Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
எலுமிச்சையில் எல்லா குறைகளும் தீர்க்கும் குங்குமக்காளி
Page 1 of 1

அற்புதங்கள் நிகழ்த்தும் ஸ்ரீஅழகிய குங்குமக்காளி அம்மன், மதுரை அழகர் மலை சாலையில், கலைவாணி நகரில் கருணைபொழியக் காத்திருக்கிறாள்.
சிறப்பு வழிபாடுகள் ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.00 மணி முதல், யாக வேள்வி, கலச பூஜை, அபிஷேக ஆராதனைகள், அன்னதானம், அருள்வாக்கு உரைத்தல் போன்றவை குங்குமக்காளி சந்நிதானத்தில் நடைபெறுகிறது..
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு வழிபாடு நடைபெறுகிறது. வழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெறும் நேரத்தில், ஆலயத்தின் மேல்பகுதியில் கருடன் இருமுறை வலம் வந்து அருளாசி வழங்குவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. கருடன் பூஜை நேரத்தில் வருவதும் அருளாசி வழங்குவதும் வழக்கமான ஒன்றாகும்..ஆலய வரலாறு.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கலியுகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்ந்து செழிக்கவும்; தர்மம், சத்தியம் நிலைக்கவும்; நீதி, நேர்மை, நிலவவும்; மந்திரங்கள், யந்திரங்கள், தாயத்து போன்றவற்றால் மக்கள் ஏமாற்றப்பட்டு, அவதிக்கு உள்ளாகி தவறான வழியினைக் கடைப்பிடித்து கஷ்டப்படுவதை நீக்கவும்; அன்னையின் அருள் ஒளியால் ஆட்கொள்ளப்பட்டு, அன்று முதல் இன்று வரை அருள்வாக்கு அளித்து வருகிறார்- ஸ்ரீ அழகிய குங்குமக்காளிச் சித்தர் திருநாவுக்கரசர் சுவாமிகள். மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரவை மில் காலனி எதிரில் ஒவ்வொரு மாதமும் ஆங்கில முதல் ஞாயிறு அன்றும்; கடைசி ஞாயிறு அப்பன் திருப்பதியிலும் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம், அருள்வாக்கு அளித்து வருகிறார்..
வழிபாட்டு முறைகள்.
ஒவ்வொரு மாதமும் ஆண்களும் பெண்களும் செவ்வாடையுடன் பூஜையில் கலந்துகொண்டு, அபிஷேக ஆராதனை, அன்னதானம் முதலிய பணிகளை சேவையின் அடிப்படையில் செய்து வருகின்றனர். நீங்களும் கலந்துகொண்டு பூஜைப்பொருட்கள், அன்னதானப் பொருட்கள் வழங்கலாம்..
திருப்பணிகள் தொடக்கம்.
திருமங்கலம் கூட்டுறவு சரகத் துணைப்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சு. பழனியப்பனைத் தலைவராகவும், மதுரை சரகத் துணைப்பதிவாளர் எம். இராமரைத் துணைத் தலைவராகவும், மதுரை (பொ.வி.தி) துணைப்பதிவாளர் .
அ. கணபதியைச் செயலாளராகவும் கொண்டு; கு. சேகரன் துணைப்பதிவாளர், ஜானகிராமன், மகேசுவரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள், எம். போசு, எஸ்.ஐ. மற்றும் ஆபீசர் டவுன் ஜெ.வி. கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமதி. சுமதி முருகன் மற்றும் பொறியாளர் எஸ்.பி. முருகன், சமயநல்லூர் விஜயபாஸ்கரன், பரிமளா தேவி ஆகியோர் அடங்கிய திருப்பணிக் குழுவினர்களுடன்; மதுரை மண்டல இணைப்பதிவாளரும், பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடியின் தனி அலுவலருமான டாக்டர். நா. வில்வசேகரனின் நேரடி மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. .
யார் யார் கலந்துகொள்ளலாம்?.
வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு, இனி வாழ முடியாது என்ற நிலையிலுள்ள அனைவரும் மத, இன வேறுபாடுகள் இன்றி இந்த வழிபாட்டில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அன்னையின் அருள் பெற்றோர் ஆயிரம் ஆயிரம் உண்டு. இங்கு சக்கரம் எதுவும் தயாரித்து வழங்கப்படமாட்டாது. எலுமிச்சை கனியும் குங்குமப் பிரசாதமும் மட்டுமே வழங்கப்படுகிறது..
குங்குமமே மருந்து. கொண்டாடுவோரிடமும் அன்பு கொண்டோரிடமும் அன்னை கனவிலும் நினைவிலும் ஓடோடி வந்து அற்புதங்கள் நிகழ்த்துவது அளவிலா ஒன்று..
அன்புடன் துதிப்பவருக்கு அன்னை ஓடோடி வருவாள். அற்புதங்கள் தருவாள். வேண்டும் வரம் தருவாள். வேதனைகள் களைவாள்- ஸ்ரீஅழகிய குங்குமக்காளி அம்மன்..
நன்றி நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum