின் நியமனப்படியே எல்லா கோயில் தமிழ் மறை தொடங்கும்போது கூறப்படுகிறது!

உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, முதலான தன்னுடைய தமிழ்ப் பிரபந்தங்களாலும், ஸ்தோத்ரங்கள் மூலமும் இன்றும் நம்மிடையே நித்திய வாசம் செய்கிறார் மணவாள மாமுனிகள். அடியார்தம் திருவடிகளைப் பணிந்து பலனடைவோம்

நன்றி சக்தி விகடன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum