இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்! - டி.எஸ்.பத்மநாபன்

Go down

ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்!  - டி.எஸ்.பத்மநாபன் Empty ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்! - டி.எஸ்.பத்மநாபன்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 10, 2011 10:13 pm

ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்!  - டி.எஸ்.பத்மநாபன் Lord-rama-sita-coronation
ராமர் கதை (ராமாயணம்) நிகழ்ந்ததாகக் கூறப்படும் நம் இந்தியாவிலேயே, "ராமாயணம் என்பது கட்டுக்கதை, ராமர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பது முழுப் பொய், ராமர் சேது பாலாமா? அப்படி என்று ஒன்று கிடையவே கிடையாது" என நாமே நம் சரித்திர உண்மைகளைப் பல்வேறு காரணங்களுக்காக மறுத்து வருகிறோம். இவ்வேளையில், புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையில் அந்த அரசின் சுற்றுலா அமைச்சரகம், ஸ்ரீலங்காவில் ராமாயணகால சம்பவங்கள் நடந்ததற்கான ஆதாரங்களைத் தேடி, கிட்டத்தட்ட 50 இடங்களைத் தேர்வு செய்திருக்கிறது.

ராமாயண இதிஹாசம் இந்தியா, இலங்கை இரண்டு இடங்களிலுமே நடந்திருப்பதால் இந்திய சுற்றுலாவாசிகளை ஈர்க்க ஸ்ரீலங்கா சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் இதன் துவக்க விழாவை நமது தலைநகர் தில்லியில் நடத்தத் தீர்மானித்தது. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி கலைசெல்வன், இலங்கையில் ராமாயண நிகழ்விற்கானஆதாரங்கள் வெறும் கற்பனையல்ல என்றும், அவைகளில் புதைந்திருக்கும் சரித்திர உண்மைகளைக் கண்டறிய ஒரு ஆராய்ச்சிக் குழுவை நியமித்திருப்பதாகவும் கூறினார்.

'அசோக வாடிகா' என்னும் இந்த ஆராய்ச்சிக் குழு அமைப்பின் தலைவர் டி.ஒய். சுந்தரேசன், பாரதத்தின் பண்டைய கலாசாரம் மற்றும் அறிவியல் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் 'பாரத் ஞான்' நிறுவனத்தின் நிறுவனர் டி.கே ஹரி மற்றும் அவரது துணைவியார் ஹேமா ஹரி ஆகியோரை ஸ்ரீலங்கா சுற்றுலாக் கழக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் அழைப்புக்கு இணங்கி ஹரி மற்றும் அவரது துணைவியார் ராமாயண நிகழ்வுச் சான்றுகளைப் பற்றி ஸ்ரீலங்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்கவும், தகுந்த வழிகாட்டவும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் இலங்கையில் ராமாயண நிகழ்வுக்கான சான்றுகள் பற்றிய தடங்களை ஒரு பன்முக ஒளி ஊடகம் (Multimedia) மூலமாக, நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த பல அறிஞர்களுக்கிடையே விளக்கினர். இவர்களது ஒளிக்காட்சியை அங்கு வந்திருந்த புத்த மத பிட்சுக்கள், ஹிந்து சமயத்தினர், சரித்திர ஆய்வாளர்கள், கவிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டு கட்டுண்டு பிரமித்தனர். வந்திருந்த அனைத்துத் தரப்பினரும் ஹரி அவர்கள் ராமாயணத் தடங்களை விவரித்த விதம் குறித்து வியந்து பல கேள்விக் கணைகளைத் தொடுத்து விளக்கம் பெற்றனர்.

கூட்டம் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து மூன்று மணி நேரம் தொடர்ந்தது. இந்த வரவேற்பினால் பெரிதும் கவரப்பட்ட இலங்கை சுற்றுலாக் கழகம் இலங்கையில் ராமாயணத் தடங்கள் பற்றிய புனித சுற்றுலா ஏற்பாடுகளுக்கு பாரத் ஞான் ஆராய்ச்சி நிறுவனத்தைத் துணை கொள்ளத் தீர்மானித்தது.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டம் நடந்த இடம் ஹோட்டல் காலே ஃபேஸ் என்பது. இதன் சின்னம் தண்டு மொனரா விமானம் (பறக்கும் மயில்). இந்த விமானம்தான் ராவணன் தன் மனைவி மண்டோதரியுடன் இலங்கையைச் சுற்றிவர உபயோகப்படுத்தப்பட்டதாம்.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 2008ல் இன்னுமொரு ஒளிக்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக இலங்கை அரசின் ஏற்பாட்டின் பெயரில் ஹரி தம்பதியர் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீலங்காவிலுள்ள சின்மயா மிஷன், 'ஸ்ரீலங்காவில் ராமாயணம்' என்ற புத்தகத்தை வெளியிட்டது. இதில் சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமிஜிகளின் கட்டுரைகளுடன் பாரத் ஞான் மிகுந்த ஆராய்ச்சி செய்து வெளியிட்ட கட்டுரைகளும் அழகான படங்களோடு அமைந்திருந்தன. இந்தப் புத்தகம் ஸ்ரீலங்கா அரசு ராமாயண நிகழ்விற்கான ஆதாரங்களாகக் காட்டும் ஐம்பது இடங்களைப் பற்றியும், சுற்றுலா பற்றியும் விவரிக்கிறது,

ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறையின் முயற்சிகளுக்குத் தங்கள் பங்கு பற்றி ஹரி பின்வருமாறு கூறுகிறார்:

"ஸ்ரீலங்கா இனம் கண்டுள்ள ஐம்பது தடங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவை எத்தனை, தள்ள வேண்டியவை எத்தனை என்பதை அறிவுபூர்வமாக, ஆராய்ச்சி வழியாக, பகுத்தறிவோடு, சுய சிந்தனையோடு நிரூபணம் செய்ய வேண்டியது எங்களது பணி. இதில் மத சம்பந்தமான அல்லது தெய்வீகமான குறிக்கோள் என்று எதுவும் கிடையாது. அறிவுபூர்வமாக ஏற்கவேண்டிய அடையாளங்களை ஏற்பதுதான் இந்த முயற்சி.

வரலாற்று சான்றுகளை ஆராய்கிறோம். புத்தர்கள் வாழும் நாடான ஸ்ரீலங்காவில் புத்தமதக் குறிப்புகள் இருக்கின்றன. இந்தக் குறிப்புகளில் ராமாயண நிகழ்வுக்கான சான்றுகள் 49 இடங்களில் காட்டப்படுகின்றன. இதுவரை இரண்டு முறை இலங்கை சென்றிருக்கிறோம். இன்னும் பலமுறை செல்ல வேண்டியிருக்கும்."

ஹனுமான் இலங்கைக்குச் சென்றது, சஞ்சீவி பர்வதத்திலிருந்து சில கற்கள் இலங்கையில் வீழ்ந்ததாகக் கூறப்படுவது போன்றவையெல்லாம் அங்குள்ள தடங்கள் கொண்டு நிரூபிக்க முடியுமா என்ற கேள்விக்கு, வரலாற்றுபூர்வமாகவும் ஆராய்ச்சி மூலமாகவும் ராமாயண நிகழ்ச்சிகள் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நிரூபிக்க முடியும் என்கிறார் ஹரி.

ஹரி அவர்கள் துணைவியாருடன் ராமாயண காலச் சான்றுகளை நேரில் கண்டது குறித்து விரிவாகக் கூறினார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்!  - டி.எஸ்.பத்மநாபன் Empty Re: ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்! - டி.எஸ்.பத்மநாபன்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 10, 2011 10:15 pm

ராமர் கதை - சில சரித்திரச் சான்றுகள்!  - டி.எஸ்.பத்மநாபன் 21535_319884708504_132344718504_3694836_1951445_n
சீதா எலியா (சீதை அம்மன் கோவில்)

சீதைக்குக் கோவில் அமைந்த இடம். இங்கு அசோகவனத்தில்தான் ராவணன் சீதையைச் சிறை பிடித்த பிறகு காவலில் வைத்திருந்தார். இந்த இடத்தை மரங்கள் அடர்ந்த காடு என்று சொல்ல முடியாது. ஆனால், அழகான பூஞ்சோலைகள் அமைந்த இடம். ராவணன் இந்த அழகிய சூழலில் சீதையை காவல் வைத்திருந்தால் ரம்மியமான சூழ்நிலையில் மனம் மாறி தன்னை மணக்கச் சம்மதிக்கலாம் என்ற எண்ணம்தான். இதற்கு அருகிலேயே ஹனுமானுக்கும் கோவில் உள்ளது.

டுவரும்போலா

Sita oath spotடுவரும்போலா என்றால் சபதம் எடுத்த இடம் என்று பொருள். இந்த இடத்தில் சீதை தன்னை அக்னி பரீட்சை செய்து கொண்டாள். ராமன், சீதையை ராவணனிடமிருந்து மீட்ட பிறகு, சீதை ஒரு வருடம் ராவணனின் காவலில் இருந்ததால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற, சீதை அக்னிப் பிரவேசம் செய்து புடமிட்ட தங்கமாக வெளியே வந்து தன் கற்பை நிரூபித்த இடம். இந்த இடத்தில் அனுராதபுர போதிமரத்தின் கன்று நடப்பட்டது. இதன் கீழே ஒரு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமாயண ஓவியங்களைக் காணலாம். இன்றும் இந்தக் கோவிலில் சீதையின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வது சட்டரீதியாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

முனேஸ்வரம் கோவில்

இது ராமாயண காலத்திற்கும் முந்தைய சிவன் கோவில். சிவலிங்கம் இங்கே அமைந்துள்ளது. முனேஸ்வரம் என்றால் முன்னு + ஈஸ்வரன் என்று பிரிக்கலாம். இதுதான் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்ட முதல் கோவில். ராமன் இந்த இடத்திற்கு வரும் முன்பே இங்கு சிவலிங்கம் அமைந்திருந்தது. இந்தக் கோவிலில்தான் ராவணன் சிவபெருமானை வழிபட்டார்.

மானவாரி

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போவதற்காக ராமன் சிவபெருமானிடம் வேண்டியபோது, அவர் ராமனை மானவாரி, திருகோனேச்வரம், திருகெதெச்வரம், மற்றும் ராமெச்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கச் சொன்னார். இதில் முதல் லிங்கம்தான் மானவாரி. இந்த லிங்கம் ராமலிங்க சிவன் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

திருகோனேஸ்வரம்

Tirukoneswaramஇந்தக் கோவில் ராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தை அமைத்து பிரதிஷ்டை செய்த சிவன் கோவில். புராதன கோவிலான இது போர்த்துக்கீசியர்களால் 1624ல் அழிக்கப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு முன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

கோவிகேலனியாபுத்தர் கோவில்

ராம ராவண யுத்தத்திற்குப் பிறகு விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த இடம் இது. இந்த மகுடம் சூட்டும் விழாவிற்கு ராமன் வரவில்லை. அவரது தம்பி லக்ஷ்மணன்தான் நடத்தி வைத்தார். தந்தையின் சொல்படி 14 ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டுமென்பதால் தன் தம்பி லக்ஷ்மணனை தனது சார்பாக அனுப்பி வைத்தார். இந்த இடத்தையும் போர்த்துகீசியர்கள் அழித்து விட, பின்னர் கிறிஸ்தவர்களால் திரும்பக் கட்டப்பட்டது.

விபீஷணனின் மாளிகை இங்கேதான் கேலனி நதிக்கரையில் அமைந்திருந்தது. விபீஷணனிற்காக ஒரு புத்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பின்புறம் விபீஷணப் பட்டாபிஷேகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபீஷணனுக்காக ஒரு தனிக்கோவிலும் அமைந்துள்ளது. அவரை ஸ்ரீலங்காவில் ஒரு அரசனாக, தெய்வமாக வழிபடுகிறார்கள். நான்கு காவல் தெய்வங்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார் விபீஷணன். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் விபீஷணன் பெயரால் வழங்கப்படும் தீர்ப்பை ‘விபீஷணன் தீர்ப்பு’ என்று முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

ரூமசாலா

Hanumanபாணங்களால் கட்டுண்ட ராமனையும், லக்ஷ்மணனனையும் உயிர்ப்பிக்க ஹனுமான் சஞ்சீவனி மலையை பெயர்த்துக் கையில் சுமந்து பறந்து வந்தார். அப்போது பாதையில் சில கற்கள் ஐந்து இடங்களில் விழுந்தன. அவற்றில் ஒன்றுதான் ரூமசாலா எனும் இடம். இந்த இடம் இலங்கையின் தென்புறத்தில் உள்ளது. இங்கே ஹனுமாருக்குக் கோவில் உள்ளது. புத்த பிக்குகள் இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாவம்சம்

இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் புத்த நூல். இந்த நூலில் ராமாயண நிகழ்வுகள் பற்றி 49 இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.

வானரங்கள் பற்றி கூறும்போது, ”வானரத்தையும், குரங்குகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘வா நரா’ என்றால் நரனைப் போன்றவர்கள்; அதாவது மனிதர்களைப் போன்றவர்கள்” என்று சொல்லும் ஹரி, “ராட்சஷர்கள் என்பதையும் ராட்சஷர்கள் என்றால் ரட்சிப்பவர்கள் - அவர்கள் வயிற்றை ரட்சிப்பவர்கள்” என்று விளக்கம் கொடுக்கிறார்.

ஸ்ரீலங்கா அரசும் அங்குள்ள பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களுமே ராமாயணம் என்ற இதிஹாசத்தின் ஒரு முக்கிய பகுதி இலங்கையில் நடந்ததை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து, சுற்றுலாவாசிகளையும் தம் பக்கம் ஈர்க்கும்போது நமது இந்திய அரசு ஏனோ இதை ஒப்புக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறது என்று சொல்கிறார் ஹரி.

ராமசேது பற்றி கேட்ட போது, அங்கு இதை நிரூபணம் செய்ய நாணயங்கள் இருக்கின்றன. மற்றும் ஸ்ரீலங்காவில் சேது காவலன் என்ற ஒரு பரம்பரையே இருக்கிறது. இன்று வேண்டுமானால் அவர்கள் கிறிஸ்தவ மதத்தினராக ஃபெர்னான்டஸ் சேது காவலன் என்ற பெயரில் இருக்கலாம். ஆனால் சேது காவலர்கள் இருந்திருக்கிறார்கள். இது தவிர, அங்குள்ள நூலகத்தில் சேது பாலம் கட்டுவதற்கான வரைபடங்கள் முப்பது ஆண்டுகள் முன் வரை இருந்ததாக சொல்லப்படுவதாகக் கூறினார்.

ராமரை தெய்வம் என்று சொல்லப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவர், "ராமன் ஒரு வரலாற்று மனிதன்; அடுத்து அவர் மனிதன்; பிறகு அவர் ஒரு ராஜா; அதற்கும் மேல் அவர் ஒரு தெய்வம். இந்த நாலு படிகளில் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியில் அவரை பதினாறு குணநலன்களுடன் விளங்கிய மனிதனாகத்தான் பார்க்கிறோம். ராமன், ராவணனை வென்றபோது அங்குள்ள மக்கள் ராமனை தெய்வமாகப் பார்த்தார்கள். அப்போது ராமன், தான் தசரத புத்திரன் எனவும், தெய்வமில்லை என்றும் சொல்கிறார். தெய்வமாகப் பார்ப்பது அவரவர் சொந்த விருப்பம்" என்று சொல்கிறார் ஹரி.

"நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களால் ராமர் காவியம் ஒரு கட்டுக்கதை (mythology) என்று கூறப்பட்டாலும், ராமர் கதை ஒரு இதிஹாசம் - இதிஹாசம் என்றால் அது 'இது இப்படி நடந்தது' என்று பொருள். 'நடந்தது' என்றால், அது கதையல்ல உண்மை" எனக் கூறுகிறார் ஹரி.

ஹரி தம்பதியினரின் ஆராய்ச்சிகள் தொடர நம் வாழ்த்துக்கள்!
நன்றி நிலாச்சாரல்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum