Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அது ஒன்றே இன்றியமையாதது....
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அது ஒன்றே இன்றியமையாதது....
சாதனையின் உண்மையான முதல் நோக்கம்.
இறைவனை அடைவதுதான் ஆன்மீக உண்மையையும் ஆன்மீக வாழ்வையும் நாடுவதன் முதல் நோக்கமாகும். அது ஒன்றே இன்றியமையாதது, அஃதின்றி பிறவெல்லாம் ஒன்றுமே இல்லை.
இறைவனை அடைந்தபின் அவனை இங்கு வெளிப்படுத்த வேண்டும். அதாவது, முதலாவது நமது குறுகிய உணர்வை தெய்வ உணர்வாக மாற்ற வேண்டும். அனந்தமான சாந்தியயிலும், ஒளியிலும், அன்பிலும், வலிமையிலும், ஆனந்தத்திலும் வாழ வேண்டும், தனது சாரமான இயல்பில் தெய்வ உணர்வாக ஆகி, அதன் விளைவாக தனது புற இயல்பில் அனைத் தாங்கி நிற்கும் பாத்திரமாக, அதன் வடிகாலாக, அதன் கருவியாக ஆக வேண்டும்.
எல்லாம் ஒன்று என்னும் தத்துவத்தை தூல தளத்தில் செயல்படுத்துவது, அல்லது மனித இனத்திற்காகப் பணிபுரிவது என்பதெல்லாம் பேருண்மையை மனமானது தவறாகப் பொருள் செய்து கொள்வதாகும் - இவையெல்லாம் ஆன்ம நாட்டத்தின் உண்மையான முதல் நோக்கமாக இருக்க முடியாது.
முதலில் நாம் பிரம்மனை, இறைவனை அடைய வேண்டும், அதன் பிறகே, பிரம்மன அல்லது இறைவன் நமக்கு இடும் பணி என்ன என்பதை நம்மால் அறிய முடியும். அதுவரை நமது வாழ்வும் செயல்களும் இறைவனை அடைவதற்கான சாதனமாகவே, அம்முயற்சிக்குத் துணை செய்வதாகவே அமைய முடியும். அதற்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக் கூடாது.
நாம் உள் உணர்வில் வளர, வளர அல்லது இறைவனது உண்மை நம்மில் வளர வளர, நமது வாழ்வும் நமது செயல்களும் மேன்மேலும் அந்த உண்மையிலிருந்து பாய வேண்டும். அதோடு ஒன்றாகிவிட வேண்டும்ட என்பது உண்மை. ஆனால், நமது குறுகிய மனத்தின் அறிவைக் கொண்டு முன்கூட்டியே நமது வாழ்வும் செயல்களும் எப்படி அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பது ஆன்மீக உண்மை நம்முள் வளர்வதற்குத் தடையாகும். ஆன்மீக உண்மை நம்முள் வளரும்போது தெய்வ ஒளியும் உண்மையும் தெய்வ ஆற்றலும் சக்தியும் தெய்வத் தூய்மையும் சாந்தியும் நம்முள் வேலை செய்வதையும் நமது செயல்களையும் நமது உணர்வையும் கையாள்வதையும் அவற்றைப் பயன்படுத்தி நம்மிடமுள்ள மாசுகளை நீக்கி, அவற்றினிடத்தில் பிரம்மனின் சுத்தத் தங்கத்தை வைத்து இறைவனது சாயலில் நமக்குப் புது வடிவம் கொடுப்பதையும் நாம் உணர்வு திவ்யமாற்றம் அடைய வேண்டும். அப்பொழுதுதான் இறைவனை இத்தூல உலகில் வெளிப்படுத்த நாங்கள் தயாராயிருக்கிறோம் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு.
மனத்தினால் வகுக்கப்படும்ட ஓர் இலட்சியம் அல்ல தத்துவத்தைப் பற்றிக் கொண்டு அதை அகத்தே நடக்கும் ஆன்மீக வேலை மீது சுமத்தினால் நாம் ஒரு மனத்தளவான சித்தியோடு நின்றுவிடும் ஆபத்து உண்டாகும். அல்லது இறைவனுடன் பூரணமான ஐக்கியம் ஏற்பட்டு அவனுடைய இச்சை தடையின்றி நமது வாழ்வீல் வெளிப்படுத்துவதற்குத் தடை ஏற்படலாம் அல்ல ஆன்மீக வளர்ச்சி பாதி வழியில் நின்று போய் ஒரு தவறான உருவங்கொள்ளவுங்கூடும். தற்காலம் இதுபோன்ற தவறான நோக்கம் கொள்ளும் போக்குதடையதாக உள்ளது.
இந்தச் சிறிய விஷயங்கள் எந்தவொன்று தேவையானதோ அதிலிருந்து நமது கவனத்தைத் திருப்புகின்றவை. அவற்றில் கவனம் செலுத்துவதைவிட இறைவனை அடைந்தால் கிடைக்கக் கூடிய சாந்திக்காகவோ ஒளிக்காகவோ ஆனந்தத்திற்காகவோ அனவை அணுகுவது எவ்வளவோ மேல்.
அக வாழ்வை மட்டுமல்லாமல் தூல வாழ்வையும் தெய்வத்தன்ம பெறச் செய்வதே இறைவனது திட்டம் என்பது எங்கள் கருத்து. ஆனால் அந்த இலட்சியம் அக வாவில் ஏற்பட்ட இறையனுபூதி வெளிப்படுவதால் ஏற்படும் உள் வளர்ச்சியிலிருந்தும உண்டாகும் புறப்பூரணமாகவே வரும். ஒரு மனக் கொள்கையை நிறைவேற்றி வைப்பதனால் அது வராது.
தேவையான ஒன்றே ஒன்று இறைவனை அடைதலே, மற்றவையெல்லாம் அந்த நோக்கத்திற்குத் துணைவெய்வன அல்லது அதற்கு இட்டுச் செல்வன என்ற வகையிலேயே விருமப்த்தக்கவை ஆகும். இறைவனை அடைந்தபின் அந்த அனுபூதியை விரிவுபடுத்துவதாகவோ அதை புறத்தே வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம்.
இறைவனுடைய வெளிப்பாடு அல்லது வாழ்வு முழுவதையும் இறைவனது வேலைக்காக ஒருங்கமைத்தல் என்றால்
முதலாவது, இறைவனை அடைவதற்கும், இறைவனை அடைந்துவிட்ட மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கும் தேவையான சொந்த யோக சாதனையும், கூட்டு யோக சாதனையும்.
இரண்டாவது, அந்த இலட்சியத்தை நோக்கி தான் முன்னேறி, பின் அந்தப் பேரொளியில் உலகமும் வாழ உதவுதல் - இதுவே எனது யோகத்திற்கு விளக்கமும் அதன் நோக்கமும் ஆகும். ஆனால், இறையனுபூதியே முதல் சேவை. அதை மையமாகக் கொண்டே மற்றவையெல்லாம் இயங்க வேண்டும், அஃதின்றி மற்றவற்றிற்குப் பொருள் கிடையாது.
மொழி பெயர்ச்சி - ச. மகாலிங்கம்.
நன்றி - வைகறை
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: அது ஒன்றே இன்றியமையாதது....
அற்புத விளக்கம் .அனைவரும் படிக்க வேண்டியது, நன்றி
sundarrajan- Posts : 7
Join date : 22/10/2014
Age : 36
Location : mayiladuthurai
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum