இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விசிறி சுவாமிகள்-- விசாலம்

2 posters

Go down

விசிறி சுவாமிகள்-- விசாலம் Empty விசிறி சுவாமிகள்-- விசாலம்

Post by ஆனந்தபைரவர் Wed Feb 23, 2011 3:23 pm

விசிறி சுவாமிகள்-- விசாலம் Yrsk13

என் மனம் கவர்ந்த குரு "விசிறி ஸ்வாமிகள்". இவரை எல்லோரும் மனநிலை சரியில்லாதவர் என்றே நினைத்தனர். ஆனால் இவர் பெரிய சித்த புருஷர் என்று பின்னால் தான் தெரிய வந்தது. இவர்தான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் என்பவர்.

மறைந்த மாமேதை வித்துவான் திரு.வே.இலட்சுமணன் தன் பால ஜோதிடத்தில் இவரைப் பற்றியும் இவரது மகிமை பற்றியும் எழுதி வந்தார். அப்போதே அவரைப் பார்க்கும் ஆவல் எனக்குள் துளிர் விட்டது. அவரை மூன்று முறை பக்தியுடன் உள்ளன்புடன் அழைக்க உடனே வந்திடுவார் என்றும் லட்சுமணன் அவர்கள் கூறி இருந்தார்.

முயன்று பார்க்க எண்ணிய நான், ஒரு நாள் "மூன்று முறை என்ன? பல முறை உங்களை அழைக்கிறேன், வந்து எனக்குத் தரிசனம் தாருங்கள்? என்று கேட்டுக் கொண்டேன்.

மாலை நேரம், என் ரெய்க்கி கிளினிக்குக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சிறிது தூரம் சென்றவுடன் வேலைக்காரி ஓடி வந்து என்னிடம், "அந்த வீட்டு அம்மா கூப்டறாங்க" என்று குரல் கொடுத்தாள்.

நானும் அங்கே போனேன். "ஏதேனும் ரேய்க்கி ஹீலிங்க் போலேயிருக்கும்" என்று மனதில் எண்ணினேன். தயங்கியபடியே உள்ளே நுழைந்தேன்.

ஒரு அம்மாள், "வாங்கோ, வாங்கோ, உள்ளே என் பையன் ஒரு கேலெண்டர் பெரிதாகக் கொண்டு வந்தான். நான் பிரிக்கவே இல்லை. மாட்டவும் இடமில்லை. நீங்கள் எடுத்துண்டு போங்கோ. இது உங்களுக்குத்தான்" என்றாள்.

அதை வீட்டுக்குக் கொண்டுபோய் பிரித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! பெரிய அளவில் வெள்ளை முண்டாசுடன், சிரித்த முகத்துடன் என் அன்புக்குரிய யோகி ராம்சூரத்குமார். காலையில் கூப்பிட்டேன், மாலையில் அவர் வந்து விட்டார். என் நம்பிக்கை வலுத்தது. கண்களில் நீர் மல்க வீட்டில் மாட்டினேன்.

அவர் ஆசிரமத்திற்குப் போகும் ஆசையும் வேர் விட்டது. அவர் பெயரையும் தினமும் சொல்ல ஆரம்பித்து பின் முறையிட்டேன், "ஸ்வாமிஜி, உங்கள் ஆஸ்ரமத்தைப் பார்க்க மிக மிக ஆவல், வாய்ப்புத் தந்து அழைத்துப் போவீர்களா? என் கணவரோ வரமாட்டார், எனக்கு வர ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், அங்கு வந்து விபூதி பிரசாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று.

இரண்டு நாட்கள் கழிந்தன. நான் இருப்பது அண்ணாநகர். அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிக்கை எல்லா ஞாயிறும் வரும். அதில் மூத்த எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் நாலு மூலை என்ற தலைப்பில் மிகவும் ஹாஸ்யமாகவும், சிறப்பாகவும் எழுதி வருகிறார். அவரின் விசிறி நான். அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதினேன். அவர் நன்றி தெரிவித்து ஒரு பதில் போட்டிருந்தார். அந்தக் கவரில் உள்ளே திரு ராம் சுரத்குமாரின் போட்டோவுடன் விபூதி பிரசாதமும் இருந்தது. என் வியப்புக்கு அளவே இல்லை. என் கண்களில் நீர் பனித்தது.. இத்தனை விந்தை செய்த மானசீக குருவைப் பார்க்க வேண்டாமா?

மனம் திருவண்ணாமலைக்குப் போக ஏங்கியது. அவரின் ஆஸ்ரமம் அங்குதான் உள்ளது. ஸ்ரீ ரமண ஆஸ்ரமம், திரு சேஷாத்ரி, ஸ்வாமிகளின் சமாதி, பின் இவரது ஆஸ்ரமம் இருக்கிறது. ஆனால் வீட்டுச் சூழ்நிலையில் நான் தனியாகப் போக
வாய்ப்பு இல்லை. அவரிடமே பல தடவைகள் முறையிட்டேன்.

ஒரு வாரம் கழிந்தது. அன்னையின் புஷ்பாஞ்சலி செய்யப் பூக்கள் வாங்க கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு நானும் என் கணவரும் சென்றோம். அங்கு அவர் பூக்கள் வாங்க, நான் காரின் நிழலில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் புன்னகை செய்தேன். அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.

பின் மெதுவாக என்னிடம் வந்து இத்தனைப் பூக்கள் எதற்கு? என்றாள். பின் என் கையில் உள்ள அன்னையின் மோதிரம், சக்கரம் போன்று அமைப்பு பார்த்து விட்டு, "அன்னையின் சிம்பலா?" என்றாள். நானும் "ஆம்" என்றேன். பின் அவள் பேச நானும் அன்னை மீராம்பிகா (பாண்டிசேரி) பற்றிச் சொல்ல அவளுக்கு அங்கு போகும் ஆர்வம் ஏற்பட்டது.

"வரும் சனிக்கிழமைப் போகலாமா?"

"ஓ போகலாமே"

"ஆனால் நான் திருவண்ணாமலையில் அண்ணாமலயானைத் தரிசித்து, பின்தான் வருவேன். என் கார் கொண்டு வருவேன். டிரைவரும் இருக்கிறார், ஒரு நாள் தங்கிப் பின் ஸ்ரீ ராம்சுரத் குமார் இருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்"

"ஓ அப்படியே செய்யலாம், நான் சனிக்கிழமை காலை ரெடியாக இருக்கிறேன்"

அவள் என் விலாசம் வாங்கி, போன் நம்பரும் வாங்கிப் போனாள். சொன்னது போலவே சனிக்கிழமை காலை திருவண்ணாம்லைக்குப் போக வந்து விட்டாள். எனக்கு ஒரே வியப்பு. முன் பின் தெரியாத ஒரு அம்மணி எனக்கு என்று காருடன் நான் நினைக்கும் அதே ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் என்ற விசிறி ஸ்வாமிகளைப் பார்க்க அழைத்துப் போவது என்றால், இது நிச்சயம் குருவின் அருள்தான்.

கார் கிளம்பி ரமணாஸ்ரமம் சென்று அங்கு ஸ்ரீ ரமணரின் ஆஸ்ரமம் தரிசித்து பின் யோகிராம் சுரத்குமார் இருக்கும் இடம் வந்தோம். என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். அடுத்த வாரம் அவரைப் பற்றித் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்.
ரமணர் ஆசிரமத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே நான் தேடி வந்த யோகி ராம் சுரத் குமாரின் சமாதி இருந்தது. சமாதி இருந்த மண்டபத்தை அடைந்தோம். அதன் தெய்வீக அழகில் மனம் லயித்தது.

நான் நுழைந்தவுடன் ஒரு பெரியவர் "குருநாதர்" உங்களுக்கு ஆசி தர காத்திருக்கிறார் என்றார். நுழைவாயிலில் இருந்த கடையில் பழங்கள், பூமாலை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றேன். ஒருவர் என்னை அழைத்துப்போய் உள்ளே சமாதியைக்காட்டி சற்று நேரம் தியானம் செய்யச் சொன்னார். நானும் அவரது பெரிய படத்தின் எதிரே அமர்ந்து கண் மூடி தியானம் செய்யத் தொடங்க ஒரு மலர் அவர் போட்டோவிலிருந்து என் அருகில் வந்து விழுந்தது. அந்தக் கணத்தில் மனம் அடைந்த பரவசத்தை விவரிக்க இயலவில்லை.

அந்த மண்டபமே பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டு ஒரு லட்சம் பேர் அமரும்படியாக இருந்தது. உள்ளே நிலவைப் போன்ற ஒரு குளிர்ச்சி. நல்ல நீண்ட நாசி, வில்லுப்போல் புருவம், நீல முண்டாசுடன் மிகவும் கவர்ந்துவிடும் முகம், அவரது கருணை வழியும் தீட்சண்யமான பார்வை. அந்தக் குருவின் மகிமைதான் என்னே! படிப்படியாக எனக்கு அங்கு வரும் வாய்ப்புகளை உருவாக்கி, உடன் வர நல்ல துணையையும் அளித்து மிக திருப்தியாக நல்ல அருளும் கொடுத்திருக்கிறாரே!

அவர் அடிக்கடி சொல்வது "நான் ஒரு பிச்சைக்காரன். நான் என்ன உனக்குக் கொடுக்க முடியும்? என்னிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சை கேட்காதே. கடவுளை மறக்காதே, எந்தப் பெயர் வேண்டுமானாலும் சொல். ஆனால் நாமஸ்மரணம் செய். என் அப்பா ராமா உனக்கு அருள் புரிவார், அருணசலேஸ்வர் அருள் புரிவார்."

இவரின் குரு ஸ்ரீ ராம்தாஸ் சுவாமிகள் இவருக்கு ஓதிய மந்திரம் "ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்". இதை 24 மணி நேரமும் ஜபிக்கச் சொன்னார்.

இவரைப்பற்றி நன்கு அறிந்த பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா அவர்கள் சொல்கிறார்:

1952ம் வருடம் பீஹாரிலிருந்து ஒரு படித்தவர், மிகுந்த அறிவாளி ஆனந்தாஸ்ரமத்திற்கு வந்தார். அங்கு மூன்று வாரங்கள் தங்கி இருந்தார். நீண்ட தாடியுடன் தீர்க்க நாசியுடன் பார்க்க நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பிஏ, பிஎட் படித்தவர். ஆனால் இந்த ஆஸ்ரமத்தில் அவர் பழகும் முறை மிகவும் வித்தியாசமாக இருந்ததால் அந்த ஆஸ்ரமத்தை நடத்தி வந்த பெரியவர்கள் (அம்மா, அப்பா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்) இவரை எங்கிருந்து வந்தாரோ அங்கேயே போகச் சொல்லி திருப்பி அனுப்பி விட்டனராம். அவர் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருப்பவர். ஆகையால், ஆனந்தாஸ்ரமம் விட்டுப் போக விருப்பமில்லாததால் அங்கேயே சுற்றி பின் ஈரோடு போய்ச் சேர்ந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நாள் ரயில் விபத்தொன்றில் சிக்கி உயிர் தப்பினார். தன்னை ஆனந்தாஸ்ரமத்திலிருந்து அனுப்பியதும்குறித்து இவர் தன் குரு ராமதாஸ் மேல் கோபம் கொண்டார். அடிக்கடி "இந்தப் பிச்சைக்காரனை குரு ராம்தாஸ் கொன்று விட்டார்" என்று சொல்லிக்கொண்டே இருப்பார். (தன்னிடமிருந்த தாமச, ராஜச குணங்களை குரு ராம்தாஸ் அழித்து விட்டார் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பாரோ?)

ஒரு நாள் அவர் வாழ்வில் திடீர் திருப்பமாக குரு ராம்தாஸ் அவரை அழைத்து அவருக்கு தீட்சை கொடுத்தார் அன்றைய தினத்திலிருந்து பல நேரங்கள் தன்னையே மறந்த மயக்க நிலையில் இருப்பாராம். 1970ல் குருஜி அவருக்கு குண்டலினி சக்தியை ஏற்றி தகுந்த விளக்கமும் அளித்தார். அன்று அவர் தனக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்தார். அத்துடன் இறைசக்தியும் வெளி வந்தது. அவர் யோகி ராம்சுரத் குமார் ஆனார்.

இவர் ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீராம்தாஸ், ஸ்ரீ ரமணரிஷி போன்ற மூன்று குருமார்களை அணுகி அவர்கள் மூலம் யோகி ஆனவர். அவர் அதிகம் பேசமாட்டார். முத்து உதிர்வதைப் போல் ஓரிரண்டு சொற்கள் பேசினாலும் அது நம் வாழ்வை வளப்படுத்தும் வகையினதாக அமையும். அவர் தன் ஆஸ்ரமத்தில் நல்ல ஆசனத்தில் அமர்ந்ததே கிடையாது. வெளியே புன்னை மரத்தின் கீழே அல்லது தெரு நாய்களுக்கு மத்தியில் இருப்பார். கையில் எப்போதும் விசிறி வைத்திருப்பார். பள்ளிக் குழந்தைகள் சில சமயம் ‘பைத்தியமே’ என்று விளித்து அவர் மேல் கற்கள் எறிவார்கள்.

ஒரு சமயம் அவர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும்போது, வாளி அறுந்து கீழே விழ அதனடியில் ஒரு பறவை வந்து மாட்டிக்கொண்டு இறந்து விட்டது. இவர் அதைப் பத்திரமாக எடுத்து அதற்குக் கடைசி கிரியை சாஸ்திரத்துடன் செய்தாராம். பலகாலம் இமாலய மலைக்கு நடுவில் இயற்கைக் காட்சிக்கிடையே தவம் செய்து அங்கேயே தங்கி இருந்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தார்.

யோகிக்கும் குமாரி நிவேதிதாவுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய உரையாடல்:

குருஜி : "நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நிவேதிதா : "துக்கம், சுகம், இன்பம், துன்பம் என்பவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் தாங்கள்"
குருஜி : "கல் கூடத்தான் இவைகளால் பாதிக்கப்படாதவை."
நிவேதிதா : "கல் சுத்தியால் தட்டினால் உடைந்துவிடும்"
குருஜி : "என் காலும் அப்படித்தான்"
நிவேதிதா " "நீங்கள் உடல் இல்லை. உங்கள் உடலுக்கு ஒருவிதமான பாதிப்பும் இல்லை. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல் நீங்கள் யார் என்னென்ன உருவத்தை நினைக்கிறார்களோ அந்த அந்த உருவத்திலும் வருவீர்கள்".

இவரை மிக பிரபலமாக்கியவர்கள் பாலஜோதிடம் புகழ் வித்துவான் கே.லட்சுமணன் மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள்.

அவசியம் இவரது சமாதியையும், பளிங்கு மண்டபத்தையும் காண எல்லோரும் போய் வரவேண்டும். அங்கு போனாலே அவரது நல்லாசி கிட்டி விடுகிறது.

"ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜெயஜெய ராம்"

நன்றி நிலாச்சாரல்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

விசிறி சுவாமிகள்-- விசாலம் Empty Re: விசிறி சுவாமிகள்-- விசாலம்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:38 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum