இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்

Go down

விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும் Empty விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 4:40 pm

அரவிந்தன் நீலகண்டன்

இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற அரசு அதன் தொடக்க காலங்களிலிருந்தே வீர சவார்க்கர் மீது அனைத்து விதமான அவதூறு பிரச்சாரங்களையும் செய்து வந்தது. பின்னர் அரசு அதிகாரம் காங்கிரஸ் மற்றும் அதன் நகலிகளிடமிருந்து மாறியதும் இப்பிரச்சாரம் இடதுசாரி அறிவு ஜீவிகளாலும் அவர்களது சில மேற்கத்திய நண்பர்களால் 'ஆராய்ச்சி ' என்ற போர்வையிலும் நடந்து வருகிறது.

வீர சவார்க்கர் ஒரு பிரிட்டிஷ் அடிவருடி (உதாரணமாக ராம் புண்யானி மற்றும் ப்ரண்ட்லைன்) என்பதிலிருந்து அவர் ஒரு இனவெறி பிடித்த நாஜி கோட்பாடுடையவர் (இத்தாலிய 'ஆராய்ச்சியாளர் ' மார்ஸியா கஸோலாரி) என்பது வரை இப்பிரச்சாரம் பல மேடைகளில் பல உருவங்களில் பரப்பப்படுகிறது. அண்மையில் தீராநதி ராம் புண்யானியின் வழக்கமான இந்த குற்றச்சாட்டினை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாது வெளியிட்டு தன் அறிவுஜீவி தர்மத்தை நிலை நாட்டியுள்ளது.

ஆனால் உண்மை என்ன ? வீர சவார்க்கர்தான் எப்படிப்பட்டவர் ?

ஹிந்துத்வ சித்தாந்த தந்தை என்றறியப்படும் வீர சவார்க்கர் குறித்த முதல் பிரச்சார அவதூறு அவரால் பிரிட்டிஷ் அரசிற்கு 1913-இல் அளிக்கப்பட்ட கருணை காட்டக் கோரும் மனு குறித்தது. தன் புரட்சி நடவடிக்கைகளை முழுவதுமாக துறந்து பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடப்பதாக அம்மனுவில் வீர சவார்க்கர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக நடந்த நிகச்சிகளில் இம்மனுவும் ஒன்று. இதன் முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளை வசதியாக வெட்டி எறிந்து விட்டு காட்டப்படுகையில் பிரிட்டிஷ் அரசிடம் சவார்க்கர் சரணடைந்து விட்டதாக உணர்த்தும் இதே நிகழ்ச்சி சங்கிலித்தொடரென நடந்த நிகழ்ச்சிகள் வரிசைபடுத்த படுகையில் அதற்குரிய சரியான முக்கியத்துவம் அல்லது முக்கியமற்ற தன்மையை பெறுகிறது. அந்நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஜூன் 8, 1909 வீர சவார்க்கரின் அண்ணன் கணேஷ் தமோதர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

டிசம்பர் 4,1910 வீர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது

ஜனவரி 30,1911 வீர சவார்க்கருக்கு மற்றொரு 25 வருட சிறைத்தண்டனை (இரட்டை ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

நவம்பர் 14,1913 வீர சவார்க்கர் கையெழுத்திட்ட கருணை மனு சமர்ப்பிக்கப்படுகிறது ( 'சட்டரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிரிட்டிஷ் அரசின் மிக்க விசுவாசமான ஊழியனாக இருப்பேன். ')

1914 சிறை ஆவணக்குறிப்பு 'பிரிட்டிஷ் அரசிற்கு எதிரான ராஜ துரோக இலக்கியங்களை சிறைக்கு ள் பரப்பிய காரணத்துக்காக சவார்க்கருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. ' 1

1923 இந்திய தேசிய காங்கிரஸ் வீர சவார்க்கரின் உடனடி விடுதலையைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

ஜனவர் 6, 1924 (இரத்னகிரி மாவட்டத்திற்கு வெளியே செல்லகூடாது என்பது போன்ற) நிபந்தனையுடனான விடுதலை

ஆக, உலகெமெங்கும் புரட்சியாளர்கள் பயன்படுத்தும் 'பதுங்கியிருந்து பாயும் ' தந்திரத்தையே வீர சவார்க்கர் கையாண்டார் என்பது தெளிவு. தன் கருணை மனுவிற்கு பிறகும் வீர சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக புரட்சி நடவடிக்கைகளை கைவிடவில்லை என்பதற்கு தெள்ளத் தெளிவான ஆவண ஆதாரங்கள் இருந்த பின்பும் கூட 1913-இன் கருணை மனு வாசகங்களை வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இந்த போலி வரலாற்றாசிரியர்களும், இவ்வுண்மைகளை எவ்வித ஆய்வுமின்றி மக்களிடையே தங்களுக்கு அறிவு ஜீவி ஜிகினாத்தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பரப்பும் பத்திரிகைகளும் இன்று அனுபவிக்கும் விடுதலை வீர சவார்க்கரின் குடும்பம் தன்னைத்தானே அழித்ததன் விளைவாக கிடைத்த ஒன்றுதான் என்பது ஒரு இந்திய முரண்நகை.

மார்ஸியா கஸோலாரி போன்றவர்களால் கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு வீர சவார்க்கரின் நாஜி மற்றும் பாசிச கோட்பாட்டு ஈர்ப்பும் அதன் அடிப்படையில் இனவாத ரீதியில் சமைக்கப்பட்ட இந்திய கோட்பாடே சவார்க்கரிய ஹிந்துத்வம் என்பதும்.

வீர சவார்க்கரின் 'ஹிந்துத்வம் ' (1917/1923) எனும் நூல் ஹிந்துத்துவ சித்தாந்த பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல். ஆனால் ஹிந்து தேசியத்தின் வேர்கள் அதைக்காட்டிலும் வயதானவை. நவீன அரசியல் சித்தாந்தமாக ஹிந்து தேசியத்தை

பொதுவாக வரலாற்றறிஞர்கள் ராஜ் நாராயண் போஸ் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோரது எழுத்துக்களிலிருந்து தொடங்குவதாக கருதுகின்றனர். 1917ெஇல் வீர சவார்க்கரால் அந்தமான் சிறைகளில் மிகுந்த இன்னல்களுக்கிடையே எழுதப்பட்ட இந்நூல் கடத்தி வரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது 1923 ஆம் ஆண்டில். இதில் காணப்படும் இனவாத கோட்பாட்டின் அழுத்தத்தை இதோ காணலாம்,

'உலகமெங்கிலும் இருப்பது ஒரே இனம் - ஒரே மனித இரத்தத்தால் உயிர் வாழும் மனித இனம்தான். மற்ற அனைத்து விஷயங்களும் சார்பியல் தன்மையுடையவைதான். இனத்துக்கு இனம் என்று மனிதன் எழுப்பும் செயற்கை அரண்களையெல்லாம் இயற்கை என்றும் உடைத்தெறியவே செய்யும். உங்களுடைய அனைத்து தேவ தூதர்களையும் விட, தீர்க்கதரிசிகளையும் விட பாலியல் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது....துருவம் முதல் துருவம் வரை மானுட இனத்தின் ஒற்றுமையே உண்மை. மற்ற அனைத்து பிரிவுகளும் சார்புடையனதாம். ' 2

போலி மதச்சார்பற்ற வாதிகளின் மேற்கத்திய பிரச்சாரத்திற்கும் இந்திய பிரச்சாரத்தையும் ஒப்பிடும் போது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு சங்கடம் தெரிகிறது. உதாரணமாக இந்தியாவில் வீர சவார்க்கர் தன் கருணை மனுவிற்கு பின் ஒரு தடவை கூட பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை என நிரூப்பிக்க வேண்டியிருக்கிறது. மேற்கிலோ அவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நாசிகளுடன் தொடர்புடையவர் என காட்ட வேண்டியுள்ளது. ஆக ராம் புண்யானி சவார்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு தடவை கூட வீர சவார்க்கர் பேசவில்லை எனக் கூறும் அதே சமயம், இந்திய இடதுசாரிகளின் மேற்கத்திய பிரச்சார பீரங்கிகள் வீர சவார்க்கர் 1938 நவம்பரில் ஹிந்து மகாசபையில் உலகப்போரில் இந்திய நிலை குறித்து பேசியதை நாசிகளுக்கு ஆதராவாக இருந்ததாக காட்ட பயன்படுத்துவார்கள். 1938 நவம்பரில் அவர் பேசியதாவது, 'எந்த சக்திகள் இந்தியாவுக்கு அதன் சுதந்திர போராட்டத்திற்கு உதவுகிறதோ அதுவே நம் நண்பன், அதற்கு எதிரானவர்கள் நம் எதிரிகள். நம்மை குறித்து நடுநிலை வகிப்பவர்களைக் குறித்து நாமும் கவலைப்பட தேவையில்லை. ' 3

உலக நாடுகளுக்கு ஒரு அடிமை சமுதாயம் அந்த அடிமைத்தனத்தையே ஒரு நற்பண்பாக காட்டி ஒழுக்க விதிகளை போதிப்பதை விட்டு இந்தியாவின் நலனைக் கருதிய நிலைபாடுகளையே எடுக்க வேண்டும் என்பதே வீரசவார்க்கரின் கருத்தாக இருந்தது என்பது தெளிவு.

போலி மதச்சார்பற்ற வாதிகளுக்கும் மேற்கத்திய பிரச்சாரத்திற்குமான தர்ம சங்கடம் இன்னமும் தொடர்கிறது. இந்தியாவில் வீர சவார்க்கர் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ஆள்சேர்த்துக் கொடுத்தார் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது மேற்கத்திய நாடுகளில் வீர சவார்க்கரை நாசி ஆதரவாளராக காட்டுவதற்கு எதிராக போய்விடுகிறது. மறுபடியும் உண்மை வெகுவாக மாறுபடுகிறது.

வீர சவார்க்கரை பொறுத்தவரையில் இரண்டாம் உலக போரின் தர்ம நியாயங்கள் குறித்து அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை மாறாக உலகின் மிகக்கடுமையான போர்களங்களில் போரிட்ட அனுபவத்தை கொண்ட இந்திய ராணுவம் இந்திய விடுதலையை துரிதப்படுத்தும் என்பதே அவரது நம்பிக்கை. இங்கிலாந்து அரசின் போர் நடவடிக்கைகளில் 'பொறுப்புடைய உதவுதல் ' என்பதே அவரது தீர்மானம். அதன் தன்மையை வீர சவார்க்கர் தெளிவாக 'அமைதியான ஒத்துழைப்பில் தொடங்கி ஆயுதமேந்திய எதிர்ப்பு வரையிலும் ' என கூறுகிறார். 'ஆயுதமேந்திய எதிர்ப்பு ' சவார்க்கரை நாசியாக சித்தரிக்க மேற்கிலும், 'அமைதியான ஒத்துழைப்பு ' இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. 17-பிப்ரவரி 1942-இல் வீர சவார்க்கர் ஜப்பானின் படையெடுப்பு கிழக்கிலிருந்து நடக்கையில் ஆயதமேந்திய இந்தியர்களை கொண்ட ராணுவத்தின் மூலம் விடுதலை அடைய முடியும் என அறிவித்தார்.4

இதன் முழுமையான பொருளை இந்தியர்கள் தெளிவாகவே உணர்வார்கள். சுபாஷ் சந்திர போஸின் ஆஸாத் ஹிந்த் பவுஜ்ஜின் வருகையின் முன்னறிவிப்பாக விளங்கும் இவ்வார்த்தைகள் வீர சவார்க்கர்-நேதாஜி போஸ் கூட்டு திட்டம் ஒன்று இருந்ததற்கான அறிகுறியா ? நமது இடதுசாரி 'ஆராய்வாளர்கள் ' இந்த விஷயத்தில் மிகவும் தந்திரமாக

செயல்படுகின்றார்கள். உதாரணமாக மார்ஸியா கஸோலாரியின் 'ஆராய்ச்சி '. 1940-இல் நேதாஜி ஜின்னாவையும், வீர சவார்க்கரையும் சந்தித்து போருக்கு எதிரான காங்கிரஸ் நிலைபாட்டிற்கு ஆதரவு அளிக்க கோரியபோது இருவருமே மறுத்துவிட்டனர். காங்கிரஸின் இந்த நிலைபாடு மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால்

பிரிவினையின் போது இந்திய இராணுவத்தின் வகுப்பு சதவிகிதம் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக மாறி என்றென்றும் நம் பாதுகாப்பினை பிரிட்டிஷ் ஏற்கும்படியாகவோ அல்லது மீண்டும் ஒரு மொகலாய ஆட்சி பாரதத்தில் ஏற்படவோ வழி வகுத்திருக்கும். 1940-இன் இந்த நேதாஜி போஸ்-வீர சவார்க்கர் சந்திப்பு மார்ஸியா கஸோலாரியால்

கூறப்படுகிறது. ஆனால் 1941-இல் இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும் முன் நேதாஜி சந்தித்த தலைவர் வீர சவார்க்கர் என்பது மறைக்கப்படுகிறது. புகைப்பட ஆவண ஆதாரத்துடனான இந்த சந்திப்பினை 5 மறைத்து ஒரு ஆர்வெல்லிய வரலாற்று இருட்குழி உருவாக்கும் ஸ்டாலினிஸ்ட் மேதமையின் பெயர்தான் மதச்சார்பற்ற அறிவு ஜீவித்தனம்.

வீர சவார்க்கர் ஜப்பானிலிருந்த இந்திய விடுதலை வீரரான ராஷ் பேகாரி போஸுடன்

தொடர்பு கொண்டிருந்தார்.1938-39 இல் அவர்களுக்கிடையே கடிதங்கள் பரிமாறப்பட்டன.இந்திய தேசீயவாத பணியை ஜப்பானில் துவக்குவதில் ராஷ் பேகாரி போஸ் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ராஷ் பேகாரி போஸின் கடிதங்கள் ஹிந்து மகாசபையின் பத்திரிகையில் வெளியிடப்பட்டு வந்தன. 1939 -இல் ராஷ் பேகாரி இந்திய விடுதலை லீக்கினை தொடங்கினார். இதன் இராணுவப்பிரிவாகவே 1-செப்டம்பர் 1942இல் இந்திய தேசிய ராணுவம் (INA) தொடங்கப்பட்டது. இதன் முழுத்தலைவராக ராஷ் பேகாரி போஸே பதவி ஏற்றார். 1943ெ ஜூலை 4 இல் ராஷ் பேகாரி போஸ் தன் முதுமை மற்றும் நோயுற்ற நிலை காரணமாக தலைமைப் பொறுப்பினை நேதாஜியிடம் ஒப்படைத்தார்.6 நேதாஜியின் வானொலிப் பேச்சும் இந்திய தேசிய ராணுவ திட்டத்தில் வீர சவார்க்கரின் பங்கினை உறுதிபடுத்துகிறது. நேதாஜியின் வார்த்தைகளில் 'பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் அரசியல் கற்பனையார்வங்களாலும், இலட்சிய பார்வையற்ற தன்மையினாலும், இந்திய ராணுவத்தின் அனைத்து வீரர்களையும் 'கூலிப்படையாளிகள் ' (mercenaries) என அழைக்கின்றனர். ஆனால் அதேசமயம் வீர சவார்க்கர் இந்திய இளைஞர்கள் இராணுவத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது மிகுந்த இருதயப்பூர்வமான மகிழ்வினை அளிக்கிறது. இந்த இளைஞர்களே இந்திய தேசிய ராணுவத்தின் சிப்பாய்களாகவும் படைத்தளபதிகளாகவும் மிளிர்கின்றனர். '7

ஆனால் மார்ஸியா கஸோலாரியின் 'ஆராய்ச்சி 'யில் இந்த தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு ராஷ் பேகாரி ஒரு இனவாத வெறியராக சித்தரிக்கப்படுகிறார். ஆக இந்திய சுதந்திர வேள்வியில் தங்கள் அனைத்தையும் இழந்து நம் விடுதலையை நமக்கு தந்தவர்களை கீழ்த்தர இனவாதிகளாக நம் சந்ததிகளுக்கு சித்தரிக்க வேண்டிய அளவு மெக்காலேயிஸ்ட்-மார்க்ஸிஸ்ட் அறிவு ஜீவிகளுக்கு சித்தாந்த வெறி தலைக்கேறியிருக்கிறது.

ஏனெனில் இவர்கள் சித்தாந்த வெறியால் பாரதத்தை விட மாஸ்கோவை மதித்து நேதாஜியை ஜப்பானியர்கள் ஏறிச்செல்லும் கழுதையாகவும், குள்ளனாகவும், கோயபெல்ஸ் கை பூனையாகவும் சித்தரித்து தங்களை தாங்களே அசிங்கப்படுத்தி கொண்டவர்கள். அந்த வெட்கக்கேடான அசிங்கம் அறிவுஜீவித்தன முலாம் பூச்சுக்களுடன் ராம்புண்யானி, ப்ரண்ட்லைன், தீராநதி, மார்ஸியா கஸோலாரி இத்யாதிகளின் மூலமாக மீண்டும் அரங்கேறியுள்ளது.

வீர சவார்க்கரின் மறைவிற்கு கண்ணீர் விட்டே அஞ்சலி செய்த முகமது கரீம் சாக்ளா சவார்க்கரிய ஹிந்துத்வத்தின் உயிர் வாழும் விளக்கமாக இருந்தவர். 'வழிபாடு முறையால் இஸ்லாமியன் ஆயினும் கலாச்சார ரீதியில் இந்த மண்ணிற்கே சொந்தமான ஹிந்து நான் ' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் அவர்.

***

பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் செய்தி ஆதாரங்கள்:

1. The Indian Express ெ பிப்ரவரி 15 2001

2. வீர சவார்க்கரின் 'ஹிந்துத்வம் ' (பக்கம் 90)

3. மர்ஸியா காசலோரி எழுதிய Hinduthva 's foreign tieெup in 1930s.

4. அதே.

5. தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகம், இந்திய அரசு 1993ெஇல் பிரசுரித்த 'Challenge to the empire ெa study of Netaji ' ெ Dr.S.C.மயிகாப்

6. அதே.

7. நேதாஜியின் வானொலிப் பேச்சு ஆஸாத் ஹிந்த் வானொலி (ஜூன் 25,1944)

(நன்றி: 'The Asian Age ' (மே 20, 2002 ) ெஇல் பல்பீர்.கே.பன்ச் எழுதிய கட்டுரை)

***

hindoo_humanist@sify.கம

நன்றி திண்ணை .காம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum