இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேதவித்து

Go down

வேதவித்து  Empty வேதவித்து

Post by ஆனந்தபைரவர் Tue Nov 02, 2010 9:45 pm

'வசிஷ்டரின் கொள்ளுப் பேரன்; சக்தி முனிவரின் பேரன்; பராசர முனிவரின் மைந்தன்; சுகப்பிரம்மத்தின் தந்தை' எனப் புராணம் தெரிவிக்கும் நாயகன், வேதவியாசர் (வியாசம் வஸிஷ்டநப்தாரம்...). ஸ்ரீமந் நாராயணனின் அம்சத்துடன் இணைந்தவர்; அறிஞராகவே பிறந்தவர்; முக்காலத்தையும் உணர்ந்தவர், வேதவியாசர்!

தாயார் ஸத்யவதியின் அனுமதியுடன், தவம் செய்யப் புறப்பட்டபோது, ''தேவையான வேளையில், என்னை நினையுங்கள்; உடனே உங்கள் முன் வந்து நிற்பேன்'' என உறுதி அளித்தார்.



குரு வம்சம் முற்றுப்பெறும் தருணம்... வியாசரை நினைத்தாள் ஸத்யவதி. உடனே, அவள் முன் தோன்றினார் வியாசர். அன்னையின் ஆணையை ஏற்று அருள்புரிந்தார்; திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் ஆகியோர் தோன்றினர். குரு வம்சமும், பாண்டுவின் வம்சமும் தழைத்தன!

பின்னர் ஏற்படும் தேவையை முன்னரே அறிந்து, வாக்குறுதி அளித்த தீர்க்கதரிசி வியாசர். மனம், வாக்கு, புலன்கள், சிந்தனை ஆகியவற்றுக்கு எட்டாத தகவல்களையும் தரும் வல்லமையும் மற்ற இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, என்றும் நிலைத்திருக்கும் தகுதியும் வேதத்துக்கு உண்டு என்கிறது சாஸ்திரம் (ப்ரத்யஷேண அனுமித்யாவா...). ஒளிவடிவான பரம்பொருளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு, அறத்தை அரவணைத்து, ஒலி வடிவிலான வேதத்தைக் காப்பாற்ற எண்ணினார் வேதவியாசர். காதுக்கு எட்டியதை உள்வாங்கி, மனதுள் பதியவைக்கும் தாரணா சக்தி மனிதர்களிடம் குறைந்து வருவதை உணர்ந்தவர்... பரந்துவிரிந்த வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் எனப் பகுத்துப்பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்கு அளித்தார். வேதக்கல்வியை இன்னும் விரிவு படுத்தினார். இதனால் வேதவியாசர் எனப் பெயர் பெற்றார்.

தீவில் பிறந்தவர் வியாசர்; ஸ்ரீகிருஷ்ணன்போல், நீலமேக சியாமள நிறத்தில் இருப்பவர். ஆகவே, அவருக்கு கிருஷ்ண த்வைபாயனர் என்றும், பத்ரி வனத்தில் வாழ்ந்த தால் பாதராயணர் என்றும் பெயர்கள் அமைந்தன.

உலகவியலில் பற்றற்ற அறிவொளியாகத் தோன்றிய வேதவியாசர், வேதத்தை விரிவுபடுத்தியதுடன், 18 புரா ணங்கள், 18 உப புராணங்கள், 18 உபோப புராணங்கள், லட்சம் செய்யுளை உள்ளடக்கிய மகாபாரதம் என அனைத்தையும் உலகுக்கு அளித்தார் என்கிறது சம்ஸ்கிருத இலக்கியம் (அஷ்டாதசபுராணானாம் வியாஸஸ்ய...). வேதத்தைக் கற்க இயலாதவர்களும் பேரறிவை அடையும் வகையில், மகாபாரதத்தை இயற்றினார் வியாசர். அல்லலுறும் மனிதர்களுக்குப் பேரறிவைப் புகட்டும் ஸ்ரீகண்ணனின் பேருரையை 18 அத்தியாயங்களில் தொகுத்து, பகவத்கீதை எனும் தலைப்பில், மகாபாரதத் தில் இணைத்து, உலகுக்கு அளித்தார். அது மட்டுமா?! உபநிடதங்களின் உட்கருத்தை அறிய உதவும் 'பிரம்ம சூத்திரம்' எனும் நூலையும் இயற்றினார், வியாசர். தன்னை அறிந்து, பிறவிப்பயனைப் பெறு வதற்கான அரிய பொக்கிஷம், இந்த நூல். அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சிவாத்வைதம், சுத்தாத்வைதம் ஆகிய மாறுபட்ட சிந்தனைகளின் ஊற்று, பிரம்மசூத்திரம். இன்றைக்கும், சொற்பொழிவாளர்கள் பலருக்கும், புகழும் செல்வமும் அளித்து வாழவைப்பது வியாசரின் இலக்கியங்கள்தான்.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ள காப்பியங்கள், நாடகங்கள், கதைகள் ஆகியன பெரும்பாலும் வேத வியாசரின் இலக்கியத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டவையே! அந்தக் கால தெருக்கூத்துகள் கூட, இவரின் இலக்கியத்திலிருந்து உருப்பெற்றவைதான்!

கலியுக மனிதர்களின் இயல்புகளுக்குத் தக்கபடி அறநெறிகளை எளிமையாக்கி, 'வியாச ஸம்ருதி' எனும் நூலை அருளினார். படைப்பு, அதன் நோக்கம், ஆட்சி மற்றும் ஆட்சியாளர்களின் பரம்பரை, உலகம், அதன் இயல்பு, இறைவன் மற்றும் அவனது அவதாரங்கள், அன்றாடக் கடமைகள் ஆகிய அனைத்தையும் அவருடைய நூல்களில் விளக்கியுள்ளார். வியாசரின் இலக்கியத்தில் எந்தத் தகவல் காணப்படுகிறதோ, அதுவே மற்ற இலக்கியங்களில் இருக்கும். அவரது இலக்கியத்தில் இல்லாதவை வேறு எதிலும் தென்படாது என்கிறது ஸ்லோகம் ஒன்று (யதிஹாஸ்திததன்யத்ரயன்னேஹாஸ்திநதத்க்வசித்). 'மனித சிந்தனையின் முழு ஆற்றலும், முன்பே வியாச சிந்தனையில் அடங்கிவிட்டது' என்று பொருள். உலகவியலிலும் ஆன்மிகத்திலும் அவர் தொடாத விஷயமே இல்லை. தன்னிகரற்ற மகான் அவர். இதனால்தான், வியாச பௌர்ணமி திருநாளில், அவரை உலகக் குருவாக ஏற்று வணங்குகின்றனர். துறவிகளும் அறிஞர்களும் குருபௌர்ணமி நாளில், 'வியாச பூஜை' செய்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தித் தங்களைத் தூய்மைப் படுத்திக்கொள்கின்றனர்.

அறுபதாம் கல்யாண வைபவத்திலும், இவருக்குச் சிறப்பு பூஜை செய்வர்!

நீருண்ட மேக நிறம் கொண்ட திருமேனி; இளம் பொன் நிறத்துடன் திகழும் அடர்த்தி யான தலைமுடி; கம்பீரத் தோற்றம்; கையில் தண்டம் ஏந்தி, மான்தோலாடையில் காட்சி தருபவர் என அவரை வர்ணிக்கிறது புராணம் (அப்ரச்யாம: பிங்கஜடா...). அவரது தோற்றமே, அவரின் பெருமையைச் சொல் லும். உலகில் பிற நாடுகளுக்கு இல்லாத பெருமை, பாரதத்துக்கு இருந்ததற்கு, வியாச சிந்தனையும் அவரது தொலை நோக்குப் பார்வையுமே காரணம்!

திரௌபதியின் சுயம்வரத்தில், பந்தயத்தில் வெற்றி பெற்ற அர்ஜுனன், திரௌபதியைக் கரம் பிடித்தான். ஆனால், 'வெற்றியில் கிடைத்த பலனை, ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்' எனத் தாயார் குந்திதேவி சொன்னதைத் தட்டமுடியாமல், ஐவரும் அவளை ஏற்றனர். ஆனால், திரௌபதியின் தந்தை துருபதன் இதை ஏற்க மறுத்தான். இந்தச் சூழலில் அங்கு வந்த வியாசர், 'ஒருவரே ஐந்து வடிவில் பதியாக, கணவனாக வரவேண்டும்' என முற்பிறவியில் திரௌபதி விரும்பியதை விவரித்து, துருபதனுக்குத் தெளிவுபடுத்தினார். அறத்தின் நுணுக்கம், ஈசன் அளித்த வரத்தின் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்த வியாசர், தக்க தருணத் தில் வலியச் சென்று உதவினார். 'பிறருக்கு உதவுவது புண்ணியம்; தீங்கிழைப்பது பாபம்' என்பதற்கேற்ப, உதவ வந்த உத்தமர் அவர்.

இந்திரப்பிரஸ்தத்தில், ராஜசூய வேள்வி செய்தார் தருமர். அதில் வியாசரும் கலந்து கொண்டார். வேள்வி முடிந்ததும் தருமரிடம் வந்து, ''13 வருடங்களுக்குப் பிறகு, க்ஷத்திரியர் களுக்கு ஒட்டு மொத்த அழிவு காத்திருக்கிறது. துரியோதனனது தவறால், அந்த அழிவுக்கு நீயே காரணமாவாய்!' என்று சொல்லி விடை பெற்றார். அதாவது, பாரத யுத்தத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டிவிட்டார்!

சூதாட்டத்தின் மூலம், பாண்டவர்களின் உடைமைகளைப் பறித்து, 12 வருடம் வனவாசம் அனுப்பியும் திருப்தியில்லை துரியோதனனுக்கு! வனத்தில் உள்ள அவர்களை அழிக்கத் திட்ட மிட்டான். எதிரிகள், உடலளவில் தொலைவில் இருந்தாலும், மனதளவில் தன்னை நெருங்கி இருந்ததால் ஏற்பட்ட பயம், அவனை உறங்க விடவில்லை! அரக்கு இல்லத்தில், மரணத்தின் வாயில் இருந்து வெளிவந்தவர்கள் ஆயிற்றே எனும் நினைவால், துரியோதனன் பொறுமை இழந்தான். சகுனி, கர்ணன், துச்சாதனன் ஆகியோருடன் ஆலோசித்து, படை களுடன் கிளம்பினான். இதை அகக்கண் ணால் அறிந்த வியாசர், அவனைத் தடுத்து நிறுத்தி, நாடு திருப்பினார்.

அத்துடன், திருதராஷ்டிரனைச் சந்தித்து, ''சூதாட்டத்தால், பாண்ட வர்களைக் காட்டுக்கு விரட்டியது அறத்துக்குப் புறம்பானது. அதன் விளைவு, கசப்பாகத்தான் இருக்கும். குரு வம்சத்தைக் காப்பாற்ற எண்ணினால், துரியோதனனைப் பாண்டவர்களிடம் அனுப்பு. மைத்ரேயரும் இதுகுறித்து உனக்கு அறிவுறுத்துவார். அதனை ஏற்கவில்லை எனில், சபித்துவிடுவார்!'' என எச்சரிக்கையுடன் கூடிய நல்லுரையை வழங்கினார். அவர் சொன்னபடியே மைத்ரேயர் வந்தார்; அறிவுறுத்தினார். அதனை ஏற்காமல், அலட்சியப்படுத்தியதால், கோபமானார்; துரியோதனனுக்குச் சாபமிட்டார்!

நல்லவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்கிறது சாஸ்திரம் (த்யஜதுர்ஜனஸம்ஸர்திதம்...). வாழ்வில், நல்லவர்களின் சேர்க்கை மிகவும் அவசியம். அவர்களது சேர்க்கை, குறைகளை அகற்றும்; நிறைவு தரும்; பேரின்பத்தை அடைவது எளிது என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

விதியின் விளையாட்டை முன்பே அறிந்தி ருப்பினும், ஆணவத்தில் சிக்கி ஆர்ப்பரிப்பவனை அமைதியுறச் செய்வதற்காக, தானாகவே செயல்பட்ட வியாசரின் சிந்தனை அலாதியா னது. அதனால்தான், மக்களின் மனங்களில் இன்றைக்கும் வாழ்கிறார் வேதவியாசர்!

நன்றி சக்தி விகடன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum