இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்

2 posters

Go down

இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்  Empty இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்

Post by maniajith007 Fri Sep 30, 2011 2:57 pm

என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

வாழ்வு குறித்து நாம் எடுக்கும் முடிவுகள்தான் வாழ்க்கையின் போக்கினை நிர்ணயிக்கின்றன. வீரியமிக்க வாழ்க்கைக்கு முடிவுகளின் நிதர்சனம் மாத்திரம் உரமாக இருக்க முடியாது. காரணமே முடிவுகள் பெரும்பாலும் ஏட்டறிவின் அடிப்படையிலும் கேள்வியறிவின் அடிப்படையிலும் எடுக்கப்படுகின்றன. அது சக்தியற்ற மனிதனுக்கிணையானது. ஆனால் அனுபவம் என்ற உந்து சக்தி ஆளுமை புரியுமானால், செயலாக்கப்படும் முடிவுகளின் பயன்பாடே வேறாகத்தானிருக்கும்; ஆழமானதாகவும் இருக்கும்.

நான் பரம்பொருள்பால் நம்பிக்கை உள்ளவன்தான் என்றாலும், கற்ற படிப்பறிவால், "மரணத்திற்குப் பின்னும் மகான்களின் இயக்கம் உள்ளது' என்று கூறப்படுவதில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தேன்.

இவ்வுடம்பு ஐம்பூதங்களின் கூட்டாட்சி. உயிர் என்பது அதனை இயக்குகின்ற மந்திரக்கோல். உயிரின் உயிராகிய பரமாத்மாவின் சாயலாகிய ஜீவாத்மா இதயத்தே ஒளிவிடும் மௌன சாட்சி. உயிரின் கட்டுப்பாட்டில் புலன்கள் புரியும் எச்செயல்களுக்கும் ஜீவாத்மா பாத்திரமானதல்ல. இறைவன் புறத்தே பரமாத்மா எனவும்; அதுவே உடலினுள்ளே ஆட்சி செய்யும்போது ஜீவாத்மா எனவும் குறிப்பிடப்படுகிறான். உடலென்பது ஐம்பூதங்களின் சேர்க்கை. தாயின் கருப்பையில் கூடிய உயிர், மரணத்தின்பொழுது உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது. ஐம்பூதங்களால் உண்டான உடல் ஐம்பூதங்களில் சேர்ந்துவிடுகிறது.

மகான்களைப் பொறுத்தவரை- அவர்களது ஜீவாத்மா நீக்கமற எங்கணும் நிறைந்துள்ள பரமாத்மாவுடன் முற்றும் ஐக்கியமாகி, பாலில் சேர்ந்த நீரென மாறிவிடுகிறது. பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து முற்றும் சுதந்திரன் ஆகிறார்கள். மகான்- துறவி என்ற தனித்துவம் அற்றுவிடும் காரணத்தால், இயக்கமற்று பரஞ்சோதியில் பூரணித்த தீபத் துளியாய் மாறிவிடுகிறார்கள் என்றே நான் திண்ணமாக எண்ணியிருந்தேன்.

ஆதலால், "ஒளியுடலாகக் காட்சியருளுகிறார்; மற்றவர் மூலம் அருள் வாக்காய் ஒலிக்கிறார். மாற்றுருவில் காட்சியளிக்கிறார்' என்பதை நான் ஏற்காமல் இருந்தேன். இதை உணர ஓர் அனுபவ அறிவு தேவையாக இருக்கிறது என்பது நாம் மறந்துவிடுகின்ற உண்மை.

மகான்களின் நெருக்கத்திற்கும், உயர்ந்த அனுபவங்களைப் பெறுவதற்கும் பூர்வ ஜென்மப் பேறு கட்டாயம் இருக்க வேண்டும். இவ்வரிய பேறு நம் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆறிலோ- அறுபதிலோ எப்போது வேண்டுமானாலும் உண்டாகலாம்.

எனக்கு இப்பேறு ஐம்பதாவது வயதில் மந்திரலாயத்தில் ஏற்பட்டது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் காளியன்னையுடன் பேசினார். காளியின் அருட்சோதியில் நாட்கணக்கில் மகிழ்ந்து இருந்தார். இதை முதலில் எவரும் நம்பவில்லை. அவருக்குப் பித்தன் என்ற பட்டம்தான் கிடைத்தது. அவரது நெருங்கிய சொந்தக்காரர்கள்கூட நம்பவில்லை. திருமணம் செய்து வைத்தால் அவரது மனநிலை மாறும் என்று அவரது 28-ஆம் வயதில் அன்னை சாரதா தேவியை (மிகச் சிறிய வயதிலேயே) மணம் செய்து வைத்தார்கள். இவ்வளவு ஏன்? அவரது உன்னதத்தை உலகெங்கும் பரப்பிய விவேகானந்தர்கூட முதலில் இவரது மேன்மையை உணரவில்லை. வள்ளலாருக்கும் இதே நிலைதான். அவரது சொந்த சகோதரரே நம்பவில்லையே! இவையெல்லாம் உலகியலில் இயல்புதான்; தவறென கூற முடியாது.

1995-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அமாவாசை நாள். மிகவும் வயதான நான்கு பெருமக்கள், நான், என் மனைவி மற்றும் ஒரு இளைஞர் என ஒரு குழுவாக ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதியிலிருந்து அருளாட்சி புரியும் மந்திராலயம் சென்றடைந்தோம். அத்தலத்தை அடையும்பொழுதே நடுப்பகல் ஆகிவிட்டது. அங்கு ஆலயத்தார் நடத்திவரும் சத்திரத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு, சற்று ஓய்வுக்குப்பின் துங்கபத்ரா நதியில் நீராடச் சென்றோம். அப்பொழுது மாலை 4.30 மணியிருக்கும். நீரோட்டம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் உள்வாங்கியிருந்தது. ஆங்காங்கே உருண்டையான பாறைகள். இடையிடையே குட்டையாகத் தேங்கியிருந்த நீர். அதையெல்லாம் கடந்து சென்றோம். ஆண்கள் எல்லாரும் நீராடிக் கரையேறிவிட்டோம். பெண்கள் யாவரும் நிதானமாக தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டதோடு திருப்தியுறாது, தாங்கள் எடுத்துச் சென்ற துணிகளுக்கெல்லாம் புனித நீராட்டத் தொடங்கிவிட்டார்கள். அப்போது வெளிச்சம் நன்றாகவே இருந்தது. சுமார் மாலை 6.00 மணியளவில் அவர்களும் கரையேறியபின் சுமார் பத்தடி நடந்திருப்போம். அவ்வளவுதான்; வானத்தில் எப்படி அவ்வளவு கருமை சேர்ந்ததோ தெரியவில்லை.

அப்பகுதி முழுவதும் கரும்பாறைகள் பரவியிருந்தமையாலும் இடைவெளியில் தேங்கியிருந்த தண்ணீராலும் கரைசேற வழி தெரியவில்லை. இந்த நிலையில் எப்பொழுது வானம் பொத்துக்கொண்டு பெருமழை பொழியுமோ என்ற அச்சம் வேறு. ஆலயத்தின் வெளிப்பகுதியிலும் மின் விளக்கேதும் எரியவில்லை. மின் தடையோ வேறென்ன காரணமோ தெரியவில்லை.

கூட வந்த முதியோர்களில் இரண்டு பெண்கள் விரதம் இருந்ததன் காரணமாக உடல் தளர்ந்தவர்கள். ஆனால் மனஉறுதி மிக்கவர்கள்தான். எங்களோடு வந்த இளைஞர் நல்ல வேளையாக அங்கே கிடைத்த மரக்கிளையைக் கொண்டு பள்ளத்தில் விழுந்துவிடாமல் இருக்க தடவிக்கொண்டு வழிகாட்டிச் சென்றார். ஆனால் தைரியமாக நடக்க முடியவில்லை. திகைத்தோம். நீர் நிலையில் எங்களோடு குளித்தவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். அவர்கள் எவ்வாறு எப்பொழுது சென்றார்கள் என்பதும் புரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படப்போகிறது என நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லையே. பாறையும் பள்ளமுமான அந்தப் பகுதியைக் கடந்து செல்ல பத்து நிமிடங்களாவது நடக்க வேண்டும். கும்மிருட்டு. ஆற்றிலிருந்து எங்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கறுப்பு நாயும் உடனிருந்தது. 70 வயதைக் கடந்துவிட்ட பெண்கள் மனம் தளரவில்லை. அவர்கள் உரத்த குரலில் இறைவனை எண்ணிப் பாடத் தொடங்கிவிட்டார்கள். நாங்களோ கலங்கி நின்றோம். மழை பெய்வதற்கான அறிகுறி தோன்றியது. மரண பயம் ஆட்கொண்டது. நமக்கு ஜீவசமாதி இங்கேதான் என முடிவு செய்துவிட்டோம்.

நாங்கள் நம்பிக்கையற்று சரிவதற்கிருந்தபோது கொஞ்ச தூரத்தில் ஒருவர் சிகரெட்டு பற்ற வைத்து புகைக்கத் தொடங்கினார். அந்த நெருப்பு வெளிச்சம் எங்களுக்கு கலங்கரை விளக்குபோல இருந்தது. அதை மையமாக வைத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி கரையையடைந்து ஆலயத்தினுள்ளே சென்றுவிட்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகு சுழற்காற்றோடு பெருமழை கொட்டியது. அப்பொழுது நாங்கள் அங்கு இருந்திருந்தால் வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்து எந்த கதிக்குச் சென்றிருப்போமோ என்று இன்றைக்கு யோசித்தாலும் மேனி சிலிர்க்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால் நாங்கள் கரையேறிய பின்னால் அந்தக் கருப்பு நாயைக் காணவில்லை. அங்கே ஆபத்சகாயனாக இருந்தது அந்த ராகவேந்திரர்தான் என்பதை உணர்ந்து உருகினோம்!
நன்றி நக்கீரன்
[/justify]
maniajith007
maniajith007

Posts : 10
Join date : 29/09/2011

Back to top Go down

இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்  Empty Re: இராகவேந்திரர் பக்தர்களுக்கு வழிகாட்டிய பரவச அனுபவம்

Post by Venkatesh A.S Fri Sep 30, 2011 8:36 pm

உலகில் அனுதினமும் எங்கேயாவது ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது தெய்வீகமானதாக இருப்பின் நன்று. மேலும் அதனை (தெய்வீக அதிசயங்களை) நாம் அறிவது மிக நன்று.அதனால் நாம் இறைவனை மேலும் மேலும் தியானிப்பது மிக மிக நன்று. அத்தகு பேற்றினை தந்த இந்த பதிவிர்க்கு நன்று.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum