இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

4 posters

Go down

தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்  Empty தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 10:40 pm

தமிழருக்கும் வேதங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தமிழர் வேதங்கள் வேறு என்றும் கூறப்படும் கோட்பாடுகளுக்கு எவ்வித அடிப்ப்டையும் இல்லை. இவை எல்லாம் ஆரிய படையெடுப்பு அல்லது ஆரிய திராவிட இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆதாரமற்ற கட்டுமானங்கள் மட்டுமே. வேதங்களில் வரும் ஒரு பதமான ஆரிய என்பது எப்படி தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் காணலாம்.
திருமூலர் தமது திருமந்திரத்தில் ஆரிய எனும் பதத்தினை இறைவனையும் குருவையும் குறிக்க பல இடங்களில் பயன்படுத்துகிறார்: உதாரணமாக:
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சை சுட்டிடா
சூரிய சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (திருமந்திரம் 1.118)
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் சிவபுராணத்தில் சிவபெருமானை “பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என பாடுகிறார். திருப்பாண் ஆழ்வார் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் ஆவார். ‘குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்’ என அவர் தம்மையே தாழ்த்தி கூறுகிறார். ஆனால் அந்தணரான வேதாந்த தேசிகர், திருப்பாண் ஆழ்வாரை பின்வருமாறு வணங்கி துதிக்கிறார்:
“பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரிதிரைநீர் வையத்து உள்ளே
வேதாந்த ஆரியன் என்று இயம்ப நின்றோம்.”
ஆக, தாழ்த்தப்பட்ட குலத்தவரை வேதாந்த ஆரியன் என்றே அழைக்கிறார் வேதாந்த தேசிகர். அருட் பெருஞ் ஜோதி வடலூர் வள்ளலார் சுவாமிகளும் ஆரிய எனும் பதத்தினை தமது திருவருட்பா பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
ஆரிய லகம்புற மகப்புறம் புறம்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருன் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு அருட் பெருஞ் ஜோதி (திருவருட்பா 281-284)
இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆன்மிகப்பேராளர்களால் ஆரிய எனும் பதம் எவ்வித இனத்தொடர்பும் இல்லாமல் ஆன்மீக அருள் பெற்ற ஞானிகளையும் இறைவனையும் குறிக்கவே பயன்படுத்தப்பட்டதென காண்கிறோம். வேடுவர் குலத்துதித்த வான்மீகி மகரிஷி ‘அனைவரிடமும் அன்பு கொண்டு அனைவராலும் விரும்பப்படுபவனே ஆரியன்’ என கூறியுள்ளார் (பாலகாண்டம் 1/16). பகவான் புத்தர் தர்மபாதாவில் ‘உயிர்களுக்கு துன்பம் ஏற்படுத்தாதவனே ஆரியன் (தம்மபாதா 270) கூறியுள்ளார். இவை எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரிய இனவாதம் புகுத்தப்படும் காலம் வரை ஆரிய எனும் பதம் பாரதம் முழுவதும் இனரீதியாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாகும்.
ஆரிய படையெடுப்புக்கோட்பாட்டின் சின்ன சின்ன விஷயங்கள் கூட அகழ்வாராய்ச்சியில் அடிபட்டுப் போயிருக்கின்றன. உதாரணமாக, வேதங்களில் பார்லி குறித்து உள்ளது அரிசி குறித்து இல்லை. ஆனால் ஹரப்பா பண்பாட்டில் நெல் வயல்கள் உள்ளன. எனவே இரண்டும் வெவ்வேரு பண்பாடுகள் என கூறப்பட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் பலுசிஸ்தானின் மெஹர்கர்ஹ் (Mehrgarh) எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பல குறிப்பிடத்தக்க பார்வை மாற்றங்களை அகழ்வாராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பண்பாட்டின் காலமானது கிமு 6500 என கணிக்கப்படுகிறது. பொதுவாக வரலாற்றாசிரியர்கள் புதிய கற்கால காலகட்டத்திற்கு பின்னரே பெரிய நகர நாகரிகங்கள் உருவானதாகக் கணிக்கின்றனர்.ஆனால் மெஹர்கர்ஹ் ஏறத்தாழ 500 ஏக்கர்கள் பரப்பளவில் மக்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. பண்டைய காலத்தில் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக பண்பாட்டுடன் வாழ்ந்த அரிதான இடங்களில் இதுவும் ஒன்று என இப்போது இவ்விடம் கணிக்கப்படுகிறது.
மேலும் இது சிறந்த கிராமப்புற நாகரிகமாக இருந்ததுடன் பிற்கால ஹரப்பா நகர நாகரிகத்துடன் தொடர்புடையதாக அமைகிறது. இவர்கள் அரிசியை அறிந்திருக்கவில்லை. இவர்கள் பார்லி பயிரிட்டனர். இந்த நாகரிகத்தின் பல அம்சங்கள் வேத இலக்கியத்துடன் ஒத்துப் போகின்றன. இந்நாகரிகத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே ஹரப்பா நாகரிகம் ஆகும். இந்நாகரிகத்தில் பிற்கால ஹரப்பா பண்பாட்டினையொத்த பெண் தெய்வ வழிபாடு இருந்ததுடன், பசுவும் புனிதமானதாகக் கருதப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. ஆக, கிமு 6000 முதலே தொடர்ச்சியுடைய ஒரு பண்பாட்டின் சந்ததிகளாக நாம் இருந்து வருகிறோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அகழ்வாராய்ச்சியாளர் பி.பி.லால் கூறுகிறார்:
“மெஹர்கர்ஹ் அகழ்வாராய்ச்சி எதைக் காட்டுகிறது என்றால் இந்தியப் பிரதேசத்தின் வட மேற்கு பகுதியில் விவசாய வாழ்க்கை கொண்ட புதிய கற்கால சமுதாயம் ஏறக்குறைய கிமு ஏழாயிரம் ஆண்டுகளிலேயே நிலையாக உருவாகிவிட்டது என்பதைத்தான். (பொதுவாக விவசாய குடியிருப்புக்கள் முதலில் உருவான பிரதேசமாகக் கருதப்படும்) மேற்காசியாவின் விவசாய குடியிருப்புகளிலிருந்து இவை பெருமளவு மாறுபடுகின்றன. ஆடுகளையும் கோதுமை பயிடுதலையும் முக்கியமாக கொண்ட குடியிருப்புக்கள் மேற்காசிய பிராந்தியத்தைச் சார்ந்தவை. மெஹர்கர்ஹ் பிரதேசத்திலோ பார்லியும் மாடுகளும் பிரதானமாக விளங்குகின்றன. ஆக, மேற்காசிய (விவசாயக் குடியிருப்புகளின்) உதயத்துடன் தொடர்பற்றது இந்த பண்பாடு. மட்டுமல்ல. இந்த மண்ணிற்கே உரிய மானுட பரிணாம உதயமாக மட்டுமே நாம் இதை காண முடியும். மேலும் இப்பண்பாட்டுக்கூறுகள் பின்னால் உருவான உலோகப்பயன்பாட்டு கலாச்சாரமாக வளருவதையும் – கிமு மூவாயிரம் ஆண்டுகளில் தெளிவாக ஹரப்பா நாகரிகமாக பரிணமிக்கும் சமுதாயத்தின் பல பரிணாம நிலைகளையும் இதனில் நாம் காண முடிகிறது. மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விரிவாக ஆராய்ந்த ஹெம்பிஸ் மற்றும் அவரது துணை ஆய்வாளர்கள் கிமு 4500-கிமு 800 வரைக்குமான காலகட்டத்தில் உயிரியல் குழுமத்தொடர்ச்சியும் இதில் இருந்திருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.”
ஒரு வரியில் சொன்னால், ஆரிய இனவாதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நன்றி தமிழ்பேப்பர்.நெட்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்  Empty Re: தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

Post by Dheeran Mon Mar 12, 2012 11:15 pm

காலமறிந்து இடப்பட்ட அற்புதமான பதிவு. ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்கவேண்டிய சிந்தனையைத்தூண்டும் கட்டுரை. முதலில் இந்துமதத்தை மட்டும் தாக்குவதற்கு பகுத்தறிவின் பெயரில் முட்டாள் நாத்திகவாதம் அதற்கு மசியாதவர்களைக் குழப்ப ஆரிய திராவிட பித்தலாட்டம், அதற்கும் சிக்காத இந்து தமிழரிடம் "நீமட்டும் நல்லவன் உன் சொந்த பந்தமெல்லாம் மோசம், நானும் உன்னைப்போலவே நல்லவன் நாமெல்லாம் சொந்தம் " எனக் கூறித் தன் தனிப்பட்ட வாழ்க்கை வசதிக்காக வலைவீசி ஆள்பிடிக்கும் மதமாற்றக்கும்பல் இவற்றிற்கிடையே சிக்கிக்குழம்பும் தன்மானத் தமிழனுக்கு இக்கட்டுரை அருமருந்து.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்  Empty Re: தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

Post by கணேஷ் Tue Mar 13, 2012 10:51 pm

இந்த பதிவி பார்க்கத்தான் இத் தளத்துக்கு வந்தேன் அற்புதமான கட்டுரை மேன்மேலும் அதிக விவரங்களுடன் பலகட்டுரைகள் படிக்க வேண்டுக்கிறேன்
தீரன் அவர்களின் பதில் சூப்பர்...
நன்றி,வாழ்த்துக்கள்

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்  Empty Re: தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

Post by rama Wed Mar 14, 2012 4:52 pm

நன்றாக எழுதிய கட்டுரை. மிக்க நன்றி

rama

Posts : 4
Join date : 14/03/2012

Back to top Go down

தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்  Empty Re: தமிழன் எனும் ஆரியன்-அரவிந்த நீலகண்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum